அறிவாலயம் தமிழ் பாடசாலை அய்ல்ஸ்பரி Arivaalayam Tamil School Aylesbury

  • Home
  • United Kingdom
  • Aylesbury
  • அறிவாலயம் தமிழ் பாடசாலை அய்ல்ஸ்பரி Arivaalayam Tamil School Aylesbury

அறிவாலயம் தமிழ் பாடசாலை அய்ல்ஸ்பரி  Arivaalayam Tamil School Aylesbury அய்ல்ஸ்பரி நகரில் அடுத்த தலைமுறையினருக்கு தமிழையும் கலைகளையும் பயிற்றுவிப்பதற்கான பாடசாலை

Tamil and cultural school in Aylesbury

எமது இரண்டாம் ஆண்டு நிறைவில் ஒரு சிறப்பான நன்றியுணர்வுஎமது இரண்டாம் ஆண்டு நிறைவில்… ஒரு சிறப்பான நினைவும், நன்றியும்! எம...
03/10/2026

எமது இரண்டாம் ஆண்டு நிறைவில் ஒரு சிறப்பான நன்றியுணர்வு

எமது இரண்டாம் ஆண்டு நிறைவில்… ஒரு சிறப்பான நினைவும், நன்றியும்!

எமது பாடசாலை தனது " இரண்டாம் ஆண்டு நிறைவை" பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில், எம்மை மிகவும் நெகிழச் செய்த ஒரு விடயத்தை எமது பாடசாலை சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

எமது "முதலாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு" சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுத்திருந்தோம். அன்றைய தினம் தவிர்க்க முடியாத பணிச்சுமை காரணமாக மரியாதைக்குரிய திருமதி உமா குமரன் MPஅவர்களால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், எமது அழைப்பையும் எமது பாடசாலையின் முதல் ஆண்டு நிறைவையும் மதித்து, அன்பான வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்தது.

அதனைவிட நெகிழ்ச்சியூட்டும் விடயம் என்னவெனில், ஒரு வருடம் கடந்த பின்னரும் அந்த நாளையும் எமது பாடசாலையையும் நினைவில் வைத்திருந்து, இவ்வாண்டின் இரண்டாம் ஆண்டு நிறைவிற்கும் தனது அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மீண்டும் எழுத்து மூலம் அனுப்பியிருப்பதாகும்.

பொது வாழ்க்கையில் பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வகித்து, குறிப்பாக வெளிவிவகாரம், Overseas Territories, Caribbean, உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் AI உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட அமைச்சுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும், எமது பாடசாலையின் கல்விப் பணியையும் வளர்ச்சிப் பயணத்தையும் நினைவில் கொண்டு எங்களை வாழ்த்தியிருப்பது எமக்கு மிகவும் கௌரவமானதும் அருமையானதுமான தருணமாகும்.

ஒரு கல்வி நிறுவனத்திற்கு கிடைக்கும் மிகப் பெரிய ஊக்கங்களில் ஒன்று, அதன் முயற்சிகளை மதித்து அங்கீகரிக்கும் ஒரு அன்பான வார்த்தையாகும். அந்த வகையில், மரியாதைக்குரிய திருமதி உமா குமரன் MP அவர்களின் வாழ்த்துச் செய்தி எமது நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மேலும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

கடந்த ஆண்டில் எம்மை நினைவுகூர்ந்து அனுப்பிய வாழ்த்திற்கும், இவ்வாண்டு மீண்டும் எமது இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவில் கொண்டு அனுப்பியுள்ள வாழ்த்திற்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளையும் ஆழ்ந்த மரியாதையையும்தெரிவித்துக்கொள்கிறோம்.

மரியாதைக்குரிய திருமதி உமா குமரன் MP அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

எமது மாணவர்களின் கல்வி, அறிவு, திறமை மற்றும் எதிர்காலத்தை வளர்ப்பதற்கான எமது பயணம் தொடர்ந்து சிறப்பாக முன்னேறட்டும்.

ஒரு நாள் தொடங்கிய கல்விப் பயணம்…
பல தலைமுறைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் பயணமாக மலரட்டும்.

நன்றி | வணக்கம் | வாழ்த்துக்கள்

30/09/2026
30/09/2026
19/09/2026

திருக்குறளைப் பயிற்சி செய்யும் மாணவர்கள்

18/09/2026

அறிவாலயம் தமிழ் பாடசாலை அய்ல்ஸ்பரி

தமிழால் இணைவோம்
தமிழோடு வளர்வோம்
அன்பான மொழியை நெஞ்சத்தில் சுமப்போம்

18/09/2026

அறிவாலயம் தமிழ் பாடசாலை அய்ல்ஸ்பரி மாணவர்களின் முதல் முயற்சியான வில்லுப்பாட்டு "முத்தமிழே முதல் மொழியே" எனும் தலைப்பில்

அனைவருக்கும் வணக்கம்,                    இன்றைய தினம்  (05/09/2026) எமது அறிவாலயம் தமிழ் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ...
05/09/2026

அனைவருக்கும் வணக்கம், இன்றைய தினம் (05/09/2026) எமது அறிவாலயம் தமிழ் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இனிதாக ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு இன்றைய நாளில் எமது பாடசாலையில் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் வரவேற்றுக்கொண்டு, தொடர்ந்து வரும் நாட்களிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்பதையும் அன்புடன் அறியத்தருகின்றோம்.

Address

Friarscroft Way
Aylesbury
HP202TE

Opening Hours

09.30 to 14.30

Telephone

+447507886621

Website

Alerts

Be the first to know and let us send you an email when அறிவாலயம் தமிழ் பாடசாலை அய்ல்ஸ்பரி Arivaalayam Tamil School Aylesbury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category