MR/Zahira M.V

MR/Zahira M.V Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MR/Zahira M.V, School, School Road, Welipitiya.

விஷேட காலைக்கூட்டம்06/08/2026✨✨✨✨✨✨✨✨✨✨🌷2026ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையின் முன்னேற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டனஇ...
08/08/2026

விஷேட காலைக்கூட்டம்
06/08/2026
✨✨✨✨✨✨✨✨✨✨
🌷2026ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையின் முன்னேற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டனஇதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் .

08/08/2026
Congratulations to the winners
05/08/2026

Congratulations to the winners

இன்று எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க நிர்வாக தெரிவுக்கூட்டம் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.  புதிதாகத் தேர்ந...
29/07/2026

இன்று எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க நிர்வாக தெரிவுக்கூட்டம் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகத்தின் சார்பிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பிலும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் நீங்கள் அனைவரும் இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, எமது பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற முன்வந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
​இவ்வேளையில், முந்தைய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் மகத்தான சேவையையும் அர்ப்பணிப்பையும் நன்றியோடு நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்
கடந்த காலங்களில் பாடசாலையின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாடு எனப் பல தளங்களில் நீங்கள் ஆற்றிய பணிகள் மிகவும் போற்றத்தக்கவை. உங்கள் சேவைக்கும் உழைப்பிற்கும் நமது பாடசாலை எப்போதும் நன்றியுடையதாக இருக்கும்.
​அதேபோல், ஏனைய பழைய மாணவர்களுக்கும் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். எமது தாய் பாடசாலையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும். புதிய நிர்வாகக் குழுவோடு கரம்கோர்த்து, பாடசாலையின் எதிர்காலத் திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
​எமது பாடசாலை மேலும் பல சிகரங்களைத் தொட்டு, சமூகத்திற்குச் சிறந்த குடிமக்களை உருவாக்க, புதிய நிர்வாகக் குழுவின் பணிகள் சிறக்கவும், அனைத்துப் பழைய மாணவர்களின் ஒற்றுமை மேலோங்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
அத்தோடு இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்


அதிபர்
M. K. M. ரஸ்மி

'94 Zahirians குழுவினரின் பூரண அனுசரணையின் கீழ் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான இரண்டாவது உதவிக் கருத்...
19/07/2026

'94 Zahirians குழுவினரின் பூரண அனுசரணையின் கீழ் தரம் 5 மாணவர்களுக்கான
புலமைப்பரிசில் பரீட்சைக்கான இரண்டாவது உதவிக் கருத்தரங்கு இன்று எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
'94 Zahirians குழுமத்தின் இணைப்பாளரும் எமது பழைய மாணவரும் தற்போது கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி பிரதி அதிபருமான ஸமீம் ஆசிரியர் அவர்களும் , 94 குழும அங்கத்தவர்களும், எமது பாடசாலை ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கல்விக்காக உழைக்கும் இவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் புரிவானாக.

இவ்வண்ணம்
அதிபர்
M.K.M RASMY

Address

School Road
Welipitiya
81700

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR/Zahira M.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MR/Zahira M.V:

Shortcuts

Share

Category