South West London Tamil Kalvi Koodam

South West London Tamil Kalvi Koodam We teach our mother tongue Tamil and our cultural values to the next generation. Our main purpose is to serve our Tamil community by teaching our children.

Welcome to SWLTKK's official page! We are a Tamil language school based in Tooting, South West London. Please like and share our page for updates about our school and future events. Our institution was formed and is operating with the main purpose to serve the Tamil Community. Our Education Centre’s main objective is to teach our language and values to our kids, enabling them to integrate with our host country whilst having an understanding and retention of their own cultural identity. We believe our institute's education will guide our children to be more disciplined and successful in life and will also help them to contribute to British culture and to the wider Tamil community. By being multi-lingual, not only can our children convey their cultural identity to the next generation, they also have a more brighter chance for their future in today's multi-ethnic society. We teach the Valar Tamil syllabus by the TEDC board, followed by 14 countries worldwide, with over 60,000 students: https://www.facebook.com/tedcuk/

தென்மேற்கு இலண்டன் தமிழ்க் கல்விக்கூடம். அனைவருக்கும் வணக்கம், நேற்று எமது பள்ளியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வண...
18/05/2025

தென்மேற்கு இலண்டன் தமிழ்க் கல்விக்கூடம். அனைவருக்கும் வணக்கம்,
நேற்று எமது பள்ளியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம்.
நன்றி
நிர்வாகமும் ஆசிரியர்களும்.

திரு கருணாநிதி கனகரட்ணம் அவர்களுக்கு"வாழ்நாள் தமிழ்த்தொண்டர்" என மதிப்பளிப்பு தென்மேற்கு இலண்டன் தமிழ்க் கல்விக்கூடத்தின...
26/01/2025

திரு கருணாநிதி கனகரட்ணம் அவர்களுக்கு
"வாழ்நாள் தமிழ்த்தொண்டர்" என மதிப்பளிப்பு

தென்மேற்கு இலண்டன் தமிழ்க் கல்விக்கூடத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு கலைவிழா 18.01.2025 அன்று CROYDON இல் பள்ளியின் இளையோரால் 450 வரையான பள்ளி மாணவர்களின் இயல், இசை, நாடகம் என 80 க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்வுகளுடன் மதியம் 12.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அரங்கேறியது.

அதில் சிறப்பு நிகழ்வாக தென்மேற்கு இலண்டன் தமிழ்க்கல்விக் கூடத்தில் 2006 ஆம் ஆண்டு பணிசெய்யத் தொடங்கிய காலம் முதல் 2023 ஆம் ஆண்டுவரை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துப் பணிகளிலும் முன்னின்று உழைத்தவரும், அப்பெரும் பணிகளுடனும் எமது பள்ளியின் பணிகளையும் முழு அர்ப்பணிப்புடன் இன்றுவரை இடையறாது தன் முதுமையையிலும் இளைஞன் போல் நிர்வாகப்பணி செய்துவரும் பெருமதிப்பு மிக்க திரு கருணாநிதி கனகரட்ணம் அவர்களை மேடையில் மதிப்பளிப்பதில் தமிழ்ப்பள்ளிக் குடும்பத்தவராகிய நாம் பெருமகிழ்வடைகிறோம்.

மழையா, பனியா, வெயிலா எதுவென்றாலும் காலையில் வயது வேறுபாடு இன்றி இருகரம் கூப்பி வணக்கம் என்று கூறி பள்ளி வரும் அனைவரையும் வரவேற்பதில் தான் அனைவருக்கும் சனிக்கிழமைகள் தொடங்கும் ஐயா. மேடையில் துணைவியார் திருமதி சாந்தகுணதேவி கனகரட்ணம் உடனாக, திரு கருணாநிதி கனகரட்ணம் அவர்களுக்கு
"வாழ்நாள் தமிழ்த்தொண்டர்" என மதிப்பளிப்பு செய்வதில் எமது பள்ளி பெருமிதம் கொள்கிறது. ஐயாவுக்கான மதிப்பளிப்பினை பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் மதிப்பளிப்பு செய்திருந்தார். நன்றி."

எமது பள்ளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
19/05/2024

எமது பள்ளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

18/12/2023

# # தென்மேற்கு இலண்டன் தமிழ்க் கல்விக்கூடம். # #

வணக்கம் அன்பான தமிழ்த்திறன் போட்டியாளர் - பெற்றோர்- அணியமாக்கிய ஆசிரியர்களுக்கு,

17.12.2023 இல் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவர்களை தெரிவுப்போட்டி நாள் முதல் இறுதிப்போட்டிநாள்வரை அணியம் செய்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் மாணவச் செல்வங்களின் இறுதிப்போட்டி நாளன்று அதனைத் திறம்பட நடாத்த தங்கள் ஒத்துழைப்புகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி.

நிர்வாகமும் ஆசிரியர்களும்.

 # #தென்மேற்கு இலண்டன் தமிழ்க்கல்விக்கூடம் # #நத்தார்விழா சிறப்புற தங்களாலான பணிகளை வழங்கிய அனைவருக்கும்,கடந்த சனிக்கிழம...
18/12/2023

# #தென்மேற்கு இலண்டன் தமிழ்க்கல்விக்கூடம் # #

நத்தார்விழா சிறப்புற தங்களாலான பணிகளை வழங்கிய அனைவருக்கும்,

கடந்த சனிக்கிழமை 16/12/2023 அன்று எமது தமிழ்ப்பள்ளி கிறிஸ்தவ ஆராதனைக் குழுமத்தினரால் தடாத்தப்பட்ட நத்தார் விழா வழமை போல மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பங்குபற்றிய மாணவச்செல்வங்கள், அவர்களை அணியமாக்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், விழாவினை தொகுத்து வழங்க உதவிய ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இவ் விழா சிறக்க சிற்றுண்டிகள் முதல் விழா நிறைவு வரை பின்புலத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிர்வாகமும் ஆசிரியர்களும்.

12/04/2022
28/03/2022
தமிழ்ப் பொதுத்தேர்வு பற்றிய அறிவித்தல்
20/05/2021

தமிழ்ப் பொதுத்தேர்வு பற்றிய அறிவித்தல்

01/01/2021

#தென்மேற்கு இலண்டன் தமிழ்க் கல்விக்கூடம் #

அன்பான பெற்றோர்களுக்கு
வணக்கம்.

# #அனைவருக்கும் பாதுகாப்பான இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் #

1) இவ்வாரம் 02/01/2021 புதுவருட விடுமுறை.

தமிழ்ப்பள்ளி புதிய தவணை மீண்டும் அடுத்தவாரம் 09/01/2021 முதல் வழமையான Zoom இணையவழி மூலம் நடைபெறும்.

தங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி,

நிர்வாகமும் ஆசிரியர்களும்.

27/12/2020

#தென்மேற்கு இலண்டன் தமிழ்க் கல்விக்கூடம் #

அன்பான பெற்றோர்களுக்கு
வணக்கம்.

# #அனைவருக்கும் பாதுகாப்பான இனிய நத்தார், ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் #

1) இவ்வாரமும் அடுத்தவாரமும் (26/12/2020 & 02/01/2021) நத்தார் புதுவருட விடுமுறை.

2) கடந்த வாரங்களில் நடைபெற்ற தங்கள் பிள்ளைகளின் இடைக்காலத் தவணை மதிப்பீடுகளின் அடைவுகளை உங்கள் மின்னஞ்சலுக்கு 24/12/2020 அன்று [email protected] எனும் மின்னஞ்சலிலிருந்து அனுப்பியுள்ளோம். தயவுசெய்து மின்னஞ்சலைப் பார்க்கவும் (Junk mail) உட்பட. கிடைக்காதவர்கள் உடனே தொடர்புகொள்ளவும்.

3)தவணைக்கட்டணங்களைச் செலுத்தாதவர்கள் தயவுசெய்து இவ்வாரமே எமது வங்கிக்கு உங்கள் குடும்ப இலக்கத்துடன் செலுத்தவும்.

4)தமிழ்ப்பள்ளி புதிய தவணை மீண்டும் 09/01/2021 அன்று முதல் வழமையான Zoom இணையவழி மூலம் நடைபெறும்.

தங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி,

நிர்வாகமும் ஆசிரியர்களும்.

Address

162 Franciscan Road, Tooting
London
SW178HH

Opening Hours

9:45am - 2pm

Telephone

+447949106588

Alerts

Be the first to know and let us send you an email when South West London Tamil Kalvi Koodam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share