Nirmala Art and Craft Centre
Nirmala Art and Craft Centre provides customized teachings on various domains of art & craft.
09/06/2026
காலை உணவு
(8.00 am - 9.00.)
கேழ்வரகு,கம்பு,குதிரை வாலி,
தினை போன்றவற்றில்
செய்த தோசை,புட்டு,
களி,கூழ் போன்றவற்றை
வாரத்தில் மூன்று நாட்களும்.
அரை முடி தேங்காய்
இரண்டு பூவன் வாழைப்பழம்
நான்கைந்து பேரீச்சம்
பழம் ஒரு நாளும்.
நீர்த் தெளித்த சிகப்பு அவலில்
கேரட் துருவல் சின்ன
வெங்காயத் துருவல்,புதினா
இலை மிளகு தூள் சேர்த்து
ஒரு நாளும்.
50 கிராம் பச்சை
வேர்கடலை, 100 கிராம்
அளவு கருப்பு எள் சிறிது
தேங்காய் துருவல் நான்கு
பேரீச்சம் பழம் போட்டு
இடித்து ஒரு நாள்.
மற்றொரு நாள்:
உங்களுக்கு அதிகம்
பிடித்த இரசாயணம்
சேர்க்காத எதாவது ஒரு
உணவும் எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது வாரத்தில்
மூன்று நாட்கள் பல
தானியங்களை அரைத்துச்
செய்த சத்து மாவுக் கஞ்சி
2 டம்ளரோடு நமக்கு பிடித்த
பழங்கள் இரண்டை அப்படியே
சாப்பிடலாம்.
இன்னும் மூன்று நாள்
பாசிப்பயறு,
கொண்டைக்கடலை,
கொள்ளு,
மொச்சை,
நிலக்கடலை,
பச்சைப் பட்டாணி
போன்ற எதேனும்
ஒரு தானியத்தை
வேகவைத்து தாளித்து
சாப்பிடலாம்.
மதிய உணவு
(1.00 - 2.00 pm)
கைக்குத்தல் அல்லது
பாதி தீட்டிய மட்டை அரிசிச்
சோறு இரண்டு கப். ஒரு கப்
பிடித்த காய்கறி கூட்டு.
காய்கறி நிறைய போட்ட குழம்பு
இரண்டு கப் அல்லது மாமிச
உணவு குழம்பு ஒரு கப்.சைவ
உணவுக்காரர்கள் மதிய உணவில்
தயிர், பசுநெய், சுண்டைக்காய்,
நெல்லிக்காய் துவையல்
கருவேப்பிலைத் துவையல்
போன்றவற்றில் ஒன்றிரண்டை
தவறாமல் சேர்த்துக் கொள்ளவும்.
முழுவதும்தீட்டிய வெள்ளை
அரிசி சாப்பிடுவதை
தவிருங்கள்.அல்லது
வாரத்தில் மூன்று
நாட்கள் சாப்பாடு.
இரண்டு நாட்கள்
சுடுகஞ்சி.
இரண்டு நாட்கள் உங்களுக்கு
மிகவும் பிடித்த மதிய உணவை
மிதமான அளவு எடுத்துக் கொள்ளவும்.
இரவு உணவு
(7.00 pm - 8.00)
வாரத்தில் இரண்டு
நாட்கள் கோதுமையில்
செய்த சப்பாத்தி
மூன்று, நிறைய
காய்கறி சேர்த்த
குருமா இரண்டு கப்
அல்லது நான் வெஜ்
குருமா ஒரு கப்
எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டு நாட்கள்:
ஆப்பிள்,மாதுளை,
பைனாப்பிள்,
கொய்யா,அத்தி, ஆரஞ்ச்
போன்றவற்றை
வெட்டி பழக்கலவை
இரண்டு கப். வாழைக்காய்,
கோவைக்காய்,
பூசணிக்காய்,
கொண்டைக் கடலை
பட்டாணி
போன்றவற்றில்
செய்த கூட்டு/பொரியல்
இரண்டு கப்
எடுத்துக்
கொள்ளலாம்.
இரண்டு நாட்கள்:
வாழைப் பழம் ஒன்று
ஆப்பிள் ஒருத் துண்டு
பாதாம் பருப்பு இரண்டு
பிஸ்தா நான்கு
பிச்சிப்போட்டு நான்கு
பேரீச்சம் பழம் சேர்த்து
இரண்டு கப் தண்ணியான
பசும்பால் அல்லது
நீர் விட்டு அரைத்து
குடிக்கலாம்.
-ஏகப்பிரியன் DYT
24/05/2026
ஒரு மூணு நாளைக்கு வெறும்
தண்ணிய மட்டும் குடிச்சிட்டிருங்க
உடம்புல இருக்குற வேண்டாத
கழிவெல்லாம் செல்களுக்கு
உணவா மாறி சக்தியா மாறி
காணாமா போய்டும்.அதை விட்டு
மேல மேல இன்னும் பல
மூலிகைகளையும் உணவுப்
பொருளையும் போட்டுக்கிட்டே
இருந்தா மேலும் கழிவுதான் சேரும்.
அதனால் உடல் இயங்குத் திறனே பாதிக்கப்படும்.
ஒரு பாத்திரத்தில் வைத்த பால்
கெட்டுப் போச்சின்னா அதில்
மஞ்சள் பொடியையோ கடுக்காய்
தூளையோ போட்டு பாலை தெளிய
வைக்க முயற்சி பண்ணாம பாலை
வெளில கொட்டிட்டி பாத்திரத்த
கழுவி காய வெக்கிறது மாதிரி தான்
இது.இந்த உடலும் இறைவன்
தந்த ஒரு அட்சயப்பாத்திரம்தான்.
அதை மேலும் மேலும் எதையாவது
போட்டு குட்டுச்சுவராக்காம
அழுக்குச் சேரும் போதெல்லாம்
அப்பப்ப தண்ணிய விட்டு கழுவி
காய விடுங்க. அதான் ஒரே வழி.!
கழிவு நீக்கப் பயிற்சி ஆன்லைன்
வகுப்பில் கலந்து கொள்ள
தொடர்பு கொள்ளுங்கள்
Whatsapp: 9629131089
🧘🏽♂️👨👨👦👦🌴💥🌺
#கழிவு_நீக்கப்பயிற்சி
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
No. 91, 6th Cross Street, Thirumalai Nagar, Perungudi
Chennai
600096
Opening Hours
| Monday | 10am - 1pm |
| 2pm - 4:30pm | |
| Tuesday | 10am - 1pm |
| 2pm - 4:30pm | |
| Wednesday | 10am - 1pm |
| 2pm - 4:30pm | |
| Thursday | 10am - 1pm |
| 2pm - 4:30pm | |
| Friday | 10am - 1pm |
| 2pm - 4:30pm | |
| Saturday | 2pm - 5pm |
| Sunday | 2pm - 5pm |