விகடன் தலையங்கத்தில் இருந்து...
`சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அராஜகப் போக்கில் கைப்பற்றிய அ.தி.மு.க அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியிருக்கிறது.'
- எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 2018 ஆகஸ்ட் 21 அன்று மு.க.ஸ்டாலின் சொன்னது இது.
இன்று அதே அராஜகத்தை அவர் அரசு செய்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டைக்கு தங்கள் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து அமைதிவழியில் காத்திருப்புப் போராட்டம் நடத்திய விவசாயிகள் 20 பேரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தது போலீஸ். பாலியல் தொழில் செய்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்களைப் போல அவர்களில் ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியது... திருச்சி, மதுரை, கோவை, வேலூர், கடலூர், பாளையங்கோட்டை என்று பல சிறைகளில் அவர்களைப் பிரித்துக் கொண்டுபோய் அடைத்தது எல்லாமே பிரிட்டிஷ் ஆட்சிக்காலக் கொடூரங்களின் எச்சம்.
எதிர்ப்பு எழுந்ததும், ஆறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டக் கைதை அரசு ரத்து செய்தது. போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யவில்லை. ‘வெளியூரிலிருந்து வந்து போராடினார். சேலம்-சென்னை எட்டுவழிச்சாலைக்கு எதிராகவும் போராடினார்' என்று இதற்குத் தமிழக அரசு காரணம் சொல்கிறது. இந்தக் காரணங்களுக்காகக் கைது செய்வது என்றால், தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அவரது அமைச்சரவையில் இருக்கும் பல அமைச்சர்களும் அல்லவா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்!
‘தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும்?' என்று ஆணவத்துடன் கேள்வி கேட்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு. தமிழகம் அளவுக்கு இந்தியாவில் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலம் கிடையாது. தமிழகத்தில் ஏற்கெனவே 28 சிப்காட் தொழிற்பேட்டைகள் 38,538 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏழு இடங்களில் 6,035 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. இவைதவிர இன்னும் 29 தொழிற்பேட்டைகளை அமைக்கும் முயற்சிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இதில்தான் செய்யாறு, ஓசூர், கோவை பகுதிகளில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
யாரும் தொழிற்சாலைகள் வேண்டாம் என்று சொல்வதில்லை. அதே நேரத்தில் விளைநிலங்களைப் பாதுகாப்பதும் அரசின் கடமைதான். விவசாயத்தை அழித்துத் தொழில்துறையோ, தொழில் வளர்ச்சியை மறுத்து விவசாயமோ வளரமுடியாது. இரண்டும் வளர்வதே நிலையான, நீடித்த வளர்ச்சியாக இருக்க முடியும்.
பழைய சிப்காட் தொழிற்பேட்டைகளிலேயே மணப்பாறை, திண்டிவனம் இரண்டிலும் இதுவரை எந்தத் தொழிற்சாலையும் வரவில்லை. எப்படி ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கல்கூட இன்னும் வைக்கவில்லை' என்று தி.மு.க பிரசாரம் செய்ததோ, அப்படித்தான் ஒரு செங்கல்கூட வைக்காமல் இந்தத் தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. மணலூர், நெமிலி, எறையூர் என்று பல இடங்கள் இப்படி உள்ளன. இங்கெல்லாம் தொழிற்சாலைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல், புதிது புதிதாக பல இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் கேள்வி.
எளிய மக்களின் எதிர்ப்பை வன்முறையால் அடக்கி, அவர்களின் நிலங்களை சர்வாதிகாரமாகப் பிடுங்குவது ஒரு நல்லரசின் வேலையில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்துகொள்வாரா?
- தலையங்கம்
- ஆனந்த விகடன் 23 நவம்பர் 2023
Vaaimaiyin Kural
I, Suresh Jegan created Vaaimaiyin Kural with the aim of sharing fair opinion on current issues and creating quality content on politics, science and society.
My priority is providing thought-provoking content.
06/06/2023
இதோடு முடியுமா ? என்ன உத்தரவாதம் ? | Odissa Train Accident | Coromandel Express | Indian Railway train incident India’s worst ever train accident. How did it happen? What caused it? At a time when sophisticated technology is ruling every part of ...
03/06/2023
பெண்களை மதிக்காத நாட்டில் 1000 கோடியில் நாடாளுமன்றம் , செங்கோல் எல்லாம் எதுக்கு? | wrestlers protest Two FIRs have been filed against Brij Bhushan, President of Wrestling Federation of India. What are the charges in the FIR? No action taken yet. Why no acti...
"THE KERALA STORY " படத்தில் என்ன பிரச்சனை ? ஏன் இந்தியா முழுவதும் இதை எதிர்க்கிறார்கள் ?
மே தினம் வரலாறு என்ன ? ஏன் மறக்ககூடாது ?
திருந்துமா தமிழ் சினிமா ? நிஜ போராளிகள் Vs போலி ஹீரோக்கள்
காணாமல் போகும் தமிழக மலைகள் !! பூகம்ப அச்சத்தில் கன்னியாகுமரி ? விரிவான அலசல்
17/04/2023
ஏன் திமுக ஊழலை யாருமே கண்டுக்கல ? | DMK files | Annamalai | DMK | BJP | Stalin | Modi This Video Explains about the recent allegations made by TN BJP leader annamalai. He allegedly told that the DMK leaders have made assets in the immoral ways...
10/04/2023
Full Video Link : https://youtube.com/shorts/MBrWI0GjaFo
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
600084
23/04/2023