Hello Digital ஹலோ டிஜிட்டல்

Hello Digital ஹலோ டிஜிட்டல்

Share

Hello Digital- your Technology mentor, is a Media platform on indic languages targeting rural youth upskilling needs on tech education & life skills.

Thanks for visiting our page. In this page you will find our reasons for being here and our work. The basic idea for which we have started Hello Digital is narrated below. Rural youth lack access for up-to-date technology perspective despite formal education & end up with mediocre assignments. Skill-sets of Rural youth is a challenge that either they are not getting employment or unable to progres

14/10/2020

Dedicated TV channels for preparation of medical and engineering entrance exams.

The channels, launched on the Airtel Digital TV platform, will provide coaching sessions to students who are preparing for the entrance exams -Joint entrance examination and National Eligibility cm Entrance Test...

Bharti Airtel DTH arm Airtel Digital TV and coaching institute Aakash Educational Services on Tuesday launched two dedicated TV channels for preparation of medical and engineering entrance exams.

These channels are available for free preview till October 21, Airtel said in a statement.

Subscribers will have to pay Rs 247 per month each to access the channels -- Aakash Edu TV-JEE and Aakash Edu TV-NEET.

The channels, launched on the Airtel Digital TV platform, will provide coaching sessions to students who are preparing for the entrance exams -- Joint entrance examination and National Eligibility cm Entrance Test.

“We are delighted to partner with Aakash Institute to offer high-quality Ed-tech content to our 17 million DTH customers across the country in an affordable and simple way, helping millions of aspiring students to realise their dreams of clearing Medical and Engineering entrance exams using high-quality test preparation offered through Aakash EduTV,” Bharti Airtel director- homes Sunil Taldar said in the statement.

Photos from Hello Digital ஹலோ டிஜிட்டல்'s post 07/09/2020

பொறியியல் படிப்பில் ‘டிரிபிள் இ’ என செல்லமாக அழைக்கப்படும் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிப்புக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது.

இத்துறை இன்ஜினீயர்களின் தேவையானது இந்தியாவில் ஆண்டுதோறும் 9 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வருங்காலத்தில் அனைத்து துறைகளும் எலெக்ட்ரானிக்ஸ் மயமாகத்தான் இருக்கும். எனவே, வேலைவாய்ப்புக்கு கவலையே இல்லை. குறிப்பாக, மின் உற்பத்தி துறையில் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும். சூரிய மின்சக்தி, காற்றாலை, அனல் மின்சாரம் என அனைத்து வகை யான மின் உற்பத்தியிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது, 2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக்கல் வாகனங்களாக மாறிவிடும். இந்தியாவில் 2024-ல் சாலையில் 10 லட்சம் மின் வாகனங்கள் ஓடும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த வகை வாகனங்களின் உற்பத்தி, அவற்றுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்கள் பெருமளவில் இருக்கும் என்பதால் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இன் ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்புகள் அபரிமிதமாக இருக்கும்.

மொபைல் அப்ளிகேஷன், சாஃப்ட்வேர், எலெக்ட்ரானிக்ஸ், சிக்னல் புராசஸ், கம்யூனிகேஷன், எம்பெடட் சிஸ்டம் என பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும். எனர்ஜி ஆடிட் மேனேஜர், ஃபயர் ரிஸ்க் அஸெசர், மல்டிமீடியா புரோகிராமர் போன்ற புதிய பணி வாய்ப்புகளும் அவர்களுக்கு காத்திருக்கின்றன.

- ஏ.ரவீந்திரன், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) நிறுவன செயல் இயக்குநர் (தெர்மல்)

Photos from Hello Digital ஹலோ டிஜிட்டல்'s post 07/09/2020

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்!

பொறியியல் பாடப் பிரிவில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு எப்போதும் நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம் போன்ற தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகள் எழுதி மத்திய, மாநில அரசுப் பணிகளில் பொறியாளராகச் சேரலாம்.

‘கேட்’ நுழைவுத் தேர்வு மூலமாக என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உயர் அதிகாரியாகவும் பணியில் சேர முடியும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் அண்ட் டி) துறைகளில் இஸ்ரோ, டிஆர்டிஓ, பெல், ஹெச்.சி.எல். உள்ளிட்ட மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களின் பல்வேறு பணிகளில் சேரலாம்.

எலெக்ட்ரிக்கல் எலெக்ட் ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் பட்டதாரிகளுக்கு ஆட்டோமொபைல் துறையிலும், எலெக்ட்ரிக்கல், எலெக்ட் ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி நிறு வனங்களிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

வாழ்த்துகள்!

Photos from Hello Digital ஹலோ டிஜிட்டல்'s post 07/09/2020

இன்ஜினியர் ஆக வேண்டுமா?

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மற்றும் அகில இந்திய பொறியியல் தேர்வு, பிட்சாட், ஜேஇஇ (மெயின்), ஜேஇஇ (அட்வான்ஸ்டு) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் மூலமாக பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரலாம்.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் இருந்தே நல்ல மதிப்பெண் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவு, ஆய்வுத் திறன், தகவல்தொடர்புத் திறன் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

www.edx.org, www.coursera.org, www.khanacademy.org போன்ற இணையதளங்களை இலவசமாகப் பயன்படுத்தி தங்களது பலதரப்பட்ட திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

வாழ்த்துகள்!

Photos from Hello Digital ஹலோ டிஜிட்டல்'s post 07/09/2020

என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் படிப்புகள்!

புவி வெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு என உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல் (என்விரான்மென்டல் இன்ஜினீயரிங்) என 2 நிலைகளில் சுற்றுச்சூழல் தொடர்பான படிப்புகள் உள்ளன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.இ., பி.டெக். (என்விரான்மென்டல் இன்ஜினீயரிங்), பி.எஸ்சி. (என்விரான்மென்டல் சயின்ஸ்) ஆகிய படிப்புகளில் சேரலாம்.

மேற்படிப்பை பொருத்தவரை, என்விரான்மென்டல் இன்ஜினீயரிங்கில் எம்.இ., எம்.டெக்., என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட்டில் எம்.இ., எம்.எஸ்சி., எம்பிஏ, என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் எம்.எஸ்சி. என பல்வேறு படிப்புகள் உள்ளன.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பான முதுகலை சட்டப் படிப்பை (எல்எல்எம்) வழங்குகிறது. என்விரான்மென்டல் இன்ஜினீயரிங், என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட், என்விரான்மென்டல் சயின்ஸ் போன்ற பாடப் பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்பும் (பிஎச்டி) படிக்கலாம்.

சுற்றுச்சூழல் பொறியியல், சுற்றுச் சூழல் அறிவியல் படித்தவர்களுக்கு விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, என்விரான்மென்டல் கல்சல்டன்ட், என்விரான்மென்டல் இன்ஜினீயர் (டிசைன்), என்விரான்மென்டல் ஹெல்த் அண்ட் சேஃப்டி இன்ஜினீயர், வாட்டர் இன்ஜினீயர் என பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன.

மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், சிஎஸ்ஐஆர் போன்ற மத்திய, மாநில அரசு நிறுவனங்களிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

- டாக்டர் எஸ்.கண்மணி. அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய இயக்குநர்

Photos from Hello Digital ஹலோ டிஜிட்டல்'s post 07/09/2020

Internship Training for Engineering Graduates

பொறியியல் பட்டதாரிகளுக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி

2019-ம் ஆண்டுக்குப் பின் பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் செங்கல்பட்டு, குடியாத்தம் உட்பட பல்வேறு நகராட்சிகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

www.internship.aicte-india.org

இந்த வலைதளத்தில் இன்னும் பல இன்டர்ன்ஷிப் பயிற்சிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
வாழ்த்துகள்!

Photos from Hello Digital ஹலோ டிஜிட்டல்'s post 07/09/2020

Internship Training for Engineering Graduates

பொறியியல் பட்டதாரிகளுக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி

2019-ம் ஆண்டுக்குப் பின் பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பல்லவபுரம், அனகாபுத்தூர், திருவேற்காடு உட்பட பல்வேறு நகராட்சிகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

www.internship.aicte-india.org

இந்த வலைதளத்தில் இன்னும் பல இன்டர்ன்ஷிப் பயிற்சிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

வாழ்த்துகள்!

Photos from Hello Digital ஹலோ டிஜிட்டல்'s post 31/08/2020

பொறியியல் மாணவர்களுக்கு நாசாவின் போட்டி!

நிலவிலும் செவ்வாய்க் கிரகத்திலும் தண்ணீரைக் கண்டறிவதற்கான கருவியை உருவாக்கும் போட்டியை பொறியியல் மாணவர்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பருகவோ, அந்த கிரகங்களில் தாவரங்களை வளர்க்கவோ அல்லது ராக்கெட்டுக்கான உந்து விசையை உருவாக்கவோ தண்ணீர் மிக அவசியம். பூமியிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வதோ மிகக் கடினம்... செலவும் அதிகரிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்நினைத்ததைவிட சூரிய மண்டலத்தில் அதிக அளவில் தண்ணீர் இருக்கிறது என்பது இப்போது அறியப்பட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் டன் பனிக்கட்டிகள் புதைந்திருக்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால், அந்தத் தண்ணீரில் மாசு கலந்திருக்கும். அதைப் பயன்படுத்தும் முன் மாசு நீக்கப்பட வேண்டும்.

நிலவு அல்லது செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் பற்றி அறிவது அடுத்தகட்ட ஆராய்ச்சிகளுக்கு மிக அவசியம். இந்த அடிப்படையில்தான் நாசாவின் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் படி, இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்கள் கொண்ட அணி, ஒரு ஹார்டுவேரை (வன்பொருள்) உருவாக்க வேண்டும். இதன் மூலம் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிய வேண்டும். பல்வேறு மேற்பரப்பு அடுக்குகளைத் துளையிட்டு, பின்னர் பனிக் கட்டியிலிருந்து தண்ணீரை எடுக்க வேண்டும்.

விருப்பமுள்ள அணிகள் தமது கருத்துக்கான வடிவம், செயல்பாடு ஆகியவற்றை விளக்கும் திட்ட அறிக்கையை 2020 நவம்பர் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 2020 டிசம்பரில் மாதம் 10 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆயிரம் டாலர் மேம்பாட்டு உதவித்தொகை வழங்கப்
படும். அடுத்த 6 மாதங்களில் தமது வடிவமைப்பை உருவாக்க வேண்டும். 2021 ஜூன் மாதம் நாசாவின் லாங்லே ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் 3 நாள் போட்டியில் கலந்து கொண்டு கண்டுபிடிப்பை விளக்க வேண்டும்.

எதிர்கால விண்வெளி மனித ஆராய்ச்சி திட்டங்களில் திறமையான மாணவர்கள் தமது பங்களிப்பை அளிக்க ஆதரவு கொடுக்கும் வகையில் 2021 Moon to Mars Ice and Prospecting Challenge என்கிற இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு...

https://www.nasa.gov/feature/langley/moon-to-mars-ice-and-prospecting-challenge-aims-to-break-through-more-than-just-ice/

http://specialedition.rascal.nianet.org/competition-basics/

http://specialedition.rascal.nianet.org

http://specialedition.rascal.nianet.org/wp-content/uploads/2020/08/2021-MMIP-Challenge-Scoring-Matrix-8.11.20.pdf

30/08/2020

வெறும் 3% பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டுமே நல்ல வேலை கிடைக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

ஏன் தெரியுமா?

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


1018 C/A, 46th Street, Korattur
Chennai