24/08/2026
வரலாற்றில் 20 சதுர அடிகள்!
“தமிழ் நெடுஞ்சாலை” ஊடாக மட்டுமே பயணித்து, உலகளாவிய அனுபவங்கள் பெற்று, 34 ஆண்டுகள் இந்தியக் குடிமைப் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. ஆர். பாலகிருஷ்ணன், தன்னை ஒரு ‘தமிழ் மாணவன்’ என்று மட்டுமே எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்பவர். இவர் தற்போது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அறங்காவலராகவும் சிந்துவெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார்.
தமிழ் அறிவு வளாகம் என்கிற வரலாற்றுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள இவர் உரைகள், விருதுகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமக்கு வழங்கப்படும் நல்கைகளைத் தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கே அளித்துக்கொண்டு வருகிறார்.
பிறந்தநாள், மணநாள் உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு நன்கொடை வழங்க வலியுறுத்திவரும் அவர், தன்னுடைய குடும்ப நிகழ்வுகளைக் கொண்டாடும் வகையில் தொடர்ந்து நன்கொடை வழங்கிவருகிறார்.
இந்நிலையில், தமது 40ஆம் ஆண்டு மண நாளை முன்னிட்டு (24 ஆகஸ்ட் 2026) பாலகிருஷ்ணன் - சுஜாதா பாலகிருஷ்ணன் இணையர் 20 சதுர அடிகளுக்கான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். பாலகிருஷ்ணன் அவர்கள் இணையர் சுஜாதா பெயரிலும், சுஜாதா அவர்கள் இணையர் பாலகிருஷ்ணன் பெயரிலும் நன்கொடை வழங்கி மகிழ்ந்துள்ளனர்.
பாலகிருஷ்ணன் - சுஜாதா பாலகிருஷ்ணன் இணையருக்கு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர்கள் சார்பில் மண நாள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.