06/04/2023
தமிழ்ல 247 எழுத்தும் ஓரெழுத்தொரு மொழி (இது நன்னூலாருக்கே தெரியாது!) 😂😂
எல்லா எழுத்துக்கும் ஆயிரமாயிரம் பொருளுண்டு அவற்றைத் தேவைக்கேற்ப கழிவறையில் அமர்ந்து கண்டுபிடிப்போம் 😂😂
Nottamology is the art and science of establishing the Tamil roots of any word in any language. Not
06/04/2023
தமிழ்ல 247 எழுத்தும் ஓரெழுத்தொரு மொழி (இது நன்னூலாருக்கே தெரியாது!) 😂😂
எல்லா எழுத்துக்கும் ஆயிரமாயிரம் பொருளுண்டு அவற்றைத் தேவைக்கேற்ப கழிவறையில் அமர்ந்து கண்டுபிடிப்போம் 😂😂
28/06/2021
இன்றைய ஆராய்ச்சி:
அபாகசு (Abacus) என்பது தமிழ்ச் சொல்லா?
பண்டைய தமிழகம் ஆணாதிக்கச் சமூகமாக இருந்தது ('இப்ப மட்டும் என்னவாம்'னு கேக்காதீங்க!)
ஆண்களே வணிகம் செய்து பணம் ஈட்டினர்.
அவ்வாறு ஒரு வீட்டின் தந்தை ஈட்டிய பணத்தை மகன் கணக்கு பார்ப்பான். அப்போது அவர்கள் பயன்படுத்திய கணக்கிடும் கருவிதான் 'அபாகசு'.
அப்பாவின் காசைக் கணக்கு பார்க்க உதவிய கருவியை 'அப்பாகாசு' என்று அழைத்தனர். அதுதான் இன்று 'அபாகசு' ஆனது 😀🙏
😂
22/06/2021
வியாழக் கோளில் தமிழ் கண்டுபிடிப்பு... நாசா பரபரப்பு... ஃ
22/06/2021
தூய தமிழர் தளபதியாரின் வரவிருக்கும் படத்தின் பெயர் (Beast) தமிழா என்று சிலர் வினவுகின்றனர். தன்னைச் சந்தேகப்பட்டுக்கொள்வதிலேயே தமிழனின் வாழ்நாள் கழிந்துவிடுகிறது! இப்படித்தான் ‘மாஸ்டர்’ (Master) தமிழா என்றார்கள்!
‘ஆசிரியர்’ என்பது ஆசு+இரியர்; மாணவனின் மனத்திலும் அறிவிலும் உள்ள குற்றத்தை (ஆசு) போக்குபவர். அவ்வாறே ‘மாசுடர்’ என்பதும். மாசு+டர்; மனத்தில் உள்ள மாசை (குற்றத்தை) டரியலாக்குபவர் (இந்த ‘டரியல்’ என்பது இன்று வட்டார வழக்குச் சொல்லாய் உள்ளது!)
சரி, பீஸ்ட்டிற்கு வருவோம்... ‘விலங்கு’ என்ற தமிழ்ச்சொல் ‘குறுக்கே’ என்ற பொருளை உடையது. மனிதர் நேராக நிற்பவர், நடப்பவர்; விலங்குகள் குறுக்காக (நான்குகால்களில்) நடப்பவை. அவ்வாறே, வேட்டை விலங்குகள் எங்கு சென்றாலும் தமது சிறுநீற்றை அந்த இடத்தில் பீய்ச்சி அடித்துத் தமது ஆளுமையை அவ்விடத்தில் நிலைநாட்டிக்கொள்ளும். இவ்வாறு செய்வதால் கொடிய /வேட்டை விலங்குகளைப் பண்டைய தமிழர் ‘பீய்த்து’ என்றழைத்தனர். இது நாம் ஆப்பரிக்க கண்டத்தில் இருந்த காலத்தில் (அது இருக்கும் ஒரு இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்!) அங்கிருந்து ஒரு கிளை நாவலந்தீவை நோக்கியும், மற்றொரு கிளை ஐரோப்பாவை நோக்கியும் சென்றனர். அந்த ஐரோப்பிய கிளையில் இந்தச் சொல் இருந்துள்ளது. அதுவே இன்று ஆங்கிலத்தில் ‘பீஸ்ட்டு’ என்று மருவி வழங்குகிறது. ஆக, பீஸ்ட்டும் தமிழ்தான்!
is the art and science of establishing the Tamil roots of any word in any language.
Nottamology is based on the premise that Tamil is the most ancient language of the world spoken since the Mesozoic era by certain species of highly developed velociraprors (even this very name comes from the Tamil original 'வெள்-நாசி-இரப்பத்தர்' indicating its characteristic white nasal cavity that allowed them to speak!) 😂😂