ஹிந்து மக்கள் கட்சி - தென்காசி

  • Home
  • India
  • Ambasamudram
  • ஹிந்து மக்கள் கட்சி - தென்காசி

ஹிந்து மக்கள் கட்சி - தென்காசி Hi Dear Friends, Please send ur commend [email protected] & asvini.yolasite.com

தண்ணீரில் மிதக்கும் பாறைகள்:---என்னது... பாறை மிதக்குதா? அதுவும் தண்ணீரிலா? நம்பவே முடியலீயே... என்கிறீர்களா?"ராமர் தானே...
20/09/2013

தண்ணீரில் மிதக்கும் பாறைகள்:---

என்னது... பாறை மிதக்குதா? அதுவும் தண்ணீரிலா? நம்பவே முடியலீயே... என்கிறீர்களா?

"ராமர் தானே கடலில் பாறைகளை மிதக்க விட்டு, அதன் மூலம் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவா இது" என்று பலர் கேட்கலாம்? அதுக்கும், இதுக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது என்கிறார்கள்.

அதற்குமுன், தண்ணீரில் மிதக்கும் பாறைகள் பற்றி பார்ப்போமே...

ராமேசுவரத்தில் உள்ள துளசி பாபா மடத்திற்கு சென்றபோது இந்த மிதக்கும் பாறைகளைப் பார்த்தேன். அங்கு, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த பாறைகளை பார்க்க வந்த சிலருக்கு சந்தேகம் வர (எனக்கும் சந்தேகம் வந்தது), அங்குள்ளவர்கள் பாறை தூக்கி வேண்டுமானாலும் பாருங்கள் என்று கூறினார்கள். அதன்படி, பாறையை தூக்கிப்பார்த்தவர்கள், "அம்மாடியோவ்... என்ன அழகா பாறை தண்ணீரில் மிதக்கிறது" என்று முகபாவனையாலேயே வியப்பை தெரிவித்தனர். நானும் தூக்கிப் பார்த்து வியந்தேன்.

பாறையைக் கூர்ந்து கவனித்த போது, உண்மையிலேயே இது பாறை தானா என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த மடத்தின் ஊழியர் ஒருவரிடம் அதுபற்றி கேட்டேன்.

"இதுவும் பாறை தான். ஆனால், வழக்கமான பாறை அல்ல. இதற்கு பெயர் பவளப்பாறை" என்றவர், அந்த பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்ற சம்பவத்தையும் என்னிடம் சொன்னார்.

"17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்க சென்றபோது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். அப்போது பாறைகளை கடலுக்குள் தூக்கிப்போட்டார். அந்த பாறைகள் எல்லாம் கடலில் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகளின் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் ராமர்.

இந்த பாறைகள் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன. இதைத் தான் ராமர் பாலம் என்று அழைக்கிறோம்.

தற்போது, இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவைதான். ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப்போட்ட பாறைகள் தான் இவை. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமானபோது இந்த கோவிலும் சிதைந்து போனது.

அந்த புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, வடநாட்டு சாதுக்கள் தனுஷ்கோடி கடல்கரையில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த பாறைகளில் சுமார் 2 ஆயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்து எடுத்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பாறைகளை வட நாட்டிற்கு கொண்டு சென்றனர். இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், பத்திரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே! புதுச்சேரியில் உள்ள அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்...." என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அந்த ஊழியர்.

இந்த துளசி பாபா மடத்தில் ராமர் பயன்படுத்தியதாக கூறப்படும் பாறைகள் தவிர, தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் இங்கும் வந்துவிட்டு செல்கிறார்கள்.

விநாயகர் ஊர்வலத்திற்கு ரெடியா ? விநாயகரை கரைக்க போவோமா?
11/09/2013

விநாயகர் ஊர்வலத்திற்கு ரெடியா ? விநாயகரை கரைக்க போவோமா?

எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன்1, மச்ச அவதார...
01/09/2013

எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன்

1, மச்ச அவதாரம் - இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றது. வேதங்களை மீட்டது. இந்த அவதாரத்திலேயே மகாப் பிரளயம் வர ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக்கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்களும் மூழ்கின.

2, கூர்ம அவதாரம் - தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.

3, வராக அவதாரம் - விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்

4, நரசிம்ம அவதாரம் - விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது.தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம்

5,வாமன அவதாரம் - பெருமாளின் அவதாரங்களில் இது 5வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும்.

6, பரசுராம அவதாரம் - பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்

7, ராம அவதாரம் - பெருமாளின் அவதாரங்களில் இது 7வது அவதாரமாகும்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்

8, பலராம அவதாரம் - பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

9, கிருஷ்ண அவதாரம் - இது 9வது அவதாரமாகும்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்

10,கல்கி அவதாரம்- பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும். கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து வைகுண்டம் போனார்கள். கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும், இந்த யுகத்தில் ஸ்ரீமன் நாராயணர் மட்டும் அல்லாமல் தனக்குள் அணைத்து தெய்வத்தையும் அடக்கி , ஜாதி மதம் என்பதை கடந்து அனைவரும் ஒற்றுமையை நிலை நிறுத்தி, இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்பதை கடந்து... உருவம் இல்லாத ஒரு உன்னத வழிபாடுதான் இன்று அய்யா வைகுண்டர் எனும் கல்கி அவதாரம்,

இந்துப் பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்கிறார்கள் முஸ் லிம்கள் என இந்து அமைப்பினர் கொந்தளிக்க... அவர்களின் துணை ...
30/08/2013

இந்துப் பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்கிறார்கள் முஸ் லிம்கள் என இந்து அமைப்பினர் கொந்தளிக்க... அவர்களின் துணை யோடு... மதம் மாறிய இரண்டு இளம் பெண்களை மீட்டுவந்திருக்கிறது அவர்களின் குடும்பம். என்ன நடந்தது?

சின்ன ஆவுடையார் கோயில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்களான சுந்தரியும் சத்யாவும்... த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷியாவுதீன் வைத்திருக்கும் கடைகளில் வேலை பார்த்துவந்தனர்.

திடீரென இந்த இரண்டு பெண்களும் முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட்டனர். இவர்களை மீட்டது எப்படி? மதம் மாறிய பெண்களின் அப்பாக்களான கிருஷ்ணமூர்த்தியையும் லட்சுமணனையும் சந்தித்தோம். நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்த இவர்கள் “""நாங்க சாதிமதம் பார்க்காம எல்லோரையும் அண்ணன் தம்பிகளா பாவிச்சி வாழறவங்க. அப்படிப்பட்ட எங்களுக்கு இப்படியொரு சோதனை.

எங்க மகள்கள் ஷியாவுதீனோட கடைகள்ல வேலை பார்த்தாங்க. கொஞ்சநாளா அவங்க போக்கில் மாற்றம் தெரிய ஆரம்பிச்சிது. குறிப்பா சொல்ல ணும்னா.. முஸ்லிம்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையே டி.வி.யில் பார்க்க ஆரம்பிச்சாங்க. இதை கவனிச்சி நாங்க கண்டிச்சப்ப... சும்மாதான் பார்க்கறோம்னு மழுப்பினாங்க. இந்த நிலைலதான் வேலைக்குப்போன எங்க பொண்ணுங்க வீடுவந்து சேரலை. பிள்ளைகளைக் காணலையேன்னு நாங்க பதறிக்கிட்டு இருந்தப்ப.. எங்க பொண்ணுங்க எங்களுக்கு போன்பண்ணி... "நாங்க ஏர்வாடில இருக் கோம். முஸ்லிமா மாறப்போறோம். எங்களைத் தேடவேணாம்'னு சொல்லிட்டு போனைக் கட்பண்ணிட்டாங்க.

இப்படியும் ஒரு கொடுமையான்னு திகைச்சுப்போன நாங்க... அந்த த.மு.மு.க. ஷியாவுதீனைத் தேடி அவரோட கடைக்குப் போனோம். அங்க இருந்தவங்க.. அவர் வெளியூர் போயிருக்கிறதா சொன்னாங்க. உடனே ஏர்வாடிக்குப் போனோம். அங்க ஒரு விடுதியில் எங்க பிள்ளைகளுக்கு முக்காடு போட்டு வச்சிருந்தாங்க. எங்க பிள்ளைகளை அவங்க எங்கக்கிட்ட பேச விடலை. அதனால்... திரும்பிவந்து ‘"எங்க மகள்களை மதம் மாற்ற கடத்திக்கிட்டுப்போய்ட்டாங்க. மீட்டுகொடுங்க'ன்னு அதிராம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். அவங்க புகாரை வாங்க மறுத்துட்டாங்க. அப்புறம்தான் இந்து அமைப்புகளின் உதவி யை நாடினோம் . அவங்க வந்து பிரஷர் கொடுத்தபிறகுதான் போலீஸ் புகாரை வாங் கிக்கிட்டு மீட்கும் முயற்சியில் இறங்கியது.

போலீஸைக் கூட்டிக்கிட்டு ஏர்வாடிக் குப் போனோம். அந்தப் பிள்ளைகள் மது ரைக்குப் போய்டுச்சேன்னு அந்த விடுதிக் காரங்க சொல்ல... அதே நேரம் எங்க பொண்ணுங்க மதுரை வக்கீல் ஒருத்தர் கூட கார்ல வந்து இறங்கினாங்க. போலீஸ் மூலம் எங்க மகள்களை வலுக் கட்டாய மா கூட்டிட்டு வந்து பட்டுக் கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்திட்டு.. அப்புறம் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கோம். வேலைக்குப் போன எங்க பிள்ளைகளை இப்படி மூளைச்சலவை பண்ணி அவங்க மதமாற்றம் பண்ணலாமா?'' என்றார்கள் கலக்கம் மாறாமலேயே.

மதமாற்றப் புகாருக்கு ஆளான த.மு. மு.க., மா.செ.வான ஷியாவுதீன் நம்மிடம் “""இந்த பிள்ளைகளை யாரும் மூளைச் சலவை செய்யலை. அவங்களா இஸ்லாத் தின் மேல் பற்றுவச்சுதான் மதம் மாறி யிருக்காங்க'' என்றார் உறுதியான குரலில். பா.ஜ.க. மாசெ. முரளிகணேஷும் தெய் வீகத் தமிழ் புரட்சிப் பாசறை மதன கோபாலும் “""முத்துப்பேட்டை அதிராம் பட்டினம் பகுதிகள்ல இருக்கும் ஏழை இந்துப்பெண்கள்தான். முஸ்லிம்களின் கடைகளிலும் நிறுவனங்களிலும் அதிகமா வேலைபாக்கறாங்க. முஸ்லிம்களோ அவங்க வறுமையைப் பயன்படுத்தி அவங்களை மதம்மாற்றி... அவங்களைக் கல்யாணமும் பண்ணிக்க ஆரம்பிக்கிறாங்க. அதனால் இப்ப முத்துப் பேட்டை பகுதியில் எந்த இந்துப் பெண்ணும் முஸ்லிம்களின் கடைகளுக்கு வேலைக்குப் போகக்கூடாதுன்னு நிறுத்திவச்சிட்டோம். அதேபோல் அதிராம்பட்டினத்திலும் நாங்க கட்டுப்பாடு விதிக்கப்போறோம். அவர்கள் இத்தகைய போக்குகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம்தான் வெடிக்கும்'' என்கிறார்கள் காட்டமாய்.

மதம் மாறி மீட்கப்பட்டிருக்கும் சுந்தரியையும் சத்யாவையும் நாம் சந்தித்தபோது “""நாங்க வேலைபார்த்த கடைகளுக்கு வரும் இஸ்லாமியப் புத்தகங்களை படிச்சி படிச்சி.. இஸ்லாத்தின் மீது எங்களுக்கு பிடிப்பு வந்துடுச்சி. எங்க கடை ஓனர்கிட்ட எங்களை இஸ்லாமா ஆக்குங் கன்னு கேட்டோம் . அதுக்கு, அதெல்லாம் வேணாம்... பிரச்சினை வரும்னு சொல்லிட்டார். அப்புறம் விடியல் வெள்ளி பத்திரிகையில் வந்த ஏர்வாடி முகவரியைப் பார்த்து நாங்களா கிளம்பிப்போய் மதம் மாறினோம். ஆனா எங்க அப்பாக்கள் போலீஸோடு வந்து... எங்க அம்மாக்கள் தற்கொலை பண்ணிப்பாங்கன்னு சொல்லி... எங்களை வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்துட்டாங்க. கோர்ட்லயும் இதைத்தான் சொன்னோம்''’என்கிறார்கள். இவர்களில் சத்யா இன்னும் பொட்டு வைத்துக்கொள்ள முடியாது என்று தன் வீட்டாரிடம் அடம்பிடித்து வருகிறார்.

மதமாற்ற விவகாரம் அதிராம்பட்டின ஏரியாவில் தகிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது..

ஒரு கிறிஸ்துவ பாதிரியார் 10 வயது குழந்தையை கொடூரமாக கற்பழித்ததை பத்திரிகையின் கடைசி பக்கத்தில் போடுகிறாய்... ஒரு சாமியார...
27/08/2013

ஒரு கிறிஸ்துவ பாதிரியார் 10 வயது குழந்தையை கொடூரமாக கற்பழித்ததை பத்திரிகையின் கடைசி பக்கத்தில் போடுகிறாய்... ஒரு சாமியார் சினமா நடிகை கூட புரண்டதை மட்டும் பத்திரிகையின் முதல் பக்கமாக போடுகிறாயடா??? உன் தாய் மதம் மீது உனக்கு ஏன் இவ்வளவு பாசம்... ஏய் பத்திரிகை நண்பா நீ சாமியார் புரண்டதை காட்டியது தவறு என்று நான் சொல்லவில்லை.. ஆனால் அதை போல் அணைத்து செய்திகளும் எழுது உன் பத்திரிகையில் ......

இந்துக்களைப் போல ஏமாளிகள் உலகில் இல்லை. கிறிஸ்தவ, முஸ்லீம் கும்பல்களின் நோக்கம் தெரியாமல் அவர்களுடைய செயல்களுக்கு ஆதரவளி...
24/08/2013

இந்துக்களைப் போல ஏமாளிகள் உலகில் இல்லை. கிறிஸ்தவ, முஸ்லீம் கும்பல்களின் நோக்கம் தெரியாமல் அவர்களுடைய செயல்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். நன்கொடை கொடுக்கின்றனர். குரானையோ, முகமதுவையோ அல்லாவையோ இழிவு படுத்தி ஒரு போஸ்டர் கூட ஒட்ட முடியாது. ஆனால் ராமருக்கு செருப்பு மாலை போட்டு தி.கவினர் கொண்டாடும்போது அதையும் வேடிக்கை பார்த்து அவர்களுக்கு ஆதரவாகவும் பேசும் இந்துக்கள் ஏராளமாக இருக்கின்றனர். தன்னுடைய மதத்தை இழிவுபடுத்தும் அரசியல்வாதி, நடிகர்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தாலே தமிழ்நாட்டில் பகுத்தறிவு பிசுபிசுத்து முகவரியில்லாமல் போயிருக்கும். இந்த பகுத்தறிவு அறிவாளி நடிகர்கள் இந்து மதத்தை விமரிசனம் செய்வது போல் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை விமரிசனம் செய்ய முடியாது. பகுத்தறிவு என்ற பெயரில் இந்துமதத்தையே கேவலப்படுத்தும் கருணாநிதியை ஆரம்ப காலத்திலேயே வளரவிடாமல் (ஓட்டுபோடாமல்) தடுத்திருந்தால் இவர் கோடீஸ்வரனாகி இருக்கமாட்டார். வை.கோ ஒரு மதம் மாறி. இவரையும் நம் இந்துக்கள்தான் பெரிய ஆளாக உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்து மதத்தின் பலமும் பலவீனமும் பிற மதத்தவரை மதம் மாற்ற வேண்டும் என்று முயற்சிக்காத பரந்த மனப்பான்மைதான். நம் பரந்த மனப்பான்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆபிரகாமிய மதங்கள் இந்து மதத்தை அழிக்க முயன்று வருகின்றன. சமண மதத்தின் வருகையின் பின் தீண்டாமை என்னும் நோய் இந்து மதத்தைப் பீடித்தது. இந்த நோய் இப்போது ஓரளவு குணமாகி வருகிறது. இந்து மதத்தில் குறைகள் என்று அவற்றை நிவர்த்தி செய்து நம் கலாச்சாரத்தைக் காக்க வேண்டியது நம் கடமை.

பார்வதிதேவியின் புத்திரனாக அவதரித்த விநாயகர் ஆரம்பத்தில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் மனித உருவத்துடன் தான் இருந்தார். பிரம்...
23/08/2013

பார்வதிதேவியின் புத்திரனாக அவதரித்த விநாயகர் ஆரம்பத்தில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் மனித உருவத்துடன் தான் இருந்தார். பிரம்மன் உயிர்களைப் படைக்கும் பணியை மேற்பார்வையிட சென்றார். அந்நேரத்தில், தொழிலில் சற்று கவனமில்லாமல், தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டார் பிரம்மன். கொட்டாவி சோம்பலின் அறிகுறி. சோம்பல் வந்து விட்டால், துன்பம் பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்து விடும். அந்த கொட்டாவியில் இருந்து ஒரு அரக்கன் பிறந்தான். இவன் தன்னைப் படைத்த பிரம்மனை வணங்கினான். ஐயனே! நீங்கள் உபயோகிக்கும் மண் உள்ளிட்ட எந்த உபகரணத்தில் இருந்தும் நான் பிறக்கவில்லை. வாயில் இருந்து பிறந்துள்ளேன். தாயில்லா பிள்ளையான நான் தங்களின் பிள்ளையாக இருக்க விரும்புகிறேன், என்றான். பிரம்மா இதற்கு சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட அவன், அப்படியானால், நான் கேட்கும் வரத்தையாவது தாருங்கள், என்றான். பிரம்மா சம்மதிக்க, நான் யாரைக் கட்டித் தழுவுகிறேனோ அவர்கள் சாம்பலாக வேண்டும், என்றான். பிரம்மா சம்மதித்து விட்டார். அவ்வளவு தான். தன்னை மகனாக ஏற்காத பிரம்மனையே கட்டிப்பிடிக்க முயன்றான் அவன். பிரம்மா ஓடிவிட்டார். இதைப் பார்த்த விநாயகர் தந்தையிடம் சென்று நடந்த சம்பவத்தை சொன்னார். பிரம்மா இல்லாததால் உயிர்களின் பிறப்பு நின்றது.

கொட்டாவியில் இருந்து பிறந்த சிவந்த நிறமுடைய அந்த அரக்கன் சிந்தூரன் என தனக்கு பெயர் சூட்டிக் கொண்டான். தேவலோகத் தெருவில் போவோர், வருவோரை எல்லாம் கட்டிப்பிடித்து பஸ்பமாக்கினான். அவனைக் கண்டு நடுங்கிய தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை நோக்கினார். தந்தையின் பார்வையை குறிப்பால் உணர்ந்த கணபதி சிந்தூரனைக் கொல்ல முடிவெடுத்தார். இந்நிலையில் மகேஸ்வரன் என்ற குரு (பிரகஸ்பதி) பக்தன், அவரை தினமும் கோயிலில் சென்று வணங்குவான். குரு அவன் பக்திக்கு மகிழ்ந்து, என்னை வணங்கிய உன் சிரம் இந்த உலகத்தாரால் வணங்கப்படுவதாக,என வரமளித்தார். அதற்கான நாளை எதிர்பார்த்திருந்தான் மகேஸ்வரன். ஒருநாள் அவன் தன் பரிவராங்களுடன் வீதியுலா சென்ற போது, அவ்வூருக்கு நாரதர் வந்தார். மன்னன் அவரைக் கவனிக்காமல் சென்றான். கோபமடைந்த நாரதர் அவனை அசுரனாகும்படியும், யானத்தலையுடன் திரியும்படியும், சிவனால் அத்தலை அறும்படியும் சபித்தார். இதன்பிறகு மகேஸ்வரன் அட்டூழியம் செய்து திரிந்தான். சிவபெருமான் அவன் சிரத்தை அறுத்தார். பிரகஸ்பதியிடம் ஓடோடிச் சென்ற விநாயகர், உங்கள் விருப்பப்படி உங்களால் வரம் தரப்பட்ட மகேஸ்வரனின் தலையை நான் பொருத்திக் கொள்வேன். அவன் தலையுடன் கூடிய என்னை எல்லாரும் பணிவர், என்றார். பின் அந்த தலையை தன் திருமேனியில் தாங்கி காட்சி கொடுத்தார். அன்று முதல் விநாயகருக்கு கஜானனர் என்ற பெயர் ஏற்பட்டது. ஒருநாள் சிந்தூரன் விநாயகரை எதிர்க்க வந்தான். சர்வசக்தியுள்ள அந்தக்கடவுள் சிந்தூரனை அப்படியே தூக்கி தன் மத்தகத்தில் சாந்தாக பூசிக்கொண்டார். தேவர்கள் மகிழ்ந்தனர். வடமாநிலங்களில், விநாயகர் உடல் முழுவதுமே செந்தூரம் பூசுவதன் காரணம் இதுவே!

நெல்லை மாவட்டம் தென்காசியில் பட்டப் பகலில் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் ஓட ஓட விரட்டி அரிவாள்களால் வெட்டிக் ...
23/08/2013

நெல்லை மாவட்டம் தென்காசியில் பட்டப் பகலில் இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் ஓட ஓட விரட்டி அரிவாள்களால் வெட்டிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகொலையாயினர்.

இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது .


தென்காசி நகர இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் பாண்டியன் கடந்தசில வருடங்களுக்கு முன்னால் ஒரு இஸ்லாமிய அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார்.

கோவில் அருகே மசூதி கட்ட அவர் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஹனீபா, அப்துல்லா, சுலைமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வந்தது.

சமீபத்தில் குமார் பாண்டியனின் சகோதரர் செந்தில் என்பவரும், நடராஜன் என்பரும் வெட்டப்பட்டனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட தமிழக முஸ்லீம முன்னேற்றக் கழகத் தலைவர் மைதீன் சேட்கானை ஒரு கும்பல் கடந்த மார்ச் மாதம் வெட்டியது.

குமார் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுலைமான் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டார். ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜாராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜாராகி வந்த நிலையில் அவர்களது நடவடிக்கைகளை குமார் பாண்டியன் ஆதரவாளர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.


அவர்களை போட்டுத் தள்ள முடிவு செய்து குமார்பாண்டியனின் தம்பி செந்தில் தலைமையில் ஒரு கும்பல் கூலக்கடை பஜார் பகுதியில் காரில் பதுங்கியிருந்தனர்.

தங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்த்திருந்த ஹனீபா, அப்துல்லா தரப்பினரும் ஆயுதங்களுடன் தான் நடமாடி வந்தனர்.

இந் நிலையில் இன்று காலை ஹனீபா, அப்துல்லா ஆகியோர் 4 ேபருடன் தென்காசி காவல் நிலையத்துக்கு 2 பைக்குகளில் கையெழுத்துப் போட சென்றனர்.

அவர்களை கூலக்கடை பஜார் பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே வைத்து செந்தில் கும்பல் சுற்றி வளைத்தது. காரில் வந்த அவர்கள், பைக்குகளை வழி மறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அவை வெடிக்கவில்லை.

இதையடுத்து அரிவாள்களுடன் காரிலிருந்து குதித்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஹனீபா, அப்துல்லா தரப்பினரும் தங்களிடம் இருந்த அரிவாள்கள், பட்டா கத்திகளுடன் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இதில் குமார் பாண்டியனின் தம்பி சேகர், அவரது நண்பர் ரவி, மற்றும் அசன் கனி ஆகியோர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு அந்த இடத்திலேயே பலியாயினர். இவர்களுக்கு கை, கழுத்து, தலை, கால் என பல இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது.

ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி வெட்டியதில் குமார் பாண்டியனின் இன்னொரு தம்பி செந்தில், அப்துல்லா, அபு அன்சாரி, நாகூர் மிரான், ராஜா, மீரான் மைதீன், செய்யது அலி ஆகிய 7 பேர் படுகாயமடைந்து தென்காசி மேலமுத்தாரம்மன் கோவில் அருகேயும், கூலக்கடை பஜாரிலிருந்து பூங்கொடி விநாயகர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியிலும் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தனர்.

போலீசார் விரைந்து வந்து இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இவர்களில் செந்தில், நசீர், நாகூர் மீரான் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இத் தாக்குலில் சையத் அலி, அபு, மீரான், ராஜா, அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சிறிய தெருவுக்குள் இரு தரப்பினரும் பயங்கரமாக ஓடி, விரட்டி வெட்டிக் கொண்டத் அந்தப் பகுதியையே பீதியில் ஆழ்த்திவிட்டது.

அந்த வழியாக சென்ற பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு சிலர் கடைகளில் புகுந்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் தென்காசியில் கடைகள் மூடப்பட்டுவிட்டன. இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் பஜார் பகுதியிலும் மருத்துவமனையிலும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதக் கலவர அபாயம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்டு வர பள்ளிகளில் குவிந்தனர். இதனால் பள்ளிகள் முன் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Address

11a, Kamarajar Street, Agasthiyarpuram
Ambasamudram
ASVINI.YOLASITE.COM

Alerts

Be the first to know and let us send you an email when ஹிந்து மக்கள் கட்சி - தென்காசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ஹிந்து மக்கள் கட்சி - தென்காசி:

Shortcuts

Share

Category