தமிழில் நற்செய்தி

தமிழில் நற்செய்தி

Share

நம்பிக்கை தருவது நற்செய்தி.
நாமும் க?

மீன்களைப் பிடிக்கும் மீனவராலே
மீட்பின் செய்தி கொடுத்தவரே,
நாங்களும் தகுதி அற்றவர்தாமே.
நற்பணி தந்தது உம் அருளே.
ஏங்கித் தவிக்கும் ஏழையர் மீள
என்றும் செயல்படும் நல்லிறையே,
தூங்காதெம்மைத் தாங்கும் உம்மை,
தொடர்ந்து புகழ்தல் எம் பணியே!

01/09/2022

சாதிகள் நன்றோ?

முதலில் வந்த மனிதன் யாரோ?
முன்னோர் கூறும் ஆதம் பேரோ?
அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?
அப்படியாயின், சாதிகள் நன்றோ?
எதனை வாங்கக் கோவில் சென்றாய்?
ஏன்தான் இந்தத் தீமை கொண்டாய்?
கதறி அழுகிறார்; ஏழைக்கிரங்கு.
காணும் சாதிகள், சொறி, சிரங்கு!

-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com

01/09/2022

நாலடி நற்செய்தி!
ஒரு முறை கூட!

ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.
தெரு இடம் இருக்க, போனது வலமே.
மறுமுறை நோக்கித் திருந்தும் மனமே,
இருமுறை பிறந்த இறையின் இனமே!

-செல்லையா.

31/08/2022

பொய்யா? மெய்யா?

உள்ளே இருப்பது துரும்பு.
ஊரில் உரைப்பது இரும்பு.
வெள்ளி, பொன்னாய் நினைத்து,
விழாதீர், அலகை அணைத்து.

எள்ளிலிருப்பது எண்ணெய்;
எடுக்கும் உழைபே உண்மை.
கொள்ளி வைக்கும் பொய்மை.
கொள்வீர் இறையின் மெய்மை!

-கெர்சோம் செல்லையா.

29/08/2022

சொல்லும் செயலும்!

நற்செய்தி: யோவான் 8:41-42.

41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு. அவர் தேவன் என்றார்கள்.

42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

நல்வழி:

அன்பே இறைவன் என்று மொழிவார்;
ஆயினும் அன்பை அவர் பொழியார்.
தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;
தமது செயலால் மகன் பழிப்பார்.
இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,
இயேசுவோடு பிணைந்திடுவார்.
நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,
நலமிலா தீதும் களைந்திடுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

26/08/2022

இயேசு போன்று நடப்போம்!

நற்செய்தி: யோவான் 8:39-40.39.

அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.

40. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

நல்வழி:

தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,
தவறு என்று சொல்லேன் நான்.
முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,
முழுவதும் இன்று அறுப்பவன் யான்.
மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,
மனிதருக்கென்ன செய்தேன் நான்?
எந்தையிறையே, என்னைத் தந்தேன்;
இயேசு போன்று நடக்கத்தான்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

24/08/2022

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?

நற்செய்தி: யோவான்: 8:37-38.

37. நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.

38. நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.

நல்வழி:

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
பெரியோர் என்பின் சிந்திப்பீர்.
கற்றோர் என்றால் கொலை செய்வாரா?
கயமை வெறியினை நிந்திப்பீர்.
தொற்றாதிருக்கிற நற்பண்பென்ன?
தூயோன் இயேசுவைச் சந்திப்பீர்.
உற்றார் உறவாய் யாவரும் வருவார்;
ஒவ்வொருவரையும் மன்னிப்பீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

22/08/2022

அடிமையா? பிள்ளையா?

நற்செய்தி: யோவான் 8: 35-36.

35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.

36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

நல்வழி:

திருந்தார் வாழ்வைத் துருவிப் பார்த்தேன்.
தீங்கிற்கடிமைப் பட்டிருந்தார்.
பருந்தாய் உயரப் பறப்பதும் பார்த்தேன்.
பழியில் விழவே கெட்டிருந்தார்.
பொருந்தார் இறைமுன் வருவது பார்த்தேன்.
பொய்மை வெறுத்து விட்டிருந்தார்.
விருந்தாய்ப் பேறு உண்பதும் பார்த்தேன்.
விண் மகவாகத் தொட்டிருந்தார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

20/08/2022

அன்பே இறைவன்!

கொல்லவும், அழிக்கவும் ஒருவன் வந்தால்,
கோனாய், இறையாய்ப் பாராதீர்.
வெல்லவும், வீழ்த்தவும், சூது புனைந்தால்,
விரும்பும் அறமாய் வாராதீர்.
சொல்லவும் செய்யவும் பழியும் தந்தால்,
சொல்கிற அவன்பின் சேராதீர்.
எல்லையும், முடிவும் இல்லான் ஒருவன்;
இவனன்பு விட்டு மாறாதீர்!

-செல்லையா.

16/08/2022

தீவினைக்கு அடிமை!

நற்செய்தி: யோவான் 8: 33-34.

33. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.

34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

யாருக்கும் அடிமை இல்லை என்று,
யாவரும் கூறும் பழக்கமுண்டு.
பேருக்குப் பின்னால் சாதியும் போட்டு,
பெருமை காட்டும் வழக்கமுண்டு.
நேருக்குந்நேராய் இறை முன் வந்தால்,
நெஞ்சின் அழுக்கு புரிந்துவிடும்.
ஊருக்குத் தெரியா அடிமைத்தனங்கள்
ஓடிட, விடுதலை தெரிந்துவிடும்.

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

15/08/2022

விடுதலை நாள் வாழ்த்து!

பதவி நாளில் எதையும் அள்ளும்
பண்பு கொண்ட பாரதம்,
உதவி நாடும் ஏழை எள்ளும்;
உண்மை தேடிப் பார் அதம்.
இதனை இன்று எடாது தள்ளும்,
இந்தியர்கள் வளர்விதம்,
மதம் என்றே பெயர் கொள்ளும்.
மா அன்புதான் நல்லிதம்!

-செல்லையா.

அதம்= தாழ்வு
இதம் = இனிமை

14/08/2022

மெய்மை தரும் விடுதலை!
நற்செய்தி: யோவான் 8:30-32.
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
நல்வழி:
மெய்மை தருகிற விடுதலையொன்றே,
மேன்மையான விடுதலையாம்.
செய்கை, வாக்கில் தூய்மை என்றே,
செயல்படாதோர் அடிமைகளாம்.
எய்தல் வைத்து இலக்கை இன்றே,
எடுத்துக் காட்டி முடிக்கும் நாம்,
பொய்மை விட்டு விடுதல் நன்றே;
புரியார் வாழ்வும் வெடிக்குமாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

12/08/2022

நாலடி நற்செய்தி!

உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;
உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.
கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,
கரையும் என்றே, தப்பினை மாயும்!

-செல்லையா.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai
600099.