09/01/2026
எதிர்கால 2026 இல் இலங்கையின் கல்வியில் ஏற்படப் போகும் மாற்றமானது மாணவர்கள் பாடவிதானம் (Curriculum / பாடத்திட்டம்) தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்த்து, கல்வித் திறனை முன்னேற்ற உதவும் சில நடைமுறை சாத்தியமான விடையங்களில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்
1. பாடவிதானத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்:-
ஒவ்வொரு பாடத்திலும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும், ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஆசிரியர் தெளிவாக விளக்க வேண்டும்.பாடத்தின் கற்றல் இலக்குகள் (Learning Outcomes) மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.
2. மாணவர்களின் கற்றல் வேறுபாடுகளை மதிப்பிடுதல்:-
உட்படுத்தல் கல்வி (inclusive Education)
எல்லா மாணவர்களும் ஒரே வேகத்தில் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மெதுவாக(மெல்ல)கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு:-
1)கூடுதல் விளக்கங்கள்
2)எளிய உதாரணங்கள்
3)தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்
3. பாட உள்ளடக்கத்தை எளிமைப்படுத்துதல்
பாடங்களை சிறு பகுதிகளாக (chunking) பிரித்து கற்பித்தல்:-
கடினமான கருத்துகளை:
வரைபடங்கள்
படங்கள்
வீடியோக்கள்
தினசரி வாழ்க்கை உதாரணங்கள்
மூலம் விளக்குதல்.
4. தேர்வு மையப்படுத்தப்பட்ட கற்றலை தவிர்த்தல்:-
மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல்,
1)புரிதல்
2)திறன் வளர்ச்சி
3)சிந்தனை திறன்
மீது அதிக கவனம் செலுத்துதல்.
5. மாணவர்–ஆசிரியர் கலந்துரையாடலை ஊக்குவித்தல்:-
மாணவர்கள் கேள்வி கேட்க அச்சப்படாத சூழல் உருவாக்க வேண்டும்.
1)குழு விவாதங்கள் 11)கருத்துப் பகிர்வு 111)செயல்பாடுகள் நடத்துதல்.
6. நடைமுறை சார்ந்த கற்றல் (Activity-Based Learning):-
செய்முறைப் பயிற்சிகள் (practical exercises)
திட்டப் பணிகள் (Projects)
குழு செயல்பாடுகள்(Group Work's)
மூலம் பாடங்களை கற்றல்.
7. தொடர்ச்சியான மதிப்பீடு (Continuous Assessment):-
ஒரே இறுதி தேர்வை மட்டும் நம்பாமல்:
1)சிறு தேர்வுகள்
11)வகுப்பறை செயல்பாடுகள்
111)வீட்டுப்பாடங்கள்
மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணித்தல்.
8. ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் புதிய கற்பித்தல் முறைகள்:-
1)தொழில்நுட்ப பயன்பாடு
11)மாணவர் உளவியல் புரிதல்
என்பவற்றில் ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்குதல்.
9. பெற்றோர்– இணைப் பாடவிதான மாற்றங்கள், மாணவர் சிரமங்கள் குறித்து பெற்றோர்களுக்கு தெளிவான தகவல் வழங்கல்,வீட்டில் அழுத்தமின்றி ஆதரவு வழங்க வழிகாட்டுதல், தொடர்ச்சியாக கண்காணித்தல்
10. மாணவர்களின் கருத்துகளை கேட்பது
பாடவிதானம் கடினமாக உள்ளதா,புரியவில்லையா என்பதை மாணவர்களிடமிருந்து நேரடியாக அறிதல்.
மாணவர் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களைச் செய்தல்.
இறுதியாக பாடவிதானம் என்பது மாணவர்களை:-
1)அழுத்தும் கொடுக்கக் கூடிய ஒன்றாக இல்லாமல்,
2)புரிந்து கற்றுக்கொள்ளும்,
3) ரசித்து முன்னேறும் கருவியாக மாற்ற வேண்டும்.
✒️✒️✒️📝📝📝📝📝