மில்ரன் கீன்ஸ் தமிழ்க் கல்விக்கழகம் MKTA

மில்ரன் கீன்ஸ்  தமிழ்க் கல்விக்கழகம்  MKTA Tamil Language Education & culture.

04/09/2026

AIல் ஓர் முயற்சி

11/07/2026  நடைபெற்ற எமது கல்விக்கழக விளையாட்டுப் போட்டியின் சில பதிவுகள் -1
24/07/2026

11/07/2026 நடைபெற்ற எமது கல்விக்கழக விளையாட்டுப் போட்டியின் சில பதிவுகள் -1

15/07/2026

இல்ல மெய் வல்லுநர்ப் போட்டி 2026 சிறப்புற நடைபெற்றதற்கு அனைத்து விதத்திலும் உதவி புரிந்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

13/07/2026

அனைவருக்கும் வணக்கம்!

மில்ரன் கீன்ஸ் தமிழ்க் கல்விக் கழகம்
விளையாட்டுப் போட்டி – 2026
சிறந்த தமிழ்மொழியைப் பேணிப் பாதுகாக்கும் எமது கல்விக் கழகம் நடத்திய நேற்றைய விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவுபெற இறைவன் அருள்புரிந்ததற்காக முதலில் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது அழைப்பை ஏற்று நேற்றைய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எமது கல்விக் கழகத்தின் சார்பாக இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

"நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று."
— திருவள்ளுவர்

திருவள்ளுவரின் இந்தப் பொன்மொழிக்கிணங்க, நேற்றைய விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற அயராது உழைத்து உறுதுணையாக இருந்த, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளைத் திட்டமிட்டு சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், நலன்விரும்பிகள், தன்னார்வத் தொண்டர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நிறுவக உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள், நிதியுதவி வழங்கிய நன்கொடையாளர்கள், நடுவர்களாகப் பணியாற்றியவர்கள் என அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறோம்.

அத்துடன், தாயகம் விளையாட்டுக் கழகத்தினர், புகைப்படக் கலைஞர்கள், ஒலி மற்றும் ஒளி சேவையை வழங்கியோர், புலக்கண் நேரலை (Live Streaming) சேவையை வழங்கியவர்கள், சிற்றுண்டிகளைத் தயாரித்து வழங்கிய ஹனிமூன் நிறுவனத்தினர் மற்றும் நிகழ்வின் வெற்றிக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் தோளோடு தோள் நின்று ஒத்துழைத்த அனைத்து உறவுகளுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது நன்றியில் யாரேனும் தவறுதலாக விடுபட்டிருந்தால், அவர்களிடமும் எமது மனமார்ந்த மன்னிப்பையும் கோடானுகோடி நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!
நிர்வாகம்
மில்ரன் கீன்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் (MKTA)
12/07/2026

09/07/2026
04/07/2026

எமது கல்விக்கழக விளையாட்டுப் போட்டி 2026/07/11

19/06/2026

11/07/2026 அன்று நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கான
அணிநடை மற்றும் விளையாட்டுகளுக்கான பயிற்சிகளில் ஆர்வத்துடன் மாணவர்கள் ஈடுபடும் சில காட்சிகள்.

Address

Milton Keynes Tamil Academy , St. Paul’s Catholic School, , Phoenix Drive, , Leadenhall
Milton Keynes
MK65EN

Opening Hours

10am - 12:30pm

Telephone

+447807009425

Website

Alerts

Be the first to know and let us send you an email when மில்ரன் கீன்ஸ் தமிழ்க் கல்விக்கழகம் MKTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to மில்ரன் கீன்ஸ் தமிழ்க் கல்விக்கழகம் MKTA:

Shortcuts

Share

Category