Pachaiyappa's Study Circle
This page aims to help spread right knowledge among Students
16/09/2025
15/09/2025
15.09.2025
இன்று பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாள்.
பச்சையப்பன் கல்லூரி பெருமை கொள்ளும் ஓர் நாள்.
இப்படி ஒரு தவப்புதல்வனை தமிழ் நாட்டிற்கு தந்து தமிழ் நாட்டை காத்த பெருமை இக்கல்லூரிக்கு உண்டாகையால், பச்சையப்பன் கல்லூரி பெருமை கொள்கிறது.
அக்கல்லூரியில் பயிலும் அண்ணா வின் தம்பிகளோ, தாங்களும் அறிவுகளஞ்சியமாக திகழவேண்டுமென பச்சையப்பன் வாசகர் வட்டம் நடத்தி அதில் அண்ணாவின் நினைவாக 'மொழிப்போர் விழா 'நடத்தி சிறப்பித்ததோர் வரலாறு படைத்தவர்களாயினர்.
தடை ' என்பது அண்ணாவின் தம்பிகளான பச்சையப்பன் மாணவர்களுக்கு ஒன்றும் புதியது அல்ல.
இதற்கு வரலாறே சான்று!!
*அரசால் தடைசெய்யப்பட்ட அண்ணாவின் நூல்கள் - 4
இன்னும் கூட பட்டியலிடலாம்..
*அண்ணா திரைக்கதை-வசனம் எழுதிய படங்கள்-10
*அண்ணா பங்களித்த பத்திரிக்கைகள் எண்ணிக்கை-11
*அண்ணா எழுதி அரங்கேற்றப்பட்ட நாடகங்கள்-13
*அண்ணாவின் புனைப் பெயர்கள்-22
*அண்ணா எழுதிய குறுநாவல்கள்-24
*அண்ணா எழுதிய கவிதைகள்-77
*அண்ணா எழுதிய சிறுகதைகள்-113
*அண்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள்-129
*தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்-316
*அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரைகள்-400
*அண்ணா எழுதிய கட்டுரைகள் மூவாயிரத்திற்கும் அதிகம். அவரது குடும்பத்தாரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அண்ணாவின் கட்டுரைகள்-1476
*அண்ணா நிகழ்த்திய தமிழ்ச் சொற்பொழிவுகள்-12,775
இத்தனை விசயங்களைச் செய்து, அதை தமிழ்ச்சமூகத்திற்கு கடத்திவிட்டு தான்
அண்ணா ஆட்சியில் அமர்ந்தார்.
67 என்பது அறிவு அரியணை ஏறிய ஆண்டு.
அண்ணா என்பது பெயரல்ல அவர் தம்பிகளின்
தம்பிகளின் தற்சார்புக்குறியீடு.
தலை தாழா தமிழ்நாட்டின்
தன்மானக்குறியீடு.
Information source:
Surya Xavier
30/08/2025
🌕 🔴🌕
The Blood Moon Is Coming – September 7, 2025
🌕 🔴🌕
Get ready for one of the most breathtaking sky shows of the decade! On the night of September 7, 2025, the Moon will slip into Earth’s shadow, creating a stunning Total Lunar Eclipse.
As our planet blocks direct sunlight, Earth’s atmosphere bends and scatters the light -filtering out blues and letting only fiery reds and oranges reach the lunar surface. That’s why the Moon will glow like a burning ember, earning its legendary name: the “Blood Moon.” 🔴
👉 Mark your calendars, gather your friends and family, and step outside to watch the sky transform into a canvas of cosmic beauty. This is a night you’ll never forget.
(No Telescope Needed )
"போரை நிறுத்துங்கள்...எங்களிடம் மிச்சம் எதுவுமில்லை" - ஐநா சபையில் கதறி அழுத பாலத்தீன பிரதிநிதி!
A Raja
04/06/2025
கலைஞரின் பிறந்த நாள் என்றதுமே எங்களின் நினைவுக்கு வருவதெல்லாம் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட நாங்கள் பட்ட பாடு தான். இரண்டு ஆண்டுகளாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி முடித்து விட வேண்டும் என எவ்வளவோ பிரயத்தனங்களை செய்தும் அதை நடத்தவே விடவில்லை கல்லூரி நிர்வாகம்.
கலைஞரின் புத்தகங்களின் மீதான விவாதமாக இருந்தாலும் சரி அல்லது அவரின் கருத்துருவாக்கங்களை விவாதிப்பதாக இருந்தாலும் சரி அதனை நிறைவேற்ற விட்டதில்லை தங்களை கல்வியாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் கார்ப்பரேட் நீதிவான்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு எனும் அடையாளத்திற்கும் பெயர் போன அந்த மாமனிதரின் கருத்துருக்களை கருத்துக்களை தான் எங்களை விவாதிக்க விட்டதில்லை. எங்களை படிக்க அனுமதித்ததில்லை என்கிறோம் நாங்கள். அவருக்கான ஒரு மரியாதையை செய்ய இரண்டு வருடங்களாக முயற்சி செய்து அவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களாகிய நாங்கள் நடத்தி முடித்தோம்.. அதற்காக பலர் தண்டிக்கப்பட்டும் இருக்கிறோம். வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கலைஞருக்காக கலைஞரின் எழுத்துக்களுக்கும் படைப்புகளுக்கும் ஆக ஒரு விழா எடுக்க கூடாது என்றால்... இவையெல்லாம் எப்படி தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் புரியாத புதிராகவே உள்ளது.
M. K. Stalin Udhayanidhi Stalin A Raja Govi Chezhiaan
வேடனை கொண்டாடுவோம்..
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தனது புரட்சிகர ராப் பாடல்கள் மூலம் குரல் கொடுத்து வரும் ராப் சிங்கர் வேடனுக்காக குரல் கொடுப்போம்.
#வேடன்
Dr.B.R.Ambedkar
#அம்பேத்கர்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
E. V. R. Periyar Road
Chennai
600030