26/04/2026
It's been 2 years now. I don't forget 24-05-24
training Communication English
26/04/2026
It's been 2 years now. I don't forget 24-05-24
Catch my point
Will back to the page very soon
join our what'sapp group to learn english through tamil @ 6374089248
06/02/2020
Lets learn Tenses (English grammar) through Tamil.
English இலக்கணத்தில் இன்றியமையாத பகுதியான Tenses ஐ தமிழ் விளக்கத்துடன் படித்து பயன் பெறுங்கள்.
Tenses - காலங்கள்
ஆங்கில இலக்கணத்தில் காலங்கள் 12 வகைப்படும். அவையாவன:
Present Tense
1. Simple present tense
2. Present Continuous tense
3. Present Perfect tense
4. Present perfect continuous tense
Past Tense
1. Simple past tense
2. Past continuous tense
3. Past perfect tense
4. Past perfect continuous tense
Future Tense
1. Simple future tense
2. Future continuous tense
3. Future perfect tense
4. Future perfect continuous tense
Tenses - காலங்கள் Auxiliary verbs துணைவினைச் சொற்கள்
Singualar Plural
ஒருமை பண்மை
Simple present tense Does Do
Present Continuous tense Is, am Are
Present Perfect tense Has Have
Present perfect continuous tense Has been Have been
Simple past tense Did ------------
Past Continuous tense Was Were
Past Perfect tense Had -------------
Past perfect continuous tense Had been -------------
Simple future tense Shall / Will ------------
Future Continuous tense Shall / Will be ------------
Future Perfect tense Shall / Will have ------------
Future perfect continuous tense Shall / Will have been -------------
Tenses - Assertive, Interrogative, negative and negative interrogative
Simple present tense
Definition: விளக்கம்
Simle present tense என்ற இந்த tense, நிகழ் காலத்தில் அந்தந்த நொடிகளில் அல்லது தருணங்களில் நடைபெறும் வினைகளை (செயல்களை) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary verb
Do (I, we, you மற்றும் They ஆகிய Subject களுடன் இணைந்து வரக்கூடியது)
Does (He, she மற்றும் it ஆகிய Subject களுடன் இணைந்து வரக்கூடியது)
Verb form
Third person singular subject களான he, she மற்றும் it ஆகியவற்றுடன் does பயன்படுத்தினால் First form (Present tense form) verb ம் does பயன்படுத்தாவிடில் plural form verb ம் இணைந்து வரும். மீதமுள்ள மற்ற Subject களுடன் Do இணைந்து வரும்.
உதாரண வாக்கியங்கள்
Assertive
I do read English or I read English
நான் English வாசிக்கிறேன்
We do write English or We write English
நாங்கள் / நாம் English எழுதுகிறோம்.
You do speak English or You speak English
நீ / நீங்கள் English பேசுகிறாய் / பேசுகிறீர்கள்
He does practice English or He practices English
அவன் / அவர் English பயிற்சி செய்கிறான் / பயிற்சி செய்கிறார்.
She does follow the grammar or She follows the grammar
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றுகிறாள் / பின்பற்றுகிறார்.
It does move to the next level or It moves to the next level
இது / அது அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது.
They do acheive or They acheive
அவர்கள் சாதிக்கிறார்கள்
அவைகள் சாதிக்கின்றன.
Negative
I don't read English
நான் English வாசிப்பதில்லை
We don't write English
நாங்கள் / நாம் English எழுதுவதில்லை.
You don't speak English
நீ / நீங்கள் English பேசாதே / பேசாதீர்கள் / பேசுவதில்லை
He doesn't practice English
அவன் English பயிற்சி செய்வதில்லை
She doesn't follow the grammar
இவள் / அவள் இலக்கணத்தை பின்பற்றுவதில்லை.
It doesn't move to the next level
அது / இது அடுத்தகட்டத்திற்கு நகர்வதில்லை
They don't acheive
அவர்கள் / சாதிப்பதில்லை அவைகள் சாதிப்பதில்லை.
Interrogative
Do I read English?
நான் English வாசிகிறேனா?
Do we write English?
நாங்கள் / நாம் English எழுதுகிறோமா?
Do you speak English?
நீ / நீங்கள் English பேசுகிறாயா / பேசுகிறீர்களா?
Does he practice English?
அவன் / அவர் English பயிற்சி செய்கிறானா?
Does she follow the grammar?
இவள்/ அவள் இலக்கணத்தை பின்பற்றுகிறாளா?
Does it move to the next level?
அது / இது அடுத்தக்கட்டதிற்கு நகர்கிறதா?
Do they acheive?
அவர்கள் சாதிக்கிறார்களா?
அவைகள் சாதிப்பதில்லையா?
Negative interrogative
Don't I read English?
நான் English வாசிப்பதில்லையா?
Don't we writeEnglish?
நாம் / நாங்கள் English எழுதுவதில்லையா?
Don't you speak English?
நீ / நீங்கள் English பேசுவதில்லையா?
Doesn't he practice English?
அவன் / அவர் English பயிற்சி செய்வதில்லையா?
Doesn't she follow the grammar?
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றுவதில்லையா?
Doesn't it move to the next level?
அது / இது அடுத்தகட்டத்திற்கு நகர்வதில்லையா?
Don't they acheive?
அவர்கள் / சாதிப்பதில்லையா? அவைகள் சாதிப்பதில்லையா?
Present Continuous tense
Definition: விளக்கம்
Present continuous tense என்ற இந்த tense, நிகழ் காலத்தில் தொடர்ந்து நடைபெறும் வினைகளை (செயல்களை) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Am ( I என்ற subject உடன் மட்டுமே இணைந்து வரும்),
Is ( He, She மற்றும் It உடன் இணைந்து வரும்)
Are ( We, you மற்றும் they உடன் இணைந்து வரும்)
Verb form
அனைத்து Subject களுக்கும் "Ing" verb ( Present participle Verb) இணைந்து வரும்.
உதாரண வாக்கியங்கள்
Assertive
I am reading English
நான் English படித்துக் கொண்டிருக்கிறேன்
We are writing English
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருக்கிறோம்.
You are speaking English
நீ / நீங்கள் English பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
He is practicing English
அவன் / அவர் English பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறார்.
She is following the grammar
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்.
It is moving to the next level
அது / இது அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
They are acheiving
அவர்கள் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவைகள் சாதித்துக்கொண்டிருக்கின்றன.
Negative
I am not reading English
நான் English படித்துக் கொண்டிருக்கவில்லை
We aren't writing English
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருக்கவில்லை
You aren't speaking English
நீ / நீங்கள் English பேசிக்கொண்டிருக்கவில்லை
He isn't practicing English
அவன் / அவர் English பயிற்சி செய்துக் கொண்டிருக்கவில்லை
She isn't following the grammar
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை.
It isn't moving to the next level
அது / இது அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கவில்லை
They aren't acheiving
அவைகள் சாதித்துக்கொண்டிருப்பதில்லை, அவர்கள் சாதித்துக்கொண்டிருக்கவில்லை
Interrogative
Am I reading English?
நான் English படித்துக் கொண்டிருக்கிறேனா?
Are we writing English?
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருக்கிறோமா?
Are you speaking English?
நீ / நீங்கள் English பேசிக்கொண்டிருக்கிறீர்களா?
Is he practicing English?
அவன் / அவர் English பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறாரா?
Is she following the grammar?
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறாரா?
Is it moving to the next level?
அது / இது அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா?
Are they acheiving?
அவர்கள் சாதித்துக்கொண்டிருக்கிறார்களா? அவைகள் சாதித்துக்கொண்டிருக்கின்றனவா?
Negative Interrogative
Amn't I reading English?
நான் English படித்துக் கொண்டிருக்கவில்லையா?
Aren't we writing English?
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருக்கவில்லையா?
Aren't you speaking English?
நீ / நீங்கள் English பேசிக்கொண்டிருக்கவில்லையா?
Isn't he practicing English?
அவன் / அவர் English பயிற்சி செய்துக் கொண்டிருக்கவில்லையா?
Isn't she following the grammar?
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கவில்லையா?
Isn't it moving to the next level?
அது / இது அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கவில்லையா?
Aren't they acheiving?
அவர்கள் சாதித்துக்கொண்டிருக்கவில்லையா?
அவைகள் சாதித்துக்கொண்டிருக்கவில்லையா?
Present perfect tense
Definition: விளக்கம்
Present Perfect tense என்ற இந்த tense, நிகழ் காலத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த வினைகளை (செயல்களை) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Have ( I, We, you மற்றும் they உடன் இணைந்து வரும்)
Has ( He, She மற்றும் It உடன் இணைந்து வரும்)
Verb form
அனைத்து Subject களுக்கும் past participle verb இணைந்து வரும்.
உதாரணங்கள்
Assertive
I have read English
நான் சமீபத்தில்தான் English படித்து முடித்தேன்.
We have written English
நாம் / நாங்கள் சமீபத்தில்தான் English எழுதி முடித்தோம்.
You have spoken English
நீ/ நீங்கள் சமீபத்தில் English பேசி முடித்தீர்கள்.
He has practiced English
அவன் / அவர் சமீபத்தில்தான் English பயிற்சி பெற்றார்.
She has followed the grammar
அவள் / அவர் சமீபத்தில்தான் இலக்கணத்தை பின்பற்றினார்.
It has moved to the next level
அது / இது சமீபத்தில்தான் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.
They have acheived
அவர்கள் சமீபத்தில்தான் சாதித்தார்கள் / அவைகள் சாதித்தன.
Negative
I haven't read English
நான் சமீபத்தில் English படித்து முடிக்கவில்லை.
We haven't written English
நாம் / நாங்கள் சமீபத்தில் English எழுதி முடிக்கவில்லை.
You haven't spoken English
நீ / நீங்கள் சமீபத்தில் English பேசி முடிக்கவில்லை.
He hasn't practiced English
அவன் / அவர் சமீபத்தில் English பயிற்சி பெறவில்லை
She hasn't followed the grammar
அவள் / அவர் சமீபத்தில் இலக்கணத்தை பின்பற்றவில்லை
It hasn't moved to the next level
அது / இது சமீபத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை.
They haven't acheived
அவர்கள் சமீபத்தில் சாதிக்கவில்லை / அவைகள் சாதிக்கவில்லை.
Interrogative
Have I read English?
நான் சமீபத்தில் English படித்து முடித்தேனா?
Have we written English?
நாம் / நாங்கள் சமீபத்தில் English எழுதி முடித்தோமா?
Have you spoken English?
நீ/ நீங்கள் சமீபத்தில் English பேசி முடித்தீர்களா?
Has he practiced English?
அவன் / அவர் சமீபத்தில் English பயிற்சி பெற்றாரா?
Has she followed the grammar?
அவள் / அவர் சமீபத்தில் இலக்கணத்தை பின்பற்றினாரா?
Has it moved to the next level?
அது / இது சமீபத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்ததா?
Have they acheived?
அவர்கள் சமீபத்தில் சாதித்தார்களா? / அவைகள் சாதித்தனவா?
Negative Interrogative
Haven't I read English?
நான் சமீபத்தில் English படித்து முடிக்கவில்லையா?
Haven't we written English?
நாம் / நாங்கள் சமீபத்தில் English எழுதி முடிக்கவில்லையா?
Haven't you spoken English?
நீ / நீங்கள் சமீபத்தில் English பேசி முடிக்கவில்லையா?
Hasn't he practiced English?
அவன் / அவர் சமீபத்தில் English பயிற்சி பெறவில்லையா?
Hasn't she followed the grammar?
அவள் / அவர் சமீபத்தில் இலக்கணத்தை பின்பற்றவில்லையா?
Hasn't it moved to the next level ?
அது / இது சமீபத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லையா?
Haven't they acheived?
அவர்கள் சமீபத்தில் சாதிக்கவில்லையா? / அவைகள் சாதிக்கவில்லையா?
Present perfect continuous tense
Definition: விளக்கம்
Present perfect continuous tense என்ற இந்த tense, இறந்த காலத்தில் தொடங்கிய வினைகள் (செயல்கள்) நிகழ்காலத்திலும் தொடர்ந்துக் கொண்டிருந்தால் அவற்றை குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Have been( I, We, you மற்றும் they உடன் இணைந்து வரும்)
Has been ( He, She மற்றும் It உடன் இணைந்து வரும்)
Verb form
அனைத்து Subject களுக்கும் "ing" verb (present participle) இணைந்து வரும்.
உதாரணங்கள்
Assertive
I have been reading English
நான் வெகுகாலமாக English படித்துக்கொண்டிருக்கிறேன்.
We have been writing English
நாம் / நாங்கள் வெகுகாலமாக English எழுதிக் கொண்டிருக்கிறோம்.
You have been speaking English
நீ / நீங்கள் வெகுகாலமாக English பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
He has been practicing English
அவன் / அவர் வெகுகாலமாக பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறார்.
She has been following the grammar
அவள் / அவர் வெகுகாலமாக இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்.
It has been moving to the next level
இது / அது வெகுகாலமாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கிறது .
They have been acheiving
அவர்கள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்
அவைகள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கின்றன
Negative
I haven't been reading English
நான் வெகுகாலமாக English படித்துக்கொண்டிருக்கவில்லை.
We haven't been writing English
நாம் / நாங்கள் வெகுகாலமாக English எழுதிக் கொண்டிருக்கவில்லை.
You haven't been speaking English
நீ / நீங்கள் வெகுகாலமாக English பேசிக்கொண்டிருக்கவில்லை.
He hasn't been practicing English
அவன் / அவர் வெகுகாலமாக பயிற்சி செய்துக் கொண்டிருக்கவில்லை.
She hasn't been following the grammar
அவள் / அவர் வெகுகாலமாக இலக்கணத்தை பின்பற்றுவதில்லை.
It hasn't been moving to the next level
இது / அது வெகுகாலமாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கவில்லை.
They haven't been acheiving
அவர்கள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கவில்லை
அவைகள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கவில்லை
Interrogative
Have I been reading English?
நான் வெகுகாலமாக English படித்துக்கொண்டிருக்கிறேனா?
Have we been writing English?
நாம் / நாங்கள் வெகுகாலமாக English எழுதிக் கொண்டிருக்கிறோமா?
Have you been speaking English?
நீ / நீங்கள் வெகுகாலமாக English பேசிக்கொண்டிருக்கிறீர்களா?
Has he been practicing English?
அவன் / அவர் வெகுகாலமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறாரா?
Has she been following the grammar?
அவள் / அவர் வெகுகாலமாக இலக்கணத்தை பின்பற்றுகிறாரா?
Has it been moving to the next level?
இது / அது வெகுகாலமாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துக்கொண்டிருக்கிறதா?
Have they been acheiving?
அவர்கள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கிறார்களா?
அவைகள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கின்றனவா?
Negative Interrogative
Haven't I been reading English?
நான் வெகுகாலமாக English படித்துக்கொண்டிருக்கவில்லையா?
Haven't we been writing English?
நாம் / நாங்கள் வெகுகாலமாக English எழுதிக் கொண்டிருக்கவில்லையா?
Haven't you been speaking English?
நீ / நீங்கள் வெகுகாலமாக English பேசிக்கொண்டிருக்கவில்லையா?
Hasn't he been practicing English?
அவன் / அவர் வெகுகாலமாக பயிற்சி செய்து கொண்டிருக்கவில்லையா?
Hasn't she been following the grammar?
அவள் / அவர் வெகுகாலமாக இலக்கணத்தை பின்பற்றுவதில்லையா?
Hasn't it been moving to the next level?
இது / அது வெகுகாலமாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துக்கொண்டிருக்கவில்லையா?
Haven't they been acheiving?
அவர்கள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கவில்லையா?
அவைகள் வெகுகாலமாக சாதித்துக் கொண்டிருக்கவில்லையா?
Past Tense
Definition: விளக்கம்
Simple past tense என்ற இந்த tense, இறந்த காலத்தில் நடந்து முடிந்த வினைகளை (செயல்கள்) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Did ( I, we, you, he she, it மற்றும் they என அனைத்து subject களுடனும் இணைந்து வரும் )
Verb form
அனைத்து Subject களுக்கும் did பயன்படுத்தும்போது first form verb (present tense form) இணைந்து வரும். Did பயன்படுத்தாதபோது second form verb (Past tense form) இணைந்து வரும்.
உதாரணங்கள்
Assertive
I did read English or I read English
நான் English வாசித்தேன்.
We did write English or We wrote English
நாங்கள் / நாம் English எழுதினோம்.
You did speak English or You spoke English
நீ / நீங்கள் English பேசினீர்கள்.
He did practice English or He practiced English
அவன் / அவர் English பயிற்சி செய்தார்.
She did follow the grammar or She followed the grammar
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றினார்.
It did move to the next level or It moved to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.
They did acheive or They acheived
அவர்கள் சாதித்தார்கள் / அவைகள் சாதித்தன.
Negative
I didn't read English
நான் English வாசிக்கவில்லை.
We didn't write English
நாங்கள் / நாம் English எழுதவில்லை
You didn't speak English
நீ / நீங்கள் English பேசவில்லை.
He didn't practice English
அவன் / அவர் English பயிற்சி செய்யவில்லை
She didn't follow the grammar
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றவில்லை.
It didn't move to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை.
They didn't acheive
அவர்கள் சாதிக்கவில்லை / அவைகள் சாதிக்கவில்லை
Interrogative
Did I read English?
நான் English வாசித்தேனா?
Did we write English?
நாங்கள் / நாம் English எழுதினோமா?
Did you speak English?
நீ / நீங்கள் English பேசினீர்களா?
Did he practice English?
அவன் / அவர் English பயிற்சி பெற்றாரா?
Did she follow the grammar?
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றினாரா?
Did it move to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்ததா?
Did they acheive?
அவர்கள் சாதித்தார்களா? அல்லது அவைகள் சாதித்தனவா?
Negative interrogative
Didn't I read English?
நான் English வாசிக்கவில்லையா?
Didn't we write English?
நாங்கள் / நாம் English எழுதவில்லையா?
Didn't you speak English?
நீ / நீங்கள் English பேசவில்லையா?
Didn't he practice English?
அவன் / அவர் English பயிற்சி செய்யவில்லையா?
Didn't she follow the grammar?
அவள் / அவர் இலக்கணத்தை பின்பற்றவில்லையா?
Didn't it move to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லையா?
Didn't they acheive?
அவர்கள் சாதிக்கவில்லையா? / அவைகள் சாதிக்கவில்லையா?
Past continuous tense
Definition: விளக்கம்
Past continuous tense என்ற இந்த tense, இறந்த காலத்தில் நடந்து கொண்டிருந்த வினைகளை (செயல்கள்) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Was ( I, he she, it என்ற subject களுடன் இணைந்து வரும் )
Were (we, you, மற்றும் they subject களுடன் இணைந்து வரும் )
Verb form
அனைத்து Subject களுக்கும் "ing" verb (present participle) இணைந்து வரும்.
உதாரணங்கள்
Assertive
I was reading English
நான் English படித்துக் கொண்டிருந்தேன்.
We were writing English
நாங்கள் / நாம் English எழுதிக் கொண்டிருந்தோம்
You were speaking English
நீங்கள் English பேசிக்கொண்டிருந்தீர்கள்
He was practicing English
அவன் English பயிற்சி செய்துக் கொண்டிருந்தான்.
She was following the grammar
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருந்தாள்.
It was moving to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருந்தது.
They were acheiving.
அவர்கள் சாதித்துக் கொண்டிருந்தார்கள் / அவைகள் சாதித்துக் கொண்டிருந்தன.
Negative
I wasn't reading English
நான் English படித்துக் கொண்டிருக்கவில்லை.
We weren't writing English
நாங்கள் / நாம் English எழுதிக் கொண்டிருக்கவில்லை.
You weren't speaking English
நீங்கள் English பேசிக்கொண்டிருக்கவில்லை
He wasn't practicing English
அவன் English பயிற்சி செய்துக் கொண்டிருக்கவில்லை.
She wasn't following the grammar
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை.
It wasn't moving to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கவில்லை.
They weren't acheiving.
அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கவில்லை / அவைகள் சாதித்துக் கொண்டிருக்கவில்லை.
Interrogative
Was I reading English?
நான் English படித்துக் கொண்டிருந்தேனா?
Were we writing English?
நாங்கள் / நாம் English எழுதிக் கொண்டிருந்தோமா?
Were you speaking English?
நீங்கள் English பேசிக்கொண்டிருந்தீர்களா?
Was he practicing English?
அவன் English பயிற்சி செய்துக் கொண்டிருந்தான்.
Was she following the grammar?
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருந்தாளா?
Was it moving to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருந்ததா?
Were they acheiving?
அவர்கள் சாதித்துக் கொண்டிருந்தார்களா? / அவைகள் சாதித்துக் கொண்டிருந்தனவா?
Negative Interrogative
Wasn't I reading English?
நான் English படித்துக் கொண்டிருக்கவில்லையா?
Weren't we writing English?
நாங்கள் / நாம் English எழுதிக் கொண்டிருக்கவில்லையா?
Weren't you speaking English?
நீங்கள் English பேசிக்கொண்டிருக்கவில்லையா?
Wasn't he practicing English?
அவன் English பயிற்சி செய்துக் கொண்டிருக்கவில்லையா?
Wasn't she following the grammar?
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கவில்லையா?
Wasn't it moving to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கவில்லையா?
Weren't they acheiving?
அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கவில்லையா? / அவைகள் சாதித்துக் கொண்டிருக்கவில்லையா?
Past perfect tense
Definition: விளக்கம்
Past perfect tense என்ற இந்த tense, இறந்த காலத்தில் மிக நிச்சயமாக நடந்து முடிந்த வினைகளை (செயல்கள்) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Had ( I, We, you He, She, It மற்றும் they என அனைத்து subject களுடன் இணைந்து வரும்)
Verb form
அனைத்து Subject களுக்கும் past participle verb இணைந்து வரும்.
உதாரணங்கள்
Assertive
I had read English
நான் மிக நிச்சயமாக English வாசித்தேன்.
We had written English
நாங்கள் / நாம் மிக நிச்சயமாக English எழுதினோம்.
You had spoken English
நீங்கள் மிக நிச்சயமாக English பேசினீர்கள்.
He had practiced English
அவன் மிக நிச்சயமாக English பயிற்சி செய்தான்.
She had followed the grammar
அவள் மிக நிச்சயமாக இலக்கணத்தை பின்பற்றினாள்.
It had moved to the next level
அது மிக நிச்சயமாக அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.
They had achieved
அவர்கள் மிக நிச்சயமாக சாதித்தார்கள். / அவைகள் மிக நிச்சயமாக சாதித்தன.
Negative
I hadn't read English
நான் மிக நிச்சயமாக English வாசிக்கவில்லை.
We hadn't written English
நாங்கள் / நாம் மிக நிச்சயமாக English எழுதவில்லை.
You hadn't spoken English
நீங்கள் மிக நிச்சயமாக English பேசவில்லை.
He hadn't practiced English
அவன் மிக நிச்சயமாக English பயிற்சி செய்யவில்லை.
She hadn't followed the grammar
அவள் மிக நிச்சயமாக இலக்கணத்தை பின்பற்றவில்லை.
It hadn't moved to the next level
அது மிக நிச்சயமாக அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை.
They hadn't achieved
அவர்கள் மிக நிச்சயமாக சாதிக்கவில்லை. / அவைகள் மிக நிச்சயமாக சாதிக்கவில்லை.
Interrogative
Had I read English?
நான் மிக நிச்சயமாக English வாசித்தேனா?
Had we written English?
நாங்கள் / நாம் மிக நிச்சயமாக English எழுதினோமா?
Had you spoken English?
நீங்கள் மிக நிச்சயமாக English பேசினீர்களா?.
Had he practiced English?
அவன் மிக நிச்சயமாக English பயிற்சி செய்தானா?
Had she followed the grammar?
அவள் மிக நிச்சயமாக இலக்கணத்தை பின்பற்றினாளா?
Had it moved to the next level?
அது மிக நிச்சயமாக அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்ததா?
Had they achieved?
அவர்கள் மிக நிச்சயமாக சாதித்தார்களா? / அவைகள் மிக நிச்சயமாக சாதித்தனவா?
Negative Interrogative
Hadn't I read English?
நான் மிக நிச்சயமாக English வாசிக்கவில்லையா?
Hadn't we written English?
நாங்கள் / நாம் மிக நிச்சயமாக English எழுதவில்லையா?
Hadn't you spoken English?
நீங்கள் மிக நிச்சயமாக English பேசவில்லையா?
Hadn't he practiced English?
அவன் மிக நிச்சயமாக English பயிற்சி செய்யவில்லையா?
Hadn't she followed the grammar?
அவள் மிக நிச்சயமாக இலக்கணத்தை பின்பற்றவில்லையா?
Hadn't it moved to the next level?
அது மிக நிச்சயமாக அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லையா?
Hadn't they achieved?
அவர்கள் மிக நிச்சயமாக சாதிக்கவில்லையா? / அவைகள் மிக நிச்சயமாக சாதிக்கவில்லையா?
Past perfect continuous tense
Definition: விளக்கம்
Past perfect continuous tense என்ற இந்த tense, இறந்த காலத்தில் இரண்டு இடைபட்ட நேரத்திற்குள் தொடர்ந்து நடைபெற்ற வினைகளை (செயல்களை) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Had been( I, We, you, he, she, it மற்றும் they உடன் இணைந்து வரும்)
Verb form
அனைத்து Subject களுக்கும் "ing" verb (present participle) இணைந்து வரும்.
உதாரணங்கள்
Assertive
I had been reading English
நான் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English படித்துக் கொண்டிருந்தேன்
We had been writing English
நாங்கள் / நாம் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English எழுதிக் கொண்டிருந்தோம்
You had been speaking English
நீங்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பேசிக்கொண்டிருந்தீர்கள்
He had been practicing English
அவன் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
She had been following the grammar
அவள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இலக்கணத்தை பின்பற்றி கொண்டிருந்தாள்.
It had been moving to the next level
அது / இது சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது.
They had been achieving
அவர்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சாதித்து கொண்டிருந்தார்கள்.
Negative
I hadn't been reading English
நான் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English படித்துக் கொண்டிருக்கவில்லை.
We hadn't been writing English
நாங்கள் / நாம் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English எழுதிக் கொண்டிருக்கவில்லை.
You hadn't been speaking English
நீங்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பேசிக்கொண்டிருக்கவில்லை.
He hadn't been practicing English
அவன் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பயிற்சி செய்து கொண்டிருக்கவில்லை.
She hadn't been following the grammar
அவள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இலக்கணத்தை பின்பற்றி கொண்டிருக்கவில்லை.
It hadn't been moving to the next level
அது / இது சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கவில்லை.
They hadn't been achieving
அவர்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சாதித்து கொண்டிருக்கவில்லை.
Interrogative
Had I been reading English?
நான் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English படித்துக் கொண்டிருந்தேனா?
Had we been writing English?
நாங்கள் / நாம் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English எழுதிக் கொண்டிருந்தோமா?
Had you been speaking English?
நீங்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பேசிக்கொண்டிருந்தீர்களா?
Had he been practicing English?
அவன் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பயிற்சி செய்து கொண்டிருந்தானா?
Had she been following the grammar?
அவள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இலக்கணத்தை பின்பற்றி கொண்டிருந்தாளா?
Had it been moving to the next level?
அது / இது சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்ததா?
Had they been achieving?
அவர்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சாதித்து கொண்டிருந்தார்களா?
Negative Interrogative
Hadn't I been reading English?
நான் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English படித்துக் கொண்டிருக்கவில்லையா?
Hadn't we been writing English?
நாங்கள் / நாம் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English எழுதிக் கொண்டிருந்தோமா?
Hadn't you been speaking English?
நீங்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பேசிக்கொண்டிருக்கவில்லையா?
Hadn't he been practicing English?
அவன் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் English பயிற்சி செய்து கொண்டிருக்கவில்லையா?
Hadn't she been following the grammar?
அவள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இலக்கணத்தை பின்பற்றி கொண்டிருக்கவில்லையா?
Hadn't it been moving to the next level?
அது / இது சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கவில்லையா?
Hadn't they been achieving?
அவர்கள் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சாதித்து கொண்டிருக்கவில்லையா?
Future tense
Simple future tense
Definition: விளக்கம்
Simple future Tense என்ற இந்த tense, எதிர் காலத்தில் அந்தந்த நொடிகளில் அல்லது தருணங்களில் நடைபெறும் வினைகளை (செயல்களை) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary verb
Shall (I மற்றும் we, ஆகிய Subject களுடன் இணைந்து வரக்கூடியது)
Will (You, he, she, it மற்றும் they ஆகிய Subject களுடன் இணைந்து வரக்கூடியது)
Verb form
அனைத்து subject களுக்கும் first form verb (present tense form) இணைந்து வரும்.
உதாரண வாக்கியங்கள்
Assertive
I shall read English
நான் English வாசிப்பேன்
We shall writeEnglish
நாம் / நாங்கள் English எழுதுவோம்
You will speak English
நீங்கள் English பேசுவீர்கள்
He will practice English
அவன் English பயிற்சி செய்வான்.
She will follow the grammar
அவள் இலக்கணத்தை பின்பற்றுவாள்.
It will move to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகரும்.
They will acheive
அவர்கள் சாதிப்பார்கள் / அவைகள் சாதிப்பன.
Negative
I won't read English
நான் English வாசிக்கப்போவதில்லை
We won't writeEnglish
நாம் / நாங்கள் English எழுதப்போவதில்லை
You won't speak English
நீங்கள் English பேசப்போவதில்லை
He won't practice English
அவன் English பயிற்சி செய்யப்போவதில்லை
She won't follow the grammar
அவள் இலக்கணத்தை பின்பற்றப்போவதில்லை.
It won't move to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகரப் போவதில்லை
They won't acheive
அவர்கள் சாதிக்கப்போவதில்லை / அவைகள் சாதிக்கப்போவதில்லை
Interrogative
Shall I read English?
நான் English வாசிப்பேனா?
Shall we writeEnglish?
நாம் / நாங்கள் English எழுதுவோமா?
Will you speak English?
நீங்கள் English பேசுவீர்களா?
Will he practice English?
அவன் English பயிற்சி செய்வானா?
Will she follow the grammar?
அவள் இலக்கணத்தை பின்பற்றுவாளா?
Will it move to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகருமா?
Will they acheive?
அவர்கள் சாதிப்பார்களா? / அவைகள் சாதிப்பனவா?
Negative interrogative
Won't I read English?
நான் English வாசிக்கப்போவதில்லை
Won't we writeEnglish?
நாம் / நாங்கள் English எழுதப்போவதில்லை
Won't you speak English?
நீங்கள் English பேசப்போவதில்லை
Won't he practice English?
அவன் English பயிற்சி செய்யப்போவதில்லை
Won't she follow the grammar?
அவள் இலக்கணத்தை பின்பற்றப்போவதில்லை.
Won't it move to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகரப் போவதில்லை
Won't they acheive?
அவர்கள் சாதிக்கப்போவதில்லை / அவைகள் சாதிக்கப்போவதில்லை
Future continuous tense
Definition: விளக்கம்
Future continuous tense என்ற இந்த tense, எதிர் காலத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கபோகும் வினைகளை (செயல்கள்) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Shall be (I, we ஆகிய Subject களுடன் இணைந்து வரும்)
Wil be (you, he, she மற்றும் it ஆகிய Subject களுடன் இணைந்து வரும்)
Verb form
அனைத்து Subject களுக்கும் "ing" verb (present participle) இணைந்து வரும்.
Assertive
I shall be reading English
நான் English வாசித்துக் கொண்டிருப்பேன்.
We shall be writing English
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருப்போம்
You will be speaking English
நீங்கள் English பேசிக்கொண்டிருப்பீர்கள்
He will be practicing English
அவன் English பயிற்சி செய்துகொண்டிருப்பான்.
She will be following the grammar
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருப்பாள்
It will be moving to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கும்
They will be acheiving
அவர்கள் சாதித்துக் கொண்டிருப்பார்கள் / அவைகள் சாதித்துக் கொண்டிருக்கும்.
Negative
I won't be reading English
நான் English வாசித்துக் கொண்டிருக்கப்போவதில்லை
We won't be writing English
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருக்கப்போவதில்லை
You won't be speaking English
நீங்கள் English பேசிக்கொண்டிருக்கமாட்டீர்கள்
He won't be practicing English
அவன் English பயிற்சி கொண்டிருக்கப்போவதில்லை
She won't be following the grammar
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கப்போவதில்லை
It won't be moving to the next level
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கப்போவதில்லை
They won't be acheiving
அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கபோவதில்லை / அவைகள் சாதித்துக் கொண்டிருக்கபோவதில்லை
Interrogative
Shall I be reading English?
நான் English வாசித்துக் கொண்டிருப்பேனா?
Shall we be writing English?
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருப்போமா?
Will you be speaking English?
நீங்கள் English பேசிக்கொண்டிருப்பீர்களா?
Will he be practicing English?
அவன் English பயிற்சி செய்துகொண்டிருப்பானா?
Will she be following the grammar?
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருப்பாளா?
Will it be moving to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்குமா?
Will they be acheiving?
அவர்கள் சாதித்துக் கொண்டிருப்பார்களா? / அவைகள் சாதித்துக் கொண்டிருக்குமா?
Negative interrogative
Won't I be reading English?
நான் English வாசித்துக் கொண்டிருக்கப்போவதில்லையா?
Won't we be writing English?
நாம் / நாங்கள் English எழுதிக்கொண்டிருக்கப்போவதில்லையா?
Won't you be speaking English?
நீங்கள் English பேசிக்கொண்டிருக்கமாட்டீர்களா?
Won't he be practicing English?
அவன் English பயிற்சி கொண்டிருக்கப்போவதில்லையா?
Won't she be following the grammar?
அவள் இலக்கணத்தை பின்பற்றிக் கொண்டிருக்கப்போவதில்லையா?
Won't it be moving to the next level?
அது / இது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துக் கொண்டிருக்கப்போவதில்லையா?
Won't they be acheiving?
அவர்கள் சாதித்துக் கொண்டிருக்கபோவதில்லையா? / அவைகள் சாதித்துக் கொண்டிருக்கபோவதில்லையா?
Future perfect tense
Definition: விளக்கம்
Future perfect tense என்ற இந்த tense, எதிர் காலத்தில் மிக நிச்சயமாக நடந்து முடியவுள்ள வினைகளை (செயல்கள்) குறிப்பிட பயன்படுகிறது.
Auxiliary Verb
Shall have ( I மற்றும் We, என்ற subject களுடன் இணைந்து வரும்)
Will have (You He, She, It மற்றும் they என்ற subject களுடன் இணைந்து வரும்)
Verb form
அனைத்து Subject களுக்கும் past participle verb இணைந்து வரும்.
Assertive
I shall have read English
நான் English ஐ மிக நிச்சயமாக படித்து முடித்து இருப்பேன்.
We shall have written English
நாம் / நாங்கள் மிக நிச்சயமாக எழுதி முடித்து இருப்போம்.
You will have spoken English
நீங்கள் மிக நிச்சயமாக பேசி முடித்து இருப்பீர்கள்.
He will have practiced English
அவன் மிக நிச்சயமாக பயிற்சி செய்து முடித்து இருப்பான்
She will have followed the grammar
அவள் மிக நிச்சயமாக இலக்கணத்தை பின்பற்றியிருப்பாள்
It will have moved to the next level
அது / இது மிக நிச்சயமாக அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கும்
They will have acheived
அவர்கள் மிக நிச்சயமாக சாதித்திருப்பார்கள்.
| Monday | 9am - 8pm |
| Tuesday | 9am - 8pm |
| Wednesday | 9am - 8pm |
| Thursday | 9am - 8pm |
| Friday | 9am - 8pm |
| Saturday | 9am - 8pm |
| Sunday | 9am - 8pm |