03/02/2026
தாகம் இதழுக்கு நன்றி 🙏
அண்ணாவின் நாமம் வாழ்க 🙏
Chief Minister of Tamil Nadu
A Group to Protect Pachaiyappas run by Alumni of Pachaiyappas Collegs
03/02/2026
தாகம் இதழுக்கு நன்றி 🙏
அண்ணாவின் நாமம் வாழ்க 🙏
Chief Minister of Tamil Nadu
04/10/2024
கற்றுக் கொள்ளவே
நுழைந்தேன்
கல்லூரியில்
களத்தில்
இறங்கி இருந்தனர்
சக மாணவர்கள்
சமூகக் கொடுமைகளைச் சாடி
மனிதனாக நானும்
கலந்து விட்டிருந்தேன்
ஆவேசத் தெறிப்பில்
வெளியே நிறுத்துகிறது
கல்லூரி நிர்வாகம்
கல்வி மறுத்து
விளையாட்டு
காட்டுகிறது
அலைக்கழித்து
பாடங்களை
நான்
இப்போதும்
கற்றுக் கொண்டே
இருக்கிறேன்
கல்லூரிக்கு
உள்ளும் வெளியிலும்
கனன்று கொண்டிருக்கிறேன்
உள்ளும் புறமும்
எனக்காக எழும்
உரிமை முழக்கங்களில்
என்னைக்
கண்டு கொள்கிறேன்
எல்லோருக்காகவும்
எப்போதும்
ஒலிக்கும் என் குரலில்!
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் பா. சாமுவேல் அவர்களுக்கு நீதி கிடைக்க
கவிஞர் எஸ். வி. வேணுகோபால் எழுதிய கவிதை.
பெண்ணை அவமானப்படுத்தி பேராசிரியர் அரசு அவர்களின் எகத்தாளம்..
04/10/2024
https://youtu.be/mKeN3PYegSo?si=_QerlOytmTYX-zxR
பெண்ணை அவமானப்படுத்தி பேராசிரியர் அரசு வின் எகத்தாளம். பெண்ணை அவமானப்படுத்தி பேராசிரியர் அரசு வின் எகத்தாளம்.
27/09/2024
*ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களின் இடை நீக்கத்தை ரத்து செய், மாணவர் சங்க தலைவர்களை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி பொறுப்பு முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது*
நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களை பல மாணவர்கள் ஒருங்கிணைத்த நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை மட்டுமே கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது.
இரண்டு வெவ்வேறு போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோரை அழைத்து வரச் சொல்லி இருந்தது, குறிப்பாக கூலி தொழிலாளியான மாணவர் சாமுவேல் பெற்றோர் வரவழைக்கபட்டு அவர் கல்லூரிக்கு வந்த பின்னும் கூட பொறுப்பு முதல்வர் அம்மாணவருடைய பெற்றோரை சந்திக்க தயாராக இல்லை. அறக்கட்டளையின் செயலாளர் அலுவலகத்திற்கும் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இறுதியாக இரண்டு மாணவர்களுக்கும் அக்டோபர் மாதம் முதல் தேதி வரை கல்லூரிக்கு வரக்கூடாது என வாய் வழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
26.09.2024 அன்று அது குறித்து விசாரிக்க சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தோழர் அருண்குமார் அவர்களை கல்லூரி முதல்வர் வழியிலேயே பார்த்துவிட்டு உள்ளே உங்களை அனுமதிக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வரை தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் அவர்களை சூழ்ந்துகொண்டு சண்டையிட்டுள்ளனர்.
அதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்டச் செயலாளர் தோழர் மிருதுளா அவர்களையும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் சூழ்ந்து கொண்டு மிகவும் கடும் மோசமான வார்த்தைகளைக் கொண்டு வசைபாடியதோடு மட்டுமல்லாமல் கல்லூரி வளாகத்திலேயே அவர்களை தாக்கவும் முயன்று இருக்கிறார்கள்.
தோழர் அருண்குமார் அவர்களுடைய சட்டையை பிடித்து ஒரு பேராசிரியர் அடிக்க வந்திருக்கிறார். தோழர் மிருதுளாவை பெண் என்றும் கருதாமல் அவரின் கைகளை முறுக்கி அவருடைய செல்போனை பறித்து இருக்கிறார் கௌரவ விரிவுரையாளர் ஜவகர்.
ஒரு அரசு உதவிபெறும் கல்லூரியில் நாட்டினுடைய பெண்களுக்கு ஏற்படுகிற அநீதிகளுக்கு எதிராகவும் தங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் போராட்டம் நடத்துவது என்பது மாணவர்களின் அடிப்படை உரிமை.
உரிமைக்காக போராடிய மாணவர்களை கல்லூரி ஆசிரியர்கள் கிரிமினல் குற்றவாளிகளை போல் நடத்தியது மட்டுமல்லாமல் அதனை விசாரிக்கச் சென்ற மாணவர் சங்க தலைவர்களை ஒருமையில் பேசி தாக்குதல் ஈடுபட்டதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியினுடைய பொறுப்பு முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர் ஜவகர், சிவா உள்ளிட்டோர் மிகவும் இழிவான முறையில் மாணவர் சங்கத் தலைவர்களை தாக்கியுள்ளனர். மாவட்ட செயலாளர் தோழர் மிருதுளா தாக்கப்படும்பொழுது அத்தனை பெண் பேராசிரியர்களும் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். காவல்துறை கூறியும் கேட்காமல் மாணவர் சங்கத் தலைவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் சூழ்ந்து கொன்டு தொடர் அமலியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு அறத்தின் வழியில் நடந்து கொள்வதற்கு சொல்லித்தர வேண்டிய பேராசிரியர்களே அடியாட்கள் போல நடந்து கொண்டதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதொடு ஆசிரியர்களின் இத்தகைய செயலை மிகவும் கவலையோடு பார்க்கிறது. பச்சைப்பன் கல்லூரியின் பேராசிரியர்கள் ஆசிரியருக்கான கண்ணியத்தோடு எப்படி நடந்துகொள்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீதான அனைத்து நடவடிக்கைகளும் பின்வாங்கப்பட வேண்டும் எனவும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கல்லூரியில் உள்ள அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் எனவும் கல்லூரியில் மாணவர்சங்க தலைவர்களிடம் தரைகுறைவாக நடந்து கொண்ட கல்லூரி பொறுப்பு முதல்வர், கௌரவ விரிவுரையாளர் ஜவகர், சிவா உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தெள. சம்சீர் அகமது
மாநில தலைவர்
கோ. அரவிந்த சாமி
மாநிலச் செயலாளர்
11/08/2024
https://youtu.be/Xt-HYNGh2tw?si=o5jFkLak3XBB4IrW
பச்சையப்பன் கல்லூரியின் நுழைவாயில் மூடல்| கல்லூரி முதல்வரின் அடாவடித்தனம்.. #கல்விஉரிமைமீறல் ...
07/08/2024
For our Chief Minister of Tamil Nadu Thiru M. K. Stalin 's kind consideration
பெண் பேராசிரியர்களை கொச்சைப்படுத்தும் பச்சையப்பன் கல்லூரி செயலர் மீது பரபரப்பு புகார்.. பெண் பேராசிரியர்களை கொச்சைப்படுத்தும் பச்சையப்பன் கல்லூரி செயலர் மீது பரபரப்பு புகார்..Watch Sathiyam News Live for the latest news updates: https...
19/08/2023
செப்டம்பர்15, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை #மொழிப்போர்_விழா வாக *பச்சையப்பன் வாசகர் வட்டம்* கடந்த 4 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது. இவ்வாண்டும் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக *எது ஐனநாயகம்?* என்ற தலைப்பில் பேச்சு போட்டியை நடத்தவுள்ளது. அனைத்து கல்லூரி மாணவர்களும் தங்களை இந்நிகழ்வில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
நிகழ்ச்சி சம்பந்தமான விவர அறிவிப்பை அனைத்து மாணவர்களுக்கும் பகிருங்கள் .
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய கடைசி நாள் 09. 09. 2023 .
மேலும் விவரங்களுக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ள தகவல் அறிவிக்கையை பார்க்கவும்
👇
அடிப்படை வசதிகள் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள்...
காவல்துறையின் கட்டுப்பாட்டில் கல்லூரியா ..!!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...