வாகை தமிழ்க் கலைக்கூடம்

வாகை தமிழ்க் கலைக்கூடம்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வாகை தமிழ்க் கலைக்கூடம், School, Coventry.

Photos from வாகை தமிழ்க் கலைக்கூடம்'s post 14/12/2019

இன்று எமது வாகை தமிழ்க் கலைக்கூடத்தில் நடைபெற்று முடிந்த நத்தார் கொண்டாட்டத்திலிருந்து சில பதிவுகள்...

10/10/2019

"ஆசிரியர்" என்பது ஒரு தொழில் அல்ல;
அது ஓர் உன்னதமான கலை.

31/05/2019

வணக்கம்,

நாளை நடைபெறும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாகை தமிழ்க் கலைக்கூடம் சார்பாக வாழ்த்துகள்.

தமிழே எங்கள் உயிரும் மெய்யும்.

நன்றி.

Photos from வாகை தமிழ்க் கலைக்கூடம்'s post 24/05/2019

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு - ஒரு பார்வை

அன்பான பெற்றோர்களே!
வளர் தமிழ் 7 இற்கான சென்ற ஆண்டின் தேர்வுத்தாளினை உங்கள் பிள்ளைகளின் தேர்வுத் தயார்ப்படுத்தலுக்காக இங்கே பதிவிடுகின்றோம். எனவே உங்கள் பிள்ளைகள் தேர்வில் நிறைவான பெறுபேறுகளை எடுக்க அவர்களுக்கு உதவுங்கள்.

Photos from வாகை தமிழ்க் கலைக்கூடம்'s post 20/05/2019

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு - ஒரு பார்வை

அன்பான பெற்றோர்களே!
வளர் தமிழ் 6 இற்கான சென்ற ஆண்டின் தேர்வுத்தாளினை உங்கள் பிள்ளைகளின் தேர்வுத் தயார்ப்படுத்தலுக்காக இங்கே பதிவிடுகின்றோம். எனவே உங்கள் பிள்ளைகள் தேர்வில் நிறைவான பெறுபேறுகளை எடுக்க அவர்களுக்கு உதவுங்கள்.

Photos from வாகை தமிழ்க் கலைக்கூடம்'s post 20/05/2019

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு - ஒரு பார்வை

அன்பான பெற்றோர்களே!
வளர் தமிழ் 5 இற்கான சென்ற ஆண்டின் தேர்வுத்தாளினை உங்கள் பிள்ளைகளின் தேர்வுத் தயார்ப்படுத்தலுக்காக இங்கே பதிவிடுகின்றோம். எனவே உங்கள் பிள்ளைகள் தேர்வில் நிறைவான பெறுபேறுகளை எடுக்க அவர்களுக்கு உதவுங்கள்.

17/05/2019

அன்பார்ந்த பெற்றோர்களே,

விடயம்: தமிழின அழிப்பு நாள் மே 18

தமிழீழ மக்களாகிய எங்களது வாழ்விலும் வரலாற்றிலும் என்றுமே மாறாத வடுக்கள் நிறைந்த நாளாக மே 18 இருக்கின்றது. எமது உரிமைகளைப் பறித்து எங்களை அடக்குமுறைக்குள் தள்ளி எங்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கிய இலங்கை அரசினுடைய கோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை.

உலகில் உள்ள வல்லரசுகளின் உதவியோடு இலங்கைப் பேரினவாத அரசு எம்மைச் சிதறடித்து எம் தாய்மண்ணில் எங்களையே நிர்க்கதியாக்கிய நாள்; கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசி எங்கள் உறவுகளைக் கருகிடச் செய்த நாள்; பாவமே அறியாத பல பாலகர்களைக் கொன்றொழித்த நாள்; ஆயிரக்கணக்கான உறவுகளைக் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துவிட்ட நாள்; இலட்சக்கணக்கான எங்கள் உறவுகளைக் கொன்றுகுவித்த நாள்.

பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் எந்தவொரு நாடுமே எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. இருந்தாலும் எம் தாய்மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் எம் உரிமைக்காகப் போராடிக்கொண்டே இருக்கின்றோம். எமக்கான நீதியினைப் பெறுவதற்காக நாம் எல்லோரும் தொடர்ந்து போராட வேண்டும். எங்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

வரும் சனிக்கிழமை 18/05/2019 அன்று இலண்டனில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் வாகை தமிழ்க் கலைக்கூட பெற்றோர்களையும் கலந்துகொண்டு எமது வரலாற்றுக் கடமையில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மே 18 நினைவு நாளை நினைவுகூறும் வகையில் வரும் சனிக்கிழமை (18/05/2019) வாகை தமிழ்க் கலைக்கூடம் நடைபெறாது என்பதையும் அறியத்தருகின்றோம்.

நன்றி.
வாகை தமிழ்க் கலைக்கூடம்.

உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்!

எழுச்சிப் பேரணி : 18/05/2019 சனிக்கிழமை
நேரம் : பிற்பகல் 2 மணி

தொடங்கும் இடம்
STRATTON STREET
GREEN PARK
LONDON, W1J 8LT

முடியும் இடம்
PARLIAMENT SQUARE
WESTMINSTER
LONDON, SW1A 0PW

Photos from வாகை தமிழ்க் கலைக்கூடம்'s post 16/05/2019

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு - ஒரு பார்வை

அன்பான பெற்றோர்களே!
வளர் தமிழ் 4 இற்கான சென்ற ஆண்டின் தேர்வுத்தாளினை உங்கள் பிள்ளைகளின் தேர்வுத் தயார்ப்படுத்தலுக்காக இங்கே பதிவிடுகின்றோம். எனவே உங்கள் பிள்ளைகள் தேர்வில் நிறைவான பெறுபேறுகளை எடுக்க அவர்களுக்கு உதவுங்கள்.

Photos from வாகை தமிழ்க் கலைக்கூடம்'s post 15/05/2019

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு - ஒரு பார்வை

அன்பான பெற்றோர்களே!
வளர் தமிழ் 3 இற்கான சென்ற ஆண்டின் தேர்வுத்தாளினை உங்கள் பிள்ளைகளின் தேர்வுத் தயார்ப்படுத்தலுக்காக இங்கே பதிவிடுகின்றோம். எனவே உங்கள் பிள்ளைகள் தேர்வில் நிறைவான பெறுபேறுகளை எடுக்க அவர்களுக்கு உதவுங்கள்.

Want your school to be the top-listed School/college in Coventry?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Coventry
CV23JS

Opening Hours

10am - 1pm