25/02/2026
Students from the Department of Criminology and Criminal Justice, Manonmaniam Sundaranar University, conducted an awareness session on Basic Crime Prevention for Children.
The program focused on educating children about personal safety, recognizing risks, speaking up about unsafe situations, and understanding simple crime prevention practices. The session was interactive, informative, and helped students gain confidence and awareness about staying safe.
03/11/2025
Clean water, clear minds 💧
A big thank you to the Inner Wheel Club of Harmony, Chennai for generously providing an RO water purifier for the students of Thiruvalluvar Gurukulam Middle School, Saidapet.
Access to safe drinking water was a growing need for our students, and this thoughtful contribution now ensures they stay healthy, hydrated, and ready to learn every day! 💙
16/06/2025
2014 ல் திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தின் நிலை மற்றும் 2015 ஆண்டுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களால் மிக மோசமான நிலையில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானம்.
06/06/2025
2015 ஆம் ஆண்டு சென்னை பெருமழை வெள்ளத்திற்கு பிறகு ஆக்கிரமிப்பாளர்களால் பள்ளி விளையாட்டு மைதான மிக மோசமான நிலையில் உள்ளது.
06/06/2025
1972 ஆம் ஆண்டு முதல் 53 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் போது விளையாட்டு மைதானத்தின் நிலை.....
2015 ஆண்டு சென்னை பெருமழை வெள்ளத்திற்கு பிறகு ஆக்கிரமிப்பாளர்களால் மிக மோசமான நிலையில் இருக்கும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை அடுத்து வரும் பதிவில் காண்க.....😢☹️🙁
06/02/2025
05.02.2025 அன்று ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல துறை அமைச்சர் மாண்புமிகு Dr. M. மதி வேந்தன் அவர்களை நமது சவுத் இந்தியா ஷெட்யூல் டிரைப்ஸ் வெல்ஃபர் அசோசியேசன் (205/1972) நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளும் நேரில் சந்தித்து நரிக்குறவர் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர். எங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று எங்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளையும் மிகவும் பொறுமையுடன் கேட்டு அறிந்து கொண்டதோடு அவற்றை விரைவாக பரிசீலித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார். நமது திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை வெளியேற்றிடவும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுச்சுவர் எழுப்புவது சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் சங்க தலைவர் மற்றும் நிறுவனர் அவர்கள் விளக்கி கூறியதை மிகவும் பொறுமையுடன் கேட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எங்கள் திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறையின் சிறப்பு நிரந்தர அங்கீகாரம் வழங்கி பள்ளிக்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்து தனது 50 ஆவது பிறந்த நாளுக்கு சீரணி தொண்டர்கள் மூலம் பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்களை கட்டி கொடுத்த சிறப்புகள் குறித்தும் எங்கள் பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். பள்ளி நிறுவனர் அவர்கள் பள்ளிக்கான சுற்றுசுவரின் அவசியம் குறித்தும் அதன் தேவை குறித்தும் விளக்கிக் கூறிய போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மிகவும் கனிவுடன் அன்புடனும் கேட்டுக் கொண்டார். பள்ளி விளையாட்டு மைதானத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் வரவிருக்கும் தற்காலிக மீன் சந்தை குறித்தும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலை மற்றும் சிக்கல்கள் குறித்தும் பள்ளி நிறுவனர் தலைவர் அவர்கள் கூறியதை மிகவும் கவனமுடன் கேட்டுக்கொண்டார். அவரை சந்திக்க சென்ற அனைத்து நரிக்குறவர் பழங்குடியின மக்கள் அனைவரிடமும் பொறுமையாக அவர்களது கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். நாம் அவருக்கு அணிவித்த மணிமாலைகளையும் பொன்னாடைகளையும் அன்புடன் ஏற்றுக் கொண்டார். நாங்கள் அனைவரும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அமைச்சருடனான இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியானதாகவும் மன நிறைவுடனும் திருப்திகரமாகவும் இருந்தது. மாண்புமிகு அமைச்சர் Dr. M.மதிவேந்தன் அவர்களின் சேவை சிறக்க இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
சவுத் இந்தியா செட்டியூல் டிரைப்ஸ் வெல்ஃபர் அசோசியேசன் (205/1972) மற்றும்
திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிர்வாகிகள்.🙏🙏🙏🙏🙏
21/01/2025
திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளியில் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழாவை, குழந்தைகள் பெற்றோர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருந்த நமது பள்ளி முன்னாள் மாணவர்கள் , முன்னாள் ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள்🙏🙏🙏
05/12/2024
05.12.2024. எங்கள் பள்ளியில் வாரம் இரு முறை இணைய வழி ஆங்கில வகுப்புகள் நடைபெறுகிறது. அமெரிக்க நாட்டில் இருந்து திருமதி . ஷமீமா
திருமதி. ஷீபா
ரேஹன் மற்றும் ஷகீல் ஆகியோர் மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக ஆங்கிலத்தை சரளமாக பேசவும் எழுதவும் தேவையான பயிற்சிகளை வழங்குகின்றனர். இதுபோன்ற புதிய கற்பித்தல் முறையின் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் ஏற்படும் தயக்கத்தையும் சந்தேகத்தையும் போக்கிட முடிகிறது.
இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு பள்ளியில் சேர்த்து தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்துள்ளோம். இது போன்ற வகுப்புகள் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.