15/09/2026
தமிழ்ப் போட்டி 2026 – பரிசளிப்பு விழா
அன்பார்ந்த பெற்றோர்களே,
கடந்த 23 ஆகஸ்ட் 2026 அன்று நடைபெற்ற எமது தமிழ்ப் போட்டியில் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்!
மாணவர்களின் முயற்சி, திறமை மற்றும் தமிழ்மொழி மீதான ஆர்வத்தைக் கொண்டாடும் வகையில், தமிழ்ப் போட்டி பரிசளிப்பு விழா, 8 நவம்பர் 2026 அன்று நடைபெறும் தீபாவளித் திருவிழாவுடன் இணைந்து நடைபெறவுள்ளது.
🥇 முதலாம் இடம் – பதக்கம் மற்றும் சான்றிதழ்
🥈 இரண்டாம் இடம் – பதக்கம் மற்றும் சான்றிதழ்
🥉 மூன்றாம் இடம் – பதக்கம் மற்றும் சான்றிதழ்
🏅 பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் – பங்கேற்புப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
வெற்றி என்பது பரிசைப் பெறுவதில் மட்டும் இல்லை; முயற்சி செய்து, தன்னம்பிக்கையுடன் மேடையேறிப் பங்கேற்பதிலும் உள்ளது.
எமது மாணவர்கள் அனைவரின் முயற்சியையும் ஒன்றாகக் கொண்டாட, பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
திகதி: ஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
நிகழ்வு: தீபாவளித் திருவிழா & தமிழ்ப் போட்டி பரிசளிப்பு விழா
நிகழ்வின் நேரம் மற்றும் மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
நன்றி.
நிர்வாகக் குழு
──────────────
TAMIL COMPETITION 2026 – PRIZE GIVING CEREMONY
Dear Parents,
Our heartfelt congratulations to all students who participated in the Tamil Competition held on 23 August 2026.
To celebrate their effort, confidence, talent and enthusiasm for the Tamil language, the Tamil Competition Prize Giving Ceremony will be held on 8 November 2026, together with our Deepavali celebration.
🥇 1st Place – Medal & Certificate
🥈 2nd Place – Medal & Certificate
🥉 3rd Place – Medal & Certificate
🏅 All Participants – Participation Medal & Certificate
Winning is not only about receiving a prize; having the courage to participate, perform and give your best is an achievement in itself.
We warmly invite all parents and families to join us in celebrating the efforts and achievements of every student.
Date: Sunday, 8 November 2026
Event: Deepavali Celebration & Tamil Competition Prize Giving Ceremony
The event time and further details will be announced shortly.
Thank you.
Management Committee