G H S School Thirumazhapadi.

G H S School Thirumazhapadi. Together let us recollect all our school days.

14/06/2022
Beautiful
11/07/2021

Beautiful

 #இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு  #கல்யாணவீட்டுக்கு போனோம்னா...????????பழமையான மலரும்நினைவுகளும் மனதுக்கு மருந்தே...
19/06/2021

#இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு #கல்யாணவீட்டுக்கு போனோம்னா...????????

பழமையான மலரும்நினைவுகளும் மனதுக்கு மருந்தே..

#ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.

#சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
#பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.

#மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

#சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.

#விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.

வழ வழப்பான #சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.

#விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.

#சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ #வருடங்களோ ஆகும்.

எப்ப இந்த பாழாய்போன #செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.

#இப்போல்லாம்....
பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.

#காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.

#விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏...

06/06/2021

Osho -
இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...

(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
*தனித்தனி பிறவிகள்*
*தனித்தனி ஆன்மாக்கள்*

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். *அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .*

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். *அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.*

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், *அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.*

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....
*பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.*

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். *எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.*

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் *இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.*

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

*இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.*_அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். *அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.*

*தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.* இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒரு முறை படிக்கவும்...

-ஓசோ

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந...
15/05/2021

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

மறக்கமுடியாத பள்ளிகாலத்துப் பாடம்
09/08/2019

மறக்கமுடியாத பள்ளிகாலத்துப் பாடம்

09/08/2019
09/08/2019
1980s
05/08/2019

1980s

Lovely to see this group photo! Same batch students after many years.
05/08/2019

Lovely to see this group photo! Same batch students after many years.

Address

Thirumazhapadi
Ariyalur
621851

Opening Hours

Monday 9am - 4:30pm
Tuesday 9am - 4:30pm
Wednesday 9am - 4:30pm
Thursday 9am - 4:30pm
Friday 9am - 4:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when G H S School Thirumazhapadi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category