GHSS MMDA Colony Arumbakkam

GHSS MMDA Colony Arumbakkam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GHSS MMDA Colony Arumbakkam, School, MGR Street, MMDA Colony, Arumbakkam.

20/12/2024
பாரதியார் நினைவு தின ஓவியபோட்டி மற்றும் கவிதை போட்டியில் வென்ற மாணவர்கள்
20/12/2024

பாரதியார் நினைவு தின ஓவியபோட்டி மற்றும் கவிதை போட்டியில் வென்ற மாணவர்கள்

24/08/2024/எம் எம் டி ஏ அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் மிகச் சிறந்த முறைய...
25/08/2024

24/08/2024/எம் எம் டி ஏ அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட பெற்றோர்களும் பள்ளியின் ஆசிரியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். சென்னை பெருநகர மாமன்றத்தின் ஆளுங்கட்சித் தலைவர் திரு ந. இராமலிங்கம் அவர்களும் சென்னை மேற்கு மண்டல மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் திரு. சங்கு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம் மற்றும் பெற்றோர்களின் கடமைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவின் இடையில் பள்ளி வளாகத்தில் தென்னங் கன்றும் வாழைக் கன்றும் நடப்பட்டது.

Two teams have participated in namma Chennai quiz competition today (17/08/2024), our students got 1st place and 4th pla...
17/08/2024

Two teams have participated in namma Chennai quiz competition today (17/08/2024), our students got 1st place and 4th place in the competition. Congratulations to our beloved students and teachers Mr. Tamilselvan and Mrs. Uma for coaching them and accompanying them to competition 💐💐💐

அன்புடையீர் வணக்கம் 🙏 78ஆவது சுதந்திரதின வாழ்த்துகளும் பாராட்டுகளும்இன்று நம் பள்ளியில் சுதந்திர விழா கொண்டாட்டம் சிறப்ப...
16/08/2024

அன்புடையீர் வணக்கம் 🙏

78ஆவது சுதந்திரதின வாழ்த்துகளும் பாராட்டுகளும்

இன்று நம் பள்ளியில் சுதந்திர விழா கொண்டாட்டம் சிறப்புடன் அமைந்தது.

10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு PTA சார்பில் ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு & திருமதி அரவிந்தன் ஸ்ரீராமுலு president Rotary club of Anna Nagar அவர்கள் அம் மாணவர்களுக்கு 3,000/-, 2000/-, 1000/- ஊக்கத் தொகை வழங்கினார். நம் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியப் பெரு மக்கள் PTA சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
LGT Connexions நிறுவன நிர்வாக இயக்குநர் திரு.Wilfred selvaraj அவர்கள் மற்றும் அந்நிறுவன அலுவலர்கள் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்பித்தார்.

மாணவ மாணவியர்களின் தமிழ் மற்றும் ஆங்கில உரை, பாடல் மற்றும் நடனம் மிக அருமையாக இருந்தது. பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமதி. ரீனாகுமாரி மு.க.ஆசிரியர் அவர்களின் ஆங்கில உரை பாராட்டுக்குரியது மேலும் நிகழ்ச்சியை நேர்த்தியாகத் தொகுத்து வழங்கிய ஆசிரியர்கள் , அனைத்து மன்றங்களின் பொறுப்பு ஆசிரியர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்கள் பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள் , இசை ஆசிரியர்கள், Rangoli முதல் Discipline குழு வரை அனைத்து நிலைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு விழா சிறக்க ஒத்துழைப்பு வழங்கினர். NCC, NSS, JRC, Eco club, Health Club மாணவர்கள் திரு. பசுபதி மற்றும் திரு. குருமணி, திருமதி. சித்ரா, திருமதி. சரஸ்வதி ஆகியோருக்கும் உடற் கல்வி துறை ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. மணி , திரு . சீனிவாசன் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணி அளப்பரியது. அனைத்து உதவித் தலைமை ஆசிரியர்களுக்கும் இடைநிலை பட்டதாரி முதுகலை மற்றும் சிறப்பாசிரியர்கள் பயிற்சி மாணவர்கள் என அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவில் கலந்து கொண்ட மேனாள் உதவித் தலைமை ஆசிரியர் திருமதி. ருக்மணி திருமதி சுமதி, திருமதி சங்கரி, திருமதி ஜெயலட்சுமி ஆகியோருக்கும்
விழா சிறக்க உழைத்த அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும். 🙏🙏🙏

08/08/2024

தமிழ் புதல்வன் திட்டம் பற்றி Instagramமில் tnschooledu என்ற தளத்தில் வெளியான காணொளி

நெகிழி பயன்பாட்டை குறைக்கவும் மறு சுழற்சி செய்ய ஊக்குவிக்கும் விதமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னெ...
19/07/2024

நெகிழி பயன்பாட்டை குறைக்கவும் மறு சுழற்சி செய்ய ஊக்குவிக்கும் விதமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை இன்று(19/07/24) நம் எம். எம். டி. ஏ அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். கே. மோகன் அவர்கள் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிறப்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் மனமார்ந்த நன்றிகள்.

கல்வி வளர்ச்சி நாள் - விழா15.07.2024 அன்று காலை 9.00 மணிக்கு எனது  தலைமையில் விழா நடைபெற்றது.மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்...
17/07/2024

கல்வி வளர்ச்சி நாள் - விழா
15.07.2024 அன்று காலை 9.00 மணிக்கு எனது தலைமையில் விழா நடைபெற்றது.

மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட விழா தொடங்கியது. முதுகலைத் தமிழாசிரியர் திருமதி த. சுதா அனைவரையும் வரவேற்றார்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைத் தந்து சிறப்புரை ஆற்றினார்.

பெருந்தலைவர் காமராசரின் அரும் பணிகளையும் தன்னலமற்ற உழைப்பினையும் மாணவர்கள் கவிதையாக பாடலாக தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுகளாக எடுத்துக் காட்டினர். காமராசராக வேடமணிந்து மழலை மணம் மாறாத இன்மொழியில் UKG மாணவி யாமினி பேசிய பேச்சு அருமை.

பள்ளியளவில் (1 - 5, 6 -8, 9 -10 , 11 - 12 வகுப்புகள்) நடத்தப்பெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
இறுதியாக இடைநிலை உதவித் தலைமையாசிரியர் திருமதி. வி வள்ளியம்மாள் அவர்களின் நன்றி நவிலலுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

விழா நிகழ்வினைப் பள்ளி முதுகலைப் தமிழாசிரியர் திரு. ச. சந்தோஷ்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நன்றி

30/05/2024

Address

MGR Street, MMDA Colony
Arumbakkam
600106

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHSS MMDA Colony Arumbakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category