Kalvicholai Charitable Trust

Kalvicholai Charitable Trust

Share

Social Service for Education

19/05/2026
11/03/2026

.

08/08/2024

இது..!
பசிக்கின்ற வயிறுகளை...
தண்ணீரில்...
தாலாட்டும் தாய்..!

செல்வத்தை...
தொட நினைத்தும்
இன்றுவரை...
வறுமையை தான்டாத
வாசல்படி..!

ஏழை எனும்...
உயிரில்...
ஆசைகளை...
நீண்டகால ஏக்கங்களாக...
உறங்க வைக்கும்
தொட்டில்..!

பல அடுக்கு மாடிகளை...
தலைகுனிந்து...
பார்க்கவைத்து...
தன்னம்பிக்கையோடு
காயும் குடிசை..!

ஒவ்வொரு விடியலிலும்...
செத்துவிடும்...
நிலையினிலே...
முளைத்துகொண்டிருக்கும்...
விதைகள்..!

வியர்வையும்...
கண்ணீரும்...
நிரம்பி வழிகின்ற...
நிறைகுடம்..!

வாழ்நாளில்...
நிஜமானஆசைகளை
கணவாக காட்டும்...
கண்ணாடி..!

கசப்பான...
நினைவுகளும்...
கசந்துகொண்டிருக்கும்...
நிகழ்வுகளும்...
ஒன்றாக சங்கமித்து...
சங்கடத்தில் மூழ்கடிக்கும்...
சமுத்திரம்..!

வறுமை..!
இதற்க்கு கொடுக்கபட்ட
அடையாள நிறம் சிவப்பு!
ஆனால்..!
இங்கே...
சிவப்பு கம்பள வரவேற்போ..?
செல்வத்திற்க்கு..!

இந்த உலகத்தில்...
மாற்றம் ஒன்றே...
மாறாததாம்..!
அப்படியானால்..!
இந்த வறுமை..!
எப்போது மாறும்..?

இதய வலிகளாய்.....
கல்விச்சோலை சாரிட்டபிள் ட்ரஸ்ட்.

17/07/2024

ஒருவரை மதிப்பத‌ற்கான "அளவுகோல்" என்ன தெரியுமா?

1954ல் டாக்டர் அம்பேத்கர் கோலார் தங்கவயலுக்கு வந்தார். ஊரே திருவிழாக்கோலம் பூண்டது. தெய்வமே தங்களை பார்ப்பதற்காக, வானத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டதாக எண்ணி தங்கவயல் மக்கள் துள்ளி கொண்டாடினார்கள். பெங்களூர், வேலூர், மெட்ராஸ் ஆகிய ஊர்களில் இருந்தும் ஆட்கள் அணிவகுக்க தொடங்கினார்கள்.

பாரத சுரங்க விருந்தினர் மாளிகையில் அம்பேத்கர் தங்கியிருந்தார். கே.ஜி.எஃப் எம்எல்ஏ பி.எம்.சுவாமிதுரை, செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் மூத்த தலைவர் ஜே.சி.ஆதிமூலம் போன்றவர்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். தங்கவயலின் பவுத்த சங்க பிரதிநிதிகள், எஸ்.சி. தொழிலாளர் சங்கத்தினர், பல்வேறு அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள், சுரங்க நிர்வாகத்தின் முக்கிய அலுவலர்கள் அம்பேத்கரை சந்திப்பதற்காக குவிந்திருந்தனர்.

அப்போது, கர்நாடகாவிலே பெரிய மருத்துவமனையாக திகழ்ந்த‌ பெங்களூர் குயின்ஸ் அரசினர் மருத்துவமனையின் டீன் அங்கே வந்தார். இந்த தகவலை கட்சியினர் அம்பேத்கரிடம் சென்று, '' டீன் வந்திருக்கிறார். கர்நாடகாவிலே பெரிய டாக்டர். அவர் நம் சமுதாயத்தை சார்ந்தவர். உங்களை சந்திக்க விரும்புகிறார்''என மூத்த நிர்வாகி கூறினார்.

அதற்கு அம்பேத்கர், ''அவர் இந்த சமுதாய மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?'' என கேட்டார். அதற்கு மூத்த நிர்வாகி, 'எதுவும் இல்லை' என உதட்டை பிதுக்கினார். உடனே கோபமடைந்த அம்பேத்கர், ''அவரின் முகத்தையே பார்க்க விரும்பவில்லை. இங்கிருந்து வெளியே போக சொல்லுங்கள்''என சீறினார்.

ஒருவரை மதிப்பதற்கு டாக்டர் அம்பேத்கர், எத்தகைய அளவுகோலை வைத்திருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். சமுதாயத்துக்கு பயன்படாதவர், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களை ஒரு குப்பையை போல கருதி இருக்கிறார். தன்னை விட தன் மக்களை நேசிக்கும் ஒரு தலைவரால் மட்டுமே, இப்படியான தீர்க்கமான‌ பார்வையை கொண்டிருக்க முடியும்.

பட குறிப்பு: டாக்டர் அம்பேத்கர் 12.7.1954 அன்று கே.ஜி.எஃப் வந்தபோது இந்த படம் எடுக்கப்பட்டது. இன்றுடன் அவர் தங்கவயலுக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிறது.

11/04/2024

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*ஏப்ரல் – 11 – 1827 - கல்வியால் சமூக மாற்றத்தை விளைவித்த மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த தினம்*
கல்வி மறுக்கப்பட்ட பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டியவர், சாதிய ஏற்றதாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்துப் போராடுவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்தநாள் ஏப்ரல் 11 . அவருடைய மகத்தான் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் சில தகவல்களைப் பார்ப்போம்:

• இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தின் சாதாரா மாவட்டத்தில் 1827 ஏப்ரல் 11 அன்று பிறந்தார் ஜோதிராவ் புலே. இவருக்கு ஒருவயது நிறைவடைவதற்குள் இவருடைய அம்மா இறந்துவிட்டார். இவருடைய தந்தை கோவிந்தராவ் புலே காய்கறி விற்பனையில் ஈடுபட்டுவந்தார்.

• குடும்பத்தின் வறுமை காரணமாக கல்வி தடைபட்டது. ஆனால் ஜோதிராவ் புலேயின் அறிவாற்றலை உணர்ந்த நண்பரின் வலியுறுத்தலால் இவருடைய தந்தை இவரை தொடர்ந்து கல்வி கற்கச் செய்தார். ஸ்காட்டிஷ் மெட்ரிக் பள்ளியில் கல்வி கற்றார் ஜோதிராவ் புலே. 13 வயதில் அக்காலகட்டத்தின் வழக்கப்படி இவருக்கு சாவித்ரிபாய் என்பவருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

• பட்டியல் சாதியைச் சேர்ந்த புலே சாதியப் பாகுபாடுகளை எதிர்கொண்டார். தாமஸ் பெய்ன் என்பவர் எழுதிய ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்னும் நூல் அவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டுவதன் மூலமாகவே சாதிக் கொடுமைகளையும் சமூக ஏற்றதாழ்வுகளையும் களைய முடியும் என்று முடிவெடுத்தார். பெண்களுக்கு கல்வி புகட்டும் பணியை வீட்டிலிருந்தே தொடங்கினார். அவருடைய மனைவி சாவித்ரிபாய்க்கு நான்கு ஆண்டுகாலம் கல்வி கற்பித்தார்.

• கணவனும் மனைவியும் இணைந்து 1847இல் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் கணவனை இழந்த சிறுமிகள், பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். 1848இல் இந்தியாவில் முதல் முறையாக பெண் குழந்தைகளுக்கான பள்ளியைத் தொடங்கினர். ஒன்பது குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளியில் சாவித்ரிபாய் ஆசிரியராக பணியாற்றினார். சாஸ்திரங்களின் பெயரால் பெண்கள் கல்வி கற்கத் தடைவிதிக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில் பெண்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் புகட்டிய ஜோதிராவுக்கும் சாவித்ரிபாய்க்கும் ஆசாரவாதிகள் பல இன்னல்களை விளைவித்தனர்.

• கணவனை இழந்த பெண்கள் எதிர்கொண்ட கொடுமைகளைக் களைவதற்காக அவர்களுக்கான ஆசிரமத்தைத் தொடங்கினார். கைம்பெண் மறுமணத்தை தீவிரமாக முன்னெடுத்தார். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆசிரமத்தைத் தொடங்கினார்.

• 1873இல் நண்பர்களுடன் சேர்ந்து சத்ய சோதக் சமாஜ் (உண்மையைத் தேடுபவர்களின் சமூகம்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். சாதி ஏற்றதாழ்வை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்டுவதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை சாதியக் கொடுமைகளிலிருந்து மீட்பதும் இந்த அமைப்பின் முதன்மை நோக்கங்களாக இருந்தன.

• வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டு தீண்டாமை உள்ளிட்ட எண்ணற்ற ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட பட்டியல் சாதி மக்களைக் குறிக்க ‘தலித்’ என்னும் சொல்லை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஜோதிராவ் புலேதான் என்று ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர்.

• ஜோதிராவ் புலேவின் சமூக சீர்திருத்தப் பணிகளை கெளரவிக்கும் விதமாக 1888இல் அவருடைய பிறந்தநாள் அன்று அவருக்கு மகாத்மா பட்டத்தை வழங்கினார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விட்டல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர்.

• ‘த்ருதிய ரத்னா’, ‘குலாம்கிரி’, ‘இஷாரா’ உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மராத்தி மொழியில் எழுதியுள்ளார்.

• பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜோதிராவ் புலே 1890 நவம்பர் 28 அன்று மறைந்தார். புலேவின் மரணம் நிகழ்ந்த புனே நகரத்திலேயே அவருக்கான நினைவிடம் அமைந்துள்ளது.

29/11/2023

பிறந்து விட்டோம் போராடிதான் ஆகனும்...

வேறு வழியில்ல...!

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chennai