24/06/2021
ஜமாபந்தி என்றால் என்ன?
ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறை.
இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்
வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் கிராம குறைகளை தீர்க்க மனு தரலாம்
எதற்க்காக மனு அளிக்கலாம்?
பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம்.
குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.
இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.
வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்
இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ஏன்?
கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் நேரிடையாக மனுக்கள் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை ஜூன் 29 ம்தேதி முதல் ஜூலை 15 ம்தேதி வரை இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது நீங்கள் ஆன்லைன் மூலம் மனு அளிக்கலாம்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
https://gdp.tn.gov.in/jamabandhi
முதலில் மேல் உள்ள லின்ங் கிளிக் செய்து கொள்ளுங்கள்
அடுத்து உங்கள் மொபைல் எண் பதிவு செய்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி போட்டு உள் நுழையவும்
அடுத்ததாக உங்கள் கோரிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுத்துறை, உங்கள் மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அடுத்து உங்கள் கோரிக்கையை சரிபார்த்துவிட்டு அனைத்தும் சரியாக இருந்தால் சப்மிட் கொடுங்கள்.
அடுத்து உங்கள் போனுக்கு உங்கள் கோரிக்கை எண் வரும். அந்த எண்னை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்று சரிபார்த்து கொள்ளலாம்.
Petition Processing Portal (PPP), Government of Tamil Nadu
Petition Processing Portal (e-District GDP) is an integral part of the district administration and the related departments in their day-to-day office work. It facilitates the public to submit the petitions of their grievance as well as to view the status of the petitions at Collectorate/RDO Office/T...
23/06/2021
#தனியார்_மற்றும்_சுயநிதி_பள்ளிகளில்_இலவசமாக_படிக்கலாம்!!!
#விண்ணப்பிக்க_வேண்டிய_நாள்:- 05/07/2021 to 03/08/2021
்றும்_கட்டாயக்_கல்வி_உரிமைச்சட்டம் !!
#விரிவான_தகவல்கள்
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன?
கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாகும். கல்வியாளர்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.
இலவசமாக கல்வி வழங்கும் கல்வி நிலையத்திற்கு மாணவர்களின் கல்விக்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும். சிறுபான்மையினர் (Minority) பள்ளிகளுக்கு மட்டும் இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2011-ல் தொடங்கி கடந்த 10 ஆண்டு காலமாக இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டிலிருந்தது இணையத்தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக் வேண்டும் என்ற நிலை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் – மே மாதங்களில் விண்ணப்பித்து ஜுன் மாதம் அட்மிஷன் நடைபெறுவது வழக்கம். அனால் கொரானா தொற்று நடவடிக்கையின் காரணமாக பள்ளி திறக்காத நிலையில் RTE அட்மிஷனும் நடைபெறாமல் இருந்தது.
தற்போது அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. 2021 -2022 ஆண்டுக்கான இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை 05/07/2021 முதல் 03/08/2021 வரையிலும் நடைபெற இருக்கிறது.
தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை கொண்ட செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அனைத்து மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் எளிமையான கேள்விப் பதில் அடிப்படையில் இதை தொகுத்துள்ளோம்.
===================================
#தனியார்_பள்ளிகளில்_கல்விக்கட்டணம்_இல்லாமல்_நமது_குழந்தைகளை_இலவசமாக_படிக்க_வைக்க_முடியுமா?
அரசுப் பள்ளியில் எப்படி இலவச கல்வி பயில்கிறோமோ அதுபோல தனியார் சுயநிதி கல்வி நிலையங்கள் ( மெட்ரிகுலேஷன்) பள்ளியிலும் இலவச கல்வி பயில முடியும்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
#ஆம். பள்ளிக்கல்வி –குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.01.2011 நாளிட்ட அரசாணை (நிலை) எண்:9 ன் படியும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது. இந்த சட்டம் #ஆறு_வயது முதல் ுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் ுதல் தொடர்ந்து #8ஆம்_வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்கலாம்.
===================================
#யார்_பயன்_பெறலாம்?
இந்த திட்டத்தின்படி இரண்டு வகையினர் தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயிலலாம்.
1. #நலிவுற்ற_பிரிவினர்: (Weaker Section)
பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்கும் எல்லா சமுதாயக் குழந்தைகளும் பலன் பெறலாம் ( வருமானச் சான்று அவசியம் தேவை)
2. #வாய்ப்புகள்_மறுக்கப்பட்ட_பிரிவினர்( Disadvandaged group)
SC, SCA, ST, BC, BCM, MBC- சமுதாயத்தை சார்ந்தவர்கள். ( சாதிச் சான்று அவசியம் தேவை) ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வியால் (எய்ட்ஸ் நோயாளிகள்) பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கைகளின் (இருபாலினத்தவர்) குழந்தைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
===================================
#எந்த_தனியார்_பள்ளிகளிலும்_அட்மிஷன்_கிடைக்கும்?
தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள பள்ளியிலும் சேர முடியாது ஆனால் ஒவ்வொருவரும் தமது வசிப்பிடத்திற்கு அருகாமையில் அதாவது நாம் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் ஒன்று முதல் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் தனியார் பள்ளிகளில் நமது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்.
குழந்தைகள் வசிக்கும் இல்லத்தில் இருந்து சுமார் 1 கிமீ முதல் 3 கிமீ வரை உள்ள பள்ளிகளின் பெயர்கள் இணையத்தளத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த பள்ளிகளின் பெயரை மட்டுமே இணையத்தள விண்ணப்பத்தில் தேர்வு செய்யலாம். ஒன்று முதல் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் தனியார் பள்ளிகளில் அதிக பட்சமாக ஐந்து பள்ளிகளை ஒரு மாணவன் தேர்வு செய்யலாம்.
===================================
#எந்த_வகுப்பில்_அட்மிஷன்_கிடைக்கும்?
மக்கள் பலர் நினைப்பது போல் எந்த வகுப்பிலும் எப்போது வேண்டுமானாலும் இலவச அட்மிஷன் பெற முடியாது. தங்கள் குழந்தைகளை இச்சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் நுழைவு வகுப்பில் ( Entry level Class) இருந்தே சேர்க்க முடியும் .
நுழைவு வகுப்பு (Entry level Class) என்பது பள்ளிக்கு பள்ளி மாறுபடும் உதாரணமாக LKG முதல் வகுப்புகள் ஆரம்பமாகும், பள்ளிகளில் LKG தான் Entry level Class இன்னும் சில பள்ளிகளில் முதல் வகுப்பில் ஆரம்பமாகும், அந்த பள்ளிகளில் First standard தான் Entry level Class இன்னும் ஒரு சில பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து ஆரம்பமாகும் அந்த பள்ளிகளில் Sixth standard தான் Entry level Class. (இது மிகக் குறைவான பள்ளிகளே உள்ளன)
நுழைவு வகுப்பில் (Entry level) வகுப்பில் சேர்ந்த பிறகு இடையில் பள்ளிகளை மாற்றம் செய்ய முடியாது.
நுழைவு வகுப்பு (Entry level) முதல் 8 ஆம் வகுப்பு வரை அதே பள்ளியிலேயே படிக்க வேண்டும். எனவே மாணவர்கள் பள்ளிகளை தேர்வு செய்யும் போது 8-ம் வகுப்பு வரை பயிலும் வாய்ப்புள்ள பள்ளிகளை தேர்வு செய்வது நல்லது.
===================================
#எல்லா_கட்டணமும் #இலவசமாக_வழங்கப்படுமா?
”அனைத்து கட்டணத்தையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளிக்கு வழங்கும். எனவே குழந்தையின் பெற்றோர்கள் எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை” என்ற எண்ணம் பரவாலாக எல்லா பெற்றோர்களிடமும் உள்ளது. ஆனால் அரசு R T E. ன் கீழ் இலவச கல்விக்கு அட்மிஷன் வழங்கும் சம்பந்தப்பபட்ட பள்ளிக்கு கல்வி நிர்ணயக்குழுக் நிர்ணயிக்கும் கட்டணத்தை அதாவது டியூசன் பீஸ் – கல்வி கட்டணம் மட்டுமே அரசு திரும்ப வழங்குவதால் பள்ளிகள் ஏனைய கட்டணங்களை அதாவது புத்தகம் – நோட் , சீருடை , வேன் போன்றவற்றிற்கு கட்ணம் வசூலித்துக் கொள்ளும் அதை அரசும் தடை செய்யவில்லை.
===================================
#விண்ணப்பித்த_அனைவருக்கும்_இடம்_கிடைக்குமா?
R T E. ன் கீழ் இலவச கல்விக்கு அட்மிஷன் ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்பில் (Entry level) மட்டுமே வழங்கப்படும் என்பதை முன்னர் பார்த்தோம் . ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும் அட்மிஷன் வழங்கும் போது மாணவர்களில் 25% மாணவர்களுக்கு மட்டுமே R T E. ன் கீழ் இலவச கல்விக்கு அட்மிஷன் வழங்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியும் முன்னரே அரசுக்கு நுழைவு வகுப்பில் (Entry level) எத்தனை குழந்தைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளனர் என்பதை தெரிக்க வேண்டும்.
ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருக்கலாம். ஒரு பள்ளியில் அதிக பட்சமாக 5 செக்சன் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். பெற்றோர்கள் விண்ணப்பித்த பள்ளிகளின் எத்தனை இடங்கள் இந்த சட்டத்தின் கீழ் உள்ளது என்பது தொடர்பான விவரங்களை www.dge.tn.gov.in , tnmatricschools.com என்ற இணையதளத்தில் அறியலாம்.
ஒரு பள்ளியில் ஒரு செக்சன் அதாவது 30 மாணவர்களை மட்டுமே சேர்க்கை செய்வதாக அரசுக்கு தெரிவித்திருந்தால் அதில் 25% அதாவது 8 மாணவர்களுக்கு R T E. ன் கீழ் இலவச கல்விக்கு அட்மிஷன் வழங்க வேண்டும். இரண்டு செக்சன் இருந்தால் 15 மாணவர்கள் என 25% மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க அரசு அறிவுறுத்தும்.
ஒரு பள்ளி இரண்டு செக்சன் இருப்பதாக வைத்துக் கொண்டால் 15 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கவேண்டும்.
ஆனால் அந்த பள்ளிக்கு அதைவிடவும் குறைவான விண்ணப்பங்கள் வந்திருந்தால் அல்லது அதே அளவுள்ள விண்ணப்பங்கள் வந்திருந்தால் விண்ணப்பித்த அனைவருக்கும் அட்மிஷன் கிடைக்கும். அதேவேளை 25% மாணவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பம் வந்திருந்தால் விண்ணப்பித்த பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் (Random Selection) தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மட்டும் அட்மிஷன் செய்யப்படுவார்கள்.
எனவே மாணவர்கள் ஒரு பள்ளியை மட்டும் தேர்வு செய்யாமல் 1 கிமீ முதல் 3 கிமீ வரை அருகாமையில் உள்ள பள்ளிகளை விண்ணப்பிக்கும் போதே தேர்வு செய்வது நல்லது ஒன்றில் இல்லை என்றால் வேறு பள்ளியில் கிடைக்கலாம்.
#விண்ணப்பிப்பது_எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பெற ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனால் அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டாயம் 25% இட ஒதுக்கீடு கொடுப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த விண்ணப்பங்கள் இணைய தளத்தில் 05/07/2021 to 03/08/2021 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான இணையதள முகவரி : www.dge.tn.gov.in , tnmatricschools.com/ RTE ,. http://rte.tnschools.gov.in ஆகும்.
இந்த இணைய தளத்திற்கு "USER NAME" மற்றும் "PASSWORD" தேவையில்லை. இந்த இணையதளத்தை பயன்படுத்தி குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் வீட்டிலிருந்தவாரே விண்ணப்பிக்கலாம். இணையதள வழியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதற்கு முன் அதற்கான வழிமுறைகளை சரியாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். அது போல விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களை ( ஒரிஜினல் - அசல்) முன்னமே தயார் நிலையில் ஸ்கேன் செய்து வைத்திருந்தால் தவறு ஏற்படாமல் விண்ணப்பிக்கலாம். கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் வசிக்கும் மாவட்டத்தை குறிப்பிட்டு , பகுதியை (Block) குறிப்பிட்டாலே பள்ளிகளின் பெயர்களை இணையதளத்தில் காணலாம் மற்றும் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளின் பெயர்களை டைப் செய்ய வேண்டியதில்லை.
பெற்றோர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அப்போது தான் பெற்றோர்கள் குறிப்பிட்ட பள்ளிகள் RTE யின் சேர்க்கை தொடர்பான தகவல்களை குழந்தையின் பெற்றோர்களுக்கு வழங்குவர்.
அரசு இ -சேவை மையம், வட்டார வள மையம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்து தருவதற்கு சில இ - சேவை மையங்களில் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
அதை அனைத்து சமுதாய மாணவ மாணவியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
#விண்ணப்பிக்க_தேவையான_ஆவணங்கள் என்ன ? என்ன வேண்டும்?
1. மாணவ / மாணவியின் பிறப்பு சான்று
2. புகைப்படம்
3. ஜாதி சன்று (வட்டாட்சியாளர் அவர்களால் சான்றளிக்கப்பட்டது)
4.தந்தையின் வருமான சான்று (வட்டாட்சியாளர் அவர்களால் சான்றளிக்கப்பட்டது)
5.முகவரி ஆதாரம் - (ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் , ஆதார் அடையாள அட்டை , வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டை , மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை , கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று உள்ளிட்டவை முகவரி சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்)
6. மாணவ / மாணவியின் ஆதார் கார்டு
7.வாய்ப்பு மறுப்பளிக்கப்பட்ட ( Disadvandaged group) பிரிவினர் அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
ஆவணங்கள் அனைத்தும் இவை அனைத்தும் " அசல் "சான்றிதழாக இருக்க வேண்டும். பின்பு "SCAN" செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
"நகல்" சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, பதிவேற்றம் செய்யதால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
===================================
அன்பார்ந்த பெற்றோர்களே 2011 ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் 2009ன் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
(குறிப்பு : இந்த ஆண்டு சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.)
இந்த சட்டமானது ஒரு முழுமையான கல்வி உரிமை சட்டம்.ஏழை தனியார் பள்ளிகள் வழங்கும் தரமான கல்வியை எளிய மாணவ மாணவியர்களும் பலன்பெறும் வகையில் உள்ள இந்த சட்டத்தின் வழிமுறைகள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
Directorate of Government Examinations
31/05/2021
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு
கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான்.
பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது அந்த நோயை உண்டாக்கும் நோய்க் கிருமியே ஆகும். அதாவது அந்த நோய்க்கிருமியின் நோய் உண்டாக்கும் திறனை மட்டுப்படுத்தியோ, அல்லது நீக்கியோ, அந்த நோய்க்கிருமியால் உண்டாகும் நோய்க்கு, அந்த நோய்க்கிருமியே தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நோய்க்கிருமிகள் கொல்லப்பட்டோ அல்லது செயலிழக்க வைக்கப்பட்டோ (Inactivated) தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசியினால் நமக்கு நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை. மாறாக தடுப்பூசிகள் நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அந்த நோய்க்கு எதிராக அதிகரிக்க வைக்கின்றன. முதலில் தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பது புரிந்தால் தான் அது எப்படி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது என்று விளங்கும்.
தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்குகிறேன். எந்த ஒரு நோய்க்கிருமி நமது உடலில் நுழைந்தாலும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune system) அந்த நோய்க்கிருமி ஒரு அந்நியப் பொருள் என்று அடையாளம் கண்டு கொள்ளும். உடனடியாக அந்த அந்நிய நோய்க்கிருமியைத் தாக்கி அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். இதன் விளைவு தான் நோயின் போது நமக்கு ஏற்படும் காய்ச்சல். நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நமது உடலில் நுழைந்த நோய்க்கிருமியை முற்றிலும் அழித்தப் பின் நாமும் காய்ச்சல் நீங்கி நலம் பெறுவோம்.
இந்த நோய் எதிர்ப்பு செயல்பாடுகள் அனைத்தும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களின் (Memory cells) மூலம் நினைவில் நிறுத்திக் கொள்ளப்படும். அந்த நோய்க்கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்த நினைவு செல்களில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். மீண்டும் நமது உடலில் அதே நோய்க்கிருமி நுழைந்தால், இந்த நினைவு செல்கள் உடனடியாக அந்த நோய்க்கிருமி இருக்கும் இடத்திற்கு, அழிக்கும் செல்களை (Killer cells) அனுப்பி, அந்த நோய்க்கிருமியை அழிக்கும். இப்படி இயற்கையாக, ஒரு நோய்க் கிருமிக்கு எதிராக நாம் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியே, பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் (Acquired immunity) என்று அழைக்கப்படுகிறது.
இப்படி இயற்கையாக நமக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை செயற்கையாகத் தூண்டிப் பெறுவதற்கு உதவுவதே தடுப்பூசிகள் ஆகும். அதாவது நோய் உண்டாக்கும் திறன் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது நீக்கப்பட்ட நோய்க்கிருமியை உள்ளடக்கிய தடுப்பு மருந்து நமது உடலில் செலுத்தப்பட்ட உடன், நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த நோய்க்கிருமியை கண்டறிந்து அதை அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். இதன் விளைவுதான் தடுப்பூசி எடுத்துக் கொண்ட அன்று நமக்கு ஏற்படும் காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றுக்கான காரணம்.
இவ்வாறு, அந்த நோய்க்கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தடுப்பூசியின் மூலம், நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களில் பதிய வைக்கப்பட்டு விடும். இதன் காரணமாக நமது உடல் உண்மையான நோய்க் கிருமியின் தொற்றுக்கு ஆளாகும் போது தடுப்பூசியின் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலால் அந்த நோய்க்கிருமி அழிக்கப்பட்டு விடும். இதன் மூலம் அந்த நோய்க்கிருமியினால் ஏற்படும் நோய்க்கு ஆளாகாமலேயே நாம், அந்த நோய்க்கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை தடுப்பூசியினால் பெறுவோம். சரி, இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டைப் பற்றிப் பார்ப்போம்.
கோவாக்சின்
கோவாக்சின் தடுப்பு மருந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தால் (Bharat Biotech international Ltd), இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology) ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
கோவாக்சின் தடுப்பு மருந்தில், முழுமையான கொரோனா வைரஸ் செயலிழக்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
கோவிஷீல்ட்
கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, ஆக்ஸ்ஃபோர்ட்-ஆஸ்ட்ரா ஸெனெகா (Oxford-AstraZeneca) எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் இந்திய சீரம் நிறுவனத்தால் (Serum Institute of India) உற்பத்தி செய்யப்படுகிறது.
கோவிஷீல்ட் தடுப்பு மருந்தில், கொரோனா வைரசின் ஒரு முக்கிய பாகமான முள் புரதத்தை (Spike protein) மட்டும் எடுத்து சிம்பன்சி குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் (AdenoVirus) எனப்படும் வைரசுடன் குளோனிங் (Cloning) முறையில் இணைத்து பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா வைரசின் மேல் முள் முள்ளாகத் தோன்றும் பாகம் தான் முள் புரதமாகும். இந்த முள் புரதம் தான் மனித செல்லுடன் கொரோனா வைரஸ் பிணைப்பு ஏற்படுத்த உதவும் முக்கிய காரணியாகும். இந்த முள் புரதத்தை நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தடுப்பூசியினால் அடையாளம் காட்டுவதன் மூலம் நாம் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பைப் பெறலாம். இதுவே கோவிஷீல்டின் செயல்படும் முறையாகும்.
டோஸ் (Dose)
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே இரண்டு தவணையாகப் போடப்படுகிறது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே செயலிழக்க வைக்கப்பட்ட கொரோனா வைரஸைக் கொண்டுள்ளதால், அதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் மிக நீண்டக் காலத்திற்கு நீடிப்பதற்காகத் தான் இரண்டு தவணையாக தடுப்பூசி போடப்படுகிறது.
செயல்திறன்
சமீபத்திய ஆய்வின் படி கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 81% ஆகவும், கோவிஷீல்டின் செயல்திறன் 90% ஆகவும் உள்ளது.
கோராவாசிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் !
கொரோனா பெருந்தொற்று மூன்றாம் அலை, நான்காம் அலை என்று நீண்டு கொண்டே செல்லாமல் இருக்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் அவசியம். தடுப்பூசியைப் பற்றிய அவநம்பிக்கை, தேவையற்ற பயம் ஆகியவற்றைப் புறம் தள்ளிவிட்டு நாம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். நாம் போட்டுக் கொண்டதோடு நிற்காமல் நமது குடும்ப உறுப்பினர்களையும் அவசியம் போட்டுக்கொள்ள செய்ய வேண்டும். ஏதேனும் மருத்துவ சிக்கல்கள், உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு பின்னர் அவர் அறிவுரையின் படி போட்டுக் கொள்ளலாம். மற்றபடி, எந்த விதமான மருத்துவ சிக்கல்களும், உடல் நலக் குறைபாடுகளும் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் அரசால் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !
கொரோனா எனும் கொடிய நோயை வெல்வோம் !
31/05/2021
Stages - From Police FIR to Court judgement
FIR-ல் இருந்து நீதிமன்ற தீர்ப்பு பகிரும் வரை இடையே இருக்கும் நிலைகள்
27/03/2021
அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடையே உள்ள வித்யாசங்கள்.....
24/03/2021
Be cautious கவனமாக இ௫ங்கள்