18/09/2024
கல்வி!
கல்வி பொதுவானது ...
அனைவருக்கும் சமமானது...
18/09/2024
கல்வி!
17/09/2024
சும்மா கிடைச்சுருமா வாழ்க்கைப் பாடம்?
09/09/2024
வழக்கமாக T.நகரில் டியூஷன் முடித்துவிட்டு வரும் நேரம் தான். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் நல்ல பசி. பொதுவாக, இரவு நேர டிபன் என்றால் சைதாப்பேட்டை அருகில் இருக்கும் சின்னமலையில் ஒரு கையேந்திபவன் தான் என்னுடைய ஃபேவரிட்.
வழக்கம் போல் இன்றும் அந்தக் கடையில் ஸ்பெஷல் ஐட்டமான கல் தோசையையும் முட்டைக் கலக்கியையும் சாப்பிட்டுக் கொண்டே கடையை நடத்தும் கணவன் - மனைவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
"சார் மூன்று வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணுக்காக டியூஷன் கேட்டேன்ல்ல அந்த பொண்ணு தான் இவங்க. அவளுடைய பொண்ணு தான் இந்த குட்டி பாப்பா" என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
"என் பொண்ணு பன்னிரண்டாவது படிக்கும் போது லவ் பண்ணிட்டு அந்த பையன் வீட்டில் பிரச்சினையை ஆயிடுச்சு சார் அதனால கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்" என்றார். இதை ஏற்கனவே உன்னிடம் சொன்ன ஞாபகம். எனவே நானும் ஆமாம் நீங்கள் இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறீங்க என்று கூறினேன்.
எனக்குத் தெரிந்து ஒரு குடும்பமாக ஈவினிங் ஸ்டால் நடத்தி வருகிறார். இதில் பெரிய விஷயம் என்னவென்றால் தோசை மாஸ்டர் அந்த அக்கா தான். அவரின் கணவர் தோசைகளை பரிமாறிக் கொடுப்பவர். அதுமட்டுமல்ல அவருடைய கணவரைப் பற்றியும் இதற்கு முன்னர் சொல்லி புலம்பியுள்ளார்.
அதிகப்படியான சரக்கு, குடும்பத்தில் கவனம் இல்லாமல் இருந்தது, பிள்ளைகளின் விஷயத்தில் பிடிமானம் இல்லாமல் இருந்தது என்று எவ்வளவோ விஷயங்களை அவர் கவலைப்பட்டுச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.
ஆனால் சமீப காலமாக அவரின் போக்கு என்னை சற்று ஆச்சரியப்பட வைத்தது. கடையில் இருக்கும் பொழுது தண்ணீர் அடிப்பதில்லை (இதற்கு முன்னர் பரிமாறும் பொழுதும் சரக்கு வாடை ஹெவியாகவே வரும்). நல்ல முறையில் பரிமாறுகிறார். தன் மனைவியிடத்தில் அக்கறையுடன் நடந்து கொள்கிறார்.
இது எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இன்று அவரின் பேத்தி கடையில் சாப்பிட வந்தவரை நோக்கி பிஞ்சுக் குரலில் அழைத்தது. அதற்கு சாப்பிட வந்தவர் இந்த குழந்தை பேசுமா என்று கேட்டார். அதற்கு அவர் ஐயோ அதெல்லாம் வாயாடி புள்ள... பேசுனா இங்கிலீஷ்ல தான் பேசும் என்று கண்கள் விரிய ஒரு விதமான பெருமையுடன் சொன்னார்.
தெளிவாகப் புரிந்தது என்ன கஷ்டமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேச வைப்பது தான் அறிவின் உச்சம் என்றும், பெருமைக்குரிய மகுடம் என்றும் ஏழைகள் இன்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்ற வேதனையான உண்மையை!
உள்ளார்ந்த படித்தலின் அவசியம்...
13/07/2024
ராத்திரி 11 மணிக்கு சுடச்சுட இட்லி, சூடான பருத்தி பால் இதெல்லாம் மதுரையில் மட்டுமே சாத்தியம்...
கோடிகளில் மக்கள் தொகை இருக்கக்கூடிய சென்னையில் இரவு 11.00 மணிக்கு மேல் வெளியூரில் இருந்து வந்து இறங்கினால் சாப்பாட்டிற்கு திண்டாட்டம் தான்... பலமுறை இதை நான் அனுபவித்து இருக்கிறேன்.
ஒருவேளை உணவு கிடைத்தாலும் இங்கு உள்ள அளவிற்கு விலை குறைவாகவும், மிக எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்காது என்பது நிதர்சனம்!
சில அத்தியாயங்களில் வன்முறை தேவைப்படுகிறது.
ஆற்றலையும், ஆற்றாமையையும் பிரித்து பொருள் கொள்வதற்காக.
10/04/2024
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் ♥️♥️♥️
24/01/2024
எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கின்றதோ எவனுக்கு போய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறது அவனுக்கு வெற்றி கொடுக்க நம் நாடு தயாராக இருக்கிறது. -பெரியார்
யாரு நெனச்சு பெரியார் சொன்னார் என்று தெரியவில்லை.... ஆனா இன்றைய தேதியில் மிகச் சரியாக பொருந்தி இருக்கிறது பெரியாரின் சிந்தனை.
22/11/2023
அரையாண்டுத் தேர்வு 2023
| Monday | 9am - 8pm |
| Tuesday | 9am - 8pm |
| Wednesday | 9am - 8pm |
| Thursday | 9am - 8pm |
| Friday | 9am - 8pm |
| Saturday | 9am - 8pm |
| Sunday | 9am - 1pm |