17/05/2026
*அவனருளாலே...அவன்தாள் வணங்கி!*🙇🏻♂️🔱🙇🏻♂️
*மட்டற்ற மகிழ்ச்சி!*
✨ இன்று (16.05.2025) ஞாயிற்றுக்கிழமை வெளிவந்திருக்கக்கூடிய * #தினமலர் #தமிழ்நாளிதழில்* நமது
#அவிநாசி * #சலங்கைநிருத்யாலயா* பரதநாட்டிய கலைக்கூடம் மாணவியர் பங்கெடுத்த * #மலேயாநாட்டியத்திருவிழா - 2026* என்ற சர்வதேச அளவிலான பரதநாட்டிய நிகழ்ச்சி பற்றிய செய்தியினைப் படத்துடன் வெளியிட்டு எங்களையும், எங்களைப் போன்ற பரதக் கலைஞர்களையும் உற்சாகப்படுத்திய *தினமலர் நாளிதழ் பொறுப்பாசிரியர், ஆசிரியர் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும்* இந்நேரத்தில் எங்களுடைய நெஞ்சம் மகிழும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக் கொள்கிறோம். ஏனென்றால் ஒரு நிகழ்வில் பங்கேற்பது சிறப்பு என்றால் அதை ஒளிப்பாய்ச்சி அச்சு மீடியாவில் (நாளிதழ்) அரங்கேற்றி உலகறியச் செய்ய செய்யும் தினமலரின் சேவை அளப்பரியது. இது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் ஓர் நற்செயல் என்றால் அது மிகையாகாது. தினமலரின் இப்பணி தொய்வில்லாமல் தொடர நாளிதழுக்கு நன்றி கூறி வணங்கி மகிழ்கிறோம்.
இது எங்களுக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகவும், அவிநாசிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவும் பார்க்கிறோம். இந்த எல்லா புகழும் எங்களை இமைப்பொழுதும் விலகாமல் வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய அருள்மிகு. பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அருள்மிகு. அவிநாசிலிங்கேஸ்வரர் ஆகிய அம்மையப்பரையே சாரும். இந்நேரத்தில் இந்நிகழ்வினை திலையுட்கூத்தன் தென்பாண்டி நாட்டன் ஸ்ரீநடராஜ பெருமானின் பாதம் பணிந்து... பாதமலர்களில் சமர்ப்பித்து மகிழ்கிறோம்.
✨என்றென்றும் கலைப் பணியுடன் இறைப்பணியில்...
அவிநாசி
*சலங்கை நிருத்யாலயா* அவிநாசி |திருப்பூர் |கோவை
#சலங்கைநிருத்யாலயா
#பரதநாட்டியகலைக்கூடம்
#மலேசியா
#நாட்டியத்திருவிழா
📱 96005 53445 | 99445 81211
✨💃🏻💃🏻🙏🏻💐💞💐🙏🏻💃🏻💃🏻✨