ILS

Call Directions Website Contact the school

ILS INSTITUTE FOR LANGUAGES AND SKILLS (ILS), an unit of AKSHARA BUSINESS SERVICES (P) LTD., (ABSPL) Incorporated in 1995) Soft Skills Training
1.

Motivate Others to achieve their tasks
2. Motivate who r depressed in life (Reasons may be Education, Love, Job, Etc.) Technical Training
1. Laptop Service Training (Up to chip Level) - All Models
2. Cellphone Service Training (Up to Chip Level)
3. English Language Training
4. Beautician Training (only for Girls)
5. Computer Courses (Software, Hardware & Multimedia Courses) Training
also undertakes specialized training for corporates

24/09/2026

நேர மேலாண்மை எனும் கலை .

_*வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்ங்க.*_

_*ஒன்னு...வெற்றியைத் தேடி ஓடணும்...*_
_*இரண்டு...தோல்வியை மனதில் இருந்து ஓட்டணும்.*_

எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில்
அதை செய்து முடிக்க வேண்டும்
என்கிற சூட்சுமம்தான்
நேர மேலாண்மை.

செய்கிற பணியிலேயே முழுமையாக திளைத்திருப்பவர்கள் மூன்று நிமிடங்களில் முடிய வேண்டியதை முக்கால் நிமிடத்தில் செய்து விடுவார்கள்.

நாய் எப்போதுமே சுற்றிக் கொண்டு இருப்பதற்கு காரணம், கண்டதிலும் வாய் வைப்பதுதான். முனைப்பு என்பதை வேட்டையாடும்போது பல்லியிடம் காணலாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக முன் வைத்து, சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தாமல், முன்னேறி பூச்சியினை விழுங்க எந்த பள்ளியிலும் பல்லிக்கு பாடம் கற்றுத் தரப்படவில்லை.

எழுத்தில் தீவிரம், முழுமையாய் கவனம், அதன் மையத்தில் ஆர்வம் என்கிற கலவையுடன் செயலை மேற்கொள்பவர்கள்,
மேன்மை அடைவார்கள்.

சாப்பிடும்போது
உணவே உலகம்,
படிக்கும்போது புத்தகமே வேதம், விளையாடும்போது பந்தே உலக உருண்டை,
குளிக்கும்போது தண்ணீரே அபிஷேகம் என எந்த நேரத்தில்
எது செய்கிறோமோ அந்தச் செயலில் முழுமையாக ஐக்கியமாகிற மனப்பான்மையே நல்ல
நேர மேலாண்மைக்கு இலக்கணம்.

காலையில் எழவேண்டியபோது எழுந்தால், நேரம் போதவில்லை என புலம்ப வேண்டியதில்லை.
பறவைகள் பாடலாலும்,
தேனீக்கள் ரீங்காரத்தாலும், பட்டாம்பூச்சிகள் சிறகசைப்பாலும், வண்டுகள் இன்னிசையாலும்
விடியலை வரவேற்கும்போது,
மனிதன் மட்டுமே
படுக்கையில் புரண்டு, பொழுது புலரும்போது புலம்பித் தீர்க்கிறான்.

படிக்கிற நேரத்தில் படிப்பு,
பல் துலக்கும் பொழுதில் பல் துலக்குதல், விளையாடும்போது விளையாட்டு என வகைப்படுத்தி கொள்கிறவன் வாழ்வு, முன்னேற்றத்தை நோக்கி ஓடுகிற வாய்க்காலின்
நீராக வளர்கிறது.
அவசரத்தில் உண்டால்
உணவும் விஷம். ரசித்துக் குளித்தால் கொப்பரை நீரே குற்றாலமாகும்.

சுற்றுலா போகிற இடத்தில்
பாடத்தை பற்றி சிந்திக்கிறவர்கள், இரண்டையும் தவறவிடும்
இருண்ட பிரதேசத்தின் பிரஜைகள். சோம்பலில் சுகம் காண்கிறவர்களுக்கு ஓராண்டு கூட ஒரு மாதத்தின் அடர்த்தியையே பெற்றிருக்கும். சுறுசுறுப்புள்ளவர்களுக்கு ஒரு வாரம், ஒரு மாதத்தின் பலனை தரும்.

இன்று என்ன செய்ய வேண்டும் என குறித்துக் கொண்டும், ஒரே மாதிரியான பணிகளை தொகுத்துக்கொண்டும், செய்பவற்றை திருப்தியுடன் செய்து கொண்டும் நாட்களை திட்டமிடுபவர்களுக்கு அனைத்து நாளும் திருநாளே
அனைத்து நேரமும் நல்லநேரமே.

*நொடிகளை வீணடிப்பவர்கள் நொடிந்து போவார்கள்.* *அவற்றை பயன்படுத்துபவர்கள் கோடீஸ்வரர்களா ஆவார்கள்!*

*_வாழ்க்கையில் சில_*
*_மனிதர்களிடம் கேள்வியையும்._*
*_சில மனிதர்களிடம் பதில்களையும்_*
*_எதிர்பார்க்காமல் இருப்பது_*
*_மிகவும் நல்லது._*

_*சில கனவுகள் நாம் உயரும் வரை நம்மை உறங்க விடுவதில்லை சில துரோகங்கள் நம்மை நிம்மதியாக வாழ விடுவதில்லை*_

_*வாழ்க்கை என்பது நமக்கு தினிக்கப்பட்ட பாடம் தான் அதற்காக அதை வெறுத்துவிடாதே விரும்பி படித்து பார் ஒவ்வொரு பக்கமும் சுவார்ஸ்யம்தான்*_

_*உங்கள் வாழ்க்கை ஒரு நெடுங்கதைப் புத்தகம் .*_
_*அதை பலர் விரும்பி வாங்கி படித்து பயனுறும்*_
_*வகையில் எழுதுங்கள்*_

23/09/2026

😇 What's maturity ?

Excellent Definition provided by Buddhist Lamas....

1. Maturity is when you stop trying to change others, ...
instead focus on changing
yourself.

2. Maturity is when you
accept people as they are.

3. Maturity is when you
understand everyone is right in their own perspective.

4. Maturity is when you learn to "let go".

5. Maturity is when you are able to drop "expectations" from a relationship and give
for the sake of giving.

6. Maturity is when you understand whatever you do,
you do for your own peace.

7. Maturity is when you stop proving to the world,
how intelligent you are.

8. Maturity is when you don't seek approval from others.

9. Maturity is when you stop comparing with others.

10. Maturity is when you are at peace with yourself.

11. Maturity is when you are able to differentiate between "need" and "want" and are able to let go of your wants.

And last but most meaningful !

12. You gain Maturity when you stop attaching "happiness" to material things !!
🌾🌾🌾🌾🌾

Life Before Internet 😍👌
22/09/2026

Life Before Internet 😍👌

21/09/2026

🙏🙏
Have faith in self and never think you are useless.
👍

Once there was a man who did not make it to university.

So, his mother got him a wife.

After the marriage, he worked as a teacher in a primary school. Due to the lack of experience, he was squashed by the students in less than a week.

When he returned home, his wife dried his tears. She comforted him with these words. 'When one is too full, he could either pour it out what's in him or he just could not pour it out at all. You should not be too sad about it. Probably there is a more suitable job waiting for you out there.'

Later on, he found another job and not for so long, he was fired due to his slowness. This time, the wife commented. 'There are always people who are skilful and non skilful. Some have experience from their years of work. As for you, you were in school all this while. So, how could you acquire these needed skills?'

He went for a number of jobs but never stayed long in those jobs. Each time, he would return home with a dejected spirit. His wife would always comfort him and never for once, she was disappointed or resentful.

He was in his thirties when he aquired a flair in languages. He became a counselor in a school for the deaf and mute.

Later on, he opened a school for the disabled.

A few years later, he set up chain stores in different cities and provinces selling apparatus & equipment for the disabled.

He became a multi-millionaire. He was John Doe!

One day he asked his wife. 'When I was looking bleak at my own future, what's the reason that you have so much faith in me?'

His wife gave him a very simple reply. She said, 'When a piece of land is not suitable for planting wheat, we could try planting beans. If the beans are not growing well, we could try planting fruits or gourds. If the vegetation is not economical, we can instead scatter buckwheat seeds. These seeds will one day bloom into flowers. On this land itself, there will be one seed that will germinate and grow.'

After having listened to the wife's explanation, he cried. His wife's faith, love, patience, and persistence in him is likened to the one seed in the land. This is the seed that persists and creates the miracle on this piece of land.

"In this world, there's no one person who is useless.

It is just that they have not positioned themselves firmly in right place"

Never underestimate oneself if one door closes there will be another 9 doors open for us. But have faith in self and never think ur useless.

19/09/2026

கவலையை விட்டொழியுங்கள்.

*_தவறுகளை உணர விடாமல்_*
*_தடுப்பது_* *அகந்தை.*

*தானாக தவறை உணராத எவரையும் நாமாக திருத்தி விட முடியாது.*
*அப்படி முயற்சிப்பது கல்லிடம் கதை சொல்வதற்கு சமம்.*

எதைச் சார்ந்து நிற்கிறோமோ
அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

"பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்" என்பார்கள்.

யாரோடு நீ பேசுகிறாயோ
அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.

ஏன் வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.
கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை;
மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.
நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.
சகவாச தோஷமும் இதுதான்.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு
வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி.

நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால்,
மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால்,
ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது.

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ,
அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.
சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின்
சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இது வள்ளுவன் சொன்னதே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால்,
எல்லா பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல்
துணையும் இல்லை;
தீயோர் உறவைப் போல
துன்பமும் இல்லை.
~ கவிஞர் கண்ணதாசன்.

கஷ்டங்கள்
கதவை தட்டத்தான் செய்யும் அவற்றை திருப்பி அனுப்புவதும் அல்லது அழைத்து உள்ளே அமர வைத்து அழகு பார்பதும் உங்களிடம் தான் உள்ளது.

சில நேரம் உடைந்து போவது கூட புதிய மாற்றத்திற்காகத் தான்,
கவலையை விட்டொழியுங்கள்.

புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும் ஒடிக்க முடியாது. துயர்கண்டு துவண்டு விடாதீர்கள்.

விழிப்பதற்கே வாழ்க்கை,
வெல்வதற்கே தோல்வி.
வாழ்வதற்கே வாழ்க்கை.

*எதையும் இருக்கின்றபோது*
*பாதுகாக்க தெரியாதவர்கள்*
*இழந்தபின் வருந்துவதற்கும்,*
*அழுவதற்கும் தகுதியற்றவர்களே...*

*சரியாய் பேசுகிறோமா*
*என்பதை விட.*
*சரியானவர்களிடம் பேசுகிறோமா*
*என்பது தான் முக்கியம்.*

*தவறுகளை அடுத்தவர்*
*மீது சுமத்தும் போது*
*இனிமையாக இருக்கும்.*
*தன் மீது வரும் போது கசக்கும்.*

18/09/2026

கற்கள் சொற்கள் . .

*மண்ணையும்
பொன்னாக்க கற்றுக் கொள்
என்பார்கள் நம் முன்னோர்கள்...*

*அதே போல்
நேரத்தையும்
வீணடிக்காமல்
பொன்னாக்க கற்றுக் கொள்..!*

*ஒரு மனிதனுக்கு
கொள்கை, கோட்பாடு எவ்வளவு முக்கியமோ...*
*அதற்கிணையானது
தன்மானமும், சுயமரியாதையும்.*

*அறிவுரையும்
விளக்குமாறும் ஒன்னு தான்..*
*முதல்ல தான் சுத்தமா
இருந்தால் தான்
நன்றாக சுத்தம் செய்ய முடியும்.*

_*புழுவாகப் பிறந்தது தவறில்லை..... பட்டாம்பூச்சியாக மாறுங்கள்..அப்போது தான் இந்த உலகம் உங்களை ஏரெடுத்து பார்க்கும்.*_

_*வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல், முயற்சியை கைவிடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.*_
_*தொலைத்த நொடிகளை தேடி இருக்கும் நிமிடங்களை தொலைக்காதீர்கள்.*_
_*பாதைகளை குறைசொல்லி கொண்டிருப்பதைவிட, உங்கள் பாதங்களை வலுவேற்றிக்கொள்ளுங்கள்.*_
_*மற்றவர் தொட்ட உயரத்தை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.*_
_*நீங்கள் தொட்ட உயரத்தை மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்.*_

_*வீசப்படும் கற்களளை விட*_
_*பேசப்படும் சொற்கள் மீது*_
_*கவனமாக இருங்கள்...!*_
_*கற்கள்
உயிரைக் கொல்லும்..*_
_*சொற்கள்
உயிரோடு கொல்லும்.!*_

_*முடியாதவர்கள் தான்*_
_*அடுத்தவர்களைப் பற்றி*_
_*விமர்சிப்பார்கள்....*_
_*முடியும் என*_ _*நினைப்பவர்கள்*_
_*அடுத்தததை நோக்கிப்*_
_*பயணிப்பார்கள்*_

17/09/2026

ரசித்து வாழ்தல் . .

*மன அழுத்தத்தை (Stress )
குறைக்க சில வழிகள்! - Doctor OLBN*

இப்போதெல்லாம்
பெரும்பாலானோர் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பதற்றமாகி மூலையில் அமர்ந்து அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

சிலர் தங்கள் எதிர்காலம், பணி, பொருளாதாரம் என நினைத்து மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

*அதிகமாக யோசிக்காதீர்கள்:*

உங்கள் பதற்றத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணத்தை கண்டுபிடிக்க யோசித்தால், கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் உங்கள் நினைவுக்கு வரும். வேலை செய்பவர்களுக்கு வேலையை நினைத்து பதற்றம். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பை நினைத்து கவலை.

மேல் படிப்பு படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சொல்லலாம். எனவே எந்த விஷயத்திற்கும் பதற்றம் அடையாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

*மகிழ்ச்சியாக இருங்கள்:*

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது
சற்று கடினம் தான்.
ஆனால், அது முடியாத காரியம்
ஒன்றும் இல்லை. உங்கள் சுற்றுப்புறத்தை அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருப்பது பல பிரச்சனைகளைச் சரிசெய்யும்.

*சண்டையைத் தவிர்த்திடுங்கள்:*

சண்டை போடும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. அதனால் சண்டை வருவதற்கான ஒவ்வொரு காரணத்தையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை சண்டை வந்துவிட்டால், அந்த நேரத்திலும் நிதானமாக சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள்.

*உடற்பயிற்சி செய்யுங்கள்:*

பலரும் காலையில் எழுந்த உடனே முதலில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் மன அழுத்தத்தை விரட்டுவது தான்.

ஹோவர்ட் பல்கலைக்கழகம் உட்பட
பல ஆராய்ச்சிகளில், தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலையும் மனதையும் முற்றிலும் அமைதியாக வைத்திருக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

*பிடித்ததைச் செய்யுங்கள்:*

சில நேரங்களில் நாம் சில வேலைகளை செய்த பிறகு நன்றாக உணர்வோம். அத்தகைய சூழ்நிலையில், மனதை நன்கு உணர வைக்கும் வேலைகளை நீங்கள் அடிக்கடி செய்யுங்கள். விருப்பமுள்ள பாடல்களைக் கேளுங்கள் என மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.

அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில் நடப்பதை ரசித்து அனுபவித்து வாழத் தொடங்குங்கள். இதுவே மன அழுத்தத்தைக்
குறைக்கும் மிகச் சிறந்த வழி.

16/09/2026

எதிர்காலம் உருவாகும்.

_*குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் ஊமையாகிப் போவதால் தான்.*_
_*பல பிரச்சனைகள் பெரிதாகாமல் இருக்கிறது.*_

*காலம் மாறும் என்று*
*கற்பனையில் மட்டும்*
*காத்திருக்காதே.*
*முயற்சி என்ற ஒற்றைச்*
*சொல் உனக்குள் வராதவரை*
*கடுகளவு கூட மாற்றம் வராது.*

எல்லா வலிகளையும்
வார்த்தைகளால் வெளியே சொல்லி
விட முடியாது.

ஓசையின்றி மௌனமாகவே
அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கு எல்லோருடைய மனதிலும் உண்டு.

ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான்.

அனுபவம்
ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
ஆனால் அதன் கட்டணம் தான் அதிகம்.

சந்தோசத்தில் கை குலுக்கும் ஐந்து
விரல்களை விட, கஷ்டத்தில்
கண் துடைக்கும்
ஒரு விரலே மேலானது.

சில நேரம் கண்ணீரைத் துடைக்க யாரையோ தேடுகிறோம்
நம்மிடம் விரல்கள் இருப்பதை மறந்து.

_*உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களிடத்தில் நீங்கள் நேர்மையான வாதங்கள் எத்தனை வைத்தாலும் தீர்ப்புகள் உங்களுக்குச்*_
_*சாதகமாக இருக்காது.*_

_*அவர் உங்களை மதிக்கவில்லை என நினைப்பதும் தவறு. அவருக்கு உங்கள் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.*_

_*உங்களுடைய மௌனத்தைச் சரியாக எவரால் மொழிபெயர்க்க முடியுமோ, அவருக்கு மட்டுமே உங்களுடைய மனதைப் பிடிக்கும் சக்தி உண்டு.*_

_*யாருக்கும் உங்களை கணிக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றிய வதந்திகளே அதிகம் தெரிந்திருக்குமே, தவிர வலிகளை அல்ல.*_

_*வதந்திகளை உருவாக்குவது எதிரிகளின் வேலை
பரப்புவது முட்டாள்களின் வேலை. அதனை புறம் தள்ளிவிட்டு கடந்து செல்லுங்கள்.*_

_*எப்படி வாழணும் என்பதையும்.*_
_*இப்படித்தான் வாழணும் என்பதையும் தீர்மானிப்பது.*_
_*பணமல்ல மனம். *_

_*செயலை விதையுங்கள்*_
_*பழக்கம் உருவாகும்*_
_*பழக்கத்தை விதையுங்கள்*_
_*பண்பு உருவாகும்*_
_*பண்பை விதையுங்கள்*_
_*எதிர்காலம் உருவாகும்*_

_*எது எல்லாம் நமக்கு வலியைத் தருகிறதோ அதை எல்லாம் நம் வலிமையாக மாற்றிக் கொள்வோம் எனில் நம் வாழ்க்கையில் அனைத்தும் நேர்நிலையாகவே இருக்கும்.*_

15/09/2026

மற்றவரை ஏமாற்றாதே .

*எட்டவரும் வாய்ப்புகள் ,*
*ஏற்றிச் செல்லும் வரைக்*
*காத்திருப்போம்...*
*பயணங்கள் பாதையாக மாறும்.*

தன்னைத் தானே மேம்படுத்த
சில வழிகள் உள்ளது. இவற்றை எல்லாம் கடைப்பிடித்தால்
என்றுமே நல்லவராகத் திகழலாம்.

1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேரையாவது பாராட்டு.

2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப் பார்.

3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி.

4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

6. ரகசியங்களைக் காப்பாற்று.

7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

9. உன் தவற்றைத் தயங்காமல் ஒத்துக்கொள்.

10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி.

11. ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே.

12. அமைதியாக கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள்
சில நேரம் தான் வரும்.

13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

15. மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்கச் செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

16. ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

17. வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.

18. போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

19. ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

20. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

21. எந்தப் பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

22. தேவைப்படும் சூழலில் எனக்குத் தெரியாது, மன்னிக்கவும், என்பதை சொல்லத் தயங்காதே.

எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு, உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள்.

நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்.

மனமே பதற்றப்படாதே,
மெல்ல மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் அதற்கு கால தாமதமாகலாம் ஆனால் ஒரு போதும் தோற்றுப்போகாது.

ஆயிரம் பேர் இருப்பார்கள் நம் மனதை காயப்படுத்த ஆனால் அத்தனையும் தீர்க்க நாம் ஒருவரிடம் மனதார வேண்டினால் போதும் அவன் தான் இறைவன்.

_*அதர்மம் ஆடி*_
_*கொண்டே இருக்கும்.*_
_*தர்மம் அதை அமைதியாக*_
_*வேடிக்கை பார்க்கும்.*_
_*காலம் அதை கணக்கு*_
_*வைத்துக் கொண்டே*_ _*இருக்கும்.*_
_*நேரம் வரும் பொழுது*_
_*ஆடும் அதர்மத்தை அழித்து,*_
_*அமைதியான தர்மத்தை*_
_*அமர்த்திவிட்டு*_ _*போய்விடும்.*_
_*இதுவே காலதேவனின் தர்ம கணக்கு.*_

_*படித்த படிப்பு நமக்கு கற்றுத் தருவதை விட ,*_
_*சிலரின் அசாதாரண நடிப்பு; சிறப்பாக கற்றுத் தருகிறது*_

_*வாழ்க்கையில்*_
_*பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும்,*_
_*வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும்,*_
_*தேவையற்ற கேள்விகளுக்கு பதில் உரைக்காமலும்,*_
_*இருந்து பாருங்கள்; உங்கள் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்*_

_*கவலை என்பது உதிரும் பூக்கள்.*_
_*மகிழ்ச்சி என்பது மலரும் பூக்கள்.*_
_*உதிர்ந்த பூக்களை மலரும் பூக்களுக்கு உரமாக்கினால்.*_
_*வெற்றி எனும் செடி வளமாக வளரும்.*_

14/09/2026

நம்பிக்கையே உயர்வு.

*வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம். *
*இங்கு வெற்றி பெறுபவர்கள் முதலில் வருபவர்கள் அல்ல..*
*இறுதி வரை ஓடுபவர்கள்.*

*நான்கு சுவர்களும்* *நியாயம் பேசுகின்றன*
*உண்மைகள்* *உள்ளிருக்க வெளியே ஏன் இந்த வேஷம் என்று.*

தனக்கு தேவையானவர்களை பாதுகாக்கும்.
தனக்கு தேவையில்லாதவர்களை தானே விலக்கி விடும்.
ஆடுபவர்களை அடக்கி விடும்.
அதிகமாக ஆடுபவர்களை இருந்த இடமே தெரியாமல் செய்துவிடும்.
நல்ல எண்ணங்களில் கவனமாக இரு.
எளிமையாய் இரு.

அடக்கமாய் இரு: அமைதியாய் இரு:
என எச்சரிக்கிறார் அவர் சீடர்களை...
காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்.
காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்.

- "அகத்தியர் கன்ம காண்டம்" நூலில் அகத்தியர் பெருமான் சொன்ன என்னைப் பாதித்த வரிகள்.

ஒரு வியாபாரி ஞானி ஒருவரிடம் வந்து "நான் வந்த கப்பல் புறப்பட்டுப் போய்விட்டது. எப்படி என் ஊர் போய்ச் சேருவேன்?" என்று முறையிட்டுக் கொண்டான்.

ஞானி அவனுக்கு ஆறுதல் சொல்லி "இந்தா இந்த தாயத்தை இடுப்பில் சொருகிக் கொள், இது உன்னைக் காப்பாற்றும் . நீ தாராளமாகக் கடலைத் தாண்டிச் செல்லலாம்; போய்வா" என்று சொல்லி ஒரு சிறிய தாயத்தை அவனிடம் கொடுத்தார்.

வியாபாரியும், அதை மிகுந்த நம்பிக்கையுடன் வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு கடலில் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரம் வந்ததும் 'இந்த தாயத்தில் என்னதான் இருக்கிறது பார்ப்போமே!' என்று நினைத்து ஆவலுடன் அதைப் பிரித்தான்.

தாயத்தின் உள்ளே ஒரு செம்பு தகடு இருந்தது,
அதில் "ஓம் நமசிவாய" என்று எழுதப்பட்டிருந்தது.
பூ இதுதானா" என்றான் வியாபாரி.
சொல்லி முடித்தானோ இல்லையோ உடனே கடலில் மூழ்கி விட்டான்.

நீதி:
கடவுள் நம்பிக்கை ஒரு சிறந்த மருந்து; நம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாம் கிடைக்கும்.

"அற்புதமான காரியங்களைச் செய்வதெல்லாம் ஈசுவர நாமத்தில் கொண்டுள்ள நம்பிக்கையே.
ஏனெனில் நம்பிக்கையே உயர்வு; சந்தேகமே மரணம்!"
~ ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

"நம்பினவருக்கு நடராஜா,
நம்பாதவருக்கு எமராஜா."

_*அடுத்தவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ*_
_*தம்மை விரும்புவார்களோ*_
_*எனும் மாயக் கனவில்*_
_*நல்லவராய்க் காட்டிக் கொண்டே பலரது பொழுதும் போகிறது.*_
_*அடுத்தவரை மறந்து*_
_*மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு*_
_*நம்மை நாமே நேசித்து வாழும் போது*_
_*தனித்துவ வாழ்வுடன்*_
_*சுயத்துடன் நிமிர்ந்து*_ _*நடக்கலாம்*_
_*ஊன்றுகோல்*_ _*எதுவுமின்றி .*_

_*தனிமை மட்டும் தான், குழப்பத்திற்குத்*_
_*தீர்வு கொடுக்கிறது, அல்லது குழப்பத்திற்கும்*_
_*காரணமாக அமைகிறது*_

_*ஏமாறுபவர்களுக்கு தண்டனை உடனே கிடைத்து விடுகிறது*_
_*ஏமாற்றுபவர்களுக்கு தான் தண்டனை
கிடைக்க சாட்சியும் ஆதாரங்களும் அடுக்கடுக்காய் தேவைப்படுகிறது...*_

_*என் கைகளில் இருக்கும்*_
_*ஆயுதம் சிறியதாக* *இருக்கலாம்*_
_*ஆனால் நான் குறிவைத்த*_
_*இலக்குகளை*_ _*தவறவிட்டதில்லை*_

Address

224, NSC Bose Road, Parrys, Opp Madras High Court Bar Council
Chennai
600001

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm

Telephone

+919710426569

Alerts

Be the first to know and let us send you an email when ILS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ILS:

Shortcuts

Share

Category