16/10/2014
Even this whole world leave us alone, Allah is there for us to help and support, do duas all time.
Entertainment and Education Website A website to Learn Modern Technology with Entertainment content
16/10/2014
Even this whole world leave us alone, Allah is there for us to help and support, do duas all time.
01/09/2013
இவர்களை முஸ்லீம்களே தெரிந்து வைப்பதில்லை , even muslims dont know who r them
05/08/2013
10/02/2013
like and share , if u agree
வயதோ முப்பது-ஐ தொடுகிறது...
அவள் பெயர் ஹப்ஸா
பெயருக்கேற்ற சாந்தம்
முகத்தில் பூரிப்பு
அவள் வீட்டில் இல்லை பூரிப்பு
வயதோ முப்பது வை தொடுகிறது
ஹப்ஸாக்கு மாப்பிளை "அம்மாரா"ம்
எத்தினயாவதம் இது ?
உணர்ச்சியற்ற ஊர் பெண்களின் பேச்சு.
இறை குடி கொள்ளும் சிறிய வீடு
நாகரீக பொருளற்ற
ஓலை பாய் அவள் வீட்டு நாட்காலி.
பெண் பார்க்க ஒரு கூட்டம்
அவள் வீடு நாடுகிறது
அமைச்சருக்கு வரவேற்பு போல்
மாப்பிளைக்கு வரவேற்பு பயத்துடன்.
மாப்பிள்ளை நடுவே கம்பீரத்துடன்
ஏலம் போடுவதற்கு தயார்
வீடு வாங்க வந்தவர் போல் - தகப்பனார்
பெறுமதி கணக்கெடுப்பு .
பெண்ணை கூப்பிடுங்கள் ............
சபையில் ஒருவர் ..
கையில் தேநீர் தயக்கத்துடன்
அவள் நடை அவளுக்கு புதிதல்ல
அவள் மாப்பிள்ளையை நிமிர்ந்தும்
பார்கவில்லை முடிவு அவள் அறிவாள்.
ஹப்ஸா
அமைதியாக அமருகிறாள்
மாப்பிளைக்கு பெண்ணை பிடித்திருக்காம்
அவள் முகத்தில் மாற்றம் இல்லை !!
வந்த கூட்டத்தில்
பெருசு ஒன்று ..தொண்டையைக் கனைத்துக் கொண்டு...
விஷயத்துக்கு வருவோம்..... !
பொண்ணுக்கு எத்தின பவுன்!!!!!!!!!!!???????
எமக்கில்லை உங்க பொண்ணுக்குத்தான்...,
அவரின் பெருந்தன்மை (?)
ஒரு மோட்டார் சைக்கிள்
மகனுக்கில்லை
உங்க மக்களுக்காகத்தான்...
வங்கியில் ஒரு தொகை
உங்க பொண்ணுக்கு உதவுமே அதுக்காகத்தான்..
அப்படியே சிங்கப்பூருக்கு ஒரு டிக்கெட்..
அதுவும் உங்க மக ஹனிமூனுக்குத்தான்..!
ஒரு வீடு...
அதுவும் உங்க மகா குடும்ப நடத்தத் தான்...
அப்புறம்...
மற்ற சீர் சீமான் ல குறை வைக்க மாட்டீங்கன்னு
தெருயும்..
ஏன்னா..
உங்க கவுரவம் போகக் கூடாது இல்லையா....
மூச்சு விடாமல் பேசியதால்
பலகாரத்தட்டில் கண் வைக்கிறார்
மணமகன் தந்தை .
பெண் வீட்டார் பக்கம்
ஓர் அமைதி நிலவுகிறது
ஹப்ஸா
நிதானமாக எழுந்து
மணமகனின் வீட்டாரை நோக்கி.....
மாப்பிள்ளைக்கு கண் தான்
பொட்டை என நினைத்தேன்
இதயத்திலும் நோய் இருக்கிறது
முதலில் சரி செய்யுங்கள்.
என்று உரக்க சொல்லி விட்டு...
தன் அறைக்குள் நுழைந்தாள்..
கதவைத் தாழிட்டாள்...
பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல்...
குலுங்கி..குலுங்கி அழ ஆரம்பித்தாள்....