03/08/2026
Tamil Education Service Switzerland - TESS
Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Tamil Education Service Switzerland - TESS, Sprachschule, Gewerbestrasse 4, Steinmaur, Zürich.
03/08/2026
01/08/2026
02/07/2026
22/06/2026
தமிழ்க் கல்விச்சேவையின் 2026 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் நேற்றுடன் (21.06.2026) நிறைவடைந்துள்ளன.
செங்காளன், துர்காவ், கிறபுண்டன், அப்பன்செல் மாநிலங்களுக்கான போட்டி நிறைவுப் போட்டியாக நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாண்டுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் 31.05.2026 ஆம் நாள் தொடங்கி 6 வலயங்களில் நடைபெற்றன.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்கள் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்களும் இளம் பெற்றோர்களும் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளை நடாத்தினர்.
போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போட்டிகளைச் சிறப்பாக நடாத்துவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போட்டிகளில் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் ஒவ்வொரு விளையாட்டிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றியீட்டியவர்கள் விளையாட்டுவிழாவில் பங்குபற்றுவர். சுவிஸ் நாடு தழுவிய வகையில் விளையாட்டுவிழா *30.08.2026* ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, சூரிச் வின்ரத்தூர் விளையாட்டுத்திடலில் நடைபெறவுள்ளது.
*தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து*
20/06/2026
தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் வலயரீதியில் நடைபெற்றுவருகின்றன. இன்று (20.06.2026) ஆர்க்கோ, பாசல், பாசல் லாண்ட், யூரா ஆகிய மாநில மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் பாசல் விளையாட்டுத்திடலில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் 285 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்கள் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்களும் இளம் பெற்றோர்களும் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளை நடாத்திவருகின்றனர்.
சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவிவரும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
*தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து*
14/06/2026
தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் வலயரீதியில் நடைபெற்றுவருகின்றன. இன்று (14.06.2026) பேர்ண், சொலத்தூண், பிறீபேர்க் ஆகிய மாநில மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் தூண் விளையாட்டுத்திடலில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் 280 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்களும் இளம் பெற்றோரும் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்கள் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளை நடாத்திவருகின்றனர்.
இம் மெய்வல்லுனர் போட்டியில் இளம் பெற்றோரின் பங்களிப்பு போற்றுதற்குரியது.
உணவகம் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவிவரும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
*தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து*
06/06/2026
தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் வலயரீதியில் நடைபெற்றுவருகின்றன. இன்று (06.06.2026) வோ, வலே, ஜெனீவா, நொசத்தல் ஆகிய மாநில மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் லவுசான் விளையாட்டுத்திடலில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் கூடுதலான பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்கள் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்களும் இளம் பெற்றோரும் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளை நடாத்திவருகின்றனர்.
உணவகம் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவிவரும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
02/06/2026
தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் இவ்வாண்டும் சுவிற்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களினதும் தமிழ்ப்பள்ளிகளை உள்ளடக்கி 6 வலயங்களாக நடாத்தப்படுகின்றன.
சூரிச், சப்கவுசன் மாநிலங்களுக்கான போட்டிகள் வின்ரத்தூர் விளையாட்டுத் திடலிலும் ரிசினோ, லுட்சேர்ன், சுக், சுவைட்ஸ், ஊரி, கிளாறுஸ், நிட்வால்டன் மாநிலங்களுக்கான போட்டிகள் ஊரி விளையாட்டுத் திடலிலும் நேற்று முன்னாள் (31.05.2026) சிறப்பாக நடைபெற்றன.
இதில் கூடுதலான பிள்ளைகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்கள் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்களும் இளம் பெற்றோரும் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளைச் சிறப்பாக உரிய நேரத்தில் நடாத்தி முடித்தனர்.
உணவகம் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
நிறைவில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பெற்றன.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.
Lage
Kategorie
die Schule/Universität kontaktieren
Telefon
Webseite
Adresse
Gewerbestrasse 4, Steinmaur
Zürich
8162
Öffnungszeiten
| Montag | 09:00 - 17:00 |
| Dienstag | 09:00 - 17:00 |
| Mittwoch | 09:00 - 17:00 |
| Donnerstag | 09:00 - 17:00 |
| Freitag | 09:00 - 17:00 |