04/07/2022
சமீபத்தில் ஆசிய திரைப்படங்களான கொரியா மற்றும் ஜப்பான் நாட்டிலிருந்து வெளிவரும் திரைப்படங்கள் உலக திரைப்பட விழா மேடைகளில் உயரிய விருதுகளை வாங்கி குவிக்கின்றனர் . ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனை தொடர்ந்து எழுதப்படும் கதைகளுக்கு பலத்த வரவேற்பு சினிமாக்களில் உண்டு ,பார்க்க சிறு வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் தனது கைக்குழந்தை மகனை பூஷன் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் வெளியே விட்டு செல்கிறாள் . அந்த குழந்தை மேல் ஒரு பேப்பரில் நான் உன்னை வந்து கூட்டிச்செல்கிறேன் என எழுதிவிட்டு செல்கிறாள் . பெற்றோர்களே தான் பெற்ற குழந்தைகளை கைவிடும் சூழலில் அந்த குழந்தைகளுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கில் அவர்களை எடுத்து, பாதுகாத்து அடைக்களம் கொடுக்க "குழந்தை பெட்டி" கொண்ட தேவாலயம் ஒன்று அந்தப்பகுதியில் இருக்கிறது . Read Full Post In Movies Museum Site it's Tamil Site World Cinema Intro By Tamil : https://www.moviesmuseum.com/2022/07/broker-2022-south-korea-film-intro-by.html
Broker (2022, South Korea) - Film Intro By Tamil | தேவாலய பெட்டியில் கைவிடப்பட்ட குழந்தை
World Cinema Intro By Tamil , Foreign Films Review In Tamil , Movie Reviews in Tamil , Film Intro, Tamil , Ulaga Cinema , Film Festival Tamil , Cinema
01/12/2019
எங்கள் கனா - Hariharasuthan Thangavelu
கடந்த இரண்டு வருடங்களில் நான் முழுமையாக படித்த ஒரே புத்தகம் "எங்கள் கனா" தான் . என்னுடைய வாசிப்பு அனுபவம் என்பது வெகு வெகு குறைவு . வீட்டில் கூட திட்டுவார்கள் புக்கா வாங்கி அடுக்குறானே தவிர ஒன்னத்தையும் படிச்ச பாடில்லை என . புத்தகங்களை வாங்க இருக்கின்ற ஆர்வம் அதனை படிக்க சுத்தமாக வருவதில்லை . ஒரு படத்தை பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் முதல் ஷாட்டிலோ அல்லது முதல் ஐந்து நிமிடத்திலோ அந்த படத்தோடு நானும் பயணிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே என்னால் முழுமையாக அந்த திரைப்படத்தை காண முடியும். அதே தான் நான் வாசிக்கும் புத்தகங்களும் . இதுவரைக்கும் நான் படித்த புத்தகங்கள் வெகு வெகு குறைவு தான் என்பதனை ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன் . இருந்தும் படிப்ப்பனா என்ற கேள்வி இருந்தது. முதல் ஐந்து பக்கத்தை படியுங்கள் மேற்கொண்டு உங்களை நானே அழைத்து செல்வேன் என புத்தகத்தை எழுதிய நண்பர் ஹரிஹரசுதன் அவர்கள் சொன்னமாதிரியே செய்தும் காட்டிவிட்டார் .. மிக்க மகிழ்ச்சி அண்ணா .
என் வாழ்வின் சுவாரசியம் எப்படி இருக்க போகிறதோ ? என் எதிர்காலம் எதை நோக்கி பயணப்பட்டு சென்றுகொண்டு இருக்கிறதோ ? என்னுடைய அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும். , இதுவரை என்ன செய்தோம். இனி என்ன செய்யவிருக்கோம். போன்ற கேள்விகளை எல்லாம் எனக்குள் நானே கேட்டுக்கொள்ளும் ஒருநாளாக வாராவாரம் சனிக்கிழமை இரவு பொழுதுகள் உண்டு. இப்படி பல கேள்விகளை எனக்குள் நானே கேட்டுக்கொண்டு தூங்காமல் இருப்பேன் , சொல்லப்போனால் அந்த ஒரு இரவு மட்டும் எனக்கு சிவராத்திரி தான் . பிறகு காலை விடிந்த பிறகு , வரும் பாருங்க ஒரு தூக்கம் , கோடி ரூபா கொடுத்தாலும் அதுக்கு ஈடாகாது .
அந்த இரவில் ஊரே உறங்கி ஒரு சத்தமும் இல்லாமல் மயான அமைதி நிலவியுடன் வாழ்வின் மீது இருக்கும் அத்துணை கேள்விகளும் எனக்குள் நானே கேட்டுக்கொண்டு அதே நேரத்தில் எதாவது செய்துகொண்டே இருக்கும் பழக்கமும் உண்டு . ஒன்று அந்த இரவு முழுவதும் தொடர்ந்து சினிமாக்களாக பார்த்து தள்ளுவேன் . நேரத்தை வீணடிக்கிற சினிமா அல்ல இரவுப்பொழுதை போக்கினாலும் நல்ல பொழுதாகவே அமையும் சினிமாக்களை பார்த்து விடுவேன் . என் முகநூல் நண்பர்களுக்கு தெரியும் யாருடா இவன் எப்பப் பாரும் அந்த சினிமா பாக்குறேன் இந்த சினிமா பாக்குறேன் ன்னு போஸ்ட் போட்டு தள்ளிக்கொண்டே இருக்கிறான் என வசவு பாடி இருப்பார்கள் . ஆனால் எனக்கு மட்டுமே தெரியும் அவை என்னுடைய சிறப்பான நினைவுகளாக இருக்கும் என.
அடுத்தாக வாரக்கணக்கில் துவைக்காமல் வைத்திருந்த துணிகளை தங்கி இருக்கும் விடுதியில் கீழே கொண்டு போய் துவைத்துவிடுவேன் . இவன் யாருடா நடுராத்திரியில் வந்து வாஷிங் மிஷனை நோண்டிக்கொண்டு இருக்கிறான் என வாட்சுமேன் பார்த்துக்கொண்டு இருப்பார் . பிறகு ஏற்கனவே எங்கோ தொலைத்த ஒன்றை ரூமில் தேடுவேன் ஒருவேளை இருந்தால் லக்கு தானே . அப்படி நான் எங்கோ தொலைத்ததாக நினைத்துக்கொண்டிருந்த என்னுடைய Headset மற்றும் இன்னும் பலவற்றை கண்டுடிருக்கிறேன் . காலிள் விரல்கள் எல்லாம் சரியாக இருக்கா. விரல்கலில் அழுக்கு இருக்கா. என பொழுது விடியும் வரை நானே எனக்குள் கேள்வியும் கேட்டு பதிலையும் சொல்லிக்கொள்வேன்.
இது எல்லாம் போக Assignments எதாவது இருக்கிறதா என பார்த்து செய்வேன். பிறகு துறை சார்ந்த Language புது வெர்சன் என்ன வந்து இருக்கிறது என தேடுவேன் . போன வாரத்திற்கு கூட Udemy தளத்தில் Angular 8 ஒரு கோர்ஸ் ஐ வாங்கிவிட்டு பார்க்க துவங்கி விட்டேன் , அதுவும் ஒன்றிரண்டு வீடியோ ஒரு தொகுப்பிலும். தீடிரென இறுதியிலும் .பிறகு நடுவிலும் குரங்கு போல தாவிக்கொண்டே இருந்தது என்னுடைய மூளை! . (நிற்க மூளை குறித்து இந்த புத்தகத்தில் அத்தியாயம் ஒன்றில் அட்டகாசமான பத்திகள் உண்டு அதற்க்கு பிறகு தான் ராவோடு ராவாக இந்த புத்தகத்தை முழுவதும் படித்தேன்)
தொடர்க , ஆக இப்படி ஏதாவது ஒன்றை அந்த சனிக்கிழமை இரவுகள் பிடித்துக்கொண்டே இருக்கும் . நேற்றய இரவு " எங்கள் கனா " என்னை பிடித்துக்கொண்டது . அவருடைய எழுத்து குறித்து உங்களுக்கே தெரியும் . வரிக்கு வரி , பத்திக்கு பத்தி , அத்தியாததுக்கு அத்தியாயம் என பூந்து விளையாடி இருக்கிறார் . இதற்க்கு முன்பு தனி தனி கட்டுரைகளை முகநூலில் படித்து இருக்கிறேன் . அவரின் பதிவுகள் மூலம் பலருக்கு பல விதத்தில் இன்ஸ்பியர் ஆகி இருப்பார் . நானும் அவர் மூலம் inspire ஆகி சில காராயங்களை செய்து இருக்கிறேன் என்பது பெருமகிழ்ச்சியாக இருக்கிறது .
ஒரு முறை சென்னை சென்ற பொழுது என் நண்பர்களோடு அவரை சந்திக்க நேர்ந்தது . பேச்சில் புதுமை ,தெளிவு ,அறிவு , அறிவியல் , தொழிநுப்டம் என முற்றிலும் கவர்ந்தார் . புத்தகத்தை தொடங்கையில் ,ஆரம்பத்தில் நான் கூட பயந்தேன் இந்த புத்தகத்தில் அணு எண், என சயின்ஸ் பாடம் எடுத்து விடுவாரோ. எனக்கு வேற கெமிஸ்ட்ரி என்றால் அலர்ஜி அதில் வர அட்டவணை எல்லாம் பத்தி வரிகளை பார்த்ததும் போர் அடித்துவிடுவாரோ என்னவோன்னு , நினைந்த்தேன். ஆனால் அது எல்லாம் எவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமோ அவ்வளவு இயல்பாக சொல்லி இருக்கிறார். ஆங்காங்கே சில இடங்களின் என்னை அறியாமலே சிரித்து கொண்டு பார்த்து இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை எதாவது ஒன்றின் மூலம் சிரிக்கவும் வைக்கிறார்.
Avengers End Game ல் , ஸ்காட் குவான்ட்டம் பிசிக்ஸ் குறித்து பேசிக்கொண்டு இருக்கையில் கேர்ப்பாரே ஒரு கேள்வி . Have either of you guys ever studied quantum physics? அதற்கு கூட நம்ப பிளாக் விடோ சொல்லுவாங்க only to make conversation. ன்னு அப்படி பேப்பரை முடிச்சு வெளிய வந்ததா போதும் ன்னு படிச்சவன் நான் . இந்த புக்ல அறிவியல், சமூக அறிவியல், வரலாறு , நிகழ்வுகள் ,இந்தியா,அரசியல் , போர் ,ஹிட்லர்,ஆராய்ச்சி , விண்வெளி , மற்றும் மூளை என ஒரு Refresh செய்துவிட்டார் . உண்மையில் சிறப்பான அனுபவத்தை கொடுத்து. அட்டகாசப்படுத்து இருக்கிறார் .
அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சி என்பது ஒரு சில வினாடிகளிளே நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் கையில் கொடுத்துவிடுகிறது இந்த காலம் . இந்த தொழிநுப்டம் அடைத்திருக்கும் வளர்ச்சி முற்றிலும் அபாரமானது . ஆனால் இதற்க்கு முந்தைய காலகட்டங்களில் அறிவியலின் வளர்ச்சி மற்றும் போர் , விண்வெளி அரசியல், துரோகம் ,வஞ்சம் ,சோதனை என அவர் படிந்தறிந்த தகவலை வெகு சிறப்பாக புத்தகமாக்கி கொடுத்து இருக்கிறார் . அமேசான் தளத்தில் Pen To Publish போட்டியில் பங்குகொண்டுள்ளது . நண்பர்கள் அவசியம் வாங்கி படித்து தங்களின் கருத்துக்களை பதியுங்கள் . தவறாமல் அமேசான் தளத்திலும் கருத்து பதியுங்கள் . நண்பர்களுக்கு பரிசளியுங்கள் .
13/02/2019
பொதுவாக சிகை அலங்கரிக்கும் கடையில் கவர்ச்சி நடிகைகள் படம், அரசியல் தலைவர் படம், அரசியல் பேச்சு, சினிமா பாடல்கள் உள்ளிட்டவைகளே அதிகளவில் பேசப்பட்டு விவாதிக்கப்படும். தூத்துக்குடி நகரில் இது எதுவும் இல்லாமல் சுமார் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம் அமைத்து சலூனில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கிறார் பொன்.மாரியப்பன்.கடையில் அரசியல் வேண்டாம் என்பதை நாசூக்காக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் பொன்.மாரியப்பன், வாசிப்பின் மூலம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகத்தை பெற்றுள்ளார். புத்தகங்களே துணை என்ற தலைப்பில் அவர் பேசிய ஒலிப்பதிவை சலூனில் ஒலிப்பரப்பிய அவர், தொடர்ந்து சுகி.சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளை தவறாமல் ஒலிப்பரப்பி வருகிறார்.
தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நூலகம் குறித்தும் என்ன புத்தகம் படித்தீர்கள் உபயோகமானதாக இருந்ததா என்பதை கையேடு மூலம் பதிவிடவும் செய்கிறார் (Feed Back)
Via Naveen kutty
13/02/2019
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில், 'இந்தியன்' என்ற பெயரில் சலுான் கடை வைத்துள்ளார், கணேசன்.
பொதுவாக சலூன் கடைகளில், டி.வி, நாளிதழ்கள், நடிகர், நடிகைகளின் படம், காலண்டர்கள் இருக்கும்.
ஆனால், கணேசனின் கடையில் விதவிதமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்தும் பெரும் இலக்கிய ஆளுமைகள் எழுதிய புத்தகங்கள்.
கார்ல் மார்க்ஸ், லெனின், சேகுவேரா, உள்ளிட்ட உலகத் தலைவர்களின் நூல்களும் திருக்குறள், திருவாசகம், பாரதியார், பாரதிதாசன், மு.மேத்தா, வைரமுத்து, கண்ணதாசன் உட்பட, பலர் எழுதிய புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, புத்தகங்களை வைக்க இடமில்லாமல், அட்டைப் பெட்டிகளிலும் அடுக்கி வைத்துள்ளார்.
போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை, இலவசமாக எடுத்துச்சென்று படிக்கின்றனர்.
மணமேல்குடியில் கணேசனை எல்லோரும் 'கவிஞர்' என்றும் இவரது கடையை 'சலுான் லைப்ரரி' என்றும் குறிப்பிடுகிறார்கள்.
கணேசன் கூறுவது :
"1980 இல் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தந்தை இறந்துவிட்டார். அடுத்த சில நாட்களிலேயே வறுமை காரணமாக, பள்ளிக்குச் செல்லாமல் கடையைத் திறந்து தொழிலைத் தொடங்கிவிட்டேன். சக நண்பர்கள் பள்ளிக்குச் செல்வதைக் கண்டு பல நாட்கள் அழுததுண்டு. அரசுப் பணியில் சேரவேண்டுமென்ற என் ஆசை, குடும்ப வறுமையால் நிறைவேறவில்லை.
கடையில் வாங்கிய நாளிதழ், சிறு புத்தகங்கள்தான் என்னை படிப்படியாக வாசிக்கத் தூண்டின. அதன்பிறகு 1996 இல் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் எம்ஏ வரலாறும், பிலிட் தமிழும் அதன்பிறகு எம்ஏ தமிழும் படித்து நானும் பட்டதாரியாகிவிட்டேன். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு மூலம் வாசிப்பு பழக்கம் எனக்கு முக்கியமானதாக மாறியது. தொடர்ந்து படிக்கத் தொடங்கியதன் நீட்சிதான் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற புத்தகக்காட்சிகளிலும் கோவை செம்மொழி மாநாட்டிலும் பங்கேற்றேன்.
ஏறத்தாழ 20 ஆண்டுகளில் 1,500 புத்தகங்கள் வாங்கி படிக்க முடிந்தது. அவற்றை என்னோடு முடங்கிடாமல் மற்றவர்களும் படிக்க வேண்டு மென விரும்பினேன். இதற்காகவே சலூன் கடையில் புத்தகங்களை அடுக்கி நூலகமாக மாற்றினேன். கடைக்கு வருவோர் புத்தகங்களை வாசிக்கின்றனர். வாடிக்கையாளர்களை வாசிக்க தூண்டிய திருப்தி எனக்கு".
Via Naveen Kutty
05/12/2018
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
சஞ்சாரம் நூலக்காக சாகித்ய அகாடமி விருது. வாழ்த்துக்கள் சார்
World Books Museum
07/07/2018
"இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும் தீண்டாததே!
பிறந்த சாதி தீண்டாதது,
செய்ய விரும்பிய போராட்டமும் தடை செய்யப்பட்டது.
அது நேற்றாக இருக்கலாம்,
இன்றாகவும் இருக்கலாம்
எந்த காலமாகவும் இருக்கலாம்.
இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும் தீண்டாததே " என்ற கவிதைகளுடன் தொடங்கியது தீண்டாடத வசந்தம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் என்று குறிப்பிடும் போதே ஒடுக்குவது யார் என்ற கேள்வியும் சேர்ந்தே எழும். இந்த மண்ணில் சுய உரிமைக்காக சிந்தியோரின் ரத்தங்கள் சேகரித்தால் இங்கே உள்ள எல்லா நதிகளையும் விட அந்த குருதி நதி பெரியதாக நீண்ட தூரம் பாயும்.
இன்னமும் ஒடுக்கப்பட்டோர் ஒடுக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறார்கள் . அவர்களின் போராட்டம் பற்றிய கதை தான் ' தீண்டாத வசந்தம் '. வாசித்து முடித்த சில நாட்களுக்கு அந்த வலி உறுத்திக் கொண்டே இருந்தது. Untouchable spring என்று G கல்யாண ராவ் எழுதிய புத்தகம் எத்திராஜுலு அவர்களால் தீண்டாத வசந்தம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்களான எல்லண்ணா, நாகண்ணா, சுபத்திரா, ரூத், ரூபேன் இன்னமும் ஏதோ ஒரு பெயரில் நிஜ வாழ்க்கையிலும் போராடி கொண்டு தான் இருக்கிறார்கள்.
வாசித்து பாருங்கள் 👍
Via Karthik
25/05/2018
https://www.youtube.com/watch?v=qB8FDvRlaeg&feature=youtu.be
#bansterlite உயிரைக் கொடுத்தாவது அரசின் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்.
thoothukudi kalavaram, thoothukudi, tamil news, sterlite protest, thoothukudi live, thuthukudi kalavaram dead, sun news live, live news, news updates, latest...
15/01/2017
Sold (2016) ஒரு சிறுமியின் கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை கதை
சமீபத்தில் இணையத்தில் பெண்களை மையபடுத்திய ஓவியம் ஒன்று பகிரபட்டது அந்த ஓவியம் சொல்லும் கருத்துக்கள் பலவிதமானவை . "பெண் கடவுளை" வணங்கும், அதே கயவன் தான் ரோட்டில் செல்லும் பெண்ணை பலாத்காரம் செய்கிறான் . பெண் என்பவளை சாமியாக பார்க்கும் அதே ஆண் தான் சதையாகவும் பார்க்கிறான் . வணங்குபவனே வன்புணர்விற்காக அலைகிறான் . இப்படி பாதுகாப்பில்லாமல் நம் நாடே நாசமாகி கொண்டு இருக்கிறது . சமீபத்தில் வந்த கணக்கெடுப்பின் படி ஒரு நாளுக்கு மூன்று மணி நேரத்திற்கு ஒவ்வொரு பெண்களாக கடத்த பட்டு மற்ற நாட்டிற்கு விற்க படுகின்றனர் , இதில் மிகக் கொடுமை என்வென்றால் இந்தியாவில் தான் அதற்க்கான Hub இருகின்றது . அப்படி நேபாள நாட்டில் இருந்து கொல்கத்தாவில் ரெட் லைட் ஏரியாவில் மாட்டிகொண்ட ஒரு சிறுமியின் கதை தான் இந்த SOLD.
செய்தித்தாள்களில் தினமும் எதோ ஒரு பக்கத்தில் கடத்தல் செய்திகள் பற்றி வந்துவிடும் , அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை கடத்தி விற்பனை , பச்சிளம் குழந்தைகளை கடத்தி விற்பனை , கன்டெய்னரில் பெண்கள் கடத்தல் ன்னு பல விதமான செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன , பதினொன்னு பன்னிரண்டு வயது நிரம்பிய பெண்களை கடத்தி வேறொரு நாட்டிற்க்கு விற்று விடுவார்கள் , இந்த கேவலமான செயலில் முதல் இடத்தில் இருப்பது நம் இந்தியா தான் . நாம் பெருமை படக்கூடிய எது எதிலோ முதல் இடம் இருக்கிறோம். இன்னும் எது எதிலில் வெற்றி பெற்று முன்னிலை வர துடிக்கிறோம் . துடிப்பு மிக்க நம் நாட்டில் இந்த செயலிலும் முன்னிலை இருப்பது இந்தியா தான் .
பெண்களை கடத்தி விற்கும் நாட்டில் வசித்து வருகிறோம் என்று நினைக்கும் பொது நம் நாட்டின் மீது வெறுப்பு தான் வருகிறது .சமீபத்தில் கடத்தல்கள் பற்றி வந்துள்ள திரைப்படங்கள் மூலமே நமக்கு சொல்லி விடுகின்றன, இந்தியா தான் HUB, இங்கிருந்து தான் மற்ற நாடுகளுக்கு பெண்கள் கடத்த படுகின்றன என்று . “வேதாளம்” திரைபடத்தில் இளம் பெண்களை கடத்தி ஒரு கன்டெய்னரில் அடைப்பார்கள் , அந்த கன்டெய்னரில் ஒரு பெண் தூக்கு போட்டு இறந்து விடுவதாக காட்டுவார்கள் . 2014 ல் ஆகட்ஸ் மாதம் வந்த ஒரு உண்மை செய்தி . அதைதான் ஒரு காட்சியாக படமாக்கி இருப்பார்கள் படத்தில் தான் அஜித் வந்து எதிர்பாராத விதமாக அங்குள்ளவர்களை காப்பாற்றி விடுவார் . உண்மை என்னவென்றால் அந்த கன்டெய்னர் இந்தியாவில் இருந்து கப்பல் மூலம் லண்டனுக்கு கடத்த பட்டிருக்கிறது . அதில் கடத்தப்பட்ட பெண்களில் நான்கிற்கு மேலானோர் மூச்சு திணறி உள்ளேயே இறந்துள்ளனர் அதில் இரண்டு குழந்தைகளும் . கடத்தப்பட்டவர்களில் பாதி பேர் நேபாள் நாட்டில் இருந்து கடத்தப்பட்டவர்கள் .முகம் வாடி சோர்வடைந்து, தாகம் தீர்க்க வழியில்லாமல், உணவில்லாமல் பசியினால் மயக்கமுற்று உயிருள்ள சிலர் மீர்க்க பட்டனர் . விசாரணையில் இவர்கள் இந்திய நாட்டில் இருந்து சரக்கு கப்பலின் மூலம் வேறு நாட்டிற்க்கு கடத்தப்பட்டதாக தெரியவந்தது .
திரைப்படம் தொடங்கும் பொது இயற்கை அழகியலுடன் தொடங்கும் . காட்சிகளை வைத்து ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் என்று பார்த்தேன் இது ஆழமான திரைப்படம் . நடித்திருக்கும் பெண்ணிற்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் . திரைப்படத்தை பற்றி எல்லாமே சொல்லிவிட விருப்பம் இல்லை நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம் . ஏன் பார்க்கவேண்டும் என்பதனையும் . எனக்கு தெரிந்த சில தகவல்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் . ஏனென்றால் நான் Women Issues In India என்றொரு Multimedia செய்து மற்ற கல்லூரி விழாக்களில் திரையிட்டு இருக்கிறேன் . கலந்த கொண்ட அணைத்து இடங்களிலும் முதல் இடத்தை தான் பிடித்தேன் . பெருமை பீற்றி கொள்வதற்காக சொல்ல வில்லை
இந்த தலைப்பை எடுக்க காரணமும் இருந்தது . பதிவு கொஞ்சம் நீளம் என்பதால் பொறுமையாக படிக்கவும் .
Sold (2016)
நேபாள் மலைகிராமத்தில் வசிக்கும் பன்னிரண்டு வயது நிரம்பிய லக்ஷ்மி தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்து வருகிறாள் , அப்படி ஒரு மகிழ்ச்சி பொருந்திய அழகிய முகம் . எப்பொழுதுமே சிரித்துக் கொண்டிருக்கும் இயற்கை அழகியல் பொருந்தியவள் ( தூங்கும் பொது கூடவா உதடு சிரிக்கும் ), ஒருநாள் மழை அதிகம் பெய்திட பயிர்கள் எல்லாம் அதில் நாசம் ஆகியன . ஏற்கனவே ஏழ்மையில் இருக்கும் இவர்கள் இன்னும் ஏழ்மையை அடைய போகிறோம் என்ற யோசனையிலே இருக்கின்றன . தங்கள் ஊர் திருமணம் ஒன்றில் அந்த சிறுமி தன்னுடைய அம்மாவுடன் வருகிறாள் , அவள் உடுத்தி இருக்கும் உடை அவளுக்காகவே செதுக்கப்பட்ட உடை போல அமைந்திருக்கும் .
. அந்த உடையில் நடனமாடி கொண்டிருக்கும் வேலையில் இன்னொருவள் இவளுடன் வந்து நடனம் ஆட ஆரம்பிக்கிறாள் . அவளை கண்டவுடன் நீங்க நகரத்தில் இருந்து வந்தவங்களா ? உங்க கையில் இருக்கும் ப்ரெஸ்லட் அருமையாக இருக்கிறது என்கிறால் , நகரத்தில் இருக்க்கும் எல்லா பெண்களிடம் இது இருக்கும் ன்னு சொல்லிகிறாள் . நகரத்தில் பெண்களுக்கு சுதந்திரமா ? அவங்க விருப்ப படி எல்லாம் வாங்கலாமா ? என கேட்டுக்கொண்டு இருக்கிறாள் . அவளும் அவளுடைய ஆசையை மேலும் தூண்டுகிறாள் . சிறுமியின் தந்தையும் பணத்திற்காக இவளை வேலை பார்க்க நகரத்திற்கு அனுப்புவதாக சொல்லி அனுப்பி வைக்கின்றன .
மலை கிரமாத்தில் மட்டுமே பிறந்தததில் இருந்து வாழ்ந்த அவளுக்கு பார்க்கும் எல்லாமே புதுமையாக தெரிகிறது . அங்கிருந்து அவளை கொல்கத்தாவில் இருக்கும் ரெட் லைட் ஏரியாவிற்கு அழைத்து செல்கிறாள் . ஒன்றுமே தெரியாத மனம் ஆச்சே நம்மை வேலைக்குதான் அழைத்து செல்கிறாள் என்று நம்பி கொண்டே செல்கிறாள் . பிறகு அந்த தொழிலில் அவளை கட்டயாபடுத்தி இறக்கி விடுகிறார்கள் . இதற்க்கு பிறகு என்ன ஆயிற்று . என்பதை எல்லாம் பார்த்து தெரிந்துகொள்ளவும் . கண்களில் மட்டும் அல்ல இதயத்திலும் கண்ணீர் வந்து விட்டது . எல்லாமே நான் சொல்லிட விரும்பவில்லை .
https://newworldcinema.blogspot.in/2017/01/sold-2016.html
திரைப்படத்தை பற்றிய கேள்வி பதில்கள் இயக்குனருடன் : https://www.youtube.com/watch?v=0JVUq7E0Wzo
திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அபிசியல் லிங்க் புத்தகத்தை வாங்க https://www.snapdeal.com/product/sold/684731248823 :sold%20by%20Patricia%20McCormick //
இளகிய மனம் படைத்தவர்கள் தொடர வேண்டாம் .
சமீப காலமாக இந்தியாவில் இது போன்று மனித கடத்தல் அதிகம் காணப்படுகிறது. மனிதர்கள் கடத்தல் செய்யப்படுவதில் தெற்காசியா அளவிலான பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக நேபாள், வங்கதேசத்தில் இருந்து கடத்தி இந்தியாவில் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது.” (SHARED) // “இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பலரும் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு எத்தனை பேர் என்பது துல்லியமாக சொல்ல இன்னும் சில ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஒவ்வாரு ஆண்டும், தெற்காசிய அளவில் சர்வதேச எல்லை பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இவ்வாறு கடத்தப்படுகின்றனர். இதில் குறிப்பாக 75 சதவீதம் பெண்களே.
கடத்தப்பட்டு விற்கப்படுபவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலாளர்களாக்கும் நோக்கில் விற்கப்படுகின்றனர். தெற்காசிய நாடுகளில் கிராமப்புற பகுதியினரே இது போன்ற இலக்குக்கு ஆளாகின்றனர்.” இப்படி நாட்டில் பல பெண்களின் கதையை கேற்கும் பொழுது கண்களிலும் இதயத்திலும் ரத்தக் கண்ணீர் வந்துவிடுகிறது . சிறுவயதில் தன்னுடைய சித்தி வீட்டிற்க்கு சென்ற பெண்ணை காரில் வந்த ஒரு கும்பல் கடத்தி ஒரு விபசச்சார விடுதியில் விற்று , அங்கு பல கயவர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்க பட்டு , உடம்பில் சூடு வாங்க பட்டு , தப்பிக்க போராடினால் பெண் உறுப்பில் மிளகாய் பொடியை கொட்டி கொடூரத்தின் உச்சத்தை அடையும் வரை பலரால் துன்புறுத்த பட்டிருக்கிறாள் . 12 வயதில் கடத்தப்பட்ட இந்த பெண் பன்னிரண்டு வருடத்தில் 600 க்கு மேற்பட்டோரால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு அதிலும் பலமுறை கும்பலாக வந்த காமுக வெறியன்களால் துன்புறுத்பட்டு சிகரெட் சூடு போன்ற கொடுமைகளை சித்திரவதைகளையும் அனுபவித்து .
25 வயதில் இன்னொரு இடத்திற்கு மாற்றப்பட்டாள் . அங்கிருந்து வேறொரு விபச்சார கும்பலில் 58 வயது நிரம்பிய ஒரு கெழட்டு காமுகன் ஒருவனுக்கு திருமணம் ஆக்கி வைக்கபட்டால். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தாள் இரண்டும் பெண் குழந்தைகள் . மூன்று வருடத்தில் அந்த கிழவன் இறக்க மீண்டும் அந்த கெழட்டு காமுகனின் உறவினர்களால் கட்டாய வன்புணர்விற்கு உள்ளாக்கபட்டு இருக்கிறாள் . தனது முப்பதாவது வயதில் அங்கிருந்து தப்பித்த இவளை குழந்தைகளோடு வேறொரு கும்பல் கடத்தி மீண்டும் விபச்சார தொழிலில் இறக்கி இவளை அடிமை வேலைக்காகவும் பயன்படுத்தி கொண்டு இருந்து , ஒன்பது வருடங்கள் போராடி தற்போது அங்கிருந்து இவளும் இவளுடைய இரண்டாவது மகளும் தப்பித்து உள்ளனர் .. . முதல் மகள் சிறுவதிலேயே மது பாட்டிலை சொருகி காமுகர்களால் சாகடிக்க பட்டாள் . இப்படி பல கொடுமையான மனதை உருக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .
கூட்டு பலாத்காரம் , கொடூரர்களின் சித்திரவதை , சிகரெட் சூடு ன்னு கொடுமைக்கு மேல் கொடுமைகளை அனுபவித்த பெண் சொல்லியது “எனது உடல் தீ காயங்களினால் மட்டுமே சுடப்படவில்லை மனதும் சுடப்பட்டு காயமடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்” . ஒரு வாரத்ரிக்கு முன்பு தான் நம் இந்திய நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் , மாவட்டங்கள் பற்றிய தகவல் வந்தது என்னத்த சொல்ல . :(
இதுபோன்ற வந்துள்ளன திரைப்படங்கள் அனைத்துமே . உண்மை கதைகளின் தொகுப்பை மையபடுத்தியவாக இருக்கும் . இதுவும் உண்மை கதைதான் நாவலை மையபடுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் . பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்று இருக்கிறது . நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும் . படம் முழுக்கு நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே இந்தியர்கள் தான் ஆனால் ஆங்கில இயக்குனர் என்பதால் அனைவருமே ஆங்கிலத்திலே பேசிகொள்வார்கள் . இணையத்தில் தேடி நாவலை கொஞ்சம் படித்தேன் . முழு புத்தகமும் வாங்க தான் முடியும் . நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் . பார்த்துவிட்டு வாருங்கள் திரைப்படத்தை பற்றி நிறைய பேசலாம் .
https://newworldcinema.blogspot.in/2017/01/sold-2016.html
Sold (2016) ஒரு சிறுமியின் கண்ணீர் கதை
சமீபத்தில் இணையத்தில் பெண்களை மையபடுத்திய ஓவியம் ஒன்று பகிரபட்டது அந்த ஓவியம் சொல்லும் கருத்துக்கள் பலவிதமானவை . "பெண் கடவுளை" வணங்கும...
03/12/2016
#6
I Saw the Devil (2010) ரத்தமாய் தெறிக்கும் யுத்தம்
இரத்தமும் வெறியுமாய் பழிவாங்கும் எண்ணம் கொண்ட,
படத்தை பற்றி பார்பதற்க்கு முன்னால் இளகிய மனம் படைத்தவரும் , ஏற்றுகொள்ளும் மன வலிமை அற்றவர்களும் விலகி கொள்ளலாம் , இல்லை நான் எதையும் தாங்கும் இதயம் என்றால் தொடரலாம்
http://newworldcinema.blogspot.com/…/…/i-saw-devil-2010.html
https://newworldcinema.blogspot.in/2016/12/i-saw-devil-2010.html
New Cinemas!!!
பார்க்கவேண்டிய திரைப்படங்களையும். மேலும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை பற்றியும் பகிர்வதே என் நோக்கம். இது விமர்சனமோ ரீவீவ் ஓ அல்ல ஒரு அப்படி உங்களுக்கு தென்பட்டால் அது மாயையே . படம் பார்க்க வைப்பதற்க்கான ஒரு எதிர்பார்ப்பினை என்னால் உருவாக்கிட முடியும்.