J / Avarangal Nadarajah Ramalinga Vidyalayam Old Students' Association UK

J / Avarangal Nadarajah Ramalinga Vidyalayam Old Students' Association UK We are a Old Student Association from Avarangal Nadarajah Ramalinga Vidyalayam.

19.08.2026
18/08/2026

19.08.2026

தரம் 1, 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு நன்றிகள்…எமது பாடசாலையில் தரம் 2, தரம் 3 வகுப்பறைகளில் பாதுகாப்பு கம்பி வலைகள் மிக...
17/08/2026

தரம் 1, 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு நன்றிகள்…

எமது பாடசாலையில் தரம் 2, தரம் 3 வகுப்பறைகளில் பாதுகாப்பு கம்பி வலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதை அவதானித்த தரம் 1, தரம் 2 மாணவர்களின் பெற்றோர்கள் சுயமாக முன்வந்து 80000/= செலவில் குறித்த வகுப்பறைகளுக்கு அலுமினியக் கம்பி வலைகளை மாற்றம் செய்து, சுவர்களுக்கு வர்ணம் தீட்டி அழகு படுத்தி மீள ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பெற்றோர்களுக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெற்றோர்களை ஒருங்கிணைத்த அதிபர் மற்றும் தரம் 1, தரம் 2 வகுப்பாசிரியர்களுக்கும், வேலைகளை முழுவதுமாக மேற்பார்வை செய்து சிறப்பாக முடிக்க உதவிய ஆசிரியப் பெற்றோர் திரு. மு ஐங்கரன் அவர்களுக்கும், பாடசாலை நலன் விரும்பி திரு.இரத்தினம் அவர்களுக்கும், வேலை நேரத்தில் உதவி புரிந்த தரம் 12 மாணவர்களான செல்வன்.ரஷ்மியன் , வினோயன், சுஜிராஜ் ஆகியோருக்கும் பயன்பெறுகின்ற மாணவர்கள் சார்பாகவும் பாடசாலையின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுவர் சந்தை 2026
07/08/2026

சிறுவர் சந்தை 2026

பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் காலம் சென்றவரும் ஆகிய செ கணேசமூர்த்தி  அவர்களின் ஞ...
07/08/2026

பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் காலம் சென்றவரும் ஆகிய செ கணேசமூர்த்தி அவர்களின் ஞாபகார்த்தமாக பிரான்ஸ் தேசத்தில் வசிக்கும் அவரது மகள் திருமதி கஸ்தூரி 25000/= பெறுமதியான கற்றல் உபகரணங்களை தெரிவு செய்யப்பட்ட உதவி தேவைப்படும் மாணவர்கள் சிலருக்கு வழங்கி வைத்தார் . இவருக்கு பாடசாலை சார்பாகவும், பயன் பெற்ற மாணவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பாடசாலை ICT ஆசிரியர் திரு கே. பிரணவன், சுயமாக முன்வந்து  8000/= பெறுமதியான  இரண்டு extension wire corde களை ICT ஆய்...
07/08/2026

எமது பாடசாலை ICT ஆசிரியர் திரு கே. பிரணவன், சுயமாக முன்வந்து 8000/= பெறுமதியான இரண்டு extension wire corde களை ICT ஆய்வு கூடத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். இவருக்கு பாடசாலையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

29/07/2026
பிரான்சில் வசிக்கும் திருமதி கஸ்தூரி அவர்களுக்கு நன்றிகள்பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க எமது பாடசாலையின் முன்னாள் ஆசிர...
28/07/2026

பிரான்சில் வசிக்கும் திருமதி கஸ்தூரி அவர்களுக்கு நன்றிகள்

பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் காலம் சென்றவரும் ஆகிய செ கணேச மூர்த்தி அவர்களின் ஞாபகார்த்தமாக பிரான்சில் வசிக்கும் அவரது மகள் திருமதி கஸ்தூரி 65000/= பெறுமதியான பல் அறை கொண்ட இரும்பு அலுமாரி ஒன்றை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவருக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

துயர் பகிர்கின்றோம் 🙏 யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், London Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட எமது பாடசால...
24/07/2026

துயர் பகிர்கின்றோம் 🙏

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், London Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட எமது பாடசாலையின் பழைய மாணவனும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் நிர்வாக உறுப்பினருமாகிய அமரர் திரு செல்வமூர்த்தி(Boby) திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 13.07.2026 அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திருஞானசம்பந்தமூர்த்தி செல்வபாக்கியம் தம்பதியின் அன்பு மூத்த மகனும்,

சமிலாவின் அன்புக்கணவரும்,

சாளினி, அர்சுதன், துஷா,
ஆர்கீஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனதா, ஈசன், பாப்பா, உமா,
இந்திரன், கோசலை, சகலை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சுகுமாரன், யசோதா, ஜெயக்குமார்,
நவரத்தினராஜா, பிரியா, மணிவண்ணன்,
ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அசிதன், அருணன்
அஜந்தன், தாரணி, தரன்,
அர்ச்சனா, அபிராமி, சிவராம், ஐங்கரன், செந்தூரன், அசிதன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

நராயணா, வெங்கடேஸ்,
ஜெயராம், ஆரணி, மாதங்கி, வர்சினி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

துயர் பகிர்கின்றோம் 🙏யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும், எமது பாடசாலையின் பழைய மாணவியுமாக...
15/07/2026

துயர் பகிர்கின்றோம் 🙏

யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்,
எமது பாடசாலையின் பழைய மாணவியுமாகிய அமரர் தேவராஜா தனலெட்சுமி (தனம்) அவர்கள் 13.07.2026 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அன்னபூரணம் தம்பதியின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை தம்பதியின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராஜாவின் அன்பு மனைவியும்,

லமீர்தா (London) தேனுகா (London)
இராஜதேவ் (London) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரதீப் இன் பாசமிகு மாமியாரும்,

ரிஷானின் பாசமிகு பேத்தியும்,

பரமேஸ்வரன் (London),
பாலசிங்கம்(பாலா அப்பன்) London, குகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனிமொழி, சுபாஜினி,
கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜீவன், ஜனனி, யாழினி ,
கரீஸ், செல்னா, ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கவிதா, பகீரதி, கிருஸ்ணகாந் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (16.07.2026) வியாழன் காலை 10 மணிக்கு இடம்பெற்று நண்பகல் 12 மணியளவில் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்குத் தகனக் கிரியைகளுக்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன்.
00447305003007
பாலசிங்கம்
0094762011316
இராஜதேவ்
0044744964336
லமீர்தா
00447483430112

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when J / Avarangal Nadarajah Ramalinga Vidyalayam Old Students' Association UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to J / Avarangal Nadarajah Ramalinga Vidyalayam Old Students' Association UK:

Shortcuts

Share

Category