21/04/2026
பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் இளம் தலைவர் தலைமைத்துவப்
பதவி நியமன நாள் 2026*
கடந்த ( 02.04.2026 , வியாழன் ) பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் *இளம் தலைவர் தலைமைத்துவப்
பதவி நியமன நாள்* மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.
இந்நிகழ்சிக்குப் பள்ளியின் தொடர்புத் துறை அதிகாரியின் பிரதிநிதி சார்ஜன் புன் காமோல்,
பள்ளியின் வாரியத் தலைவர் திரு.காமராஜ் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோர் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் முதல் அங்கத்தில் மாணவர் நல துணைத் தலைமையாசிரியர் திரு.எ. ஜீவனராவ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கோ.சிவாகாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து,
பள்ளியின் தலைமை மாணவர்கள், நூலக மாணவர் தலைவர்கள்,மாணவர் வழிகாட்டி நண்பர்,பள்ளி இலவச பாட நூல் பிரிவு, டிங்கித் துடைத்தொழிப்புப் பிரிவு மற்றும் வகுப்புத் தலைவர்கள்,துணைத் தலைவர்கள் ஆகிய 6 பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் தங்கள் பதவி நியமன சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
2026 ஆம் ஆண்டின் பள்ளி நூலக மாணவர் தலைவர்களின் துணைத் தலைவராக மாணவி வ.ரதினி , தலைவராக மாணவி கோ.ஹரினி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2026 ஆம் ஆண்டின், பள்ளியின் தலைமை மாணவர்களின் துணைத் தலைவராக மாணவன் ர.மதநேஸ்வரன் , தலைமை மாணவர்களின் தலைவராக மாணவன் வி.விஷ்ணுவர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக.
**Hari Pelantikan Pemimpin Muda SJKT Puchong 2026**
*(02 April 2026, Khamis)*
Majlis Pelantikan Pemimpin Muda telah berjaya diadakan dengan penuh tertib dan lancar.
**Tetamu Kehormat:**
- Sarjan Bun Kamol *(wakil pegawai perhubungan sekolah)*
- Tuan Kamaraj *(Pengerusi Lembaga Sekolah)*
- AJK PIBG
**Aturcara Majlis:**
Penolong Kanan HEM, Tuan E. Jeevanrao menyampaikan ucapan aluan. Seterusnya, Guru Besar Puan G. Sivagami merasmikan dan menyampaikan ucapan.
**Penerima Watikah Pelantikan* :-
. Pengawas Sekolah
- Pusat Sumber Sekolah
- Pembimbing Rakan Sebaya (PRS)
- Skim Pinjaman Buku Teks (SPBT)
- Squad Denggi
- Ketua & Penolong Ketua Kelas
**Pemimpin Terpilih 2026:**
- Ketua Pusat Sumber Sekolah — G. Harini
- Penolong Ketua Pusat Sumber Sekolah— V. Rathini
- Ketua Pengawas — V. Vishnuvarthan
- Penolong Ketua Pengawas— R. Mathanesvarran
Tahniah dan Selamat Maju Jaya kepada semua pemimpin muda!

05/01/2026
அன்னாரது குடும்பத்தினருக்கு பள்ளியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
01/01/2026
Sekalung penghargaan dan Terima kasih kepada KPM dan MITRA atas Sumbangan Smart board.
மித்ரா மற்றும் கல்வி அமைச்சின் மின்னியல் பதாகை அன்பளிப்புக்கு பள்ளியின் சார்பில் நன்றியும் வாழ்த்து களும்.
12/12/2025
I've just reached 4K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉
10/12/2025
வெற்றி நமதே!
கடந்த 10.12.2025 (புதன்கிழமை) நம் பள்ளியில்
இணைப்பாட விழா மிகவும் சிறப்பாகப் பள்ளி மாணவர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு டத்தோ T.மோகன், முன்னாள் கால்பந்து வீரர் டத்தோ சந்தொக் சிங் , திரு. குணசீலன் நாயுடு ,
Dr. அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், நம் பள்ளியின்
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.ப.தெய்வீகன், அவர்தம் செயலவை உறுப்பினர்கள் மற்றும் பள்ளி வாரியத் தலைவர் திரு. காமராஜ் அவர்களின் வருகை இந்நிகழ்விற்கு மேலும் மெருகூட்டியது. நிகழ்ச்சி இறை வாழ்த்து, பள்ளிப்பாடல்
ஆகியவற்றுடன் ஆரம்பமானது. வரவேற்புரையினை தலைமையாசிரியர்
திருமதி கோ. சிவகாமி திறப்புரையாற்றி இந்நிகழ்ச்சியினை இனிதே தொடக்கி வைத்தார். மாவட்டம், மாநிலம், தேசியம் மற்றும் அனைத்துலக அளவில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இணைப்பாடத்திற்கான மாணவர் திலகங்களுக்குரிய விருதுகள் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டன. இணைப்பாட மாணவர் திலகங்கள் எனும் சிறப்பு விருதளிப்பு மாணவர்கள் , 💐கிஷாஞ்சலி தர்மேந்திரன், 💐விஷ்ணுவர்தன் விஜேந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பங்களித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள் பல!
10/12/2025
MAJLIS APRESIASI KOKURIKULUM 2025
இணைப்பாட அங்கீகார விழா 2025
பாகம் 1 / part 1
02/12/2025
வணக்கம்.
கடந்த 19 நவம்பர் 2025 (புதன்கிழமை) நம் பள்ளியின் இணைப்பாட நாள் 2025 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி மதியம் 1.00 மணிக்குத் தொடங்கியது.
தலைமையாசிரியரின் திறப்புரை மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. அவரின் உரையில் , மாணவர்கள்
வகுப்பறைக்கு வெளியே ஈடுபடும் நடவடிக்கைகள் அவர்களின் முழுமையான வளர்ச்சியின் அடையாளமென அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தமது திறமைகள், ஒழுக்கம் மற்றும் குழு உணர்வை இத்தகைய செயல்பாடுகளின் மூலம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சி மாலை 3.00 மணிக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் நிறைவுற்றது. இந்த இணைப்பாட நாள் மாணவர்களின் ஆர்வம், செயல்திறன் மற்றும் போட்டியுணர்வை மேம்படுத்தும் அரிய தளமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தேற ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
SJKT Puchong தொடர்ந்து முழுமையான கல்வி மற்றும் மாணவர் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும்.
28/11/2025
வணக்கம், கடந்த 26 நவம்பர் 2025 பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் சிறுவர் தினம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.காலை மணி 7:30 அளவில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.முதல் அங்கமாக கடவுள் வாழ்த்து பாடப்பட்டு நிகழ்ச்சி துவக்கம் கண்டது. பின் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கோ.சிவகாமி அவர்கள் வரவேற்ரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.ப.தெய்வீகன் அவர்கள் உரையாற்றினர். சிறுவர் தினத்திற்குச் சிறப்பு வருகை புரிந்த கின்றாரா இந்திர்களின் வட்டாரத் தலைவர் திரு சிவா கிருஷ்ணன் அவர்கள் விழாவைத் திறப்பு செய்து உரையாற்றினார். மேலும் அவர் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டியும் வழங்கி மாணவர்களை மேலும் மகிழ்வித்தார்.
படிநிலை 1 மற்றும் 2 மாணவர்களின் படைப்பு அனைவரையும் ஈர்த்தது. மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணமாக “கோமாளியின் நிகழ்தல்” நடைபெற்றது. இது மாணவர்களை மேலும் மகிழ்வித்தது.