அறிந்ததும் அறியாததும்

அறிந்ததும் அறியாததும்

Share

அறிவியல் வேலைவாய்ப்பு அரசியல் வரலாறு மற்றும் சமூக விழிப்புணர்வு பதிவுகள் தமிழில்

15/11/2021

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தனது நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால்
50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

மிகவும் சோர்ந்து போன அவர், அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

இவர் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு "ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர், "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டது; மனது உடைந்து போய் விட்டேன்" என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?"

"50 கோடி ரூபாய்"

"அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்ட அவர், அந்த ஊரில் மிகவும் பிரபல செல்வந்தரின் பெயரைச் சொன்னார்.

அசந்து போன இவரிடம்...

"சரி, 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர்...
"ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

பின்னர் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு
இவரிடம் நீட்டி... "இந்தா, இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதை விட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி.
ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.
அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் திணித்துவிட்டு சென்று விட்டார்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக தன் அலுவலகத்திலுள்ள தனது அறைக்குள் சென்று, அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார்.
பின்பு தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார்.
ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.

கூட்டத்திற்கு வந்த அவர் பேச ஆரம்பித்தார்.
"நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது.
ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன்.
இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது?
எதனால் எதற்காக ஏற்பட்டது ?
என்று ஆராய்ந்து அதை களைந்து...
நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று... கேட்டுக்கொண்டார்.

பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன.

தவறுகள் கண்டறிந்து களையப்பட்டன.

அனைத்து ஊழியர்களையும் அழைத்து மிகச்சரியாக ஒத்துழைக்க வைத்தார்.

அவருடைய பேச்சு, மூச்சு, செயல், சிந்தனை, தூக்கம் எல்லாம் அவரது தொழிலைப் பற்றியே இருந்தது.

ஒரு வருடம் கழிந்தது.
கணக்குகள் அலசப்பட்டன.
அதிகபட்சமாக 550 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம்.

அடுத்த நாள் விடியற்காலையில் அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக்கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார்.

சென்ற வருடம் அமர்ந்திருந்த அதே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
காலை நேரமாதலால் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.

சற்றுநேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவரைத் தாங்கி பிடித்தவாறு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.

சில விநாடிகள் கழித்து பார்த்தால்...
அந்த பெண்மணி மட்டும் வருகிறார்;
அந்த செல்வந்தரைக் காணவில்லை!

இவர் சென்று அந்த பெண்மணியிடம்...
எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்.

"இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?"

"இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம்! அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி...
இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்!"

ஒருநிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேச்சு வரவில்லை!
நம்மால் முடியும் என்று நினைத்தால்... நிச்சயமாக முடியும்.
அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது!

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விஷயமும் நம்மால் முடியும் என்று
முதலில் நாம் நம்பவேண்டும்!

அப்போது தான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

09/11/2021
28/08/2021

இன்றைய விடுகதை

26/08/2021

இறக்கத்தான் பிறந்தோம்

இருக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம்

#இரக்கத்தின்_இருப்பிடம்

#சேவையின்_உறைவிடம்

#அன்னை_தெரசா பிறந்த தினம் இன்று

09/08/2021

இதுவரை இந்தியா 🇮🇳 ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்கள்

1896🥈🥈
1928🥇
1932🥇
1936🥇
1948🥇
1952🥇🥉
1956🥇
1960🥈
1964🥇
1968🥉
1972🥉
1980🥇
1996🥉
2000🥉
2004🥈
2008🥇🥉🥉
2012🥈🥈🥉🥉🥉🥉
2016🥈🥉
2021🥇🥈🥈🥉🥉🥉🥉

08/08/2021

எண்களை தமிழில் எளிதாக படிக்கும் முறை...

08/08/2021

ஸ்டாலின் தான் வந்தாரு
விடியல் தான் தந்தாரு...

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai