21/04/2021
#பள்ளி_செயல்பாடு_2
நாள் : April 21, 2021
அனைவருக்கும் வணக்கம், மற்றும் நல்வாழ்த்துக்கள் 💐
பள்ளியின் வளர்ச்சியில், நீங்களும் பங்கு பெற "புரவலர்" ஆகுவீர்.
பள்ளிப் புரவலர் திட்டம் பற்றி
பள்ளிக்குத் தேவையான வசதிகளை, தமிழக அரசே வழங்கினாலும், பள்ளியின் தொடர் பராமரிப்புக்கும், புதிய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், சமுதாயத்தின் பங்களிப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் - "பள்ளிப் புரவலர் திட்டம்”.
!! சிந்திப்பீர் !!
ஒரு முறை மட்டுமே தரட்டும் பங்களிப்பால், காலம் முழுவதும் பள்ளிக்கு உதவும் வகையில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மிக நல்ல திட்டம்.
இத்திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட தொகையை பள்ளிக்கு வழங்கி, பள்ளியின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர் "புரவலர்" என அழைக்கப்படுவார்.
பள்ளிக்கு ஒருவர் ரூபாய். ஆயிரம் (1000) அல்லது அதற்கு மேல் நன்கொடையாக
கொடுக்கும்போது, அத்தொகை பள்ளியின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை / நிலையான வைப்புத் திட்டங்கள் (Fixed Deposit Scheme) செய்யப்பட்டு, அதன் மூலம் வரும் வருட வட்டி வருவாய் (Yearly Interest Amount) கொண்டு பள்ளியின் வளர்ச்சித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
இந்த வங்கி கணக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் கூட்டாக (Joint Account) இயங்கி வருகிறது.
தங்களின் ஒரு முறை பங்களிப்பானது, பள்ளி உள்ள காலம் முழுவதும் தொடரும்.
பள்ளியின் புரவலர் என்பதற்கான பட்டயம் (நற்சான்றிதழ்) வழங்கப்படும்.
தங்களைப் (புரவலர்) பெருமைப்படுத்தும் நோக்கில், நம் பள்ளியில் புரலவராகும் ஒவ்வொருவரது பெயரும், நம் பள்ளியின் முகப்பில் ”பள்ளியின் புரவலர்கள்” என்னும் தலைப்பின் கீழ் தங்கள் பெயரும் குறிப்பிடப்படும்.
இத்திட்டத்தில், (புரவலர்) இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள்,
முன்னாள் மாணவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அரசு பள்ளியின் வளர்ச்சியின் பால் ஆர்வம் கொண்டவரும்,
பள்ளி வளர்ச்சிக்கு தாராளமாக நிதி உதவி, பள்ளியின் வளர்ச்சியில் பங்கு பெறுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதுவரை ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே, நம் பள்ளியின் புரவலராக உள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான புரவலர்களைச் சேர்க்கும் நமது முயற்சியில், தங்களது மேலான பங்களிப்பைச் செலுத்திட வேண்டுமாய், தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நம்மை வளர்த்த இப்பள்ளியின் வளர்ச்சியில், நம் பங்கும் இருக்க வேண்டும்.
குறிப்பு: வெளியூரில் உள்ளவர்கள் புரவலராக விரும்பினால், நிர்வாகத்தை (பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளிக்கல்வி மேம்பாட்டுக் குழு) /தலைமை ஆசிரியர், மற்றும் பள்ளி அலுவலகத்தைத்
தொடர்பு கொள்ளவும்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்: 99442 23014 / 94871 50880
பெற்றோர் ஆசிரியர் சங்கம்: 96000 50162
வங்கி கணக்கு விவரங்களை இன்னும் சில தினங்களில் பகிற்கிரோம்.
!! மிக்க நன்றி !!