SaKa Ias

SaKa Ias

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SaKa Ias, Education, Chennai.

Hello everyone,

This is the purely free service for those preparing for their competitive exams such as UPSC (Civil Service Examination and Engineering Service Examination).GATE, TNPSC Group 1, 2, 2A

17/08/2026

✈️ இந்தியா–மலேசியா இணைந்து நடத்திய **உதாரா சக்தி 2026** விமானப் படைப் பயிற்சி குறித்து TNPSC தேர்வுக்குத் தேவையான முக்கிய 5 குறிப்புகள்!

📌 நடைபெற்ற இடம்: சுபாங் விமானத் தளம், மலேசியா

📌 காலம்: ஆகஸ்ட் 10–14, 2026

📌 பங்கேற்ற நாடுகள்: இந்தியா & மலேசியா

📌 தேர்வுக்கு மிகவும் முக்கியமான நடப்பு நிகழ்வுகளை தினமும் படியுங்கள்.

15/08/2026

🇮🇳 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய முக்கிய விருதுகள்!
🏆 தகைசால் தமிழர் விருது – எம். கிருஷ்ணசாமி
🏆 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது – டாக்டர் வி. மோகன்
🏆 கல்பனா சாவ்லா விருது – நௌஷின் பானு
இந்த விருதுகள், சமூகப் பங்களிப்பு, அறிவியல் சாதனை மற்றும் துணிச்சலைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🇮🇳

15/08/2026

Happy 80th Independence Day!

Today, we honor the courage, sacrifice, and unwavering spirit of the heroes who gave us freedom.

*"Today we celebrate the courage of those who fought for our freedom and the duty we have to keep it alive."*

Let us continue to learn, lead, and serve our nation with pride.

**– SAKA IAS ACADEMY**

13/08/2026

TNPSC GROUP 1

13/08/2026

**TNPSC – கேரளம் (Keralam):

1. **பெயர் மாற்றம்:** கேரளா → கேரளம் (2026).

2. **Article 3:** மாநிலத்தின் பெயரை மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

3. **First Schedule:** அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டது.

4. **Article 4:** எளிய பெரும்பான்மையால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

5. **முக்கியத்துவம்:** மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கை.

13/08/2026

ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?
(A) அறிவு, தோற்றம், கல்வி
(B) அன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
(C) கடமை, காலமறிதல், இடமறிதல்
(D) தூய்மை, துணைமை, துணிவு

12/08/2026

TNPSC – சந்த் கபீர் விருது | Top 5 Points
🏆 மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தேசிய விருது – சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
🧵 சந்த் கபீர் தாஸ் – 15-ஆம் நூற்றாண்டு பக்தி இயக்கக் கவிஞர் மற்றும் நெசவாளர் நினைவாக பெயரிடப்பட்டது.
🥇 விருது – தங்க நாணயம், தாமிரபத்திரம், பொன்னாடை மற்றும் நிதியுதவி வழங்கப்படும்.
⚠️ குழப்பம் வேண்டாம்: கபீர் புரஸ்கார் – சமூக நல்லிணக்கம்; கபீர் சம்மான் – கவிதைக்கான விருது.
📅 தேசிய கைத்தறி தினம் – ஆகஸ்ட் 7 அன்று விருதுகள் பொதுவாக வழங்கப்படுகின்றன.

12/08/2026

கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளைத் தெரிவு செய்க.
சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட, பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு.
(A) கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
(B) ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
(C) கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
(D) உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

12/08/2026

🔥 Vacancy குறைந்தாலும் பரவாயில்லை! உன் முயற்சி குறையக்கூடாது! 💪🎯

11/08/2026

🌊 இடைமாநில நதிநீரில் மாநிலங்களின் அதிகாரம் என்ன? 📜

சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட் உரையில் மாநிலத்தின் நதிநீர் உரிமைகள் உறுதியாகப் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேர்வு நோக்கில் இதன் முக்கிய அம்சங்கள்:

1️⃣ Article 262: நதிநீர் தகராறுகளைத் தீர்க்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இதில் நீதிமன்றங்களின் தலையீட்டையும் விலக்கி வைக்க முடியும்!
2️⃣ Entry 17 (State List): நீர்வழங்கல், பாசனம், கால்வாய்கள் மாநிலப் பட்டியலின் கீழ் வரும்.
3️⃣ Entry 56 (Union List): இடைமாநில நதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு அதிகாரம்.
4️⃣ ISRWD Act 1956: நதிநீர் தீர்ப்பாயங்கள் (Tribunals) அமைத்துத் தீர்வு காண வழிசெய்கிறது.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chennai