Govt. Hr. Sec. School, Avinashi

Govt. Hr. Sec. School, Avinashi One of the Biggest School in Avinashi. Students are above 1000 in this school. one of the oldest bui

31/01/2020
07/06/2018

👌👌👌

05/05/2017
10/09/2014
24/05/2014

Perfect Click...

09/05/2014

நன்றி : சு.பிரசாத் பெருந்துறை மற்றும் fb/asiriyar kural

பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்களே,ஒரு நிமிடம்..

அரசுப் பள்ளிகளின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..சிந்தியுங்கள்..நல்ல முடிவினை எடுங்கள்..

1)அரசு பள்ளிகளில் 1 & 2 வகுப்புகளில் ஆங்கில
வழி க்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

2) 1 முதல் 12 வகுப்பு வரை பெற்றோர்களிடம் எவ்வித கட்டணமும் வாங்கப்படுவதில்லை.

3)எல்லா மாணவர்களுக்கும் எவ்வித வேறுபாடுமின்றி இலவசபாடநூல்கள், ஏடுகள்,காலணிகள், சீருடைகள், புத்தகப் பைகள்,வண்ணக் கோல்கள்,மிதி வண்டிகள், மடிக் கணிணிகள் அவரவர் வகுப்புகளுக்கேற்ப வழங்கப்படுகின்றன.

4)சிறுபான்மையின மாணவர்களுக்கு வருடந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. மேலும், மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவச் செல்வங்களின் பெயரில் வங்கிகளில் பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது.

5)ஆசிரியர்களிடம் எளிமையாக பழக முடியும்.பொருள் புரியாமல் மனனம் செய்து ஒப்புவிக்கும் கடினமான சூழல் இல்லை.

6)முதல் வகுப்பில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் 12ம் வகுப்பினை அவர்களது குழந்தைகள் நிறைவு செய்யும்போது (12 * 60000 = 720000 குறைந்தபட்ச மதிப்பீடு) இதர போக்குவரத்து,சீருடை செலவுகளுடன் ரூ.8,00,000.00 தோரயமாக செலவு செய்யக் கூடும்.ஆனால்,அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு இச் செலவு இல்லை.இத் தொகையை குழந்தைகளின் பெயரிலேயே வங்கிகளில் சேர்த்து வைத்தால் அவர்களது மேல் படிப்பிற்கோ,திருமண செலவுகளுக்கோ பயன்படுத்தலாம்.

7)ஆங்கிலம்/தமிழ் வழிக் கல்விகளில் எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
நடுநிலைப்பள்ளிகளில் கணிணி ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் மூலமாக சிறப்புத் திறன்கள் வளர்க்கப்படுகின்றன.

8)மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கப்படுகின்றன.சிறப்பு மருத்துவ பயிற்சிகளும் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

9)சத்தான மதிய உணவு முட்டையுடன் வழங்கப்படுகின்றன.ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வருடந்தோறும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

10)செஞ்சிலுவைச் சங்கங்கள்,தேசிய பசுமைப் படை போன்ற சமுதாய சேவை அமைப்புகளும் செயல்படுகின்றன.

11)திறமையான இளம் ஆசிரியர்களாலும்,அனுபவம் வாய்ந்த முதிய ஆசிரியர்களின் வழிகாட்டலினாலும் மாணவர்கள் கற்றலில் சிறப்படைகின்றனர்.
மாணவச் செல்வங்கள் இயல்பாக, எளிமையாக, மகிழ்ச்சியாக, குழந்தைத்தனமாக கல்வியைக் கற்கலாம்.எவ்வித அழுத்தமும் இன்றி கற்கலாம்.

12)படைப்பாற்றல் கொண்ட வலிமையான பாரதம் உருவாக, சுயமாக சிந்திக்கும் மாணவ சமுதாயம் உருவாகிட, தைரியமான மனநிலை பெற்ற வருங்காலம் தழைத்திட அரசு பள்ளிகளில் சேர்த்திட அன்புடன் வேண்டுகிறோம்.

அரசு கல்லூரிகளில் மட்டும் சேர்க்க விரும்பும் அனைவரும் அரசுப் பள்ளிகளிலும் சேர்க்க விரும்புவோம்.
வந்தே மாதரம்..

Address

NH 47 Main Road
Avanashi
641654

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Hr. Sec. School, Avinashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category