01/09/2026
பேர்த் வடக்குத் தமிழ்ப் பள்ளியின், தந்தையர் தினக் கொண்டாட்ட அழைப்பிதழ்!
அன்பான பெற்றோர் மற்றும் பெரியோர்களுக்கு வணக்கம்🙏🏽.
நம் பள்ளி மாணவர்களின் தந்தையர்களைக் கௌரவிக்கும் விதமாக, தந்தையர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி, நம் பள்ளியில் நடைபெற உள்ளது.
எங்கள் பள்ளி மாணவர்கள் தங்கள் தந்தையர் மீது வைத்துள்ள பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஆச்சரியங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.
இந்தக் கொண்டாட்டத்தில் அனைத்து தந்தையரையும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.