V/ Veerapuram Manivasakar M.V. - Old Students Association

V/ Veerapuram Manivasakar M.V. - Old Students Association Old Students Association for School's Development

** 👏பெருமிதம் கொள்கிறது வவுனியா / வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயம்!✌️**​2026ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் ...
02/09/2026

** 👏பெருமிதம் கொள்கிறது வவுனியா / வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயம்!✌️**

​2026ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் 93.33%📊 சித்தி வீதத்தைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளனர்.

​பெறுபேறுகளின் 📈சுருக்கம்:
​தோற்றிய மொத்த மாணவர்கள்: 15
​வெட்டுப்புள்ளிக்கு மேல்: 03🖋
​100 புள்ளிகளுக்கு மேல்: 04🖊
​70 புள்ளிகளுக்கு மேல்: 07✏️

​குறிப்பாக,📝 ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய போதிலும், மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியரை (திருமதி. ஈஸ்வரன். லக்கி) நியமித்ததோடு மட்டுமல்லாமல், வளவாளரின் ( திரு. செ. பகீரதன்) வழிகாட்டலில் சிறப்பு அமர்வுகளையும் நடத்த உறுதுணையாக இருந்த பழைய மாணவர் சங்கம், நிதி அனுசரணையாளர் (அமுதன்), பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் அனைவருக்கும் எமது நன்றிகள்.

*** ​வெற்றிபெற்ற 📚அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!***🤝

​ #பழையமாணவர்சங்கம்
#மணிவாசகர்_மகா_வித்தியாலயம்

09/08/2026

2026ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் தம்பி/தங்கைகளுக்கு வாழ்த்துகள்!

​நீங்கள் சிந்திய ஒவ்வொரு துளி வேர்வையும், இரவெல்லாம் விழித்திருந்து படித்த படிப்பும் உங்களை நிச்சயம் உயர்த்தும். பதற்றமின்றி, தெளிவோடு பரீட்சையை எதிர்கொள்ளுங்கள்!

​உங்கள் சாதனையை உங்களோடு சேர்ந்து கொண்டாடக் காத்திருக்கின்றோம்!

​Do Your Best 🤝 Shine High 🌟

#மணிவாசகர்_மகா_வித்தியாலயம்
#பழைய_மாணவர்

** தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை -2026 **​நாளை நடைபெறவுள்ள (09.08.2026) புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் எமது பாடசா...
08/08/2026

** தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை -2026 **

​நாளை நடைபெறவுள்ள (09.08.2026) புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் எமது பாடசாலையின் செல்லச் சுட்டிகள் அனைவரும் பதற்றமின்றி, தன்னம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொண்டு பெருவெற்றி பெற வாழ்த்துகின்றோம்!

அத்துடன் அவர்களுக்குத் துணையாக நின்று உழைத்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களுடன் சேர்ந்து உதவிகளை வழங்கிய அனுசரணையாளர் அமுதன், வளவாளராகிய திரு. செ.பகீரதன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

​எமது பாடசாலைக்கு உங்கள் சாதனையால் மேலும் பெருமை சேர்க்க வாழ்த்தி மகிழ்கின்றோம்!

​ #பழையமாணவர்சங்கம்
#மணிவாசகர்_மகா_வித்தியாலயம்

எமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் இறுதி கருத்தரங்கானது மாணவர்களி...
31/07/2026

எமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் இறுதி கருத்தரங்கானது மாணவர்களின் வரவுடன் இனிதே நடைபெற்றது.

இந்த கல்விச் செயற்திட்டம் சமூக அக்கறையாளர் திரு. அமுதன் மற்றும் தரம் 5 மாணவர்களின் பெற்றோர் ஆதரவுடனும், வளவாளராக
திரு. செ. பகீரதன் அவர்களின் பங்களிப்புடனும் நடாத்தப்பட்டது.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி, புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை அடையச் செய்வதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.

“இன்றைய கல்வியின் முதலீடு, நாளைய வெற்றியின் அடித்தளம்."

** 2026ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்கும் பழைய மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். **

** 2026ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இறுதிக் கருத்தரங்கு **​பாடசாலையில் ஏற்பட்ட தரம் 5 ஆசிரியர் பற்றாக்கு...
27/07/2026

** 2026ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இறுதிக் கருத்தரங்கு **

​பாடசாலையில் ஏற்பட்ட தரம் 5 ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடந்த 6 அமர்வுகளும் எதிர்பார்த்த அளவை விடப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.

​அதன் பயனாக, பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து அனுசரணை வழங்கி வந்த திரு. அமுதன் அவர்களுக்குப் பக்கபலமாக, தரம் 5 மாணவர்களின் பெற்றோரும் இறுதிக் கருத்தரங்கிற்குத் தங்களால் முடிந்த நிதி அனுசரணையை வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

​வளவாளராகிய திரு. செ. பகீரதன் அவர்கள், மாணவர்களுக்குக் கற்பிக்கப் போதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், எம் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஓர் ஆசானாக / வழிகாட்டியாக எம்முடன் துணை நின்றமைக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​வரவிருக்கும் ஆவணி மாதம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான இறுதிக்கட்டக் கருத்தரங்காக இது அமைகின்றது. எனவே, மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் இதில் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

#விசேட_வகுப்பு #பழைய_மாணவர்கள்

23/07/2026

** இரண்டாம் தவணை பரீட்சை மதிப்பீடுகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலும் **

நாளைய தினம் 24/07/2026. காலை 9:00 மணி்க்கு இரண்டாம் தவணைக்குரிய தேர்ச்சியறிக்கை வழங்கலும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது அனைத்து பெற்றோர்களும் / பாதுகாவலர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்:
அதிபர்
வீரபுரம் மணிவாசகர் ம. வி.

**📢 பாடசாலை அபிவிருத்தி செயற்குழு (SDEC) கூட்டம் – 22.07.2026**இன்று எமது பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி செயற்குழு (SDE...
22/07/2026

**📢 பாடசாலை அபிவிருத்தி செயற்குழு (SDEC) கூட்டம் – 22.07.2026**

இன்று எமது பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி செயற்குழு (SDEC) கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாடசாலை அதிபர், வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பாடசாலை மேம்பாட்டு உதவிக் கல்விப் பணிப்பாளர், SDEC செயலாளர், ஆசிரியர் பிரதிநிதிகள், மற்றும் எமது பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது எமது பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் பின்வரும் முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

1. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் நியமனம்.

எமது பாடசாலையில் பணியாற்றிய ICT ஆசிரியர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ICT ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை பணியில் இணைந்து அறிக்கையிடவில்லை. எனவே, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் அவர் விரைவில் கடமையைப் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

2. கழிப்பறை புனரமைப்பு மற்றும் பராமரிப்பு.

பாடசாலைகளில் சுகாதாரம், தூய்மை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுக்கு கல்வித் திணைக்களம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், கழிப்பறை புனரமைப்புடன் மட்டுப்படாமல், அதன் தொடர்ச்சியான பராமரிப்பிற்கான திட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தினோம். இல்லையெனில்,பாடசாலைக்கு கிடைக்கும் நிதி வீணாகும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பாடசாலை சுகாதாரக் குழுவை செயற்பாட்டுடன் இயங்கச் செய்து, மாணவர்களிடையே சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

3. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான இடைவெளி.

தற்போது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்பு குறைவதால், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்கநடத்தை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலைமை பாடசாலையின் ஒட்டுமொத்த செயல்திறனையும் சமூக நலனையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால், இதற்கான தீர்வாக **2026 ஜூலை மாத இறுதிக்குள் ** பாடசாலையில் பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த முன்மொழியப்பட்டது.

அக்கூட்டத்திற்கு கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரி மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகள் அழைக்கப்படுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

**எமது பாடசாலையின் கல்வித் தரம், மாணவர் ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.**

தகவல்: பழைய மாணவர் சங்கம்

தரம் 5 மாணவர்களுக்கான விசேட வகுப்பு அமர்வு 6.திரு. அமுதன் அவர்களின் ஆதரவுடனும், வளவாளர்திரு. செ. பகீரதன் (SLTS I, MA, BA...
22/07/2026

தரம் 5 மாணவர்களுக்கான விசேட வகுப்பு அமர்வு 6.

திரு. அமுதன் அவர்களின் ஆதரவுடனும், வளவாளர்
திரு. செ. பகீரதன் (SLTS I, MA, BA, PGDE, National Dip in Teaching, Dip in Counseling) அவர்களின் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்ட இவ் தொடர்ச்சியான அமர்வுகளானது இன்றுடன் நிறைவுபெற்றது.

மாணவர்களின் நுண்ணறிவு, துரிதமாக சிந்திக்கும் ஆற்றல் என்பவற்றை மேம்படுத்தி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்திகளை பெறுதலே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.

பழைய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எமது மாணவர்களுக்காக இவ் அமர்வுகளை திறம்பட நடாத்திய வளவாளர் திரு. செ. பகீரதன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்ந்த மனமார்ந்த நன்றிகள்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விசேட வகுப்பு - அமர்வு 66வது அமர்வாகவும் (22.07.2026) எமது மாணவர்களுக்காக இவ் புலமைப்பரிசி...
21/07/2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விசேட வகுப்பு - அமர்வு 6

6வது அமர்வாகவும் (22.07.2026) எமது மாணவர்களுக்காக இவ் புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வழிகாட்டி வகுப்பை நடாத்துகின்றோம். எனவே மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

வளவாளர் : திரு. செ. பகீரதன் (SLTS I, MA, BA, PGDE, National Dip in Teaching, Dip in Counseling).
ஏற்பாடு : பழைய மாணவர் சங்கம்.
அனுசரணை : அமுதன். சின்னத்தம்பனை, வீரபுரம்.

#விசேட_வகுப்பு #பழைய_மாணவர்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விசேட வகுப்பு - அமர்வு 5மாணவர்களின் பங்களிப்பு, பாடசாலை நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் பெற்றோ...
16/07/2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விசேட வகுப்பு - அமர்வு 5

மாணவர்களின் பங்களிப்பு, பாடசாலை நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் பெற்றோரின் உதவியுடன் தரம் 5 விசேட வகுப்பானது, அமர்வு 5 வரை இனிதே நடைபெற்று முடிந்தது என்பதனை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.

மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், துரிதமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல், வினாக்களை கையாளும் முறைகள் என பலதரப்பட்ட வழிமுறைகள் கையாளப்பட்டிருந்தன.

குறிப்பு:-
1. பாடசாலையில் ஆரம்ப கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஏற்பட்டிருக்கும் ஆசிரியர் வளப்பற்றாக்குறையானது, தற்பொழுது வரை பிரத்தியேக அமர்வுகளில் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது.

2. ஆரம்பக்கல்வி வகுப்பு தரம் 4 ஆசிரியர்கள் இன்மையால் வெற்றிடமாகவே காணப்படுகிறது. எனவே உடனடியாக இது தொடர்பாக உரிய உயர் அதிகாரிகளுக்கு பாடசாலை ஊடாக மீண்டும் ஒரு நினைவூட்டல் வழங்கப்படவேண்டும். பழைய மாணவர்கள் மாத்திரமின்றி மாணவர்களின் பெற்றோர்களும் இவ் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.

பாடசாலை மாணவர்களின் துரித கல்விக்காக இவ் அமர்வுகளை திறம்பட நடாத்திய வளவாளர் : திரு. செ. பகீரதன் (SLTS I, MA, BA, PGDE, National Dip in Teaching, Dip in Counseling) அவர்களுக்கும், மாணவச் செல்வங்களின் கல்வி முன்னேற்றத்தில் பழைய மாணவர் சங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைப்புக்கள் வழங்கும் அமுதன் அவர்களுக்கும் எமது நன்றிகள்🙏🏻.

#விசேட_வகுப்பு #பழைய_மாணவர்கள்

Address

Veerapuram, Neriyakulam
Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when V/ Veerapuram Manivasakar M.V. - Old Students Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share