Campus Front of India - Kanchipuram District

Campus Front of India - Kanchipuram District

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Campus Front of India - Kanchipuram District, Education, Chennai.

Photos from Campus Front of India - Kanchipuram District's post 01/09/2021

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சமூகத்திற்கு புறம்பாய் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான பதாகை ஏந்தி போராட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது

இவன்:-
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
காஞ்சிபுரம் மாவட்டம்

27/06/2021

12ஆம் வகுப்பு பின்பு என்ன படிக்கலாம்?

சிறப்புரை :
S. ரியாஜ்
MBA(HRM).,MSc psychology.,(PhD)
Career counsellor & psychologist
Senior Resource person, Access India.

நாள் : 27.06.2021
நேரம் : மாலை 07.00 மணி

Fb Live :

Join Zoom id

Meeting ID: 862 3637 5189
Passcode: cfitn

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
தொடர்புக்கு : 96298 07156


Photos from Campus Front of India - Kanchipuram District's post 14/06/2021

*மாணவ தலைவர்களை விடுதலை செய்யக்கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்*

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் 250 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடும் கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் ரவூஃப் சரீப் உட்பட அனைத்து மாணவ தலைவர்களையும் விடுதலைச் செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14.06.2021 இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் மிஸ்பா அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்...

* *
* *

12/06/2021

ஹர்ஷ் மந்தர் மற்றும் குழந்தை பராமரிப்பு இல்லங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்து: சிபிசிஆர்-ன் அவதூறான கூற்றுக்களை நிராகரி!

சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), டெல்லி காவல்துறை மற்றும் சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான டெல்லி ஆணையம் (டி.சி.பி.சி.ஆர்) ஆகியன ஹர்ஷ் மந்தருடன் தொடர்புடையதாக கூறப்படும் ரெயின்போ அறக்கட்டளையால் நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு இல்லங்களுக்கு எதிராக மலிவான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. என்.சி.பி.சி.ஆர் 2020 ஆம் ஆண்டில் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் ‌சோதனை நடத்தி ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, இதன் அடிப்படையில் காவல்துறை 2021 பிப்ரவரியில் எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவு செய்தது.மேலும் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி" என்று கூறி டி.சி.பி.சி.ஆர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதேசமயம், 'பராமரிப்பு இல்லங்களிலிருந்து குழந்தைகள் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்' என்று என்.சி.பி.சி.ஆர் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இது ஆணையத்தின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது. இது அறக்கட்டளை மற்றும் புகழ்பெற்ற மனித உரிமை செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தரை இழிவுபடுத்தும் செயலாகும். அவர் சிஏஏ-என்.ஆர்.சி.யை தீவிரமாக எதிர்த்தவர். மேலும் டெல்லி இனப்படுகொலைக்குப் பிந்தைய மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

என்.சி.பி.சி.ஆர்-ன் பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்கு முரணாக டி.சி.பி.சி.ஆர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் அமைந்துள்ளது. இதிலிருந்தே இந்த குற்றச்சாட்டுகள் புனையப்பட்டது என்பது தெளிவாகிறது.அதிகாரப்பூர்வ அமைப்புகளை பயன்படுத்தி விமர்சகர்களுக்கு எதிரான அரசியல் உந்துதலின் காரணமாக மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக அரசு நிறுத்த வேண்டும்.

நாங்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அவரது சங்கங்களுக்கு தோழமை உணர்வுடன் கூடிய ஆதரவை வழங்குகிறோம். இதுபோன்ற அவதூறான கூற்றுக்களை எந்த ஒரு மதிப்பும் அளிக்காமல் நிராகரிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இம்ரான் PJ
ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர்,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


10/06/2021

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600045