Al-Hidayah Online Arabic Course

Al-Hidayah Online Arabic Course Education

*அஸ்ஸலாமு அலைக்கும்* *🎓அல் ஹிதாயா இணைய வழி அரபிக் கல்வி வழங்கும்🎓*🍁 *வரலாற்றில் ஓர் நிகழ்வு*🍁*🌷 நீங்களும் படித்து பயன் ப...
09/07/2024

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*🎓அல் ஹிதாயா இணைய வழி அரபிக் கல்வி வழங்கும்🎓*

🍁 *வரலாற்றில் ஓர் நிகழ்வு*🍁

*🌷 நீங்களும் படித்து பயன் பெற்று மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மையை அடைந்து கொள்ளுங்கள் 🌷*

அ(த்)தாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

ஒரு நாள் நானும், இப்னு உமர் மற்றும் உபைத் இப்னு உமைர் ( ரலி – அன்ஹுமா ) ஆகியோரும் அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்களைச் சந்திக்க அன்னையவர்களின் வீட்டிற்குச் சென்றோம்.

வீட்டின் வாசலில் நின்று கொண்டு மொத்தமாக ஸலாம் கூறி அனுமதி கேட்டோம்.

அப்போது என் குரலை கண்டு பிடித்து விட்ட அன்னையர் அவர்கள் *"உடன் வந்திருப்பவர்கள் யார்?"* என்று வினவினார்கள்.

அதற்கு, நான் *"என்னோடு இப்னு உமர் (ரலி) அவர்களும், உபைத் இப்னு உமைர் (ரலி) அவர்களும் வந்திருப்பதாகக்"* கூறினேன்.

அதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் *"உபைத் இப்னு உமைரே! உமது வரவு நல்வரவாகட்டும்! நீண்ட நாட்களாக நம்மை சந்திக்க வராததன் காரணம் தான் என்ன?"* என்று வினவினார்கள்.

அதற்கு, உபைத் அவர்கள் *"இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரே! இடைவெளி விட்டு சந்தித்தால் நேசம் அதிகமாகும் அல்லவா?"* அதுதான் காரணம் என்றார்கள்.

அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் *"அன்னையே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் தங்களால் மறக்கவே முடியாத தருணம் ஏதேனும் உண்டா? அப்படியிருந்தால் எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்!"* என்றார்கள்.

அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள், *"அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கை முழுவதுமே மறக்க முடியாத தருணங்கள் தானே எனக்கு!"* என்று கூறி விட்டு,

*"என் மனதை நெகிழச் செய்த ஓர் நிகழ்வினை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கின்றேன்!"* என்று கூறிய அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள் தொடர்ந்தார்கள்,

*"அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் என்னோடு தங்கும் முறை உள்ள ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வருகை தந்தார்கள். என்னோடு மிக நெருங்கி அமர்ந்தார்கள்.*

*பின்பு என்னிடம் 'ஆயிஷாவே! இன்றிரவு முழுவதும் என் இறைவனை நான் வணங்கிட விரும்புகின்றேன்! எனக்கு கொஞ்சம் அனுமதி தருவாயா?' என்று கேட்டார்கள்.*

*அதற்கு, நான் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களின் நெருக்கத்தை எவ்வாறு நான் விரும்புகின்றேனோ, அது போன்றே தங்களது விருப்பங்களையும் நான் விரும்புகின்றேன்! தாராளமாக இரவு முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றேன்.*

*அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எழுந்து, உளூ செய்து விட்டு வந்து தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள்.*

*பின்பு நீண்ட நேரம் அழுதவர்களாக நின்றார்கள். அவர்களின் தாடியெல்லாம் நனையும் அளவு அழுதார்கள். அவர்களின் கண்ணீர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தொடையையும் நனைத்தது.*

*தொழுது முடித்ததன் பின்னர், வலது புறமாக ஒருக்கணித்து அமர்ந்து, வலது கையை வலது தொடையின் மீது வைத்தவர்களாக அழுது கொண்டே இருந்தார்கள். அவர்களின் அழுகையால் வீடு முழுவதும் நனைந்து இருந்தது.*

*இதே நிலையில் ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கும் விடுக்கப்பட்டது.*

*அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைக் காணாத பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.*

*அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை அழுத நிலையில் கண்ட பிலால் (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே எதற்காக தாங்கள் அழவேண்டும்? அல்லாஹ் தான் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே?' என கனிவோடு கேட்டார்கள்.*

*அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் 'பிலாலே! நான் அல்லாஹ்விற்கு நன்றியுணர்வுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கூறிவிட்டு, இப்போது தான் ஆலுஇம்ரானின் 190 மற்றும் 191ம் இறைவசனங்கள் இறக்கப்பட்டன.*

*("நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!' (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். 03:190,191)*

*எவன் அந்த வசனங்களை ஓதியதன் பின்னர் அந்த இறைவசனத்தை சிந்திக்கவில்லையோ அவன் மீது நாசம் உண்டாகட்டும்!' என்று கூறினார்கள்.* என அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள் கூறினார்கள்.

(நூல்:ஸஹீஹ் புகாரி, தன்பீஹுல் ஙாஃபிலீன், பாபுத் தஃபக்குர்.)

📚📚📚📚📚📚📚📚📚📚 *படித்துக்கொண்டோ, வேலைக்கு சென்று கொண்டோ, வீட்டில் இருந்து கொண்டோ மார்க்கக் கல்வி பயில ஓர் அரிய வாய்ப்பு*
*(தமிழ் மீடியம்)*

🎓 *அல்ஹிதாயா இணையவழி அரபிக் கல்லூரி*🎓

*இஸ்லாமிய கல்வியில் மேலும் ஓர் அரிய முயற்சி*

🍁 *அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமா அத் கொள்கையிலான பாடத்திட்டம்*

💻 *இணைய வழி மூலம் பாடங்கள் நடைபெறும்*

🛑 *2024-2025 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது*
--------------------------------------

🔵 *வகுப்புகள்*
*2024 ஜூலை-முதல்வாரம் துவங்கப்படும்* இன்ஷா அல்லாஹ்

🔴 *சிறப்பு பாடத்திட்டம்*

👉 *குர்ஆன், தஃப்ஸீர்*
👉 *ஹதீஸ்*
👉 *ஃபிக்ஹ்*
👉 *அகீதா*
👉 *இஸ்லாமிய வரலாறுகள்*
👉 *தஜ்வீத் சட்டங்கள்*
👉 *இஸ்லாமிய அடிப்படைக் கல்வி*(BIS)
👉 *BA. அரபிக் மற்றும் அப்சல் உலமா பாடத்திட்டம் உள்ளடக்கியது*

💢 *தகுதி : 15 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்*

🌎 *தமிழகம் மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு நழுவ விடாதீர்...*

--------------------------------------
🖥️ *𝐅𝐨𝐫 𝐫𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧*
இந்த தகவலை பூர்த்தி செய்து கீழ்காணும் எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செய்யவும்
======================
*NAME:*

*FATHER/GUARDIAN:*
*DOB & AGE:*

*MEDIUM :* TAMIL

*ADDRESS:*

*STATE:*
*COUNTRY:*
*PIN:*
*MOBILE NO:*
*WHATSAPP NO:*
-------------------

*MORE DEATAILS:*
𝐈𝐧𝐝𝐢𝐚
FOR MEN:
*+91 9486909786*
FOR GIRLS:
*+91 9715844786*

*அஸ்ஸலாமு அலைக்கும்* *🎓அல் ஹிதாயா இணைய வழி அரபிக் கல்வி வழங்கும்🎓*🍁 *வரலாற்றில் ஓர் நிகழ்வு*🍁*🌷 நீங்களும் படித்து பயன் ப...
06/07/2024

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*🎓அல் ஹிதாயா இணைய வழி அரபிக் கல்வி வழங்கும்🎓*

🍁 *வரலாற்றில் ஓர் நிகழ்வு*🍁

*🌷 நீங்களும் படித்து பயன் பெற்று மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மையை அடைந்து கொள்ளுங்கள் 🌷*

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் *யர்ஹமுக் கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக!)* என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர்.

நான் *"என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?"* என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.

அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், *"இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்!"* என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

நான், *"அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?"* என்று வினவினேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள், *"சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்!"* என்றார்கள்.

நான் *"எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?"* என்றேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், *"இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது "அவர்களை" அல்லது "உங்களை" (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்!"* என்று கூறினார்கள்.

நான், *"எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனரே?"* என்றேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், *"நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்து வந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்!"* என்றார்கள்.

அடுத்து,
என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள்.

ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கவ்விக் கொண்டு சென்றுவிட்டது.
(சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டு அவளை அறைந்துவிட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இது குறித்து என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், *"அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?"* என்று கேட்டேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள், *"அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!"* என்று சொன்னார்கள்.

நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், *"அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?"* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் கேட்டார்கள்.

அவள், *"வானத்தில்"* என்று பதிலளித்தாள். அதையடுத்து, *"நான் யார்?"* என்று கேட்டார்கள். அவள், *"தாங்கள் அல்லாஹ்வின் தூதர்"* என்றாள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் (என்னிடம்), *"அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்!"* என்றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்,
அத்தியாயம் : பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்.)

📚📚📚📚📚📚📚📚📚📚 *படித்துக்கொண்டோ, வேலைக்கு சென்று கொண்டோ, வீட்டில் இருந்து கொண்டோ மார்க்கக் கல்வி பயில ஓர் அரிய வாய்ப்பு*
*(தமிழ் மீடியம்)*

🎓 *அல்ஹிதாயா இணையவழி அரபிக் கல்லூரி*🎓

*இஸ்லாமிய கல்வியில் மேலும் ஓர் அரிய முயற்சி*

🍁 *அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமா அத் கொள்கையிலான பாடத்திட்டம்*

💻 *இணைய வழி மூலம் பாடங்கள் நடைபெறும்*

🛑 *2024-2025 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது*
--------------------------------------

🔵 *வகுப்புகள்*
*2024 ஜூலை-முதல்வாரம் துவங்கப்படும்* இன்ஷா அல்லாஹ்

🔴 *சிறப்பு பாடத்திட்டம்*

👉 *குர்ஆன், தஃப்ஸீர்*
👉 *ஹதீஸ்*
👉 *ஃபிக்ஹ்*
👉 *அகீதா*
👉 *இஸ்லாமிய வரலாறுகள்*
👉 *தஜ்வீத் சட்டங்கள்*
👉 *இஸ்லாமிய அடிப்படைக் கல்வி*(BIS)
👉 *BA. அரபிக் மற்றும் அப்சல் உலமா பாடத்திட்டம் உள்ளடக்கியது*

💢 *தகுதி : 15 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்*

🌎 *தமிழகம் மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு நழுவ விடாதீர்...*

--------------------------------------
🖥️ *𝐅𝐨𝐫 𝐫𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧*
இந்த தகவலை பூர்த்தி செய்து கீழ்காணும் எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செய்யவும்
======================
*NAME:*

*FATHER/GUARDIAN:*
*DOB & AGE:*

*MEDIUM :* TAMIL

*ADDRESS:*

*STATE:*
*COUNTRY:*
*PIN:*
*MOBILE NO:*
*WHATSAPP NO:*
-------------------

*MORE DEATAILS:*
𝐈𝐧𝐝𝐢𝐚
FOR MEN:
*+91 9486909786*
FOR GIRLS:
*+91 9715844786*

Address

Https://maps. App. Goo. Gl/sz1kHAxJ1RKEWtDM 8
Aduthurai
612101

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hidayah Online Arabic Course posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share