Annoor M.V Kapuwatta Weligama

Annoor M.V Kapuwatta Weligama Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Annoor M.V Kapuwatta Weligama, School, MR/An-noor Maha Vidyalaya, Kapuwatta, Denipitiya, Weligama.

🌙✨ மீலாதுன் நபி நிகழ்வுகள் – இனிய நிறைவு ✨🌙அல்ஹம்துலில்லாஹ்! 🤲🏻❤️எளிமையும் பயனுள்ளதுமான முறையில், september மாதம் 10 மற்...
11/09/2026

🌙✨ மீலாதுன் நபி நிகழ்வுகள் – இனிய நிறைவு ✨🌙

அல்ஹம்துலில்லாஹ்! 🤲🏻❤️

எளிமையும் பயனுள்ளதுமான முறையில், september மாதம் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுன் நபி நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. 🌸

📚 மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பல்வேறு பயனுள்ள நிகழ்வுகளும்,
அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் ஓரிரு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று, இந்நிகழ்வை மேலும் சிறப்பாக்கின. ✨

அறிவையும், நல்லொழுக்கத்தையும், திறமைகளையும் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவத்தை வழங்கிய இந்த நிகழ்வுகள், இனிய நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். ❤️

அல்ஹம்துலில்லாஹ்! 🤍
எமது முயற்சிகளை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் நன்மையையும் பரக்கத்தையும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். 🤲🏻🌙

صلى الله عليه وسلم ﷺ




எமது பாடசாலை நூலகத்திற்கான புத்தக சேகரிப்பு செயற்திட்டம்
24/08/2026

எமது பாடசாலை நூலகத்திற்கான புத்தக சேகரிப்பு செயற்திட்டம்



BEST WISHES TO OUR A/L STUDENTS.
09/08/2026

BEST WISHES TO OUR A/L STUDENTS.



Heartiest Best Wishes To Our Grade 5 Students.
08/08/2026

Heartiest Best Wishes To Our Grade 5 Students.



16/06/2026
*மாணவத் தலைவர் பதவியேற்பு விழா – 2026*மாணவர்களின் தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் நோக்க...
12/06/2026

*மாணவத் தலைவர் பதவியேற்பு விழா – 2026*

மாணவர்களின் தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், மாறை/ அந்நூர் மகா வித்தியாலயம் தனது *மாணவத் தலைவர் பதவியேற்பு விழா– 2026* நிகழ்வை சிறப்பாக நடத்தியது.

இந்நிகழ்விற்கு பாடசாலையின் அதிபர் திரு. *M.K.M. ரிகாஸ்* அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும், வெலிபிட்டிய கல்வி வலயக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் *திருமதி.ரேணுகா கமகே* அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக,

🔹 *ஜனாப் . J.S.W.A. மௌலானா* – (முன்னாள் அதிபர் - அறபா தேசிய பாடசாலை)
🔹*திருமதி M.H.N. ஹுனைசா* – (முன்னாள் பிரதியதிபர் - மாறை/ அந்நூர் மகா வித்தியாலயம்)

ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

அத்துடன் எமது அன்பான அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட

🔹 *திருமதி. A.H.F. நிப்ரூஸா*– (முன்னாள் ஆசிரியை மற்றும் நலன்விரும்பி - மாறை/ அந்நூர் ம. வி )
🔹 *அல்-ஹாஜ் முஸன்னா* – (பாடசாலை அபிவிருத்திச் செயற்குழு (SDEC) உறுப்பினர்)
ஆகியோருக்கும், வருகை தந்து சிறப்பித்த ஏனைய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும், அத்துடன், இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

✨ மாணவர் தலைவர் பதவி என்பது ஒரு கௌரவப் பதவி மட்டுமல்ல; அது பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் சேவை செய்யும் அரிய வாய்ப்பாகும். இன்று பதவியேற்கும் எமது மாணவர் தலைவர்கள் முன்மாதிரியாக இருந்து, பாடசாலையின் முன்னேற்றத்திற்கும் மாணவர் சமூகத்தின் நலனிற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வாழ்த்துகிறோம்.💫

புதிய மாணவத் தலைவர் கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!💐

“வழிநடத்துவோம் – சேவை செய்வோம் – ஊக்குவிப்போம்”

🌍♻️ *உலக சுற்றாடல் தினம் – 2026* ♻️🌍*மாறை/அந்நூர் மகா வித்தியாலயத்தில்* உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு *விசேட தூய்மையா...
05/06/2026

🌍♻️ *உலக சுற்றாடல் தினம் – 2026* ♻️🌍

*மாறை/அந்நூர் மகா வித்தியாலயத்தில்* உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு *விசேட தூய்மையாக்கல் மற்றும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு* வெற்றிகரமாக நடைபெற்றது.

🍃பாடசாலைச் சூழலை சுத்தமாகவும் பசுமையாகவும் பேணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் *மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் பொறுப்புணர்வுடனும் பங்கேற்று பூரண ஒத்துழைப்பை* வழங்கினர். அவர்களின் அர்ப்பணிப்பும் குழு உணர்வும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.🤝

🍃மேலும், பாடசாலை சுற்றாடல் குழு மாணவர்களுக்கு தொப்பி மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வும் *பாடசாலை அதிபர் மற்றும் சுற்றாடல் குழுப் பொறுப்பாசிரியர்* தலைமையில் நடைபெற்றது.

🌱 *“சுற்றுச் சூழலை பாதுகாப்பது நமது கடமை; அதுவே நமது எதிர்காலத்தின் பெருமை.”*

🍃இயற்கையை நேசித்து, சுத்தமான சூழலை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட்ட *அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும்* எமது மனமார்ந்த நன்றிகள். 💚

🌿

28/05/2026




*A historic and proud moment for MR/Annoor Maha Vidyalaya* 🏫✨The Foundation Stone Laying Ceremony of the new school buil...
17/05/2026

*A historic and proud moment for MR/Annoor Maha Vidyalaya* 🏫✨

The Foundation Stone Laying Ceremony of the new school building was successfully held on *10th May 2026* with the participation of distinguished guests, SDEC, OBA, OGA,well-wishers, parents, old pupils, and the school community.

We were highly honored by the presence of our eminent guests who graced this landmark occasion:
*Chief Guest*
• Hon. Arkam Ilyas (M.P) – Deputy Minister of Energy, Sri Lanka

*Special Guest*
• Asheik M.A.A. Noorulla (Naleemi) – Director, Al Hima Islamic Services

*Guests of Honour*
• Mrs. H.Y.D Priyadarshani – Zonal Director of Education, Akuressa
• Mr. N.K.C. Sampath – Assis. Director of Education & Divisional Director of Education- Akuressa
• ⁠Mrs. Renuka Gamage - Divisional Director of Education - Welipitiya
• Mr. Wasantha Jayamini Kumara – S.S.P, Matara
• Mr. Chandana Wijesekara – A.S.P, Matara
• Al Haj M.M Ramees – Co-Proprietor, Rado Enterprises
• Al Haj M.A.M Zakwan – Proprietor, Micro Electronics
• Mr. A.R.M. Ameenudeen – Vice President, Al Hima Islamic Services
• Mr. A.N. Shakeeb Arsalan – Project Manager, Al Hima Islamic Services
• Al Haj M.A.M Sharwan – Proprietor, Micro Zone
• Al Haj M.R.M Rifkan – Proprietor, Rado Enterprises
• Asheik M. Firdows – Embassy of the State of Kuwait
• Mr. Chinthaka D Hewapathirana – Chairman of Local Authority, Weligama
• Mr. Chandrapala Nallaperuma – Member of Local Authority, Weligama
⁠

This valuable building project is generously donated by the Government of the *State of Kuwait and Al - Hima Islamic Services – Sri Lanka*.🤝🇰🇼

This milestone marks the beginning of a brighter future for our students and generations to come.

*Great things are built on strong Foundations.",🌱





எமது பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 2026.04.09 அன்று அதிபர் M.K.M. ரிகாஸ் அவர்களின் தலைமையி...
19/04/2026

எமது பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 2026.04.09 அன்று அதிபர் M.K.M. ரிகாஸ் அவர்களின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக Micro Electronic ZK (pvt) LTD உரிமையாளர் அல்ஹாஜ் M.A.M. ஸக்வான் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக Mr.M.A.M. மஷாயிர் (தென்மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர்)
Mrs. H.Y.D. பிரியதர்ஷனி ( வலயக் கல்விப் பணிப்பாளர் - அக்குறஸ்ஸ கல்விப் பணிமனை)
Mr.N.K.C. ஸம்பத் ( பிரதிக் கல்விப் பணிப்பாளர் - அக்குறஸ்ஸ கல்விப் பணிமனை)
அல்ஹாஜ் M.M. ரமீஸ் (உரிமையாளர் - RADO Enterprise)
அஷ்ஷெய்க் நூருல்லாஹ் (நளீமி) (தலைவர் - அல் ஹிமா பவுண்டேஷன்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இம்முறை இல்லங்களுக்கான பெயர்கள்
என மூன்று தலைமுறைகளின் பெயர்கள் வைக்கப்பட்டன. மேலும் 2026 ஆண்டுக்கான Champion இடத்தை ALPHA இல்லமும் Runner up இடத்தை BETA இல்லமும் 2nd Runner up இடத்தை Orbit இல்லமும் சுவீகரித்துக் கொண்டன.
இவ்வில்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் ஆசிரியர் குழாம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் ஊர்மக்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.💐💐💐





Address

MR/An-noor Maha Vidyalaya, Kapuwatta, Denipitiya
Weligama

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annoor M.V Kapuwatta Weligama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category