31/08/2022
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பண்ணவ மு.ம.க வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது..
அல்ஹம்துலில்லாஹ்!
கலைப்பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 5 மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்தியைப் பெற்றிருக்கின்றார்கள், அதிலும் இரண்டு மாணவிகள் 2 இற்கும் மேற்பட்ட Z Score களைப் பெற்று தேசிய ரீதியாக 38,39 ஆம் இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 75% வீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பு தெளிவாகவே காணப்படுகின்றது!
சிறந்த முறையில் மாணவர்களைத் தயார் படுத்தி சிறந்த பெறுபேறுகளை ஈட்டுவதற்கு துணையாக நின்ற அதிபர், ஆசிரியர்கள்,பெற்றார்கள், உட்பட மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!