06/12/2016
SPKC Alumni
5 hrs ·
உலக சாதனை !!! மாபெரும் உலக சாதனை !!!!.4.12.2016 அன்று 1975-78 B.Com., batch S. Sankarasubramanian , (கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ) 7 மணி நேரம் , மணிக்கு 5 நிமிட இடைவேளை விட்டு , உலக பொதுமறை திருக்குறள் சொற்பொழிவு
நிகழ்த்தி சாதனை செய்தார் . காலை மணி 9.25 க்கு பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் , தினமலர் ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய வாழ்த்துடன் ஆரம்பித்த சொற்பொழிவு மாலை 6.00 மணிக்கு ஸ்ரீபரமகல்யாணி கல்வி குழுமத்தின் தலைவர் , அமால்கமேஷன் சேர்மன் திரு அ . கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பழச்சாறு கொடுக்க உலக சாதனையாக நிறைவு பெற்றது . காலையில் ஆரம்பிக்கும் போது இருந்த அதே உற்சாகம் , குரல் வளம் மாலை வரை சற்றும் குறையாமல் இருந்தது திருவள்ளுவரின் திருவருள் என்பதா ? கலைமகளின் கடைக்கண் பார்வை என்பதா ?
மணிசங்கர் மற்றும் நால்வர் குத்துவிளக்கு ஏற்றினார்கள் . ஆடிட்டர் ஜே . பாலசுப்ரமணியன் வரவேற்றார் .திரு நாகூர்பிட்சை அவர்கள் 10 திருக்குறளை வாசித்தார்கள் .பாரத ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் (ஓய்வு ) டாக்டர் சதக்கத்துல்லா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள் .த . ராமசந்திரன் அவர்கள் இல்லத்தரிசியுடன் வந்திருந்தார் .இந்தியா சிமெண்ட்ஸ் ஹரிஹரசுப்ரமணியன் , இஸ்ரோ கிருஷ்ணன் , ராஜ்குமார் , பவித்ரம் டிரஸ்டின் ஜாய்ஸ் திலகம் , பாபு சேனன் , சிவாலயமோகன் , சங்கர் , புரோபஸ் கிளப் உறுப்பினர்கள் , பிரபாராஜன் பவுண்டேஷன் , துரியானந்தம், ஆர் . நாராயணசாமி ஆகியோர் சிறப்பு செய்தனர் .
நிறைவு விழா நீதியரசர் திரு ராமநாதன் அவர்கள் தலைமையில் தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் , உலகத் தமிழ் ஆராய்ச்சி இயக்குநர்
முனைவர் விஜயராகவன் , முனைவர் சேயோன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .சந்திரமோகன் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கினார் . தேஜஸ் பவுண்டேஷன் ராஜன் ஜி , ரமேஷ் , சிவகங்கை இளவரசர் சுரேஷ் ஆகியோர் திறமையாக ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
இந்த சாதனை நமக்கும் நம் பரமகல்யாணி கல்லூரிக்கும் பெருமை . கீழாம்பூர் மணியை வாழ்த்துவோம்.
-courtesy SPKC ALUMNI