குர்ஆனின் சட்டங்கள்

குர்ஆனின் சட்டங்கள்

Share

இறைவன் தூதர் முஹம்மது மூலம் வழங்கிய ?

30/01/2016

திருக்குர்ஆன் நம்மை இந்த பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பிவிடும் ஒரு உயர்ந்த நூல் ! 45:3 அது நம்மை சிந்திக்கச் சொல்கிறது! 4:82 அது நம்மை எந்த ஒன்றின் மீதும் குருடனையும் செவிடனையும் போல் விழாமல் இருக்க தூண்டுகிறது. 25:73 அது நம்மை அனைத்தையும் செவியேற்று அதில் அழகானதை பின்பற்றுமாறு வளியுறுத்துகிறது 39:18

Photos 30/09/2015
Photos 28/08/2015

2: 31 وَعَلَّمَ آدَمَ الأَسْمَاء كُلَّهَا
2:31. இன்னும், எல்லாத் தன்மைகளையும் சிந்தனைக்கு கற்றுக் கொடுத்தான்;
ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلاَئِكَةِ
பின் அவற்றை விளைவுகள் முன் எடுத்துக்காட்டி,
فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاء هَـؤُلاء
எனவே இவற்றின் தன்மைகளை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
إِن كُنتُمْ صَادِقِينَ “நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின்
2: 32 قَالُواْ سُبْحَانَكَ لاَ عِلْمَ لَنَا
2:32. கூறினார்கள். “ நீயே தூயவன். அதைப்பற்றிய கல்வி எங்களுக்கு இல்லை.
إِلاَّ مَا عَلَّمْتَنَا
நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர
إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ
நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்”
2: 33 قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَآئِهِمْ
2:33. கூறினான் “சிந்தனையே! அவைகளின் தன்மைகளை அவர்களுக்கு விவரிப்பீராக!”
فَلَمَّا أَنبَأَهُمْ بِأَسْمَآئِهِمْ
அவை அத்தன்மைகளை அவர்களுக்கு விவரித்தபோது
قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ
கூறினான்.உங்களிடம் நான் சொல்லவில்லையா?”
إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالأَرْضِ
“நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும்,
وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும்
2: 34 وَإِذْ قُلْنَا لِلْمَلاَئِكَةِ اسْجُدُواْ لآدَمَ
2:34. பின்னர் நாம் விளைவுகளை நோக்கி, “சிந்தனைக்கு பணியுங்கள்” என்று சொன்னபோது
فَسَجَدُواْ إِلاَّ إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ
அவநம்பிக்கையைத் தவிர மற்றவை பணிந்தன ஆணவமும் கொண்டன
وَكَانَ مِنَ الْكَافِرِينَ
இன்னும் அவை நிராகரிப்பைச் சார்ந்து விட்டன.
2: 35 وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ
2:35. மேலும் நாம்,சொன்னோம். “சிந்தனையே! நீரும் உமது துணையும் சந்தோஷத்தில் திலைத்திருங்கள் .
وَكُلاَ مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا
மேலும் நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்
وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ
ஆனால் நீங்கள் சச்சரவின் பக்கம் நெருங்க வேண்டாம்;
فَتَكُونَا مِنَ الْظَّالِمِينَ
நீங்கள் அக்கிரமத்தில் நின்றும் ஆகிவிடுவாய்”
2: 36 فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا
2:36. இதன்பின், மடமை அவைகளை அதிலிருந்து வழி தவறச் செய்தன
فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ
அவைகள் இருந்ததிலிருந்து வெளியேறுமாறு செய்தன
وَقُلْنَا اهْبِطُواْ
இன்னும் நாம்,கூறினோம். “நீங்கள் இறங்குங்கள்;
بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ
உங்களில் சில சிலவற்றுக்கு பகையாக இருப்பீர்கள்
وَلَكُمْ فِي الأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ
பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு”
2: 37 فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ
2:37. எனவே சிந்தனை தம் பரிபாலனிடமிருந்து சில வாக்குகளைக் பெற்றுக் கொண்டன
فَتَابَ عَلَيْهِ
எனவே அவற்றின் மூலமாக விலகிக்கொண்டன
إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
2: 38 قُلْنَا اهْبِطُواْ مِنْهَا جَمِيعاً
2:38. நாம் சொன்னோம் “நீங்கள் ஒன்றாகக்கூடி இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்;
فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது,
فَمَن تَبِعَ هُدَايَ
எனவே எவர் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ
فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
2: 39 وَالَّذِينَ كَفَرواْ وَكَذَّبُواْ بِآيَاتِنَا أُولَـئِكَ أَصْحَابُ النَّارِ
2:39. மேலும் எவர் மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் வேதனையின் தோழர்கள்;
هُمْ فِيهَا خَالِدُونَ
அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பர்.
2: 40 يَا بَنِي إِسْرَائِيلَ
2:40. வீன்சிந்தனையின் சந்ததியினரே!
اذْكُرُواْ نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ
நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்;
وَأَوْفُواْ بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ
நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்;
وَإِيَّايَ فَارْهَبُونِ
மேலும், நீங்கள் எனக்கே அஞ்சுவீர்களாக.

Photos 24/08/2015

2: 21 يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُواْ رَبَّكُمُ
2:21. மதவாதிகளே! உங்கள் பரிபாலனத்திற்கு இணங்குங்கள்.
الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ
ஏத்தகயது என்றால் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தவன்
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் மெய்யறிவு உடையோராகலாம்.
2: 22 الَّذِي جَعَلَ لَكُمُ الأَرْضَ فِرَاشاً وَالسَّمَاء بِنَاء
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து,
وَأَنزَلَ مِنَ السَّمَاء مَاء
வானத்தினின்றும் நீரை பொழியச்செய்து;
فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقاً لَّكُمْ
கனி வர்க்கங்களை வெளிவரச் செய்து அதனின்று உங்களுக்கு அளிக்கின்றான்
فَلاَ تَجْعَلُواْ لِلّهِ أَندَاداً وَأَنتُمْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2: 23 وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا
2:23. இன்னும், நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால்,
فَأْتُواْ بِسُورَةٍ مِّن مِّثْلِهِ
இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
وَادْعُواْ شُهَدَاءكُم مِّن دُونِ اللّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
அல்லாஹ்வை விட்டுட்டு உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால்
2: 24 فَإِن لَّمْ تَفْعَلُواْ وَلَن تَفْعَلُواْ
2:24. நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது-
فَاتَّقُواْ النَّارَ الَّتِي
எனவே மெய்யறிந்து கொள்ளுங்கள். வேதனையை
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
மதவாதிகளையும் *கற்களையும்* எரிபொருளாகக் கொண்டது
أُعِدَّتْ لِلْكَافِرِينَ நிராகரிப்வர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
2: 25 وَبَشِّرِ الَّذِين آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ
2:25. நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள்
أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ
சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு;
كُلَّمَا رُزِقُواْ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقاً
அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம்
قَالُواْ هَـذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُواْ بِهِ مُتَشَابِهاً
“இதுவே முன்னரும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்;
وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ
ஆனால் இது போன்றதுதான் கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணையும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
2: 26 إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي
2:26. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படமாட்டான்.
أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
கொசுவையோ, அதிலும் மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில்
فَأَمَّا الَّذِينَ آمَنُواْ
எனவே நம்பிக்கைக் கொண்டவர்கள்
فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ
நிச்சயமாக அது தங்கள் பரிபாலனிடமிருந்து வந்துள்ள சத்தியமென்பதை அறிவார்கள்;
وَأَمَّا الَّذِينَ كَفَرُواْ فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَـذَا مَثَلاً
ஆனால் நிராகரிப்பவர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் என்ன நாடுகிறான்?” என்று கூறுகிறார்கள்.
يُضِلُّ بِهِ كَثِيراً وَيَهْدِي بِهِ كَثِيراً
இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்;
وَمَا يُضِلُّ بِهِ إِلاَّ الْفَاسِقِينَ
மேலும் அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை தீயவர்களைத் தவிர.
2: 27 الَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِن بَعْدِ مِيثَاقِهِ
2:27. இவர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர்.
وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ
அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன்
وَيُفْسِدُونَ فِي الأَرْضِ أُولَـئِكَ هُمُ الْخَاسِرُونَ
பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
2: 28 كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை மறுக்கிறீர்கள்?
وَكُنتُمْ أَمْوَاتاً فَأَحْيَاكُمْ
மேலும் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;
ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ

பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்;
ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ
இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
2: 29 هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الأَرْضِ جَمِيعاً
2:29. அவன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاء فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ
பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை எண்ணற்ற வானங்களாக ஒழுங்காக்கினான்.
وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
மேலும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
2: 30 وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلاَئِكَةِ
2:30. இன்னும், உம் பரிபாலனம் விளைவுகளை நோக்கி கூறியபோது,
إِنِّي جَاعِلٌ فِي الأَرْضِ خَلِيفَةً
“நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்”
قَالُواْ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاء
அவர்கள் கூறினார்கள்; “ நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்?
وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ
இன்னும் நாங்களோ விளிப்புணர்வோடு உன்னை புகழ்ந்தவர்களாக மேலும் உன் பரிசுத்ததைப் போற்றுகின்றோம்
قَالَ إِنِّي أَعْلَمُ مَا لاَ تَعْلَمُونَ
கூறினான் நிச்சயமாக நான் அறிவேன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம்.

Photos 24/08/2015

2: 11 وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால்
قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
“நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
2: 12 أَلا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَـكِن لاَّ يَشْعُرُونَ
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் உணர்கிறார்களில்லை.
2: 13 وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُواْ كَمَا آمَنَ النَّاسُ
2:13. மதவாதிகள் நம்பிக்கை கொண்டது போன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால்,
قَالُواْ أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاء أَلا إِنَّهُمْ هُمُ السُّفَهَاء
“மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல், நாங்களும் நம்பிக்கை கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் நிச்சயமாக இவர்களே மூடர்கள்.
وَلَـكِن لاَّ يَعْلَمُونَ
ஆயினும் இவர்கள் அறிவதில்லை.
2 :14 وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا
2:14. இன்னும் நம்பிக்கை கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்;
وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ
ஆனால் அவர்கள் தங்கள் மடைமைகளுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; எனக் கூறுகிறார்கள்.
إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِؤُونَ
நிச்சயமாக நாங்கள் பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்”
2: 15 اللّهُ يَسْتَهْزِىءُ بِهِمْ
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான்.
وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
2: 16 أُوْلَـئِكَ الَّذِينَ اشْتَرُوُاْ الضَّلاَلَةَ بِالْهُدَى
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்;
فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُواْ مُهْتَدِينَ
இவர்களுடைய வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
2: 17 مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَاراً
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது
فَلَمَّا أَضَاءتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللّهُ بِنُورِهِمْ
அது அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்;
وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لاَّ يُبْصِرُونَ
இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
2: 18 صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لاَ يَرْجِعُونَ
2:18. செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் மீள மாட்டார்கள்.
2: 19 أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاء فِيهِ ظُلُمَاتٌ
2:19. அல்லது, காரிருளும், கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;
وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصْابِعَهُمْ فِي آذَانِهِم
இடியும், மின்னலும் தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்;
مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ
மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால்,
واللّهُ مُحِيطٌ بِالْكافِرِينَ
மேலும் அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
2: 20 يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ
2:20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது.
كُلَّمَا أَضَاء لَهُم مَّشَوْاْ فِيهِ
அது அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதில் நடக்கிறார்கள்;
وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُواْ
அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது நின்றுவிடுகிறார்கள்;
وَلَوْ شَاء اللّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ
மேலும் அல்லாஹ் திட்டத்திலிருந்தால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்;
إ نَّ اللَّه عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.

Photos 18/08/2015

2 0 بسم الله
2 :0 அல்லாஹ் தன்மையை கொண்டுள்ளான்
الرحمن
அளவற்ற அருள்
الرحيم
நிகரற்ற அன்பு
2 1 الم
2:1. அலிஃப், லாம், மீம்.*1
2 2 ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
2:2. அது, விதிமுறையாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; மெய்யறிவுயுடையோருக்கு நேர்வழியாகும்
2 3 الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ
2:3. அவர்கள், மறைந்துள்ளவற்றை நம்பிக்கை கொள்வார்கள்
2 3 وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
மேலும் கடமையை கடைப்பிடிப்பார்கள் இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்.
2 4 والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ
2:4. இன்னும் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்; உமக்கு அருளப்பெற்றதின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும்
وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
இன்னும் இறுதியை அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
2 5 أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ
2:5. இவர்கள் தாம் தங்கள் பரிபாலனிடம் நேர்வழியில் இருப்பவர்கள்;
وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும் இவைகளே அவர்களின் வெற்றியாகும்
2 6 إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْ
2:6. நிச்சயமாக நிராகரிப்போரை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே!
هُمْ لاَ يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
2 7 خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்
وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ
இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
2 8 وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ
2:8. இன்னும் மதவாதிகளில் “நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்;அல்லாஹ்வின் மீதும், இறுதி காலத்தின் மீதும்
وَمَا هُم بِمُؤْمِنِينَ
ஆனால் அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
2 9 يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا
2:9. அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;
وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
ஆனால் அவர்கள் ஆத்மாவைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
2 10 فِي قُلُوبِهِم مَّرَضٌ
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது;
فَزَادَهُمُ اللّهُ مَرَضاً
அல்லாஹ் நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்;
وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

Photos 17/08/2015

1 1 بسم الله
1:1 அல்லாஹ் தன்மையை கொண்டுள்ளான்
الرحمن
அளவற்ற அருள்
الرحيم
நிகரற்ற அன்பு
1 2 الْحَمْدُ للّهِ
1:2 அனைத்து புகழும், அல்லாஹ்வுக்கே ஆகும்
رَبِّ الْعَالَمِينَ
அகிலங்கள் எல்லாவற்றின் பரிபாலனம்
1 3 الرَّحْمـنِ
1:3. அளவற்ற அருளாளன்
الرَّحِيمِ
நிகரற்ற அன்புடையோன்.
1 4 مَـالِكِ
1:4. ஆள்பவன்.
يَوْمِ الدِّينِ
காலத்தின் நெறிமுறையை
1 5 إِيَّاكَ نَعْبُدُ
1:5. உன்னையே நாங்கள் இணங்குகிறோம்;
وإِيَّاكَ نَسْتَعِينُ
இன்னும் உன்னிடமே நாங்கள் உதவியும் அடைகிறோம்.
1 6 اهدِنَــــا
1:6. எங்களை நேர்வழி
الصِّرَاطَ المُستَقِيمَ
பாதையில் நடத்துகிறவன்!
1 7 صِرَاطَ الَّذِينَ
1:7. பாதை எத்தகையது என்றால்
أَنعَمتَ عَلَيهِمْ
நீ அவைகளுக்கு அருள் புரிந்தாய்
غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ
உன் கோபத்திற்கு ஆளானதுமல்ல
وَلاَ الضَّالِّينَ
நெறி தவறியதுமல்ல.

QURAN RETOLD IN TAMIL 10/06/2015

ரமலான் மாதம் என்றால் என்ன ?

ரமலான் மாதம் குர்ஆன் மூலமாக எப்படி ஏற்படுகிரது ?

குர்ஆனிலிருந்தே முற்றிலும் குர்ஆனைக் கொண்டே தெளிவுபடுத்தப் படுகிறது !!!

குர்ஆன் மீது விசுவாசம் கொண்ட மக்களே !
**********************************************************
இந்தக் குர்ஆன் மனிதர்கள் யாவரையும் படைத்த அகிலங்களின் இறைவனால் நபி முஹம்மது மூலமாக அவருக்கும் நமக்கும் அருளப்பட்டுள்ளது.

ஆகவே, மனிதர்களாகிய நம்மில் யார் நபி முஹம்மது அவர்களை இறைவனுடைய தூதர் என்றும், இந்தக் குர்ஆன் நபி முஹம்மது வாயிலாக அவருக்கும் நமக்கும் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டிருக்கின்ரது என்றும் உண்மையாக உறுதியாக நம்பிக்கை – ஈமான் – விசுவாசம் கொண்டிருக்கின்றார்களோ,

அவர்களுடைய வாழ்வியல் நெறியாக இதனை ( குர்ஆனை ) கடைபிடிப்பதற்காக நமக்கு அருளப்பட்டிருக்கின்றது;

அவ்வாறு நாம் நம்முடைய வாழ்வியல் நெறியாக இந்தக் குர்ஆனைக் கொண்டு, மாற்றிக் கொள்ளவில்லையெனில் நமக்கு நரகம் நிச்சயம் என்றும் இந்தக் குர்ஆன் மூலமாக நமக்கு நம்மை படைத்த இறைவன் நபி முஹம்மது மூலமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறான்.

இந்தக் குர்ஆனுடன் அடிக்கடி நபி முஹம்மதை தொடர்பு படுத்துவதற்கு காரணம் : அவரைத்தான் அல்லாஹ் இந்தக் குர்ஆனை சுமப்பதற்கு முதல் மனிதராக தேர்ந்தெடுத்தான்.

ஆகவே, இந்தக் குர்ஆனில் நாம் வாசிக்கும் ஒவ்வொரு வரியும் நபி முஹம்மது அவர்கள் அவருடைய சமூகத்திற்கு வாசித்துக் காண்பித்தது.

அதனைத்தான் இன்று நாமும் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், அதன் விசயங்கள் என்ன ? என்பதை அறிந்து கொள்ள அந்த பாதையில் நாம் எடுக்கும் முயற்சியோ வெகு வெகு சொற்ப்பமாகவே இருக்கின்றது.

அதற்கு காரணம் : இந்த உலக வாழ்க்கை நம்மை மயக்கிவிட்டது !!

இதுதான் உண்மை இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஆகவேதான் இந்தக் குர்ஆன் ஒன்று சொல்லிக் கொண்டிருக்க நாம் வேறு வேறு காரியங்களிலும், சடங்குகளிலும் மாட்டிக் கொண்டு, சிக்கிக் கொண்டு,
இதுதான் இஸ்லாம் இதுதான் தூதர் சொன்னது என்று நம்முடைய வாழ்க்கையை நாம் கழித்துக் கொண்டு செல்கிறோம்.

ஆனால், இதன் விளைவு என்ன ? என்பதை நாம் குர்ஆனைக் கொண்டு அறிய ஆராய சிந்திக்க தவறுகிறோம்.

ஆகவேதான் பின்னால் வரக் கூடிய மறுமை என்ற நாளை நாம் நமக்கு ஒரு பளூவாக விட்டுச் செல்லும் பாதையில் நம்மையே அறியாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே,

இங்கு நபி முஹம்மது அவர்களுக்குப் பின்னர் முதன் முறையாக,

ரமலான் மாதம் என்றால் என்ன ?

ரமலான் மாதம் எப்படிப்பட்டது ?

ரமலான் மாதத்தில் நாம் அடையக் கூடிய பலன் என்ன ?

ரமலான் மாத நோன்பை எப்படி நிரைவேற்றுவது ?

போன்ற கேள்விகளுக்கு குர்ஆனிலிருந்தே முதன் முறையாக தெளிவுபடுத்தப் படுகிறது.

ஆகவே, மறுமையை அஞ்சுபவர்கள் இந்த ஆடியோவைக் கேட்டு, தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு பணிவாக கேட்டுக் கொள்கிறோம்.

https://www.youtube.com/watch?v=k_aYld-u67Y&feature=youtu.be

QURAN RETOLD IN TAMIL ரமலான் மாதம் என்றால் என்ன ? ரமலான் மாதம் எப்படி குர்ஆனுடைய அடிப்படையில் ஏற்படுகிறது ? குர்ஆனிலிருந்தே தெளிவுபடுத்தப் படுகிறது !!

QURAN RETOLD IN TAMIL 31/05/2015

குர்ஆனின் மீது விசுவாசம் நம்பிக்கை ஈமான் கொண்ட மக்களே !
****************************************************************************
மனிதர்களாகிய நமக்கு இறைவன் புறமிருந்து நபி திரு முஹம்மது அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட இறுதி வேதமாகிய திருக் குர்ஆனை அதன் அர்த்தம் புரியக் கூடிய மொழியில் ஓதி, அதன் வசனங்களைச் சிந்தித்து, அதனுடைய ஞான விளக்கத்தை நம்மை படைத்த இறைவன் புறமிருந்து நம்முடைய சிந்தனை சக்திக்கும், தூய எண்ணங்களுக்கும் தகுந்தார் போல் பெற்று, அதனை நாம் நம்முடைய வாழ்க்கையில் நிலை நிருத்த, கடைபிடிக்க, பேணிக் கொள்வதற்காக நமக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, வேதம் என்பது மனிதனுடைய நன்மையை அடிப்படையாக கருதியே நம்மை படைத்த இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாம் அதன் உபதேசத்தை அறிந்து, புரிந்து, விளங்கி, உணர்ந்து நம்முடைய வாழ்க்கையில் கடைபிடித்தால் மட்டுமே நாம் இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றியாளர்கள்;

ஆனால், நாம் அதன் விசயங்களை முற்றாக புறக்கனித்தவர்களாகவே இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;

நம்முடைய இந்த நிலைமை இதே நிலையில் தொடர்ந்தால் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் இழிவும் நரக வேதனையும் நிச்சயம் என்பதில் சந்தேகமே இல்லை;

ஆகவே, நாம் நம்மை சீர்திருத்திக் கொண்டு, இறைவனுடைய வேதத்திற்கு கொடுக்க வேண்டிய மறியாதையையும், மதிப்பையும் ஏற்படுத்தும் முயற்சியில் நாம் மும்முரமாக இறங்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் நம் கரங்களாலே நாம் நமக்கு கேட்டை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஆகவே, இந்த நிலையை நாம் எல்லோரும் மாற்றிக் கொண்டு, இறைவனுடைய உபதேசத்தின் படி வழி நடப்பதற்காக,
இங்கு குர்ஆன் தமிழில் ஓதக் கூடிய முறையும்,
அதன் தெளிவான அர்த்தத்தை திருக் குர்ஆனிலிருந்து மட்டுமே எடுக்கக் கூடிய வழியில் கற்பிக்கப் படுகின்றது;

மறுமையின் மீது அச்சம் உள்ளவர்கள் இந்த ஆடியோக்களை கேட்டு,
நீங்களும் குர்ஆனை அர்த்தத்துடன் ஓதி, அதனுடைய ஞான விளக்கத்தை இறைவன் புறமிருந்து அடைந்து, அதனை உங்கள் வாழ்க்கையில் நிலை நிருத்த வேண்டும் என்று பணிவாக கேட்டுக் கொள்கிறோம்.

WEBSITE : QURAN RETOLD IN TAMIL WEEBLY.COM

https://www.youtube.com/watch?v=7X0K94gM8bA&feature=youtu.be

QURAN RETOLD IN TAMIL குர்ஆன் தமிழில் ஓதுகின்ற முறையும், அதன் தெளிவான அர்த்தம் எடுக்கும் முறையும். பாகம் : 16 சூரா : 2 ஆயத்து : 127 முதல் 150 வரை.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai
600004