Sathya Ias A-academy

Sathya Ias A-academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sathya Ias A-academy, Education, #758, NSK Nagar Signal, Above Apollo Pharmacy, Poonamallee High Road, Chennai.

Photos from SATHYA IAS ACADEMY's post 12/02/2025

Dear Aspirants, nearly 20+ of test questions of Sathya IAS Academy are reflected in one way or other in Group 2A Main Exam dated 08.02.2025. Here are some Examples.

https://www.facebook.com/share/p/1BjggruSK7/

Photos from Sathya Ias A-academy's post 07/11/2024

Dear Friends / Well-Wishers / Students,

I am promoted as Deputy Secretary to the Government and posted as Financial Controller for the office of the Commissioner of Police, Greater Chennai w.e.f 06.11.2024

With your wishes, i am taking this new assignment from 08.11.2024 onwards.

Sathya
07.11.2024
🙏🙏🙏

14/09/2024

Group 2 Preliminary Exam Question Analysis and Expected Cut Off by Sathya IAS Academy.

GENERAL KNOWLEDGE :

Question Paper is Tough. It is on par with Group 1 Standard. Though few questions are very easy which is a typical & usual of TNPSC, It is tough.

For your kind appreciation if we categorize as
1. Very Easy.
2. Easy
3. Moderate
4. Tough
5. Very Tough
Then It falls in the category of Tough. That is category 4.

Hence, Scoring 55 to 60 correct answers in GK out of 100 is well enough to qualify for Descriptive mains provided the number of correct answers in Language is to be 90+.

LANGUAGE :

General Tamil is little bit tough than General English. Especially, Grammar part of General Tamil is really worth mention. Therefore, the number of candidates who scored more than 95+ in English is quit widespread than the same benchmark in General Tamil.

But General Tamil candidates had a cutting edge in the Tamil questions asked in GK especially in unit 8.

In General Tamil, slight emphasis is given in Advanced Tamil. So, those who have gone through the Advanced Tamil would have sailed safely.

Detailed Analysis will be presented tomorrow.

EXPECTED CUT OFF:
(To be called for Descriptive Mains and obviously for Objective Mains too)

BC : 155±2
BC (F) : 153±2
MBC : 153±2
MBC(F) : 150±2
BCM : 151±2
BCM(F) : 149±2
SC : 150±2
SC(F) : 148±2
SCA : 148±2
SCA(F) : 146±2
ST : 145±2
ST(F) : 142±2
(Note:Numbers indicated is number of Correct Answers. Not Marks)

Cut off for the candidates who could be called only for objective Mains will be announced Tomorrow since it requires little bit analysis and the data for possible increase in the vacancies.

With Regards
R. Sathya,
Sathya IAS Academy,
14.09.2024

குரூப் 4 தேர்வை எழுதப் போகிறீர்களா.? இது போன்ற அபாயங்கள் இருக்கா..? இந்த காணொளியை தவற விடவேண்டா 13/09/2024

14.09.2024, சனிக்கிழமை TNPSC Group 2&2A முதல் நிலைத்தேர்வு எழுத்துபவர்களின் கவனத்திற்கு....

*கடைசி நேர முக்கிய அறிவுரைகள்:*

இவைகளை பலமுறை நான் உங்களுக்கு கூறியிருந்தாலும்.... சில விஷயங்களை தொடர் நினைவூட்டுதலுக்கு உட்படுத்துவது நம் கடமையாகிறது. "பாத்து பத்திரமா போயிட்டு வா கண்ணு " என்று ஒவ்வொரு முறையும் தனது மகளோ அல்லது மகனோ வெளியே கிளம்பும் போது ஒரு தாய் கூறுவதுபோல்தான் இதுவும்.

எனவே இந்த அறிவுரைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருந்தாலும் அல்லது படித்திருந்தாலும் தற்போது மீண்டும் ஒருமுறை படித்து விடுங்கள். என்ன ஒரு பத்து நிமிடங்கள்தானே... கீழ்கண்ட 20 அறிவுரைகளில் ஏதேனும் ஒன்று உங்களை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடும்.

அன்பார்ந்த TNPSC போட்டித்தேர்வர்களே...

14.09.2024,
சனிக்கிழமை , அதாவது நாளை அரசுப்பணி நோக்கி பயணிக்கும் உங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். நாளை நடக்கும் தேர்வில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவருக்கும் மிக முக்கிய கடைசி நேர ஆலோசனைகள்.

1. நூழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுமையா படிங்க . மிக முக்கியமாக, தேர்வு மைய்யத்தின் அட்ரஸ் முழுமையா படிக்கணும்.பெரு நகரங்களில் ஒரே பெயரில் (சிறு மாறுதல்களுடன் )ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் இருக்கலாம். அந்த நேரத்தில் தேர்வுமைய பெயரை அரைகுறையாக அதன் முதல் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அது நமக்கு தெரிந்த லொக்கேஷன்தானே என்று முடிவெடுத்துவிடவேண்டாம். உதாரணமாக கோவையில் உள்ள PSG. PSG கலை கல்லூரியா....? அல்லது தொழில்நுட்பக்கல்லூரியா..? அல்லது மெட்ரிக் பள்ளியா...? என தெளிவாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

2. மறவாமல் ஹால் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளவும். கூடவே ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் டையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் இப்படி ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளவும்.(தேவையில்லை. எனினும், வைத்துக்கொள்ளுங்கள். TNPSC யும் இதை அறிவுறுத்தியுள்ளது )

3. தரமான இரண்டு கருப்பு பால் பாயிண்ட் பேனா வாங்கிக்கொள்ளுங்கள். விலை குறைந்த தரமற்ற பேனாக்களில் மை வெளிப்படும் (Flow of ink )அளவு ஒரே சீராக இருக்காது. Because of poor viscosity. புதிதாக வாங்கிய பேனாவை நேரடியாக OMR தாளில் விடையளிக்க பயன்படுத்த வேண்டாம். வாங்கியவுடன் அந்த பேனாவைக்கொண்டு ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமோ எழுதிப்பாருங்கள். அப்போதுதான் அந்த பேனா முனையில் உள்ள பந்து மிக இலகுவாக அனைத்து கோணங்களிலும் உருளும்

4. குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள். நீங்கள் ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும், நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் போகலாம்.

5. Exam Pad. தேர்வு அட்டை ஒன்றை எடுத்து செல்லுங்கள். தேர்வு கண்காணிப்பாளர் அனுமதித்தால் பயன்படுத்துங்கள். நினைவில் கொள்ளுங்கள் உங்களது தேர்வு மையங்கள் பள்ளி அல்லது கல்லூரி. அந்த மாணவர்கள் 'காம்பஸை' கொண்டு நிச்சயம் டெஸ்கில் தங்களது 'கலை' மற்றும் ' சிற்ப' திறமையை காண்பித்திருப்பார்கள். டெஸ்கில் உள்ள அதுபோன்ற 'குண்டு', 'குழிகளால்' உங்கள் OMR இல் ஓட்டை விழுந்துவிடாமல் அந்த தேர்வு அட்டை பாதுகாக்கும். உங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் டெஸ்க் மேற்சொன்ன 'சிற்ப' வேலைப்பாடுகளோடு இருந்தால் தேர்வு கண்காணிப்பாளரிடம் தேர்வட்டையை பயன்படுத்திக்கொள்ள கனிவுடன் கேளுங்கள். அனுமதிக்க வில்லை என்றால் எக்காரணத்தை கொண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விடாதீர். நினைவில் கொள்ளுங்கள் நமக்கு மன அமைதி மிக முக்கியம்.

6. நிச்சயம் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசையில் தூசி படிந்திருக்கும். அதன் மீது OMR வைத்தால் என்ன ஆகும் என்று நீங்கள் அறிந்துதான். ஆகவே கூடுதலாக இரண்டு Kerchief வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றை உங்கள் மேசையை துடைக்க மற்றறொன்றை கைவிரல் ரேகை வைத்தவுடன் உங்கள் விரல்களை நன்கு துடைத்து கொள்ள. கவனம் - கைவிரல் மை OMR ல் பட்டு விடக்கூடாது.

7. OMR ஐ வாங்கியவுடன் அதில் உள்ள உங்களது புகைப்படம் மற்றும் இதர தகவல்களை சரிபார்த்து விடுங்கள். தவறு ஏதேனும் இருப்பின் அல்லது ஏதாவது ஒரு பகுதி blur ஆகி பிரிண்ட் ஆகியிருந்தால், உடனடியாக கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று OMR பெற்றிடுங்கள். நுழைவு சீட்டு மற்றும் OMR தாளில் கண்காணிப்பாளர் கையொப்பம் மறவாமல் பெற்றிடுங்கள்

8. கேள்வித்தாளை வாங்கியவுடன் அனைத்து பக்கங்கள் மற்றும் கேள்விகள் முறையான வரிசையில் அச்சாகியுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று கேள்வித்தாள் பெற்றிடுங்கள்.

9. விடையை கருமையாக்கும் முறை. ஒரு சிலர் தெரியாத கேள்விகள் எண்ணை குறித்து வைத்துக்கொண்டு உறுதியாக தெரிந்த விடையை உடனுக்குடன் OMR இல் கருமையாக்குவர். மற்ற சிலர் முதலில் 200 கேள்விகளையும் படித்து விடையை குறித்துக்கொண்டு பிறகு கடைசி அரை மணி நேரத்தை ஒதுக்கி அந்த விடைகளை OMR இல் கருமையாக்குவர். இந்த இரண்டு முறைகளிலும் அதற்கே உரிய சில சாதக பாதகங்கள் இருக்கின்றன. ஆகவே ஒருவர் வாராந்திர தேர்வுகளில் என்ன முறையை பின்பற்றினாரோ அல்லது ஒருவருக்கு எந்த முறை எளிதோ அதை பின்பற்றலாம். ஆனால் கடைசியாக விடைகளை கருமையாக்கும் முறையில் 'பிறழ்கருமை'யாகும் (Swap Shading) ஆபத்து அதிகம். ஏனெனில் அது கடைசி நிமிடங்களில் செய்யப்படுவதால். கவனம்.. 'பிறழ்கருமை' என்றால் என்ன...? பதிவு எண் அல்லது OMR எண்களில் '1' அல்லது '0' என்ற எண்கள் இருந்தால் அல்லது அந்த எண்களால் துவங்கும்போது என்ன தவறு நடக்கும்.... அதனால் ஒரு தேர்வர் தனது வெற்றிவாய்ப்பை இழந்த உண்மை சம்பவம் குறித்து தெரிந்துகொள்ள குறித்து தெரிந்துகொள்ள... கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி இணைப்பை சொடுக்கவும்

10. கருமையாக்குவதை வட்டம் / நீள்வட்டம் / செவ்வகம் என எதுவாக இருந்தாலும் முழுமையாகவும் கச்சிதமாகவும் செய்க.பலர் இதை சரியாக செய்வதில்லை. பாதி கருமையாக்குவது, மையத்தை மட்டும் கருமையாக்குவது, ஓரத்தை மட்டும் கருமையாக்குவது போன்றவைகளை தவிர்க்க.

11. விடையளித்துவிட்டு பிறகு அது தவறெனத் தெரிந்தால் அதை அழிப்பான் அல்லது பிளேடு கொண்டு அழிக்க முற்பட வேண்டாம். அது உங்கள் OMR விடைத்தாளை சேதப்படுத்தி உங்களை தகுதியிழப்பு செய்ய நேரிடலாம்.

12. *துல்லியமாக விடை தெரியாத சூழலில்:* 'D' ஆப்சனில் 'மேற்கண்ட அனைத்தும் ' என இருந்தால் அதை தேர்ந்தெடுங்கள். மேலும் கொடுக்கப்பட்ட A, B, C, D ஆகியவைகளில் எது மிக lengthy ஆப்சன் எதுவோ அதை தேர்ந்தெடுங்கள்(துல்லியமாக விடை தெரியாத சூழலில்).

13. ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை எனில் அதற்கு அப்போதே ஏதாவது ஒரு விடையை கருமையாக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அந்த கேள்வியை குறித்து வைத்துக்கொண்டு கடந்து செல்லுங்கள். யாருக்கு தெரியும்? தெரியாத அந்த கேள்விக்கான பதிலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதற்கடுத்து வரும் கேள்விகள் ஒழித்து வைத்திருக்கலாம்.

14. உங்கள் சிந்தனையில் முதலில் strike ஆகும் ஆப்சனே பெரும்பாலும் விடையாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் பலர் ஓவராக சிந்தித்து ஆராய்ச்சி செய்து தவறாக விடையை ஷேட் செய்து விடுவதுமுன்டு. நான்கு விடைகளும் தெரியாத சூழலில் முதலில் strike ஆகும் விடையை தேர்க.

15. Casual Error செய்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதென்ன Casual Error? அந்த கேள்வி இடம்பெற்ற பாடத்தை ஒருவர் நன்கு படித்திருப்பார். அந்த கேள்விக்கும் சரியான பதில் நன்கு தெரிந்திருக்கும். ஆனால் "சரியாக பொருந்தியுள்ளது எது..?" என்பதை தவறாக பொருந்தியுள்ளது என்று புரிந்துகொண்டோ அல்லது "தவறாக பொருந்தியுள்ளது எது..?" என்பதை சரியாக பொருந்தியுள்ளது என்று புரிந்துகொண்டோ விடையளித்து விடுவதைத்தான் 'Casual Error' என்று சொல்கிறேன். இது போன்ற Casual Error நிகழ்ந்த கேள்விகள் 1 அல்லது 2 என்றால்கூட உங்களது வெற்றி காவு வாங்கப்படலாம்..! எச்சரிக்கை..!!

16. இதை மறந்து விடாதீர்கள். விடையை OMR தாளில் கருமையாக்கும் முன் கேள்வித்தாளில் அந்த விடை இருக்கும் கோள்குறியில் ஒரு சிறு அடையாளத்தை குறிக்கவும். உதாரணமாக 72 வது கேள்விக்கு உங்கள் பதில் 'C' எனில், கேள்வித்தாளில் 72 வது கேள்வியில் உள்ள 'C' அருகில் ஒரு டிக் / புள்ளி / வட்டம் என ஏதேனும் ஒன்றை குறிக்கவும். அப்போதுதான் 200 கேள்விகளுக்கு எத்தனை கேள்விகள் சரியாக பதிலளித்துள்ளோம் என தேர்வு முடிந்தவுடன் நம்மால் துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஓரிரு நாட்களில் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ விடைகளை வெளியிடும்போது நாம் எத்தனை கேள்விகளுக்கு சரியாக விடையளித்துள்ளோம் என தெரிந்துகொள்ள முடியும்.

17. தேர்வு நேரம் முழுவதும் மனதை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள்.கேள்வி கடினமாக இருந்தாலும் மனதார அதை அனுபவியுங்கள். முதல் 10 கேள்விகளோ அல்லது முதல் 20 கேள்விகளோ.... தெரியாத கேள்விகளாக இருந்தால் கூட பயப்படாதீர்கள். யாருக்குத்தெரியும் ...?? அடுத்து வருகிற 190 கேள்விகளும் அல்லது 180 கேள்விகளும் உங்களுக்கு விடை தெரிந்த கேள்விகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிற கருத்து என்னவெனில் ....நேர்மறை சிந்தனையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். எதற்கும் எந்த சூழலிலும் பயமோ பதட்டமோ வேண்டாம்.

18. நேர மேலாண்மை மிக முக்கியம். குறைந்தது கடைசி அரைமணிநேரம் 200 கேள்விகளுக்கும் நீங்கள் அளித்த விடைகளை மீண்டும் ஒருமுறை சரி பார்க்க இருக்க வேண்டும். எத்தனை 'A ' , எத்தனை 'B', எத்தனை 'C', எத்தனை 'D' நீங்கள் கருமையாக்கியுள்ளீர்கள் என கூட்டி எழுதி மற்றும் கருமையாக்கி காட்டவேண்டும். அடுத்த அரைமணிநேரம் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் 200 கேள்விகளுக்கும் நீங்கள் தேர்ந்தெடுத்த விடையைத்தான் OMR ல் கருமையாக்கியுள்ளீரா என சரிபார்க்க. ஒருவேளை ஏதாவது ஒரு கேள்விக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த விடை அல்லாமல் தவறுதலாக வேறொன்றை SHADE செய்திருந்தால். அதை அழிக்க முயற்சி செய்யவேண்டாம். விட்டுவிடுங்கள்.

19. எக்காரணம் கொண்டும் தேர்வு கண்காணிப்பாளரிடம் விவாதமோ வாக்குவாதமோ செய்யாதீர்கள். அவர்கள் உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டால் கூட விவாதமோ வாக்குவாதமோ செய்யாதீர்கள்.. அவர்கள் தரப்பில் தவறு செய்தால்கூட அதை கனிவுடன் அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள். முடிந்த வரை உங்கள் மனதை அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்துக்கொள்ளவும்.

20. சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தேர்வுக்கு சென்று விடாதீர்கள். அதே சமயம் ஹெவியாகவும் வேண்டாம். தரமான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை Half Stomach எடுத்துகொள்வது நலம்.

நாளைய நாள் உங்களுடையதாக இருக்க....நாளை மட்டுமல்ல இனிமேல் வரவிருக்கிற நாட்கள் அனைத்துமே உங்களுடையதாக இருக்க வாழ்த்துக்கள்.

மேற்சொன்ன அறிவுரைகள் அனைத்தையும் காணொளியாக கேட்க

https://youtu.be/x7HHRPjeLCk?si=CHGfxA0cWGKJhSF8

R.சத்யா.,
இயக்குனர்,
சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி.
சென்னை மற்றும் ஈரோடு
13.09.2024 .

குரூப் 4 தேர்வை எழுதப் போகிறீர்களா.? இது போன்ற அபாயங்கள் இருக்கா..? இந்த காணொளியை தவற விடவேண்டா இது போன்ற அபாயங்கள் இருக்கா..? இந்த காணொளியை தவற விடவேண்டாம் நீங்கள் ஏன் சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியில் சேர வேண்டும் ?(Wh...

Google Forms: Sign-in 04/09/2024

FREE MODEL EXAM FOR GROUP 2/2A ASPIRANTS. Know your Communal Rank & Over All Rank Immediately.

1st MODEL EXAM ON 08.09.24, SUNDAY @ 9AM to 1 PM
2nd MODEL EXAM ON 11.09.2024, WEDNESDAY @ 9AM to 1PM

செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 முதல்நிலைத் தேர்வு எழுதுபவர்களுக்கு, அத்தேர்வை எழுதுபவர்களின் தயாரிப்பை சீர்தூக்கி பார்க்கும் வகையில் தமிழக அளவில் இலவச மாதிரி தேர்வு 08.09.2024 மற்றும் 11.09.2024 ஆகிய நாட்களில் நடத்தப்படவுள்ளது. ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியில் நேரடியாகவும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள போட்டித்தேர்வர்களுக்கு ஆன்லைன் வழியாக என ஒரேநேரத்தில் நடத்தப்படவுள்ளது. அந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தேர்வு முடிந்தவுடன் தங்களது ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் கம்யூனல் தரவரிசையை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த இலவச மாதிரித் தேர்வின் (08.09.2024, SUNDAY & 11.09.2024 WEDNESDAY) மிக முக்கிய சிறப்பு எதுவெனில் 01.06.2022 முதல் தற்போது வரை TNPSC நடத்திய தேர்வுகளின் கேள்வித்தாள்களை ஆய்வுக்குட்படுத்தி, பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளையும் அலசி ஆராய்ந்து மாதிரி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.

All (Old Students of Sathya Academy and outside students) are requested to Submit a Google Form.
https://forms.gle/vs1s6EZBx7KPE6mn8

Current Students of Sathya IAS Academy i.e Roll Number From 0005863 to 0006478 are No need to submit a Google Form. But they must bring the copy of Group 2 prelims Hall Ticket on the model exam day

Google Forms: Sign-in Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

11/08/2024

Congradulations Jai.

மேலும் பல விருதுகள் உங்கள் கரங்களை அடைந்து பெருமையடையட்டும்.

💐💐💐💐💐

Dr.Nedumaran,IRS, JC, Income Tax Dept,Vijayawada, Greeted the Third 'Trio Meet' of Sathya Academy. 28/07/2024

வெ.இறையன்பு,IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் மூன்றாவது 'முப்பெரும் விழா'வை வாழ்த்தி வருமான வரித்துறை விஜயவாடா இணை ஆணையரும் சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் முன்னாள் மாணவரும் ஆசிரியருமாகிய டாக்டர் நெடுமாறன்,IRS வெளியிட்ட வாழ்த்து காணொளி.

Dr.Nedumaran,IRS, JC, Income Tax Dept,Vijayawada, Greeted the Third 'Trio Meet' of Sathya Academy. வெ.இறையன்பு,IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் மூன்றாவது 'முப்பெரும் விழா'வை ....

Mr.Abhishek Singh,IRS, DC, Patna Greeted the Third 'Trio Meet' of Sathya IAS Academy. 28/07/2024

வெ.இறையன்பு,IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் மூன்றாவது 'முப்பெரும் விழா'வை வாழ்த்தி பாட்னா சுங்கத்துறை துணை ஆணையரும் சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் முன்னாள் மாணவருமாகிய அபிஷேக் சிங்,IRS வெளியிட்ட வாழ்த்து காணொளி.

Mr.Abhishek Singh,IRS, DC, Patna Greeted the Third 'Trio Meet' of Sathya IAS Academy. வெ.இறையன்பு,IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் மூன்றாவது 'முப்பெரும் விழா'வை ....

Rajarajeswari,IRS,Joint Commissioner, New Delhi greeted the Third 'Trio Meet' of Sathya IAS Academy. 28/07/2024

வெ.இறையன்பு,IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் மூன்றாவது 'முப்பெரும் விழா'வை வாழ்த்தி வருமான வரித்துறை புது டெல்லி இணை ஆணையரும் சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் முன்னாள் மாணவியுமாகிய ராஜராஜேஸ்வரி,IRS வெளியிட்ட வாழ்த்து காணொளி.

Rajarajeswari,IRS,Joint Commissioner, New Delhi greeted the Third 'Trio Meet' of Sathya IAS Academy. வெ.இறையன்பு,IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியின் மூன்றாவது 'முப்பெரும் விழா'வை ....

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


#758, NSK Nagar Signal, Above Apollo Pharmacy, Poonamallee High Road
Chennai
600106