Paranjothi Devaraj Swamikal - (Late)

Paranjothi Devaraj Swamikal - (Late)

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Paranjothi Devaraj Swamikal - (Late), Tutor/Teacher, Chennai.

09/11/2022

வைத்தியனுக்கு கொடுப்பதை வணிகனுக்கு கொடுத்துப்பார்
வாழ்க்கை வளமாகும்,,!

அஞ்சறைப் பெட்டியில் தீராத
அறிய நோய் எதுவும்
ஆஸ்பத்திரியில் போய்
தீர்ந்ததாய் வரலாறு இல்லை,,!

முந்திரியும் திராட்சையும்
முற்றிய பாதாம் பருப்பும்
நித்தம் ஒருமுறை
நிதானமாய் கொஞ்சம்
மென்று சாப்பிட்டுப்பார்
மேனி வளமாகும்
மின்னுகிற உடலாகும்,,!

தேனைத் தினந்தோறும்
தேக்கரண்டி சுவைத்துப்பார்
தேகம் குளிர்ந்து போகும்
தெளிந்த ஞானம் உதயமாகும்,,!

ஆரஞ்சும் எழுமிச்சையும்
இன்னபிற கனிச்சரக்கும்
உன் சாப்பாட்டு மேஜையின்மேல்
ஓரமாய் வைத்துப்பார்
ஓடிப்போகும் நோயெல்லாம்,,!

வாழைப் பழத்தைபோல்
வைத்தியனைப் பார்த்தது யார்,,?

கீரைக்காரியோடு
கலகலப்பாய் பேசிப்பார்
கேட்டவரம் கொடுப்பாள்
கீழ்வாதமும் குணமாகும்,,!

காய்கறிகளுக்கு
நீ செய்யும் செலவுகளால்
உன் கடைசிக்காரியம்
பலவருடங்கள் தள்ளிப்போகும்

வைத்தியனுக்கு கொடுத்து
வதைபட்டு சாவதை விட
வணிகனுக்குக் கொடுத்து
வாய்நிறையத்
தின்று பார்

வாழ்ந்திடுவாய் நூறாண்டு,!

29/10/2022

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.
உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார்.
பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார்
“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி.
“ஆமாம்!.அது சரி.... இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பணக்காரர்.
“இது கோவில் கோபுரத்தில், நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை!” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.
பணக்காரர் வியப்புடன், ”நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்... முட்டாள்!” என்றார்.
“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.... அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்” என்றார் சிற்பி.
நீதி: அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்!

12/10/2022

எது பரிசு? ● எது தண்டனை?

ஒருமுறை, தங்களின் கஷ்டத்தை தீர்க்குமாறு வேண்டிக்கிட்ட இரண்டு பக்தர்களுக்காக, சிவனும் பார்வதியும் வயதான தம்பதி மாதிரி பூமிக்கு வந்தார்கள்.

முதலில் ஒரு வீட்டுக் கதவைத் தட்டி, சாப்பிட கொஞ்சம் உணவும், ராத்திரி தங்க இடமும் தரும்படி கேட்டாங்க. நாங்களே கஷ்டத்தில் இருக்கோம். இதுல நீங்க வேறயா என்று எரிச்சலடைந்து சாப்பிடக் கொஞ்சம் பழைய சோறும், படுக்க ஒரு கிழிஞ்ச பாயும் கொடுத்து, திண்ணையில் படுக்கச் சொன்னார்கள்.

சிவனார் அந்தச் சோற்றுப் பருக்கைகளைத் தொட்டதுமே அது வெள்ளி நாணயங்களாக மாறின. மறுநாள் அதைப் பார்த்ததும்தான்! அடடே!... நேத்து வந்தவங்க கடவுளா!... சரியாக உபசரிக்காம விட்டுட்டோமே! என்று வருத்தப்பட்டு, இனிமே விருந்தாளிகளைக் கனிவோட உபசரிக்கணும் என்று முடிவெடுத்தார்கள்.

சிவனும் பார்வதியும் இன்னொரு பக்தர் வீட்டுக்குப் போனார்கள். அவங்களோ அன்போடு வரவேற்று, கொஞ்சம் நெய் இருக்கு. உப்புமா பண்ணித் தரேன். வெளியே குளிரும்! நீங்க உள்ள கட்டிலில் படுத்துக்குங்க வெளித் திண்ணையில் நாங்க படுத்துக்கிறோம் என்றார்கள்.

அன்னிக்கு ராத்திரி பெரிய இடி விழுந்து, அந்த வீட்டின் கூரை எரிந்தது. தொழுவத்தில் கட்டியிருந்த பசுமாடும் இறந்திடுச்சு. கொல்லைப்புறத்தில் இருந்த வாழைத் தோட்டமும் கருகிப் போயிடுச்சு. அவர்கள் அப்பவும், தங்கள் வீட்டில் தங்கின பெரியவங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டதா என்று தான் கவலைப்பட்டாங்க.

அவர்கள் விடைபெற்று வெளியேறினதும், பார்வதி சிவனிடம், என்ன அநியாயம்! எரிச்சலோடு வரவேற்றவங்களுக்கு அவர்கள் கஷ்டம் தீர, வெள்ளி நாணயங்களைப் பரிசா அளித்தீர்கள்.

அதுவே அன்போட வரவேற்றவர்களுக்கு இடி மூலமா, மேலும் கஷ்டம் கொடுத்தீங்க, இது சரிதானா சுவாமி? என்று கேட்டாங்க.

சுவாமி சிரிச்சார். பார்வதி! முதல் பக்தருக்குத் தங்க நாணயங்கள் தரணும் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் இன்னும் பண்படணும் தெரிஞ்சதும் வெள்ளி நாணயங்களை மட்டுமே கொடுத்தேன்.

இரண்டாவது பக்தர் வீட்டில், அவர் மகனுக்கு வெகு சீக்கிரமே ராஜாங்கத்தில் நல்ல உத்தியோகம் கிடைக்கப் போகுது. அவன் குடும்பமே அவனால் பேரும் புகழும் அடையப் போகுது, ஆனா, அன்னிக்கு ராத்திரி இடி தாக்கி அவன் இறந்து, அவனோட பெற்றோர் நிர்க்கதியா நிக்கும்படியா விதி இருந்தது.

நாம் உள்ளே படுத்து, அவன் தன் பெற்றோரோடு வெளியே படுத்துக்கிட்டதால், அவன் தப்பிச்சான், அவன் விதியை மாத்தி எழுதினேன், ஆக, இரண்டு பக்தர்களுக்குமே அவங்க பக்திக்கும் பண்புக்கும் தகுந்த பலனைத்தான் கொடுத்திருக்கேன் என்றார்.

ஓம் நமசிவாய 🙏🙏🙏

01/10/2022

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?....

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர்.

மறுநாள் பொழுது விடிந்தது. குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர். இருவரும் சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரிய பகவான் அசரீரியாக தோன்றி, "வேத குருவே! உமக்கு வணக்கம். உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள்! என்று கூறி மறைந்தான்

குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார்.

இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோயிலின் இறைவனை வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை. சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார்.

அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது. இதை பார்த்து பதை பதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன்", என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் பேசியது. "வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறையிட்டது.

உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர்.

தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான். சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார்.

ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது. குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார

சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர். அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல் "குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்

குரு புன்னகையுடன், "சீடனே! நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்

சீடன், "குருவே என் கழுத்தில் ஏதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்

இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை." என்று கூறி பணிந்து நின்றான்.

குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார். நண்பர்களே! நமக்கு விதித்த படி நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு என்று அவனை சரணடைந்து விட்டால், நமக்கு நடக்க இருக்கும் தீமையும் இறைவன் அருளால் நன்மையாக நடக்கும்.

▪இதில் சீடன் தான் நாம்

▪குரு தான் நம் கடவுள்

▪ராஜநாகம் தான் நம் விதி

ஞானகுரு இறைவன் சொல்லும் வார்த்தைகளை முழு நம்பிக்கையுடன் ஏற்று, நம் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டால், நம் வாழ்வில் எப்போதும் நல்லதே நடக்கும்.

17/04/2022

மனமே பிரச்சினை

தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.

*காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..

முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்..

முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர்.

இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன.

அரசரால் *தூங்கவே*
முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்..

மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.

அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*.

நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார்.

அவரை எழுப்பிய அரசர்,

''என்ன மனிதர் நீங்கள்...
இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார்.

முனிவரோ, தனது வழக்கமான *நிதானத்துடன்* கூறினார்:

''அந்த நாய்கள், உங்களுக்கு *ஆதரவாகவோ அல்லது எதிராகவோ* இங்கு கூடவில்லை;
கோஷமிடவில்லை
அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு *அரசர்* தங்கி இருப்பது *தெரியாது.*
அவைகள் படிப்பதில்லை.
அவற்றுக்கு *அறிவும்* கிடையாது.

அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த *சம்பந்தமும்* இல்லை.

அவை, தங்களுக்கே உரிய *குரைக்கும் வேலையைப்* பார்க்கின்றன.

நீங்கள், *தூங்குகிற வேலையைப்* பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் *குரைத்தால்*, நான் எப்படி *தூங்க* முடியும்...???'' என்றார் அரசர்.

உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை *எதிர்த்துப்* போராடுகிறீர்கள்.
அப்படிப் *போராடாதீர்கள்*

பிரச்னை *குரைப்பொலி* அல்ல,
உங்கள் *எதிர்ப்பு* உணர்வு.

நீங்கள், *சத்தத்துக்கு எதிராக* இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று *ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள்*. நாய்கள் உங்களது நிபந்தனையைக் *கவனிக்கப் போவது* இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை *விலக்கப் போவது* இல்லை.

ஆனால், *நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும்.* நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்.

நாய்களின் குரைப்பை *ஏற்றுக் கொள்ளுங்கள்*. இந்த இரவிலும் எவ்வளவு *சக்தியுடன்* அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....???

*ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால்,* குரைப்புச் சத்தமும் ஒருவகை *மந்திரம்தான்*...!!!'' என்றார் முனிவர்.

*'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க* போனார் அரசர்.

ஆனால் காலையில், மிகுந்த *மகிழ்ச்சியுடன்* எழுந்து முனிவரைச் சந்தித்தார் *அரசர்*...!!!

''ஆச்சரியம்தான்....!!! எனது *எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு*, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன்.

ஆழ்ந்து *ரசிக்கவும்* தொடங்கினேன். அப்படியே *உறங்கிப்* போனேன்'' என்றார் அரசர்.

முனிவர் *நமக்குச்* சொல்கிறார்:

"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். *உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால்*, உன் கவனத்தை *உள்முகமாகத்* திருப்பு.

எரிச்சலுக்கான காரணம் *நீயாகத்தான்* இருப்பாய்.

உனது *எதிர்பார்ப்பு* அல்லது *ஆசை* வேறாக இருந்திருக்கும்;

அல்லது ஏதோ ஒரு *நிபந்தனையை* உனக்குள் நீ விதித்திருப்பாய்.

அதுதான் உனது *எரிச்சலுக்குக்* காரணம்..

*உலகத்தை* நமக்கேற்ப *நிர்ப்பந்தப்படுத்த முடியாது..*
அதை எதிர்த்துப் *போராடும்போது* நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

*யாரையும் நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.*

06/09/2021

நான் எனது என்பது அகம்பாவம்.

25/10/2020

இதப்படிங்க முதல்ல..

😂😂😂
ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு!

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.
🤔

இதைக் கண்டுப் பலர் வியந்தனர்.
இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.
😄

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.
வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂


சார் நீங்க,

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன்.

நானும் வரேன்.


சார் நானும்


ஐயா வாங்க


அம்மா வாங்க



அக்கா நீயுமா

'
'வா வா, உக்கார்ந்து.
.400, ரூவா,


வாவா





அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...
ஸ்டராங்கான நாற்காலி சார்...
இது சீக்கிரத்துல உடையாது சார்...
😂😂

400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.
😩😩😩😩😂

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது.

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.
😊😊😊😊😊😊😊😊😊

03/08/2020
08/07/2020

யாரிடம் பறவையும், மிருகமும், பயிர்களும் மரியாதை செலுத்துகிறதோ

அவரே உன் குரு, கடவுள்.

06/07/2020

My GOD

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600028