ACAD

ACAD

Share

ACADEMIC COMMUNITY ADVANCEMENT AND DEVELOPMENT

01/03/2026

2028 வர்த்தக துறையில் சிறந்த பெறுபேறுகளை
பெறுவதற்காக

𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐒𝐭𝐮𝐝𝐢𝐞𝐬
𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠
𝐄𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜

போன்ற பாடங்களில் சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதன் ஊடாக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு சென்றடைய வைக்கும் நோக்குடன் பல்வேறு விதமான கற்றல் செயற்பாடுடன் இணைந்து கொண்டு உமது அறிவினை விருத்தி செய்து கொள்ளுங்கள்

​✅ Theory classes
✅ Paper classes
✅ Revision classes

AAT மற்றும் உயர்கல்வித் திட்டங்களுடன் கூடிய முழுமையான கற்றல் அனுபவம்

மேலும் வர்த்தகத் துறையில் உமக்கு விருப்பமான பாடங்களை தெரிவு செய்வதன் ஊடாக இலகுவாக பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்

மேலதிக விபரங்களுக்கு
📞 0774758558 / 0768619307q

17/04/2025

2027 வர்த்தக துறையில் சிறந்த பெறுபேறுகளை
பெறுவதற்காக Business studies , Accounting , Economic , I.C.T
போன்ற பாடங்களில் சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதன் ஊடாக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு சென்றடைய வைக்கும் நோக்குடன் பல்வேறு விதமான கற்றல் செயற்பாடுடன் இணைந்து கொண்டு உமது அறிவினை விருத்தி செய்து கொள்ளுங்கள்

மேலும் வர்த்தகத் துறையில் உமக்கு விருப்பமான பாடங்களை தெரிவு செய்வதன் ஊடாக இலகுவாக பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்



05/04/2025

உங்கள் எதிர்காலத்திற்கான முதல் அடிக்கல் இங்கே! 🎯

2027 உயர் தர வர்த்தகப் பிரிவில் சேர்ந்து, சிறந்த கல்வியுடன் உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். எங்களுடன் இணைந்து உங்கள் பயணத்தை இன்று தொடங்குங்கள்!

வெற்றிக்கான பயணம் இங்கே தொடங்குகிறது! 🚀

சிறந்த கல்வியாளர்கள், உன்னத வழிகாட்டல், மற்றும் சிறப்பு வாய்ப்புகள் – உங்கள் எதிர்காலத்திற்கு உறுதியான அடித்தளம் அமைக்க இன்று itself முடிவு செய்யுங்கள்!

உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் சிறந்த தேர்வு! 🏆

ACAD உடன் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று, உங்கள் கனவுகளை மெய்ப்பிக்க எங்களுடன் சேருங்கள். உங்கள் பயணத்தை நாங்கள் வழிநடத்த தயாராக உள்ளோம்!

23/06/2024

Z - score எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

Z score என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது? என்ற விடயத்தில் பலவிதமான சந்தேகங்களை உயர் தரம் கற்கின்ற பல மாணவர்களிடமும் காணமுடிகின்றது.

மாணவர்கள் பெற்றுக்கொண்ட சராசரி புள்ளிகளின் ஊடாக மாத்திரம் அவர்களின் அறிவுத் திறனை மட்டிடாது அவர்கள் முகம்கொடுத்த ஒவ்வொரு வினாத்தாள்களுக்கும் பெறுமதி ஒன்றினை வழங்கி அதன் ஊடாக அவர்களது திறன்களை மட்டிடுகின்ற ஒரு முறையாக Z-score முறை குறிப்பிபடப்படுகின்றது.

குறித்த வருடத்தில் ஒவ்வொரு பாடங்களுக்குமாக மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் சராசரியினை (Mean) கணிப்பிடுவது Z-score கணிப்பீட்டின் முதற் படிமுறையாகும்.

இங்கு சராசரி (Mean) என்பது குறித்த பாடத்திற்கு அனைத்து மாணவர்களும் பெற்றுக்கொண்ட மொத்த புள்ளியினை அந்த பாடத்துக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையினால் வகுக்கும் போது வருகின்ற பெறுமானமாகும்

உதாரணம்.

M,A,D,U,S,H எனும் 6 மாணவர்கள் தமிழ் பாடத்திற்கான பரீட்சையில் தோற்றி கீழ் வருமாறு புள்ளிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

M–75, A–85, D-54, U–46, S–20, H–20

இதற்கான Z score கணிப்பீடு கீழ்வரும் அடிப்படையில் நடைபெறுகின்றது.

படிமுறை 01

அதன் அடிப்படையில் M,A,D,U,S,H ஆகிய மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் கூட்டுத் தொகையை மாணவர்கள் தொகையினால் பிரிக்கவேண்டும்.


75+85+54+46+20+20 /6 (300/6 = 50)
இதன் அடிப்படையில் தமிழ் பாடத்திற்கு பெற்ற சராசரிப் புள்ளி 50 ஆகும். இது Mean என அழைக்கப்படுகின்றது.

குறித்த பாடத்திற்கு தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பெற்றுக்கொள்கின்ற புள்ளிகளின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில் இந்த சராசரி புள்ளியானது வருடாவருடம் மாறுபட்ட பெறுமானங்களைக் கொண்டிருக்கும்.

படிமுறை 02.

சராரிப்புள்ளியினை அடிப்பயைாகக் கொண்டு தமிழ் பாடத்திற்கு மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளிளுக்கான வேறுபாட்டு (variation) இந்தப் படிமுறையின்போது கணிப்பிடப்படும். வேறுபாட்டு (variance) என்பது சராசரிப் புள்ளிக்கும் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கும் இடையே காணப்படுகின்ற தொகையின் வர்க்கத்தினை மாணவர் தொகையினால் பிரிக்கும் போது வருகின்ற தொகையாகும்.
அந்த அடிப்படையில் மேற்படி 6 மாணவர்களின் புள்ளிகளுக்கான வேறுபாட்டினை கணிப்பிடுவதற்காக சராசரிப்புள்ளிக்கும் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கும் இடையிலான தொகையின் வர்க்கத்தினை மாணவர்தொகையான 6 இனால் பிரிக்க வேண்டும்.
உதாரணத்தின் அடிப்படையில் வித்தியாசம் கணித்தல்
(M) 75 – 50 = 25
(A) 85 – 50 = 35
(D) 54 – 50 = 04
(U) 46 – 50 = –04
(S) 20 – 50 = – 30
(H) 20 – 50 = –30
உதாரணத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட வித்தியாசத்ததை அடிப்படையாகக் கொண்டு வேறுபாட்டு (variation) கணித்தல்

((25)2+(35)2+(04)2+(–04)2+(–30)2+(–30)2) /6

அதற்கமைய : 625+1225+16+16+900+900 =3682
3682 / 6 = 613.66667

படிமுறை 03
Standard Deviation கணித்தல்

கணிப்பிடப்பட்ட வேறுபாட்டு (variation) தொகையின் வர்க்கமூலத்தினை கணிப்பதன் ஊடாக Standard Deviation கணிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் வேறுபாட்டு (variation) என்பதாக கணிக்கப்பட்ட 613.66667 எனும் தொகையின் வர்க்கமூலம்


√613.66667
= 24.7722964216077472642605967318362680672


படிமுறை 04

Standard Deviation கணித்ததன் பின்னர் அதன் அடிப்படையில் பாடங்களுக்காக பெற்றுக்கொண்ட Z score புள்ளியினை கணக்கிடலாம். இந்தக் கணிப்பீட்டுக்காக மாணவர் குறித்த பாடத்திற்கு பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கும் சராசரிக்கும் இடையிலான வித்தியாசத்தை Standard Deviation பெறுமானத்தினால் பிரிக்க வேண்டும்.

மேற்படி உதாரணத்திற்கு அமைய தமிழ் பாடத்திற்காக மாணவர்கள் பெற்றுக்கொண்ட Z score புள்ளியினை கணிக்கலாம்.

(M) 75 – 50 = 25 / (வகுத்தல்) 24.772296421607747264260596731836268067284

(A) 85 – 50 = 35 /(வகுத்தல்) 24.772296421607747264260596731836268067284

(D) 54 – 50 = 04 /(வகுத்தல்) 24.772296421607747264260596731836268067284

(U) 46 – 50 = –04 /(வகுத்தல்) 24.772296421607747264260596731836268067284

(S) 20 – 50 = – 30 /(வகுத்தல்) 24.772296421607747264260596731836268067284

(H) 20 – 50 = –30 /(வகுத்தல்) 24.772296421607747264260596731836268067284

அதன் அடிப்படையில் 6 மாணவர்களும் தமிழ் பாடத்திற்கு பெற்றுக்கொண்ட Z score கீழ் வருமாறு

(M) 1.0091918639482142342951669809538567601889
(A) 1.4128686095274999280132337733353994642644
(D) 0.1614706982317142774872267169526170816302
(U) −0.161470698231714277487226716952617081630
(S) −1.211030236737857081154200377144628112226
(H) −1.211030236737857081154200377144628112226

இதன் அடிப்படையில் 4 தசமதானகளுக்கு மட்டம் தட்டப்படும் போது கிடைக்கின்ற
Z-score

M) 1.0091
(A)1.4128
(D) 0.1614
(U) –0.1614
(S) –1.2110
(H) –1.2110

இங்கு மாணவர்கள் தமிழ் பாடத்திற்காக பெற்றுகொண்ட Z score அளவினை கணித்திருக்கின்றோம் இதே அடிப்படையில் மற்றைய இரண்டு பாடங்களுக்கும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் Z score கணிக்கப்பட்டு அந்த மூன்று Z score புள்ளிகளையும் கூட்டி பாடங்களின் தொகையான மூன்றில் வகுக்கும் போது அனைத்து பாட ங்களுக்கும் மாணவர்கள் பெற்றுக்கொண்ட Z score இணைக் கணிப்பிடலாம்.
உதாரணமாக A எனும் மாணவர் தமிழ் பாடத்திற்கு பெற்றுக்கொண்ட Z score 1.4128, புவியியலில் பெற்றுக்கொண்ட Z score 1.3554 அரசறிவியல் பாடத்திற்காக பெற்றுக்கொண்ட Z score 1.2235 என்பதாகக் கொள்வோம். அதன் அடிப்படையில் அந்த மாணவர் பெறும் மொத்த Z score புள்ளியானது
1.4128+1.3554+1.2235 /3
=1.33056 ஆகும்.
க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் பெற்றுக்கொள்கின்ற புள்ளிகளின் அடிப்படையில் Z score கணிப்பிடப்படுகின்றது.

ஒரு பாடத்தின் Z score புள்ளியானது எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதுடன் அது வருடாவருடம் மாற்றமடைகின்றது. குறித்த பாடங்களுக்கு தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அவர்கள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகள் என்பன இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றது.

Copy

K.t. Brownsen
Career Guidance & Counselling

21/06/2024

#மீள் #பதிவு
க.பொ.த(உ/த) #பரீட்சையில் #சித்தி #பெறுவது #மாணவர்களின் #சுய #முயற்சியிலேயே #தங்கியுள்ளது!
ந.சந்திரகுமார் SLPS

க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறுவது மாணவர்களின் #சுயகற்றல் 80% ஆகவும்ம், ஆசிரியர்களின் #வழிகாட்டல் 20% ஆகவும் இருப்பதாக அண்மைய ஆய்வொன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்களின் கற்றல் வளர்ந்தோர் கற்றல் கோட்பாடுகளின் அடிப்படையில் நிகழும் என கல்வி உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே பெற்றோர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உயர்தர மாணவர்களின் சுயகற்றலுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் பல்வேறு ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

#பெற்றோர்கள் #சுய #கற்றலுக்காக #வழிகாட்டக் #கூடிய #விதங்கள்.

வீடுகளில் கற்றலுக்கான அக மற்றும் புறச்சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இரவு வேளையில் இடையிடையே சிற்றுண்டி ,பால் மற்றும் போஷாக்குமிக்க பானங்களை வழங்க வேண்டும்.

பாடமுன்னேற்றம் பற்றி பிள்ளைகளுடன் அடிக்கடி உரையாட வேண்டும்.

மேலதிக உதவி தேவைப்படும் பாடங்களுக்கு பிரத்தியேக வகுப்பை ஒழுங்கு செய்ய வேண்டும்.

நன்கு காற்றோட்டமும்,வெளிச்சமும் கொண்ட கற்றலுக்கு பொருத்தமான அறையை வழங்க வேண்டும்.

மாணவரின் சுய கற்றலுக்கு தடையாகவுள்ள காரணிகளை அகற்ற வேண்டும்.
-தொலைக்காட்சியை சத்தமாக
வைத்து நிகழ்ச்சிகளை பார்த்தல்.
-கைபேசியில் சத்தமாக பேசுதல்.
-பெற்றோர்களுக்கு இடையே
அடிக்கடி சண்டை.
-பிள்ளைகளிடையே பாரபட்சம்
காட்டுதல்.

கைபேசிப்பாவனை தொடர்பில் கண்காணிப்பதோடு,பரீட்சை முடியும் வரை பாவனையைக் குறைக்கும்படி பிள்ளைகளை வினையமாக வேண்டிக் கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் விழித்திருந்து படிப்பதைத் தவிர்த்து, போதியளவு நேரம் ஓய்வு எடுக்க வழிகாட்ட வேண்டும்.

தேவையான கடந்த கால வினாத்தாள்கள், பயிற்சி வினாத்தாள்கள், பயிற்சி நூல் போன்ற வற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நண்பர்களுடன் இரவில் நீண்ட நேரம் அரட்டை அடிப்பதைக் கண்காணிக்க வேண்டும்.அதனை குறைக்க வழிகாட்ட வேண்டும்.

ஒழுக்கமற்ற நண்பர்களின் நட்பைத் தவிர்க்க வழிகாட்ட வேண்டும்.

பிள்ளைகளுடன் பரஸ்பர நட்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

#மாணவர்கள் #சுய #கற்றலை #ஒழுங்கமைக்கும் #விதங்கள்!

தினமும் சுய கற்றலில் ஈடுபடக் கூடியவாறு நேரசூசியை தயாரிக்க வேண்டும்.

அன்றாடம் கற்ற பாட விடயங்களை
தினமும் மீட்டல் செய்ய வேண்டும்.

கடந்தகால வினாத்தாள்களுக்கு குறைந்தது 10 தடவையாவது பயிற்சி செய்து, விடையளிக்கும் தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாட அலகு நிறைவிலும் அந்த அலகு சார்ந்த கடந்த கால வினாக்களை பகுப்பாய்வு செய்து,எதிர்பார்க்கை வினாவுக்கு விடையளிக்க பயிற்சி பெற வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் கற்ற பின் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

சிறு குறிப்புகள் எழுதிப் படிக்க வேண்டும்.

16/06/2024

Eid mubarak ❤️

09/06/2024

Z Score இல்லாமலும் பல்கலைக்கழகம் போகலாமா?

ஆம் போகலாம்
Dr PM Arshath Ahamed MBBS MD PAED

மருத்துவ பீடத்தில் முதல் இரண்டு வருடங்களை முடித்து, 2nd MBBS எக்ஸாம் பாஸ் ஆகினால் மட்டுமே மூன்றாம் வருடத்திற்கு போக முடியும். மூன்றாம் வருடம் தொடங்கும் போதே கிளினிகலும்‌ (வைத்தியசாலை பயிற்சியும்)தொடங்கி விடும்.

கிளினிக்கல் தொடங்கிய பிறகு சொல்லவே தேவையில்லை காலையில் வைத்தியசாலை, பெகல்ட்டியில் மாலைவரை லெக்சர். அட்மிஷன் நாட்களில் இரவு 9 மணி வரை மீண்டும் வைத்தியசாலை என்று வாழ்க்கை இப்படியே போகும். அதற்குள்ளும் 3rd MBBS எக்ஸாமுக்கு வேறு படிக்க வேண்டும்.

எங்களது கிளினிகல் தொடங்கி ஒரு வாரம் போனபின் எல்லோரும் இது என்ன கஷ்டமான வாழ்க்கை என்று சலித்து கொள்வார்கள். அப்படியான ஒரு நாள், மருத்துவ பேராசிரியர் எங்கள் க்ரூப் எல்லோரையும் தனது ரூமுக்கு அழைத்து நலம் விசாரித்தார். ஒவ்வொருவரது ஏஎல் பெறுபேறுகளையும் கேட்டறிந்தார். எல்லொரும் 3A, 2AB, A2B, ABC, BBC என்று தங்களது பெறுபேருகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் சொன்னார் "நீங்கள் எல்லாம் என்னை விட மகா கெட்டிக்காரர்கள். எனது ரிசல்ட் வெறும் 1C 3S. அதுவும் மூன்றாவது தடவை ஏஎல் தோற்றி எடுத்தது. ஆகவே என் அன்பு மக்களே மனம் தளராமல் படியுங்கள். நீங்களும் வெல்லலாம்." அது தான் எங்களுக்கு அப்போதைய மிகப்பெரும் பூஸ்ட்.

அதை ஏன் சொல்கின்றேன் என்றால், உண்மையில் ஏஎல் பரீட்சையில் மூன்று S ,அதற்கு மேல் எடுத்த எல்லோரும் சித்தியடைந்தவர்கள். பல்கலைக்கழகம் செல்ல தகுதியானவர்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள வளப்பற்றாக்குறை காரணமாக, எல்லோரையும் உள்வாங்க முடியாமல் Z Score கட்ஓப் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் பலரது பல்கலைக்கழக கனவு நனவாகமலே போய்விடுகிறது. சிலருக்கு 3A எடுத்தும் மருத்துவ பீடம் கிடைக்காத நிலை. 😞

அப்படி உள்வாரியாக பல்கலைக்கழகம் கிடைக்காமல் கவலைப்படுபவர்களுக்கு இன்னும் ஒரு அரிய வாய்ப்பு நமது நாட்டில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

அதுபோல, கையிலே இப்போது நல்ல தொழில் ஒன்று கிடைத்திருக்கிறது. அது போதும். ஆனாலும் பல்கலைக்கழகத்தில் நானும் ஒரு டிகிரி எடுக்க வேண்டும், ப்ரோமஷனுக்கு டிகிரி ஒன்று இருந்தால் நல்லது என்று ஆவல் உள்ளவரா நீங்கள்?

அப்படியானால் கவலை வேண்டாம். உயர்தர பரீட்சையில் நீங்கள் மூன்று பாடங்களிலும் சித்தியை பெற்றிருந்தால் உங்களுக்கு பொருத்தமான, தகுதியான, தொழில்வாய்ப்பு உள்ள டிகிரி ஒன்றை வெளிவாரியாக, குறைந்த செலவில் கற்கக் கூடிய பல்வேறு கற்கைகள் இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் நிரம்பி இருக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், 50ற்கும் மேற்பட்ட, பட்டம் பெறும் கற்கைகள் வெளிவாரியாக (External Degree )வழங்கப்படுகின்றன. குறித்த கற்கை நெறியை முடித்து, பட்டத்தை பெற்று விட்டால், உள்வாரி பட்டம் வெளிவாரி என்ற எந்த வேறுபாடுகளும் காணப்படாது. பாகுபாடும் காட்டப்படாது‌. நீங்களும் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு பட்டதாரி தான். தகுதியான தொழில்களுக்கு நீங்களும் விண்ணப்பம் செய்ய முடியும். வெளிநாடுகளுக்கு போக முடியும்.

கொழும்பு, மொறட்டுவை, பேராதனை, சிறீ ஜயவர்தனபுர போன்ற புகழ்பூத்த பல்கலைக்கழகங்களில் கூட நீங்கள் உலகத் தரமான பட்டங்களை பெறலாம். தொழில்வாய்ப்பு நிறைந்த பல்வேறு பாடநெறிகளில் நீங்கள் வெளிவாரியாக இணைந்து கொள்ளலாம்

👍தகவல் தொழில்நுட்பம், கணனி, எலக்ரோனிக் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் கீழ் வரும் பாடநெறிகளில் சேர்ந்து கொள்ளலாம்.

University of Colombo
👉Bachelor of Science in Electronics & Automation Technologies.
👉Bachelor of Information Technology(BIT) .
👉Bachelor of Science in Financial Engineering

University of Moratuwa
👉Bachelor of Information Technology (BIT)

👍மருத்துவம், அதுசார்ந்த துணைக் கற்கைகளில் ஆர்வம் உள்ளவர்கள், களனி பல்கலைக்கழகம் வழங்கும், கீழ்வரும் கற்கைகளில் பதிவு செய்து கொண்டால் சிறப்பு.

University of Kelaniya
👉 Bachelor of Science(Physiotherapy) Diploma / Degree
👉Bachelor of Science(Speech & Language Therapy)
👉Bachelor of Science(Occupational Therapy

👍அதுபோல தாதிய தொழிலில் ஆர்வம் உள்ளவர்கள்
Eastern University Of Sri Lanka. வழங்கும்
👉Bachelor of Science Honours in Nursing டிகிரியில் இணைந்து கொள்ளலாம்.

👍பிஸ்னஸ், மேனேஜ்மென்ட், அட்மின் சார்ந்து படிக்க விரும்புபவர்கள் ஜயவர்தனபுர, பேராதனை பல்கலைக்கழகங்களில் பின்வரும் பட்டங்களை பெறமுடியும்.

University of Sri Jayewardenepura
👉 Bachelor of Science in Business Studies
👉Bachelor of Humanities & Social Sciences
👉 Bachelor of Science Management (Public) General
👉Bachelor of Social Sciences (General) in Environmental and Developmental Studies

University of Peradeniya
👉 Bachelor of Business Administration

👍உணவு, உணவுப் பாதுகாப்பு, அதுசார்ந்த வியாபாரம், பெருந்தோட்டத் துறை போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் வயம்ப பல்கலைக்கழகம் வழங்கும்‌ கீழ்வரும் கற்கைகளில் இணைந்து கொள்ள முடியும்.

🔥 University of Wayamba
👉 Bachelor of Science in Plantation Management Wayamba University of Sri Lanka
👉Bachelor of Science in Food Quality Management
👉Bachelor of Science in Food Business and Marketing

மேற்குறித்த கற்கை நெறிகள் தவிர பொதுவான கீழ்வரும் கற்கைநெறிகளை
👉Bachelor of Business Administration
👉Bachelor of Arts
👉Bachelor of Commerce
👉Bachelor of Business Management அது போன்ற வேறு BA, BCom BBA கற்கைநெறிகளை
University of Ruhuna
Sabaragamuwa University of Sri Lanka
University of Jaffna
South Eastern University of Sri Lanka
Uva Wellassa University போன்ற நாட்டில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறான டிகிரிகள் அரச அங்கீகாரம் பெற்றவை. ஒப்பீட்டளவில் செலவு குறைந்தவை. உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகரிக்கப்பட்டவை என்பது தான் இதில் உள்ள இன்னொரு விசேடம். அதுபோல பகுதிநேரமாக வேலை செய்து கொண்டு கூட இவற்றை படிக்கலாம். டிகிரி ஒன்றை முடிக்கலாம். தொழிலுக்கு தொழில்.படிப்புக்கு படிப்பு. (சில வேளைகளில் உள்வாரியாக BA , BCom செய்வதை விட , தொழில் ஒன்றை செய்து கொண்டு, வெளி வாரியாகவே, வேறு ஒரு பொருத்தமான கற்கையை நெறியை நிறைவு செய்வது சாலப் பொருத்தமானது. )

ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு UGC கையேட்டை ஒரு தரம் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். அதுபோல இப்போதே பல்கலைக்கழகங்களின் வெப்சைட்டுகளுக்கு போய், உங்களுக்கு பொருத்தமான என்ன கற்கை நெறிகள் இருக்கின்றன என்பதை ஒரு முறை பார்த்து விடுங்கள்.

இவற்றிக்கு மேலதிகமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் The Open University of Sri Lanka பொறியியல், சட்டம் உட்பட பல்வேறு கற்கை நெறிகள் உண்டு. அதுபோல மருத்துவம், என்ஜினியரிங், IT , கொம்புயுடர் சயன்ஸ், கட்டிடக்கலை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன கற்கை நெறிகளை General Sir John Kotelawala Defence University ( KDU) ல் கற்க முடியும். இராணுவம், கடற்படை, வான்படை அல்லது பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதன் மூலமாக முற்றிலும் இலவசமாகவோ, அல்லது காசு செலுத்தி முற்றிலும் ப்ரைவேட்டாகவவோ ( இராணுவத்தில் இணைய தேவை இல்லை) மேற்படி கற்கைநெறிகளை இங்கே பயில முடியும். கீழே கொமண்டில் விளக்கம்( flyer )உண்டு.

Credit-DR Arshath AHAMED

08/06/2024

அல்லாஹ்வின் உதவியால் வர்த்தகத் துறையில் எங்களது பயணம் கலாவெவயில் ஆரம்பமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல சவால்கள் மற்றும் விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்த முயற்சி ஆறு மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ், இம்முயற்சி எதிர்காலத்தில் பல மாணவர்கள் பயன்பெறும் கல்வி நிறுவனமாக மாற பிரார்த்திக்கிறோம்.

சவாலான எதிர்காலத்தை எளிதில் எதிர்கொள்ளும் திறன் கொண்ட தலைமுறையை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்.

வணிகப் பிரிவு மாணவர்களை தன்னம்பிக்கையுடன் எங்களுடன் இணைந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடைய அழைக்கிறோம்.

ஒரு நீடித்த கனவு இறுதியாக பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் அதன் முதல் படிகளை எடுத்துள்ளது.

07/06/2024

Registration are now open!!!!

06/06/2024

start Your A/L Journey with Us

Registration are Open For 2026 A/L Batch

05/06/2024

வணிகத் துறையில் பொருளாதாரப் பாடம் ஏன் முக்கியம் என்பது பற்றிச் சில முக்கியக் காரணங்களைத் தரவுள்ளேன்:

1. நிதி மேலாண்மை: பொருளாதாரப் பார்வை மூலம், நிறுவனங்கள் தங்கள் நிதியை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதோடு, செயல்திறனை உயர்த்தவும், நஷ்டத்தைத் தவிர்க்கவும் முடியும்.

2. மூலோபாயத் திட்டமிடல்: பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தத்துவங்களை அறிந்தால், வணிக நிறுவனங்கள் தங்கள் மூலோபாயங்களை மிகச்சரியாகத் திட்டமிட முடியும். சந்தை நிலைமைகள் மற்றும் போக்குகள் பற்றிய அறிவு,
முன்னெச்சரிக்கையாக முடிவுகள் எடுக்க உதவும்.

3. சந்தை நுணுக்கம்: பொருளாதாரப் புரிதல்கள் மூலம், வணிகங்கள் சந்தையின் தேவைகள், நுகர்வோரின் விருப்பங்கள் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை விளங்கிக் கொண்டு தங்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முன்னெடுப்புகளை திட்டமிட முடியும்.

4. அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள்: அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், வர்த்தகக் கொள்கைகள், வரிகள் மற்றும் சலுகைகள் போன்றவை வணிகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமைகின்றன. இதனால், பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

5. முதலீட்டுத் தீர்மானங்கள்: பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளை அறிந்து கொண்டு, நிறுவனங்கள் மூலதனத்தை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும்.

6. முக்கிய பொருளாதாரக் கருத்துக்கள்: உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், வேலைவாய்ப்பு நிலை, வட்டி விகிதங்கள் போன்ற முக்கிய பொருளாதாரக் கருத்துக்களைப் பற்றி அறிந்து கொண்டால், வணிக முடிவுகள் சிறப்பாக இருக்கும்.

7. குறித்தியல்புகளைக் கணிப்பது: பொருளாதாரப் பாடம், நிறுவனங்கள் குறித்தியல்புகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை கணிப்பதிலும் உதவுகிறது. இது, எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கு மற்றும் சந்தையின் மாற்றங்களைச் சமாளிப்பதற்கும் முக்கியம்.

8. போட்டியாளர்களை புரிதல்: பொருளாதாரப் படிப்பின் மூலம், வணிகம் அந்நிறுவனத்தின் போட்டியாளர்களின் நுணுக்கங்களையும், அவர்களின் வணிக மூலோபாயங்களையும் ஆராய முடியும். இதன் மூலம், தங்கள் வணிகத்தை வளர்க்க சரியான முறையில் முடிவுகள் எடுக்க முடியும்.

9. பொருளாதாரச் சூழல் புரிதல்: பொருளாதார சூழலைச் சரியாகப் புரிந்துகொள்வது, வணிக நிறுவனங்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்ற முடிவுகளை எடுக்க உதவும். மின்னணு வணிகம், பன்முகமிக்க சந்தைகள் போன்ற துறைகளில் வளர்ச்சி பெற இதுவும் உதவும்.

10. மிகச்சிறந்த முடிவெடுப்புகள்: பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முறைமைகளின் மூலம், நிறுவனங்கள் மிகச்சிறந்த மற்றும் பலபரியாய முடிவுகளை எடுக்க முடியும். இது, லாபகரமான வளர்ச்சிக்கும், நிலைத்துறைக்கு உதவும்.

11. சமூகப் பொருளாதாரம்: பொருளாதாரக் கருத்துக்கள் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை, சமூக சீரமைப்பை மற்றும் நியாயமான வர்த்தக முறைகளை பரிசோதிக்க உதவுகிறது. இது, சமூக பொறுப்புள்ள வணிகமுறைகளை வளர்க்க உதவும்.

இத்தகைய பல்வேறு காரணங்களால், வணிகத் துறையில் பொருளாதாரப் பாடம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். இது, மாணவர்களுக்கு வணிகத்தின் பல்வேறு அம்சங்களை புரிந்துகொள்வதோடு, செயல்திறனும், வளர்ச்சியும் மிக்க முடிவுகளை எடுக்க உதவுகிறது.

Want your school to be the top-listed School/college?

Telephone

Website