22/03/2024
நடமாடும் ஆசிரியத்துவம் மதிப்பிற்குரிய திரு. திருச்சபேசன் சேர் அவர்கள்" -பிறந்தநாள் சிறப்பு கருத்துப்பதிவு-
திரு. சபேசன் சேர் அவர்கள்
சிறந்த வளவாளர்,மொழிபயிற்றுவிப்பாளர்(சகோதர மொழி உட்பட)
சபேசன் சேரைப் பார்க்கும்போது எமது வீட்டில் ஒரு உறவினரைப் பார்பதுபோல் ஒரு உற்சாகம். சிறந்த மனிதர். நிறைந்த அறிவாளி. ஆனால் எப்போதும் படித்துக்கொண்டிருப்பவர்.எமக்குத் தெரிந்த வரை "பாமசிஸ்ற்" துறையினை படித்துக் கொண்டிருந்தார். அவர் நடாத்தும் செயலமர்வுகளில் எப்போதும் நவீனத்துவம் இருக்கும். ஆசிரியர்களையும் நவீனத்துவத்துக்குள் கொண்டுவர முயற்சி செய்பவர்.
ஒரு சம்பவம் "சகோதர மொழி பாடல் ஒன்றை தொலைபேசியின் bluetooth இல் அனுப்பினார். அநேகமானவர்கள் தொலைபேசியின் bluetooth பெயரில் வைத்திருந்தனர். ஒருசிலர் மட்டுமே தமது பெயரில் வைத்திருந்தனர்.இன்னும் update ஆகாமல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்றார்" இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்ப செயற்பாடுகளை தான் மட்டுமே தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் இருந்து விதிவிலக்கு சபேசன் சேர் அவர்கள்.
எப்போதும் இவரது செயலமர்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு துறைசார் விடயங்களை கற்றுக்கொள்வோம். செயலமர்வின் இறுதி நேரம் வந்ததுதெரியாமல் செயலமர்வில் ஈடுபட்டிருக்கிறோம்.
எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாகவே இருப்பார். சபேசன் சேர் சோர்ந்து இருந்து நாங்கள் பார்த்ததே இல்லை.
செயலமர்வில் விவசாயம் தொடர்பாக கூறுவார். தான் ஒரு விவசாயி என்பதிலும் பெருமை கொள்பவர். அதிகாரம்,பதவிகள் இவரை வந்ததோ எமக்கு தெரியவில்லை ஆனாலும் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. வளவாளர், மொழிபயிற்றுவிப்பாளர், பாடசாலை இலவச பாட நூலாக்க குழு உறுப்பினர் இன்னும் இருக்கலாம் எமக்கு தெரிந்த வரை ,எப்படி எத்தனை நிலையில் இருந்தாலும் சாதாரண தோற்றப்பாடு,அனைவரையும் சமமாக மதிக்கும் தன்மை இவைகள் தான் சபேசன் சேரின் வளர்ச்சிக்கு காரணமாக கூட இருக்கலாம்.
ஆசிரியத்துவம் தொடர்பாக வருகின்ற புதிய விடயங்களை முகநூல் பக்கத்தில் பதிவிடுவது சிறப்பு. எல்லோரும் அதனை அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு.
செயலமர்வின் நேரங்களில் ஆசிரியர்களும் ஒரு சில சமயங்களில் மாணவர்களாகி குழப்படி செய்வதும் உண்டு. கோபம்வரும் சமயங்களில் ஒரு நிமிடம் கண்ணைமூடித் திறப்பதை பார்த்ததுண்டு.யாரையாவது மனதளவில் காயப்படுத்திக் கூட பேசியது இல்லை.
சிறந்த மனிதர். வாழ்க பல்லாண்டு. தொடர்க நின் சேவை.
ஆசிரியர்கள்
தீவகவலயம்