Tamil தகவல்கள்

Tamil தகவல்கள்

Share

தமிழ் தகவல்கள் மற்றும் செய்திகள்

26/03/2026

கையில வச்சா மட்டும்தான் சிவக்குமா..

உதட்டையும் சிவப்பாக்க அந்த
ஆண்ட்டி எடுத்த முயற்சிதான் இது!

இதலாம் பார்த்து நீங்களும் கண்ட
இடத்துல தடவிராதீங்க.. 🤝🤣🤸‍♂️

25/03/2026

"நாங்க பிரிட்ஜ் கொடுப்போம்

நாங்க அதுக்குள்ள வைக்கிற பழம், சாப்பாடு எல்லாம் கொடுப்போம்

நாங்க இலவச சலவை பொடி கொடுப்போம்

நாங்க இலவசமா சலவை எந்திரமே கொடுப்போம்

நாங்க இலவச காய்கறி தருவோம்

நாங்க அதை நறுக்கியேதருவோம்

நீங்க கடைகண்ணிக்கே போக வேணாம் நாங்க இருக்கோம்

கடைக்குள்ளே உங்களுக்கு வீடு கட்டி தருவோம்

நாங்க வீட்டுக்கு வீடு சமையலுக்கு ஆட்கள நியமிப்போம்

நாங்க பாத்திரம் கழுவ ஆட்களை நியமிப்போம்

நாங்க உங்க வீட்டையே கழுவி சுத்தமாக்கி தருவோம்

நாங்க ஆறுமாசத்துக்கு ஒருதடவை பெயின்ட் பண்ணி தருவோம்

நாங்க இலவசமா பைக் தருவோம்

நாங்க இலவசமா பெட்ரோலும் பராமரிப்பும் தருவோம்

நாங்க உங்கள வருஷம் ஒரு தடவ டூர் அனுப்பி வைப்போம்

நாங்க வேலை வெட்டில் இல்லாதவங்கள டூர்லே வைப்போம்

நாங்க பெண்களுக்கு மாசம் ஒருவாட்டி பியூட்டி பார்லர் அனுப்புவோம்

நாங்க அரசுசார்புல பியூட்டி பார்லரே வச்சி தருவோம்

நாங்க இலவசமா பூ தருவோம்

நாங்க இலவசமா ஜடை பின்னி விடுவோம்

வருஷம் 3 இலவச பட்டு

மாசம் மாசம் சுடிதார் செட்டு

பஸ்ஸுல உங்க எல்லாருக்கும் இலவசம்

பிளைட்லே டிக்கெட் இலவசம், ஈரானுக்கு கூட போகலாம்

வேலை இல்லாதவனுக்கு கையில காசு வாயில சோறு

சோறு வேணுமா குவார்ட்டர் பாட்டிலும் பிரியாணியும் வேணுமா?

பெண்கள் வளர்க்கும் ஆடு மாடு நாய்குட்டிக்கெல்லாம் இன்சூரன்ஸ்

பெண்களே உங்கள் கணவருக்கெல்லாம் இலவச இன்சூரன்ஸ்

பெண்கள் மகப்பேறுக்கு ஒரு வருஷம் லீவ்

பேரன் பேத்தி கல்யாணம் வரைக்கும் மொத்தமா லீவ்

சாகுற வரைக்கும் காசு கொட்டுவோம்

செத்த பின்னாடியும் சமாதில கொட்டுவோம்

உங்களுக்கு செருப்பா இருப்போம்

உங்கள் செருப்பே எங்க தோள் மேலதான் இருக்கும்

இலவச கரண்ட் தருவோம்

இலவசமா மின் உற்பத்தி காத்தாடி சோலார்னு தருவோம், ஏன் அணுவுலையே தருவோம்

இலவசமா பால் தருவோம்

இலவசமா பசுமாடு தருவோம்

இலவசமா ஆளுக்கொரு நாடே தருவோம்"

24/03/2026

புது புது பஞ்சாயத்தா? 20 விசில் விட்டும் கறி வேகவில்லை அவர் மட்டும் என்ன பண்ணுவாரு!!

24/03/2026

கோவிட் டைம் ல ப்ரண்ட் ஒருத்தன் 10ஏ நாள் ல திருப்பி தரேன் அவசரமா வேணும்னு 5000 கேட்டான்.. நானும் கொடுத்தேன்..

10, 20 ஆச்சு.. 20, 30 ஆச்சு.. அப்பறம் 1 மாசம், 2 மாசம் னு 3 மாசம் கேட்டு பாத்தேன்.. பதில் இல்ல. போனும் எடுக்கல.. அப்பறம் மறந்தே போய்ட்டேன்.. அட கல்யாணத்துக்கு கூப்ட போன் பண்ணப்ப கூட எடுக்கல.. ஆள் இருக்கானா இல்ல பாரின் எதும் போய்ட்டானோ னு விட்டேன்..

கட் பண்ணா, 2026 ல ரீசன்டா ஒரு க்ரூப் போட்டோல அவன பாத்தேன்.. போட்டோ ல இருந்த இன்னொருத்தனுக்கு கால் பண்ணி கேட்டேன்.. என்ன டா னு..

அவன் தம்பி பையனுக்கு காது குத்து பங்சன் னு.. அவன் தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சா னு ஷாக் ஆனா.. அட அவனுக்கே கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கு.. அப்பபறம் வீடு கட்டி பங்சன் லா வச்சானே உனக்கு தெரியாதா னு கேட்டான்..

இதுல மோஸ்ட் பியூட்டிபுள் விசயம் என்ன னா.. அந்த க்ரூப் போட்டோல இருந்த 2,3 பேர் அவன் கேட்டப்ப கைல காசு இல்லனு சொன்னவனுக.. அவனுக எல்லாம் டச் ல இருக்கானுக.. காசு கொடுத்த நான் தான் BAD BOY ஆகிட்டேன்.,

Once Wise Man Said " பிறருக்கு உதவாதே.. அது உபத்திரவத்தில் முடியும்" னு.

18/03/2026

நினைத்துப் பார்க்கவே நெஞ்சை பதறவைக்கும் ஒரு சம்பவம் எர்ணாகுளம் வடக்கு இரயில் நிலையத்தில் நடந்துள்ளது. அங்குள்ள நடைமேடையில் ஒரு தம்பதியினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவர்களின் அருகே இருந்த சிறுமியை ஒரு நபர் குறிவைத்துள்ளார். அந்தச் சிறுமியை “பியூட்டி” (Beauty) என்று பலமுறை அழைத்து, ஆசைகாட்டி அங்கிருந்து ரகசியமாக அழைத்துச் செல்ல அவர் முயன்றுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த விழிப்புணர்வு மிக்க பயணி ஒருவர் இந்த விசித்திரமான நடவடிக்கையைக் கவனித்துள்ளார். அந்த நபர் சிறுமியை நைசாகப் பேசி கடத்த முயல்வதை தனது அலைபேசியில் ரகசியமாகப் படம்பிடித்ததோடு மட்டுமல்லாமல், சற்றும் தாமதிக்காமல் இரயில்வே காவல்துறையினரிடம் (RPF) அவரைப் பிடித்து ஒப்படைத்துள்ளார். ஒரு குடிமகனின் இந்த துரிதமான செயல், ஒரு மாபெரும் அசம்பாவிதத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
“யாராவது பார்த்தால் பார்த்துக் கொள்ளட்டும்” என்று ஒதுங்கிப் போகாமல், அந்த நபர் காட்டிய விழிப்புணர்வு ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றியுள்ளது. பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில் நிகழ்ந்த இந்த கடத்தல் முயற்சி, பொது இடங்களில் குழந்தைகளுடன் பயணிக்கும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அந்த ஒரு விழிப்புணர்வு மிக்க நபரால் இன்று ஒரு குடும்பத்தின் நிம்மதி காக்கப்பட்டுள்ளது.

Source credit Tamil Yugam

17/03/2026

"ஹலோ! ப்ளீஸ்..! கைய எடுங்க அந்த இடத்தில் இருந்து-" கெஞ்சிய மாணவி; கேட்காமல் ஓடும் பேருந்தில் தூங்குவது போல பா*லியல் தொ*ல்லை கொடுத்த காவலர்..!

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறாா். கல்லூரியில் தற்போது செமஸ்டா் தோ்வுகள் நடைபெற்று வருவதால் தோ்வில் கலந்து கொள்ள கல்லூரி மாணவி கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசுப் பேருந்தில் கோவைக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.

பேருந்தில் மூன்று போ் அமரக்கூடிய இருக்கையில் மாணவி அமா்ந்திருந்தாா். மேலும் தோ்வு எழுத தேவையான விஷயங்களை திட்டமிட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது கோவை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஒருவா், மாணவி அமா்ந்திருந்த இருக்கையின் அருகே அமா்ந்தாா். பின்னா் அவா் மாணவியை ஒட்டி அமா்ந்து கொண்டாா். ஒரு கட்டத்தில் தூங்கி விழுவதுபோல அந்த மாணவி மீது சாய்ந்துள்ளாா்.

தூக்கத்தில் தெரியாமல் மேலே சாய்ந்திருக்கலாம் என்று கருதி மாணவி அமைதியாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் மாணவிக்கு பா*லியல் தொ*ல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அ*திர்ச்சி அடைந்த மாணவி, என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்துள்ளார்.

ஆனால், போலீஸ்காரரின் தொல்லை எல்லை மீறியதால், பஸ் ஊட்டி பஸ் நிலையம் வந்ததும் ஆவேசமடைந்த கல்லூரி மாணவி தனது செருப்பை கழற்றி போலீஸ்காரருக்கு அடி கொடுத்து வெளுத்து வாங்கினார்.

அங்கு பொது மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த போலீஸ்காரரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே மாணவியின் பெற்றோர் போலீசாரை தொடர்பு கொண்டு வழக்குப்பதிவு செய்தால் கல்லூரி மாணவி படிப்பு பா*திக்கப்படலாம் என்றும், சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நினைத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என கூறி ஒதுங்கி விட்டனர்.

வேலியே பயிரை மேயலாமா?
இது பற்றிய உங்க கருத்து என்ன?

17/03/2026

மகனைக் கண்டதும் பாசத்தில் கண்ணீர் மல்க அழுத தாய்!!

16/03/2026

வாழ்க்கையே ஒரே நாளில் மாறியது!! நாள் ஒன்றுக்கு ₹300 ஈட்டும் ஒரு தொழிலாளி, ₹90 லட்சம் மதிப்புள்ள ஒரு வைரத்தைக் கண்டெடுத்தார்.

18/02/2026

"ஒற்றுமையே பலம்! ஒரு உயிர் காப்பற்றப்படும் போது கிடைக்கும் அந்த மகிழ்ச்சியே தனி தான். நிஜமான ஹீரோக்கள் இவர்களே! 🙌🌿"
#யானை #மனிதநேயம் #விலங்குகள் #தமிழ்

05/02/2026

Genius Can Only Answer..

04/02/2026

Who can Answer?

22/01/2026

#தெனாலிராமன் #புத்திசாலித்தனம் #கதை #வயல்பிரச்சனை #நீதியானதீர்வு

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


தமிழ்நாடு
Chennai