27/06/2026
#27.06.2026 # பகாங் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான காற்பந்து போட்டி 2026 #
இன்று தெமர்லோ மாவட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நம் பள்ளியைப் பிரதிநிதித்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் என இரண்டு குழுக்கள் பங்கேற்றனர். குறுகியகாலத்தில் பயிற்சிபெற்று முதல் முயற்சியாகப் பங்கேற்ற இரண்டு குழுக்களும் ஆறுதல் பரிசான ஐந்தாம் நிலை பரிசைப் பெற்றனர். மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
ஆசிரியர் திரு.ச.விஷ்ணு தலைமையில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனமுவந்த நன்றி.
குறுகிய காலத்தில் மாணவர்களின் கனவை நனவாக்கிய மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG), நிதி உதவி வழங்கிய நல்லுள்ளங்கள் , உடன் சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உற்சாகப்படுத்தச் சென்ற பெற்றோர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி 🙏