Arul Jothi E-Exam Academy

Arul Jothi E-Exam Academy

Share

We are here "To Perceive and Enhance Your Learning Ability" in TNPSC EXAMS.

22/03/2026

முதன்மை தேர்தல் அலுவலர், சென்னை அவரின் கடித எண். 5055/Ele.VII/2026-1, நாள் 19.03.2026-ன் படி, 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான பயிற்சி குறித்த அறிவுறுத்தல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன👇

பயிற்சி அட்டவணை
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி அட்டவணை பின்வருமாறு:

| முதலாம் பயிற்சி | 02.04.2026 (வியாழன்) அல்லது அதற்கு முன் | PrO, PO1, PO2, PO3 ஆகிய ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தப்படும். |

| இரண்டாம் பயிற்சி | 11.04.2026 (சனி) | முழு குழுவினருக்கும் (PrO+PO1+PO2+PO3) இணைந்து வழங்கப்படும். |

| இரண்டாம் கட்டத் திரும்பும் பயிற்சி | 20.04.2026 (திங்கள்) | இரண்டாம் பயிற்சியைப் போன்றதே; அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

| மூன்றாம் பயிற்சி | 22.04.2026 (புதன்) | வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் (P-1 Day) நடைபெறும்.
முக்கிய அறிவுறுத்தல்கள்
* பணியாளர்கள் எண்ணிக்கை: தேவையான பணியாளர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 120% பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

*மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) வழங்கப்படும் வசதிகள் குறித்து பணியாளர்களுக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

* முதலாம் பயிற்சி:
வகுப்பறை சூழலில் சுமார் 40 பேர் கொண்ட குழுக்களாக நடத்தப்பட வேண்டும்.

* மாதிரி வாக்குச்சாவடி அமைத்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும்.

* தபால் வாக்குக்கான படிவம் 12/12A இந்தப் பயிற்சியின் போது சேகரிக்கப்பட வேண்டும்.

* இரண்டாம் பயிற்சி:

* மண்டல அலுவலர்களால் முழு குழுவிற்கும் சேர்த்து பயிற்சி அளிக்கப்படும்.

* 'PRO Mobile App' மூலம் வாக்குப்பதிவு சதவீதத்தை அனுப்பும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும்.

*மூன்றாம் பயிற்சி:*

* பணி நியமன ஆணைகளை விரைவாக வழங்கத் தேர்வுக்கூட நடைமுறை பின்பற்றப்படும்.

* வாக்குச்சாவடி எண் ஒட்டப்பட்ட பெஞ்சுகளில் அந்தந்தக் குழுவினர் அமர வைக்கப்படுவர்.

*நான்காம் கட்டப் புத்தாக்கப் பயிற்சி:*

* வாக்குப்பதிவு மையத்தில் மண்டல அலுவலரால் வழங்கப்படும்.

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் பிற பொருட்களைச் சரிபார்த்து, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.🙏

08/12/2025
04/12/2025

TNPSC Annual Planner 2026

16/11/2025

*SIR படிவம் நிரப்புதல் : அ முதல் ஃ வரை*

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி(SIR)க்கான Enumeration படிவம் (அதாங்க உங்க Photoவுடன் தற்போதைய Voter ID தகவல்கள் உடன் புதிதாக நிரப்ப வேண்டிய 5 பகுதிகளை உள்ளடக்கிய படிவம்) இந்நேரம் 2 பிரதிகளாகத் தங்களை வந்து அடைந்திருக்கும். இதுவரை வரவில்லை எனில், உங்களது வார்டு / பூத்திற்கான BLOவிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதிக்கான கட்சி முகவர்களிடம் பேசுங்கள். படிவம் கிடைக்க உதவுவர். பீகார் SIRன் முடிவுகளால் தமிழ்நாட்டு மக்கள் நலன் நாடும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் ஓரளவு விழிப்புடனும் கூடுதல் பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்றன.

*Form கிடைக்கல, Onlineலயே Apply பண்ணலாமா? :*

தாராளமாக இணைய வழியில் நிரப்பி அளிக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் 3 கடல்களைத் தாண்டியிருக்க வேண்டும்.

1. உங்களது Mobile எண் Voter IDயுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. Voter ID & ஆதார் அட்டை இரண்டிலும் உங்களது பெயர் ஒரே மாதிரியாக (Letters, Initial & Space உட்பட) இருக்க வேண்டும்.

3. உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட Mobile எண் கைவசம் இருக்க வேண்டும்.

1000ல் ஒருவருக்கே இம்மூன்றும் சரியாக அமையலாம். நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என்றால்,
https://voters.eci.gov.in/login
என்ற இணைய முகவரியில் சென்று OTP கொடுத்து உள்நுழைந்து தேவையான தகவல்களை நிரப்பி ஆதார் OTP மூலம் e-Sign செய்து சமர்ப்பிக்கலாம்.

*கடலெல்லாம் தாண்டல, கையில் உள்ள Enumeration Formஐ பூர்த்தி செய்வது எப்படி? :*

BLO இரு படிவங்களைத் தந்திருப்பார். இரண்டையும் நிரப்பி ஒன்றில் மட்டும் BLOவிடம் கையொப்பம் பெற்று நீங்களே வைத்துக் கொண்டு, மற்றொன்றை அவரிடமே கொடுக்க வேண்டும். Original படிவம் தான் ஏற்கப்படும் என்பதால், கவனமுடன் பிழையின்றி நிரப்பவும். தேவைப்படின் Xerox எடுத்து நிரப்பிப் பார்த்து அதன்பின் Original படிவத்தை நிரப்பி BLOவிடம் வழங்கலாம்.

Enumeration Formல் நாம் கவனிக்க வேண்டிய 5 பகுதிகள் உள்ளன.

1. புதிய புகைப்படம் (Passport Size)
2. சுய விபரம்
3. (1.7.1987க்கு முன் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது விபரம்.
4. (1.7.1987க்குப் பின் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது உறவினர் (அம்மா / அப்பா / தாத்தா / பாட்டி) விபரம்.
5. வாக்காளர் & BLO கையொப்பம்

இதில், பகுதி 1 & 2 அனைவருக்கும் பொதுவானது. பகுதி 2ன் சுய விபரங்களில்,

* பிறந்த தேதி (DD/MM/YYYY)
*ஆதார் எண்
*கைப்பேசி எண்
* தந்தை / பாதுகாவலரின் பெயர்
* தந்தையின் வாக்காளர் அடையாள அட்டை எண்
*தாயாரின் பெயர்

உள்ளிட்டவை கட்டாயம். தந்தைக்கு Voter ID இல்லை எனில் கூடுதல் விபரங்களாக,

* தாயாரின் Voter ID எண்
* துணைவர் பெயர்
* துணைவரின் Voter ID எண்

உள்ளிட்டவற்றை தேவையைப் பொறுத்து நிரப்பவும். பகுதி 3 & 4ல் யார்யார் எந்தந்த பகுதிகளை நிரப்ப வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

*பகுதி 3 :*

நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்தவர் எனில் உங்களது பெயர் 2002/2005 SIRல் இருக்கும். அப்படி இருந்தால் அதில் உள்ள,

* தங்களது பெயர்
* Voter ID எண் (அதில் இருந்தால்)
* தந்தை / இணையர் பெயர்
* மாவட்டம்
* மாநிலம்
* MLA தொகுதி
* MLA தொகுதி எண்
* பாகம் எண்
* உங்களது பெயரின் வரிசை எண்
உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். நீங்கள் பகுதி 4ஐ நிரப்பத் தேவையில்லை.

*பகுதி 4 :*

நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்திருந்தும் உங்களது பெயர் 2002/2005 SIRல் இல்லை என்றாலோ அல்லது 01.07.1987ற்குப் பின்னர்தான் நீங்கள் பிறந்திருப்பீர்கள் என்றாலோ உங்களால் பகுதி 3ஐ நிரப்ப இயலாது. எனவே, 2002/2005 SIRல் இருக்கும் உங்களது தாய் / தந்தை / தாத்தா / பாட்டி உள்ளிட்ட யாரேனும் ஒருவரது பின்வரும் விபரங்களை பகுதி 4ல் நிரப்ப வேண்டும்.

* தாய் / தந்தை / தாத்தா / பாட்டி பெயர்
* Voter ID எண் (அதில் இருந்தால்)
* உறவு முறை
* மாவட்டம்
* மாநிலம்
* MLA தொகுதி
* MLA தொகுதி எண்
* பாகம் எண்
* அவரது பெயரின் வரிசை எண்
உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.

*பகுதி 5 :*

உறுதி மொழியைத் தொடர்ந்து வாக்காளரோ / அவரது 18+ உறவினரோ கையொப்பமிட வேண்டும். உறவினர் கையொப்பமிட்டால் உடன் உறவுமுறையையும் எழுத வேண்டும்.

அடுத்ததாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) கையொப்பம் இடுவார். இரு படிவங்களில் ஒன்றை அவரிடம் அளித்துவிட்டு, படிவத்தை நீங்கள் நிரப்பி ஒப்படைத்துவிட்டதற்கு ஆதாரமாக (Acknowledgement) அவர் கையொப்பமிட்ட மற்றொரு படிவத்தை உடன் வாங்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் கட்டாயம் தேவைப்படும்.

நினைவிருக்கட்டும் பகுதி 3 & 4ல் நிரப்பப்படும் தகவல்கள் அனைத்துமே 2002/2005 SIR பட்டியலில் உள்ளபடிதான் இருக்க வேண்டும். Voter ID எண் அதில் இல்லை எனில் இதில் குறிக்கத் தேவையில்லை. இதைத் தவிர்த்த அனைத்து விபரங்களும் அதில் இருக்கும்.

*2002/2005 SIR பட்டியலைப் பெறுவது எப்படி? :*

பகுதி 3 & 4னை நிரப்ப 2002/2005 SIR பட்டியலில் உள்ள பாகம் எண் & வரிசை எண் உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் தேவை. இதனை BLO உடன் வைத்திருப்பார். அவரிடம் இல்லை எனில், கீழேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி, பெயர், உறவினர் பெயர் உள்ளிட்ட விபரங்களை அளித்துத் தெரிந்து கொள்ளலாம்.

https://erolls.tn.gov.in/electoralsearch/

மேலே கண்ட இணைப்பில் தேட இயலவில்லை எனில், PDFஆக Download செய்து தேடிப்பார்க்க இயலும். அதற்கு இரண்டு இணைப்புகள் உள்ளன.

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

மேலேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி & அப்போது வாக்களித்த வாக்குச்சாவடியின் பெயர் உள்ளிட்டவற்றை அளித்து SIR 2002 பட்டியலை PDFஆகத் தரவிறக்கலாம். உங்களது ஊரின் தெருவாரியாக ஓரளவு வீட்டு வரிசையாகவே பெயர்கள் இருக்கும். அதில் தேவையான விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்படி பட்டியல் நீங்கலாக கீழேயுள்ள 37 தொகுதிகளுக்கு மட்டும் 2005ல் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் SIR 2005 வெளியிடப்பட்டது. அந்தத் தொகுதியினர் மட்டும் கீழேயுள்ள இணைப்பில் சென்று SIR 2005ன் PDF fileஐ தரவிறக்கிக் கொள்ளலாம்.

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx

*SIR 2005 பட்டியலுக்கான 37 தொகுதிகள் :*

1. 1 - Royapuram
2. 2 - Harbour
3. 3 - Dr.Radhakrishnan Nagar
4. 4 - ParkTown
5. 5 - Perambur (SC)
6. 6 - Purasawalkam
7. 7 - Egmore (SC)
8. 8 - Anna Nagar
9. 9 - Theagarayanagar
10. 10 - Thousand Lights
11. 11 - Chepauk
12. 12 - Triplicane
13. 13 - Mylapore
14. 14 - Saidapet
15. 17 - Thiruvottiyur
16. 18 - Villivakkam
17. 19 - Alandur
18. 20 - Tambaram
19. 74 - Hosur
20. 88 - Salem I
21. 89 - Salem II
22. 90 - Veerapandi
23. 91 - Panamarathupatty
24. 103 - Thondamuthur
25. 104 - Singanallur
26. 105 - Coimbatore West
27. 106 - Coimbatore East
28. 107 - Perur
29. 141 - Tirupparankundram
30. 142 - Madurai west
31. 143 - Madurai Central
32. 144 - Madurai East
33. 145 - Samayanallur(SC)
34. 166 - Tiruchirapalli I
35. 167 - Tiruchirapalli II
36. 218 - Tirunelveli
37. 219 - Palayamkottai

படிவம் ரெடி! 2002/2005 SIR பட்டியல் ரெடி!! பிறகென்ன படிவத்தைக் கவனமுடன் நிரப்பி வழங்குவதன் வழி உங்களது இந்தியக் குடியுரிமையைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து
விடுங்கள்.

2002 / 2005 பட்டியலில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என எவரது பெயருமே இல்லையெனில் இரத்த உறவுகளைக் குறிக்கலாம் என்று சில இடங்களில் கூறப்படுகிறது. உங்களது BLOவைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.

Voters' Services Portal Voters' Services Portal

15/11/2025

SIR details

Photos from Arul Jothi E-Exam Academy's post 15/11/2025

How to fill SIR form? 👇👇👇👇👇

29/10/2025

Group 4 Certificate Verification Update

26/10/2025

Tnpsc Gr 4 Certificate verification - New update

Want your school to be the top-listed School/college?

Telephone

Website