05/01/2026
பழைய மாணவர் சங்கம் 28/12/2025ம் திகதி கிட்டத்தட்ட 2.5 லட்சம்(2,50,000) மதிப்புள்ள வேலைத்திட்டம் ஒன்றை மீண்டும் எமது பாடசாலையில் மேட்கொண்டுள்ளது. 1992ம் தொகுதி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து எமது பாடசாலையில் பொருளாதார ரீதியில் குறைந்த மட்டத்தில் இருக்கும் சுமார் 50 மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் உதவியுடன் கண்டறிந்து அப்பிள்ளைகளுக்கு தேவையான புத்தகங்கள், புத்தக பைகள்,போத்தல்கள், படிக்க எழுத தேவையான அனைத்து உபகரணங்களும் மற்றும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சுமார் 2000/- ரூபாய் மதிப்புள்ள உறுதிசீட்டுக்களும் (Vouchers) அதிபர் ஆசிரியர் மற்றும் பாடசாலை நிர்வாக குழு அங்கத்தவர்கள் மத்தியில் பழைய மாணவர் சங்கம் சார்பாக கையளித்துள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாக கருதப்படுகிறது. 1992ம் தொகுதி மாணவர்களை பற்றி இங்கு நாம் பெருமையாக சொல்லியே ஆக வேண்டும். இத்தொகுதியினர் தாம் கற்ற பாடசாலை மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடே ஒவ்வொரு முறையும் பல தடங்கல்கள் மத்தியிலும் தமது சக்திக்கும் மீறிய பாரிய வேலைத்திட்டங்களை தாமாகவே முன்வந்து செய்து தந்து கொண்டிருக்கின்றனர். அல்லாஹ் இவர்களுடைய நற்காரியங்களை பொருந்திக்கொள்வானாக. இத்தொகுதியினரின் இவ்வாறான மகத்தான வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஏனைய தொகுதியினருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றதை எண்ணி எமது பழைய மாணவர் சங்கம் பெருமையடைகிறது.